This was a coverage of the function to release 2 dvds on Nadigar Thilagam produced by Trichy Sivaji Fans, held recently.
Printable View
This was a coverage of the function to release 2 dvds on Nadigar Thilagam produced by Trichy Sivaji Fans, held recently.
"பொம்மை கல்யாணம்" வீடியோக்களுக்கு கனிவான நன்றிகள், ராகவேந்திரன் சார்..! [தங்களின் பதில்பதிவுக்கும் நன்றி..!]
திரை இசைத் திலகத்தின் இசையில், 'இன்பமே பொங்குமே' ஒரு அருமையான டூயட். இப்பாடலின் முதல் சரணத்தின் போது நமது ஸ்டைல் சக்கரவர்த்தி White & White Costumeல், White Hat, Cooling Glassல் ஆஹா..! ஆஹா..! வருணனைக்கு அப்பாற்பட்ட அழகு..! சிவாஜி-ஜமுனா ஜோடி Simply Superb..!
நடிகர் திலகம் மைனாவதியுடன் பாடும் 'ஆசை வெச்சேன் ஆசை வெச்சேன்' பாடலுக்கு பின்னணியில் பாடியிருப்பவர்கள், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் டி.வி.ரத்தினம்.
இக்காவியத்தில் உள்ள இன்னொரு சிறந்த பாடல் : 'அன்பே நீ அங்கே நான் இங்கே'. ஏ.எம்.ராஜாவும், ஜிக்கியும், நடிகர் திலகத்துக்கும், ஜமுனாவுக்கும் பின்னணி பாடியிருப்பார்கள். சோகம் இழையோடும் ஒரு உணர்ச்சிமயமான பாடல் இது.
Attachment 1326
N.T. Sir with My Elder Cousin Brother when they were in Rome
Attachment 1327
My Aunt Serving Food To N.T Sir at Rome
"ராஜா ராணி(1956)" திரைக்காவியத்தில் இடம்பெற்ற ஈடுஇணையற்ற ஓரங்க நாடகமான 'சேரன் செங்குட்டுவன்' நாடகத்தின் வீடியோக் காட்சிக்கும், மேலதிக விவரங்களுக்கும் எனது மேன்மையான நன்றிகள், சிவாஜிதாசன் சார்..!
Sivaji V.C. Ganesan : The Greatest Actor Of The Universe.
திரு. பம்மலார் அவர்களுக்கு,
உங்களுடைய பதிவுகளுக்கு முன்னால் இது ரொம்ப சாதாரணம். இருப்பினும், சின்ன விஷயமாக இருந்தாலும் அதை பெரிதாக பாராட்டும் தங்களின் உயர்ந்த பன்பிற்கு என் நன்றி!
நட்புடன்,
டியர் சிவாஜி தாசன்
ராஜா ராணி சேரன் செங்குட்டுவன் ஓரங்க நாடகக் காட்சி யின் காணொளிக்கு உளமார்ந்த நன்றி. இது போல் மேலும் பலவற்றைத் தாருங்கள்.
அன்புடன்
டியர் பிரதீப் சார்,
நடிகர் திலகத்துடன் தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் கலந்துரையாடிய இக்காட்சி மிகவும் அபூர்வமானது. ரத்தபாசம் திரைப் படத்தில் இடம் பெற்ற ஓட்டம் கண்ட ராசாவே பாடல் படப்பிடிப்பின் போது ரோம் சென்றிருந்தார். அப்போது எடுக்கப் பட்டது என யூகிக்கிறேன்.
நடிகர் திலகத்துடன் தங்கள் தந்தை எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் கிட்டத் தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்த நினைவு. அந்தப் படம் உள்ளதா. இருந்தால் அதை இங்கே பகிர்ந்து கொள்ள முடியுமா.
அன்புடன்
ராமருக்கு அணில் போல நடிகர் திலகத்தின் புகழ் பாடும் சேவகனாக என்றும் இருக்க விரும்பும் இந்த எளியேனுக்கு 2000 பதிவுகள் இடுகை செய்ய வாய்ப்பளித்த நமது மய்யம் இணைய தளத்திற்கும், நடிகர் திலகத்தின் ரசிகக் கண்மணிகளுக்கும், மற்றும் இத்திரியில் பார்வையிட வருகை புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றியினை இத்தருணத்தில் சமர்ப்பிக்கிறேன்.
இந்நேரத்தில் நம் அனைவருக்கும் என்றென்றும் நினைவில் நிற்கும் பாடலை காணிக்கையாக்க விரும்புகிறேன்.
http://youtu.be/5PYAmWkBwc4