http://i64.tinypic.com/2zhqghx.jpg
Printable View
1972ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு .
சங்கே முழங்கு.படத்தில் உண்மை ஊழியராகவும் , தன்மீது சுமத்தப்பட்ட கொலை வழக்கில் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க மாறு வேடத்தில் இன்ஸ்பெக்டராக கிருபால் சிங் வேடத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்தார் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக ''சிலர் குடிப்பது போலே நடிப்பார் ''பாடல் காட்சியில் மக்கள் திலகத்தின் நடனம் மிகவும் அருமை . மௌனத்தாலே முகப்பாவனையுடன் நடித்த ''நாலு பேருக்கு நன்றி '' பாடல் காட்சியில் நடிப்பு .அபாரம் .
நல்லநேரம் - பணக்காரர் ஏழையாகி மீண்டும் வாழ்க்கயில் முன்னேறும் வேடத்தில் மக்கள் திலகம் அட்டகாசமாக நடித்து இருந்தார் . யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி ஒன்றே போதும் மக்கள் திலகத்தின் வெற்றிக்கு .ஓடி ஓடி உழைக்கணும் - மிக சிறந்த தத்துவ் பாடல் .
ராமன் தேடிய சீதை - மக்கள் திலகம் செல்வந்தராக , மிகவும் ஜாலியாக நடித்த பொழுது போக்கு படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . காஷ்மீரில் படமாக்கப்பட்ட முதல் மக்கள் திலகத்தின் படம் .
நான் ஏன் பிறந்தேன் - நடுத்தர குடும்ப தலைவராக மக்கள் திலகம் நடித்த ஒரே படம் .எல்லா பாடல்களும் தேன் அமுது .மக்கள் திலகத்தின் இயல்பான நடிப்பு ஒரு வரப்பிரசாதம் .
அன்னமிட்ட கை - கொடுத்த வாக்கை காப்பாற்றும் வேடத்தில் மக்கள் திலகம் மிக சிறந்த முறையில் நடித்து இருந்தார் . 1966ல் படமாக்கப்பட்ட மக்கள் திலகத்தின் கணீர் குரல் சில காட்சிகளில் இடம் பெற்று இருந்தது சிறப்பு .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
இதய வீணை - பாடல் காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப் பட்ட இரண்டாவது படம் . மணியனின் நாவல் . மக்கள் திலகம் மிக சிறப்பாக நடித்து இருந்தார் .
மொத்தத்தில்; 1972ல் வெளியான மக்கள் திலகத்தின் நல்லநேரம் மற்றும் இதய வீணை மாபெரும் வெற்றி பெற்றது . ராமன் தேடிய சீதை இலங்கையில் மாபெரும் வெற்றி . தென்னகத்தில் சங்கே முழங்கு - ராமன் தேடிய சீதை - நான் ஏன் பிறந்தேன் வணிக ரீதியாக வெற்றி படங்கள் . அன்னமிட்டகை சுமாரான வெற்றி படம் .
மறு வெளியீடுகளில் மேற்கண்ட 6 படங்களும் பல முறை பல ஊர்களில் இன்னமும் தொடர்ந்து ஓடிகொண்டிருப்பது சாதனை .
நியாயத்துக்கு குரல் கொடுத்த செல்வகுமார்,(சார், நான் உங்கள பார்த்தது கிடையாது. பேசியது கிடையாது. உங்களுக்கு கம்பியூட்டர் மூளை) ஜெயசங்கர், சுகாராம், ராஜ்குமார் ஆகியவர்களுக்கு நன்றி.
சர்ச்சையான பதிவுகளை அவர்கள் திரியில் நீக்கிய நண்பருக்கும் அவருக்கு வேண்டுகோள் விட்ட நண்பருக்கும் நன்றி.
நல்லிணக்கம் பற்றி எங்களுக்கு சொல்லும் பெரிய மனிதர் (ராகவேந்திரா என்ற பதிவாளர்) முதலில் அவர்கள் திரியில் பாடம் சொல்லட்டும் எனவும், ரத்னமாலா என்ற நடிகையுடன் சிவாஜி கணேசனுக்கு உள்ள தொடர்பை எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்று அவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்றும் நேற்று பதிவு போட்டிருந்தேன்.(மக்கள் திலகம் திரியில் என் பதிவு 273) அதைப் பார்த்துவிட்டு அவர்கள் திரியில் தனது பதிவை (நடிகருக்கும் நடிகைக்கும் உள்ள தொடர்பு நடிகரின் குடும்பம் உட்பட எல்லாருக்கும் தெரிந்ததுதான் என்று அவர் ஒப்புக் கொண்ட பதிவு) அந்த பதிவை நீக்கி விட்ட பெரிய மனிதருக்கும் நன்றி. தான் சொன்னதில் உறுதியாக இருந்தால் ஏன் நீக்க வேண்டும்? ஒப்புக் கொண்டது எல்லாருக்கும் தெரிந்து விடுமே என்ற பயம்தான் காரணம்.
எதிர்காலத்தில் உண்மைகள் எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவும் மக்கள் திலகம் மீது பழிபோடுகிறவர்கள், அவதூறு சொல்கிறவர்கள் முதலில் தங்கள் முதுகை பார்க்கட்டும், அவர்கள் யோக்கியமா? என்பதை முதற்கொண்டு மனசாட்சியின்படி யோசிக்கட்டும் என்பதற்காகவும் சிவாஜி கணேசன், ரத்ன மாலா ஆகியோரின் பெயர்களை இந்த பதிவில் குறிப்பிட்டு 1-1-2016 அன்று மீண்டும் திருத்தி இருக்கிறேன். நான் முதலில் போட்டிருந்த இந்த பதிவின் ஒரு பகுதியை பெரிய மனிதருக்கு (ராகவேந்திரா என்பவருக்கு) பதில் சொன்னதை மட்டும் எடுத்து ரிப்ளை வித் கோட் போட்டு ரவிகிரான் சூரியா என்ற பதிவர் பதிவு 327-ல் எடுத்து போட்டு எனக்கு மறைமுகமாக பதில் சொல்லி இருக்கிறார் (மக்கள் திலகம் திரி இதே பக்கம் பதிவு 327) அவரும் கூட பெரிய மனிதர் தனது பதிவை நீக்கிவிட்டார் என்று நான் கூறியதையோ அல்லது அவராகவோ உண்மையை மறுக்கவில்லை என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.
சிவாஜி கணேசனுக்கும் ரத்னமாலாவுக்கும் இருந்த அந்தரங்க தொடர்புக்கான விவரங்கள் ‘சிவாஜியின் நிழல் மனைவி’ என்ற தலைப்பில் இணையதளத்தில் உள்ளது. ஆனந்த விகடன் பத்திரிகையில் வேலை செய்த பிரகாஷ் என்பவர் ‘விகடன் டயரி’ என்ற தனது பிளாக்கில் இது பற்றி கூறியுள்ளார். இவ்வளவுக்கும் அவரும் சிவாஜி கணேசன் ரசிகர்தான். அவரது பிளாக்கிலேயே கூறியுள்ளார். அவரது விருப்ப நடிகரை புகழ்ந்தும் எழுதியுள்ளார். முதலில் அந்த இணையதள பதிவை நீக்கித்தான் இருந்தேன். ஆனாலும் மாற்று திரியினர் தொடர்ந்து மக்கள் திலகம் பற்றி அவதூறாக எழுதுவதால் கோபத்தில் மீண்டும் அதன் இணைப்பை தருகிறேன். எல்லாரும் உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. சிவாஜி கணேசன் என்ன யோக்கியவான்?
http://vikatandiary.blogspot.in/2009...g-post_28.html
நண்பர்கள் திரு அக்பர்
திரு செல்வகுமார் அவர்கள்
திரியின் moderator திரு ரவிச்சந்திரன் அவர்கள்
திரு செந்தில்வேல் அவர்கள் தவறுதலாக பதிவான மதிஒளி பதிவினை நீக்கிவிட்டார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்
http://i501.photobucket.com/albums/e...psqhcgyzqg.jpg
rks
நடிகயுடன் நடிகருக்கு உள்ள தொடர்பு" - எந்த நடிகருக்கு இல்லை ? அந்த தொடர்புக்காகவே , சில நடிகர்களின் திரை மறைவு வேலைகள் அநாகரீகத்தின் உச்சம். பத்திரிகைகளில் தினமும் வருவதுதானே அவை அல்லாது, அத்ஹன் புகைப்படங்களோ கண்ணொளி காட்சியோவா ஆதாரங்களாக இந்த விஷயத்தை பொருத்தவரை ஏற்றுகொள்ளபடுகின்றன ? Only gossips are considered as truth ever !
மற்றவர்களின் சொந்த விஷயங்கள் பற்றிய தொடர்புகளை பற்றி நம் தமிழகத்தில் மட்டும் சற்று அதிகமாக கவலைபடுபவர்கள் அதிகம் ! நடிக நடிகையர் பற்றியது என்றால் கேட்கவே வேண்டாம்...அவர்களுக்கு பதில் இவர்கள் கனவு காணும் வழக்கம் கொண்டவர்களாக மாறிவிடுவதும், இவர்கள் என்னமோ அவர்கள் பக்கத்திலயே இருந்ததுபோல பேசவும் எழுதவும் செய்வது என்றும் இருக்கப்போவது உண்டு !
ஆகவே..இது போல மற்றவர்களுடைய சொந்த வாழ்வியல் பற்றிய பதிவுகள் வராமல் இருந்தால் நல்ல விஷயம் !!
சினிமாவை பற்றி பேசினால் முழுக்க முழுக்க அதனை பற்றி பேச எழுதவேண்டும்...சினிமாவுடன் அரசியல் பற்றி கலப்பது....சினிமா மற்றும் அரசியல் பற்றி பேசினால் எழுதினால் சொந்த வாழ்கை பற்றி நுழைப்பது...இது அனைவராலும் செய்ய முடியும் என்பதை அனைவரும் உணர்ந்தால் நலம் !
அவரவர்கள் ஏற்றுக் கொண்டவர்களை பற்றி மட்டும் புகழ் சேர்ப்பது நல்லது. அடுத்தவர்களை தாக்காமல் இருக்கவேண்டும் என்பதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.