Aur Ho - என்ன குரல்டா அது ! Alma Ferovic :notworthy: ஆரம்ப இசையில் வியக்க வைக்கும் குரல், இடை இசையில் மனசை கசக்கிப் புழிகிறது. எப்படித்தான் இதுபோன்ற உணர்வுகளை இதுமாதிரி குரலில் கற்பனை செய்து உருவாக்கினாரோ இசைப்புயல்! அராஜகம்!
Tum Ko (F) - ஆழ் மனதை மயிலிறகால் வருடுவது போல ஒரு உணர்வு. வானத்திற்கு நோக்கிப் மெல்லப் பறந்து மேக மெத்தையில் படுத்து உறங்குவது போல இருக்கு. கவிதா :notworthy: குரல் தேர்வுக்கு நன்றி ரஹ்மான்.

