http://i60.tinypic.com/j9o46h.jpg
Printable View
சிங்கத்தமிழன் சிவாஜிக்கு வாலி எழுதிய பாடல்கள் சூரக்கோட்டையும்
மலைக்கோட்டையும்
வாலி பதிப்பகம் வெளியீடு
விலை 150 ரூபாய்.
Two Wife - 13 Childrens - No Duet - Super Duper Hit - Motor Sundaram Pillai
Double Action in two Movies - No Duet - Super Duper Hit - Saraswathi Sabatham & Vellai Roja
No Duet inspite of Heroine - Super Duper Hit - Thillana Mohanambal
That is the greatness of Nadigar Thilagam.
GREAT Vasudevan sir some more known records first actor who did
tarzan role that too in fifties itself made it very big hit,Thangamalairagasiam.
first film shot abroad and madeit successful hit SIVANDAMANN.
no songs still a big hit ANDHANAL.
WE NEED A dictionary to mark his GREATNESS,
இன்று 20-02-1970இல் வெளிவந்து நல்லதொரு வெற்றியை பெற்ற
ஜெமினியின் நடிகர் திலகம் நாட்டிய பேரொளி நடிப்பில் வெளிவந்த "விளையாட்டு பிள்ளை" திரைப்படம் 45ஆம் ஆண்டு தொடங்குகிறது.
விளையாட்டு பிள்ளை - இளம் பிள்ளை பயம் அறியாது என்ற சொல்லுகேற்ப நம் நடிகர் திலகம் இந்த திரைப்படத்தில் பல வீர தீர காட்சிகளில் மிகவும் தத்ரூபமாக அவரே டூப் நடிகர் உதவி இல்லாமல் நடித்திருப்பார்.
வேறு நடிகர் யாரேனும் தத்ரூபமாக டூப் நடிகர் இல்லாமல் இந்தளவிற்கு நடித்திருக்கிறார்களா என்பது சந்தேகமே.
இந்த விளையாட்டு பிள்ளை போல நம் திரியில் உள்ள விளையாட்டு பிள்ளைகள் முடிந்தவரை டூப் பயன்படுத்தாமல் நல்ல விஷயங்களை பதிவிட்டு பல நாட்கள் ஆயின...
நமது நடிகர் திலகம் எனதருமை பிள்ளைகள் என்று அழைப்பார் !
எங்கே அவரது பிள்ளைகள் ?....விளையாட்டுபிள்ளை, வம்பு பிள்ளை, கௌரவ பிள்ளை, லொள்ளு பிள்ளை , நய்யாண்டி பிள்ளை, கோப பிள்ளை, சுட்டி பிள்ளை யாரையும் பல நாட்களாக காணுமே ....
அருமை பிள்ளைகளே ....மீண்டும் வாருங்கள் !
http://http://www.youtube.com/watch?v=uE25fCTYP7g
Dear Ravi Kiran Suriya,
I am out of station presently , but writing about 5 movies, rare, common movies which I felt a necessary write up , kindly excuse for delay, will post by next week end one or earlier
தப்பும் தவறும் இருட்டடிப்புமாக தினமலர் ஒருதலைபட்சமான செய்தியை மீண்டும் வெளியிட்டுள்ளது.
இவர்கள் ஏன் நடிகர் திலகத்தை பற்றி எழுதுகிறார்கள் என்றே தெரியவில்லை.
ஒரு நடிகரின் படங்களை பற்றி உண்மைக்கு மாறான செய்தியும் நடிகர் திலகத்தின் படங்களை பற்றிய உண்மை செய்தியை மறைத்து,
குறைத்தும் எழுதி இந்த பகல் வேஷக்காரர்கள் என்ன சாதிக்க போகிறார்கள் ? BUNCH OF JOKERS !
ஒரு நடிகரின் படங்களை பற்றி பதிவு செய்யும்போது இதுபோல பதிவு செய்யவேண்டும்.
உண்மையான செய்தியும் விவரங்களும் இதோ !
1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன.
சிவாஜி
1) கர்ணன் - 100 days
2) பச்சை விளக்கு - 100 days
3) ஆண்டவன் கட்டளை - 10 Weeks
4) கை கொடுத்த தெய்வம், - 100 days
5) புதிய பறவை - 100 days
6) நவராத்திரி, - 100 days
7) முரடன் முத்து - > 50 days
நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த 7 காவியங்களில் 6 திரைப்படங்கள் பிரம்மாண்ட வெற்றிகள் ! முரடன் முத்து திரைப்படம் சுமாரான வெற்றிபெற்றது !
ஒரு நடிகரின் 2 படங்கள் ஒரே தினத்தில் வெளிவந்து வெற்றியடைந்த சாதனையை மீண்டும் ஒரு முறை நடத்தினார் நடிகர் திலகம்.
அதுவரையில் 100 படங்களை கடந்த முதல் கதாநாயகன் என்ற பெருமையும் பெற்றார். அதுமட்டுமல்லாது 100வது படமான நவராத்திரி மிக பெரிய அளவில் வெற்றிபெற்றது !
ஒரு நடிகரின் 100 வது திரைப்படம் இந்தளவிற்கு வெற்றிபெறுவது அதுவே முதல் முறையாகவும் அமைந்தது !
இந்த வார துக்ளக் இதழில் சுப்பு என்பவர் எம்.ஜி.ஆரின் படங்களில் ஈ.வெ.ரா. விற்கு எதிரான பிரச்சாரம் என்ற கட்டுரையில் எம்.ஜி.ஆரின் மதுரை வீரன் படம் அந்தக் காலத்திலேயே 40 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாகவும், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகவும் தவறான தகவலைப் பதிவிட்டிருந்தார். அதை மறுத்து அந்தத் தகவல் தவறானது என்று துக்ளக் இத்ழில் சுட்டிக்காட்டியிருந்த எனது பதிவு.
தவறான தகவல் அதுவும் துக்ளக்கில் ? எம்.ஜி.ஆரின் ஆதிக்காலப் படங்கள் மட்டுமல்ல மிக பெரிய வெற்றிப் படங்களான உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், மாட்டுக்கார வேலன், ரிக்ஷாக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா உட்பட எந்தப் படங்களும் தமிழகத்தில் 40 திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடியதாக சரித்திரம் இல்லை. அதுவும் மத்ரை வீரன் படம் ஒரு கோடி ரூபாய் வசுலித்தது என்பதுவும் தவறு.
முதலில் ஒரு திரைப்படம் அவ்வளவு சென்டேர்சில் ரிலீஸ் ஆனதா என்பதை எண்ணி பார்க்கவேண்டும் கருத்துக்களை பத்திரிகைகளில் கூறுவோர்.
அது யாருடைய படங்கலென்றாலும் சரி. உண்மை தகவலை வெளியிட ஒரு பயலுக்கும் துப்பில்லை. பொய் வாரி வாரி இறைப்பது...தினமலர் வரிசையில் இப்போது துக்ளக் சேர்ந்துள்ளது.
INDUSTRY இல் சும்மா கதை விடுவதையே, கற்பனைவளத்தால் மிகைபடுத்தி எழுதுவதும், பேசுவதையுமே பிழைப்பாக கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். உதாரணம் மேஜர் தாசன், கே.ராஜன், அரூர்தாஸ் சத்யராஜ், போன்றோர்கள் !
THEY SIMPLY BLOUGH WITHOUT ANY LOGIC ! இவர்கள் கதைவிடுவது ஒரு காலகட்டத்தில் ஒரு சிலர் ஆவணமாக நினைத்து வாதாடுவார்கள் வேறு !
இப்படிப்பட்ட பொய்களை மூட்டை மூட்டையாக இவர்கள் என்ன தைரியத்தில் அவிழ்த்து விடுகிறார்கள் தெரியுமா ?
கீழை கொடுக்கப்பட்டுள்ள காட்சியை பாருங்கள் உங்களுக்கே விளங்கும்.
http://www.youtube.com/watch?v=sOhPHfRqu_c
அமரதீபம் படத்தயாரிப்பின் ஒரு சுவையான பின்னணி.
ஸ்ரீதர் அவர்கள் இந்தப் படத்தை சொந்தமாக தயாரிக்க விரும்பினார். நிதிப்பற்றாக்குறை காரணமாக அவர் சிவாஜி கணேசனை அணுகி, அவரிடம் இந்தப் படத்தின் கதையைக் கூறி இப்படம் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் உங்களது சம்பளத்தை படத்தின் வசூலில் இருந்து பெற்றுக்கொண்டால் பேருதவியாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார். சிவாஜி ஸ்ரீதரின் மேல் இருந்த பெரும் நம்பிக்கையால், சாவித்திரி பத்மினி ஆகியோரிடமும் இதை எடுத்துக் கூறி மூவரும் ஒரு பைசா கூட பெறாமல் நடித்துக் கொடுத்தனர். படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இது ஸ்ரீதர் 1992ல் கல்கியில் எழுதிய தொடரில் சிவாஜியின் பெருந்தன்மையை வியந்து எழுதியது.(thanks Mr.Rajan ponnusamy)
After seeing DEIVAMAGAN movie,ulaga maha nadigan Mr.MARLON BRANDO told that hereafter every one should call Mr.SIVAJI GANESAN AS ULAGA MAHA NADIGAN and not me.Thank u Mr BALUSAMY.( ex BSNL OFFICER ,VERY GENIUS PERSON)for your valuable information.
யாருக்கும் கிடைக்காத பெருமை
அன்றே உலக அளவில் சிறந்த நடிகனாக அங்கிகாரம் கிடைத்து உலக நாயகன் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார் !
இதில் எந்த அரசியலும் ..சிபாரிசுகளும் கிடையாது !
தன் சொந்த திறமைக்கு கிடைத்த பரிசு !
இவருடன் சேர்ந்து மற்றவர்கள் பெருமை பெற்றுக்கொள்ளலாம் !
Attachment 3148
தலாய் லாமா அவர்கள் சென்னை வந்தபோது ...நமது நடிகர் திலகத்தின் திறைமை கேள்விப்பட்டு, உத்தமபுத்திரன் படபிடிப்பில் சந்தித்தார். இருவரும் நட்பு பரிமாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
நடிகர் திலகத்தின் திறமையை கண்டு அவரை மனதார பாராட்டியவர்கள், வாழ்த்தியவர்கள் சாதாரண துக்கடா அரசியல் வாதிகள் அல்ல என்பதை இளைய தலைமுறையினரும்..இன்னும் சிவாஜியை பற்றி தவறான தகவல்களை காசுக்காக கூட கும்பிடு போட்டு பொய் செய்தி பரப்பும் புண்ணியவான்கள் அறிந்துகொள்ளவேண்டும்.
Attachment 3149
நடிகர் திலகம் ஏற்ற பல கதாபாத்திரங்கள் சரித்திர சகாப்த புகழ் வாய்ந்தவை. உதாரணம் - அலெக்சாண்டர் என்ற மாவீரன். NTR அவர்கள் தயாரிப்பில் உருவான படம் சாணக்ய சந்திரகுப்தா இதில் சானக்யனாக நாகேஸ்வர ராவ் அவர்கள், சந்திர குப்தராக NTR அவர்கள் நடித்தார்கள்.
இதில் அலெக்சாண்டர் என்ற மாவீரனை பற்றிய கிளைகதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்பதில் யாருக்கும் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் ஏகமனதாக முன்மொழிந்த ஒரே பெயர் "சிவாஜிகாரு"
1956இல் ரிச்சர்ட் பர்டன் என்கிற வெல்ஷ் நடிகர் அலேசேண்டேராக நடித்து வெளிவந்த படம், Alexander - the Great !
வேடபொருத்தம் எப்படி உள்ளது என்பதை கண் கூடாக பாருங்கள் ...
Attachment 3150
சில அறிய புகைப்படங்கள் எனது இனிய நண்பர் திரு ஆனந்த் அவர்கள் கைவண்ணத்தில்....
உலக புகழ் நடிகர் மர்லான் பிராண்டோ மற்றும் உலக புகழ் நடிகர் நடிகர் திலகம் - படபிடிப்பு ஒப்பனையில் !
Attachment 3151
மற்ற ஊரு நடிகர்கள் நம் இதர நடிகர்களுடன் எப்படி இருந்தார்கள்...அதே மற்ற ஊரு நடிகர்கள் நடிகர் திலகத்திடம் எப்படி அன்னியோன்யமாக இருந்தார்கள் என்பதற்கு ஒரு சிறிய சான்று !
நடிகர் திலகத்தை தவிர எந்த நடிகராவது பிற ஜாம்பவான்களுடன் இப்படி நட்பு பாராட்டியது உண்டா ?
Nadigar Thilagam with the Doyens of Telugu Film Industry Mr.NTR & Mr.ANR
Attachment 3152
நன்றி மறந்த நயவஞ்சக தயாரிப்பாளர் இயக்குனர் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகத்திடம் மட்டுமே நட்பு பாராட்டும் திரு பீம்சிங் அவர்களை பற்றிய ஒரு சிறு குறிப்பு.
நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியின் சாதனை என்றென்றும் உயிரோட்டம் உள்ளவை !
Attachment 3153
நடிகர் சுனில் தத் நடிகர் திலகத்தின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மற்றும் நடிகர் திலகத்தின் ஆராதகர் !
அவருடைய பாராட்டு மடல் !
Attachment 3154
நமது நடிகர் திலகத்தின் அருங்காட்சியகம் !
Attachment 3155
நடிகர் திலகத்துடன் புகைப்படம் எடுக்க விரும்பி நமது நடிகர் திலகத்தை அமரசெய்து அனைத்து பிரபலமான ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அவர் அருகில் சாய்ந்தும் நின்றும் எடுத்துக்கொண்ட புகைப்படம்..
திறமயாளரான நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டுமே உலக அளவில் இந்த அங்கீகாரம் !
Attachment 3156
மற்றவர்களிடம் போல வெறும் சம்ப்ரதாய பேச்சு அல்ல நம் நேருவினுடயது !...ஆத்மார்த்தமான உரையாடல் !
திராவிட அரசியல்வாதிகளுக்கு நடிகர் திலகத்திடம் உள்ள பொறாமையின் காரணம் இது தான் ! இதனால்தான் !
Attachment 3157
இன்று பிறந்தநாள் காணும் அம்மு என்று மிக நெருங்கியவர்கலால் மட்டுமே அழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நம்முடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இவருடைய பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கியவர் நம்முடைய கலைமகளின் அவதாரமாம் நடிகர் திலகம் அவர்கள்.
நடனம் முடிந்து ஆசீர்வதிக்கையில் "நீ நன்றாக வருவாய்" எனது பரிபூரண ஆசிகள்" என்று மனதார வாழ்த்தியவர் நம் கலைவாணியின் அருள் பெற்ற நடிகர் திலகம்.
கதாநாயகியாக நடிக்க தொடங்கிய காலத்தில்
முதலில் 1966இல் நடிகர் திலகத்தின் மகளில் ஒருவராக மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன் தோன்றினார். - 100 நாட்கள் ஓடிய படம்.
http://www.youtube.com/watch?v=0qH0LQUgU6U
பிறகு 12-04-1968, கலாட்டா கல்யாணம் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடியாக "வந்த இடம் நீ நல்ல இடம் வரவேண்டும் காதல் மகராணி" என்று வரவேற்க்கபட்டார் - படு ஸ்லிமாக ஸ்டைல்ஆக உள்ள நடிகர் திலகத்துடன் நல்ல கதாபாத்திரம் - 100 நாட்கள் ஓடிய படம்
http://www.youtube.com/watch?v=G9BPzusiYJY
6 மாத இடைவெளியில் 21-10-1968 மீண்டும் நடிகர் திலகத்துடன் "எங்க ஊர் ராஜா" - நல்ல ஒரு வெற்றி படமாக மீண்டும் அமைந்தது.
http://www.youtube.com/watch?v=YN_bt0WuODE
கிட்டத்தட்ட 11 மாத இடைவெளிக்கு பிறகு 05-09-1969, மீண்டும் நடிகர் திலகத்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். திரைப்படம் "தெய்வ மகன்" - நடிகர்களில் அதிக நூறு நாட்கள் படங்களை கொடுத்த நடிகர் திலகத்துடன் ஜோடி - 100 நாட்கள் படமாக ஜெயலலிதாவிற்கு அமைந்து மார்க்கெட் உயர வழி செய்தது
http://www.youtube.com/watch?v=V_Ntwjckp6o
14-01-1970 மூன்று மாத இடைவெளியில், நல்ல ஒரு குணசித்திர நாயகியாக "எங்க மாமா " திரைப்படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் ஜெயலலிதாவிற்கு - 100 நாட்கள் ஓடவில்லை என்றாலும் நல்ல ஒரு வசூல் மற்றும் அனைவரும் பாராட்டிய படமாக அமைந்தது.
http://www.youtube.com/watch?v=8WNqcmi1rrQ
29-10-1970 ஒன்பது மாத இடைவெளியில் ஜெயலலிதா நல்ல ஒரு நடிப்பை வெளிபடுத்திய படம் நடிகர் திலகத்துடன் எங்கிருந்தோ வந்தாள். டூயட் பாடும் நாயகியாக மட்டுமே மற்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட ஜெயலலிதா நடிகர் திலகத்தின் படங்களில் நல்ல பாத்திரம் நல்ல நடிப்பு ஆகியவை கிடைக்க பெற்றார். - மீண்டும் 100 நாட்கள் படம்
http://www.youtube.com/watch?v=D8A9LU3d_IQ
27-11-1970 - பீம்சிங் அவர்களின் ஒரே கலர் படம் பாதுகாப்பு. மிகவும் வித்தியாசமான ஒரு பாத்திர படைப்பு. நடிகர் திலகத்தின் ஜோடி - படம் சரியான வரவேற்ப்பை பெறவில்லை ஆனால் ஜெயலலிதாவிற்கு நல்ல பெயர் பெற்ற படமாக அமைந்தது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெரும் அல்லவா. நடிகர் திலகத்துடன் சேர்ந்த ஜெயலலிதாவும் மணம் பெற்றார்.
http://www.youtube.com/watch?v=LBh-R_0cFBQ
14-04-1971 - ஐந்து மாத இடைவெளியில் திரைப்பட நடிகையாகவே நடித்த சுமதி என் சுந்தரி வெளியானது - வித்தியாசமான ஒரு பாத்திரம். நடிகர் திலகத்துடன் நல்ல ஒரு நடிப்பை வெளிபடுத்தினார். வசூலிலும் முதன்மை பெற்ற படம்.
http://www.youtube.com/watch?v=lm34oyKgqCA
03-07-1971 இரெண்டரை மாத இடைவெளியில் அருமையான ஒரு சவால் விடும் பாத்திரம் நடிகர் திலகதிருக்கு எதிராக " சவாலே சமாளி " - சிட்டுகுருவிகென்ன கட்டுப்பாடு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஒரு கதாபாத்திரம் - பிரமாண்ட வெற்றி பெற்ற படம் - நடிகர் திலகத்தின் 150வது படத்தின் கதாநாயகியாக நடிக்க நல்லதொரு வாய்ப்பினை பெற்று சரியாக பயன் படுத்திகொண்டார். - 100 நாட்கள் படம்.
http://www.youtube.com/watch?v=FSdL74sUCNE
26-01-1972 - சரியாக ஆறு மாத இடைவெளி தமிழ் திரை உலகில் இது வரை காணாத புதிய பரிமாணத்தில் நடிகர் திலகம் படு ஸ்டைலாக ஸ்டைலின் உச்சமாக தோன்றிய "ராஜா". நாயகி ஜெயலலிதா - ஜானி மேரா நாம் என்ற ஹிந்தி படத்தின் தமிழாக்கம். ஹிந்தியில் ஹேமமாலினி செய்த பாத்திரம் ஜெயலலிதா செய்தார். இதுவரை தோன்றாத ஒரு ஸ்டைலான உடைகள் ஜெயலலிதா இந்த படத்தில் உடுத்தினார். - மிக பெரிய வசூல் பிரளயம் - ராஜா - 100 நாட்கள் படமாக அமைந்தது.
http://www.youtube.com/watch?v=cqjbdAA5zNU
06-05-1972 - நாலு மாத இடைவெளியில் நடிகர் திலகத்துடன் மீண்டும் ஆனால் இந்த சமயம் கருப்பு வெள்ளை படம் - தமிழ் திரை உலகில் கருப்பு வெள்ளை படங்களில் அதிக முதன்மையான வசூல் சாதனை மற்றும் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை பெற்ற நடிகர் திலகத்தின் "பட்டிகாடா பட்டணமா" - சவாலான ஒரு வேஷம், நடிகர் திலகம் மூகய்யனாக வாழ்ந்த படம் - என்னடி ராக்கம்மா பல்லாக்கு எடுத்து என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் - நடிகர் திலகத்துடன் முதன் முதலாக குத்து பாட்டு - 200 நாட்கள் கடந்த ஒரே கருப்பு வெள்ளை படம்.
http://www.youtube.com/watch?v=nUqazZZR3ms
15-07-1972 ஒன்றரை மாத இடைவெளி - மீண்டும் நடிகர் திலகத்துடன் "தர்மம் எங்கே " - மற்றவர்களுடைய கண் பட்டதோ என்னமோ, படம் மிக மிக சராசரியே !
http://www.youtube.com/watch?v=9o6Ja9XXvuk
07-12-1972 - நான்கு மாத இடைவெளியில் நடிகர் திலகத்துடன் " நீதி " - கண் திருஷ்டி களைந்து வசூலில் சக்கை போடு போட்ட படம் - 100 நாட்கள் படமாக மீண்டும் அமைந்தது.
http://www.youtube.com/watch?v=lvUb1m0f5Bk
07-03-1974 ஒரு வருடம் ரெண்டு மாத இடைவெளி விட்டு நடிகர் திலகத்துடன் நடித்து வெளிவந்த படம் " தாய் " - சராசரி படம் - சுமாரான வெற்றி !
13-11-1974 எட்டு மாத இடைவெளிவிட்டு நடிகர் திலத்துடன் வெளிவந்துசுமாரான வெற்றி பெற்ற படம் "அன்பை தேடி". வருடங்கள் ஓட ஓட ஜெயலலிதா சற்றே இளமை சிறிது குன்றி வயது சிறிது காட்டி கொடுக்க தொடங்கிய தோற்றம்.
http://www.youtube.com/watch?v=DAf4xFxVSsU
11-04-1975 இல் மீண்டும் நடிகர் திலகத்தின் லேண்ட்மார்க் படம். 175வது படம் - அவன் தான் மனிதன். திரைப்படம் முழுதும் - என்னை வாழ வைத்த தெய்வம் , என்னை வாழ வைத்த தெய்வம் என்று கூறும் ஒரு பாத்திரம். அதில் உண்மையும் இருந்தது என்பதை அனைவரும் அறிவர் ! - மீண்டும் 100 நாட்கள் படம்
http://www.youtube.com/watch?v=TyjBHMV-yTw
06-12-1975 எட்டு மாத இடைவெளியில் "பாட்டும் பரதமும்" வெளிவந்தது. சற்றே முதிர்ச்சி மேலும் அப்போது நிலவிய அரசியல் சூழல் - படத்தின் வெற்றியை வெகுவாக பாதிக்க - சுமாரான ஓட்டம் - ரசிகர்கள் சிறிது இளமை பொலிவை இழந்த ஜெயலலிதாவை பார்க்க நேர்ந்தது.
http://www.youtube.com/watch?v=UqnNOMbt-nM
22-10-1976, சித்ரா பௌர்ணமி - ஜெயலலிதா நடிகர் திலகத்துடன் நடித்த கடைசி படம். அரசியலில் Thiru. MGR உடன் பங்கு கொள்ள செல்வதற்கு முன்னால் வந்த படம் - அனைவரும் எதிர்பார்த்தபடி ஒரு தோல்வி படம் !
http://www.youtube.com/watch?v=8Fzm8HVzge0
18 திரைப்படங்கள் நம் நடிகர் திலகத்துடன் செல்வி ஜெயலலிதா நடித்தார்.
நடிகர் திலகத்துடன் நடித்ததால் ஒரு கதாநாயகியாக 18 படங்கள் நடித்து பிற்காலத்தில் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்ற நடிகையாக விளங்கினார்.
நடிகர் திலகமும், ஜெயலலிதாவும் இனைந்து நடித்த படங்களில் வியாபார ரீதியாக வெற்றி பெறாத படங்களாக " பாதுகாப்பும் ", "சித்ரா பௌர்ணமியும் " அமைந்தன.
ஆக, 18 படங்களில் வியாபார ரீதியாக 16 படங்கள் வெற்றி படங்களாகவும், 9 படங்கள் 100 நாட்களும் அதற்க்கு மேலும் ஓடிய படங்கள் - அதில் ஒரு படம் 200 நாட்கள் ஓடிய படமாகவும் ஜெயலலிதாவிற்கு அமைந்தது !
namathu nadigar thilagam avargal elloraiyum aakki parthavar,yaraiyum alithhu parthavar kidaiyathu.nandri thiru.RAVIKIRAN sir.
SELVI J.JEYALALITHA avargal ethanaiyo padam nadithirunthalum avarkalukku peyar vangi thantha padam engiruntho vanthal ondru mattum than.
நடிகர் திலகம் இரு வேடங்களில் நடித்து வெளிவந்து, வெள்ளிவிழா கண்ட சிவாஜி PRODUCTIONS "சந்திப்பு" சென்ற வெள்ளி முதல் சென்னை மகாலச்மியில் வெளியாகி சிறந்த வரவேற்ப்பு பெற்றுள்ளது.
தலைவன் சிவாஜி டாட் காம் என்ற இணையதளத்தின் சொந்தக்காரர் திரு இன்பா அவர்கள் ராம் பிரபு PICTURES என்ற பட வினியோகஸ்த நிறுவனம் தொடங்கி, வெளியிடும் முதல் திரைப்படம். சந்திப்பு .
அவர்கள் மேன்மேலும் வளர நமது பூரண நல்லாசிகள். !
http://www.youtube.com/watch?v=zD-alvbaDRk
It was nice to meet Raghavendra sir & Murali sir after a long time, near Mahalakshmi theatre. Hope fans enjoyed "Sandhippu" with the usual allapparais.
சிவாஜி கணேசன் அவர்கள் பற்றி சில வரிகள்...கண்ணதாசன்.
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !
–கவியரசு கண்ணதாசன்
Dear Parthasarathy sir ,my belated thanks to you.I am not genius as you,Murali and the other experience hubbers.Itry my best and share the news as i can.Thankyou
MURALI sir can you give a brief about SANDIPPU aravaragal sunday even show at mahalakshmi and forth coming rereleses of NT at madras.
Fans as usual assembled in good numbers for the screening of Santhippu at
Mahalakshmi Theatre and usual gala celebrations. I expect the remaining news
will be shared by Mr Murali Srinivas for the benefit of millions of our fans.
நான் சுவாசிக்கு சிவாஜி (21) - ஒய்.ஜி. மகேந்திரன்
சிவாஜி மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டவர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும், கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ரஜினி, சிவாஜியின் பெரிய ரசிகர்.
சென்னை விஜயா - வாஹினி ஸ்டுடியோவில், ரஜினியின், தனிக்காட்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கன்னட தயாரிப்பாளர் ஒருவர், ரஜினியை சந்தித்து, சிவாஜி நடித்த, தெய்வ மகன் படத்தை, கன்னடத்தில், ரீ-மேக் செய்ய விரும்புவதாகவும், அதில், ரஜினி நடிக்க வேண்டும் என்ற, தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.
ரஜினி என்னை அழைத்து, அந்த தயாரிப்பாளரை அறிமுகப்படுத்தி, 'இவர் சொல்வதை கேட்டு, பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்...' என்றார். தயாரிப்பாளரும் ரஜினியிடம் கூறியதை என்னிடமும் கூறினார். உடனே நான், 'இவர் மட்டுமல்ல, வேறு எந்த நடிகராலும், தெய்வ மகன் ரீ-மேக்கில் நடிக்க முடியாது. அவ்வாறு செய்ய முயற்சிப்பது பைத்தியக்காரத்தனம்...' என்றேன். இதைக் கேட்ட ரஜினி, 'நானும், இந்த விஷ பரிட்சை வேண்டாம் என்று தான் சொன்னேன். ஆனாலும், சிவாஜியைப் பற்றி முழுமையாக அறிந்தவர் என்ற முறையில், நீங்கள் சொன்னால், அவர் நம்புவார் என்று தான், உங்களைப் பேசச் சொன்னேன்...' என்றார். ரஜினியின் பெருந்தன்மையை கண்டு வியந்தேன்.
கடந்த, 1980களில், ரஜினியும், நானும் பல படங்களில் இணைந்து நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. நெற்றிக்கண் படத்தில் நடிக்க ஒப்பந்தமாயிருந்தார் ரஜினி. ஒரு நாள் இரவு, எங்கள் வீட்டுக்கு வந்திருந்தவர், 'நெற்றிக் கண் படத்தில், நான் சமுதாயத்தில் மேல் மட்டத்தில் இருக்கும், மிகப்பெரிய பணக்காரர் வேடத்தில் நடிக்க வேண்டும்; அதற்கு உங்க டிக் ஷனரியைப் பார்த்து, மாடல் சொல்லுங்க...' என்றார். 'டிக் ஷனரியை பார்த்து நான் சொல்ல வேண்டாம். நாம் இருவரும் சேர்ந்தே டிக் ஷனரியை பார்த்துவிட்டு வரலாம், வாங்க...' என்று கூறி, சிவாஜியின், உயர்ந்த மனிதன் படம் ஓடிக் கொண்டிருந்த, சென்னை பாரகன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். படத்தில், சவுகார் ஜானகியிடம், சிவாஜி கோபமாக பேசும் காட்சி... பணக்காரருக்கு கோபம் வந்தால், அது, கட்டுப்படுத்தப்பட்ட கோபமாக இருக்கும். அதாவது, கோபம் இருக்கும். ஆனால், இரைந்து கத்தி, பேசமாட்டார். அந்த காட்சியைப் பார்த்ததும், ரஜினியிடம் அது பெரிய, பாதிப்பை ஏற்படுத்தியது. அதே போல் மற்றுமொரு காட்சியில், தன்னிடம் நீண்ட காலமாக பணிபுரிந்த வயதான ஊழியரிடம், அவருடைய விசுவாசத்தை பாராட்டி, தட்டிக் கொடுத்து, வழி அனுப்புவார். அப்போது, சிவாஜி கண்களில், இரண்டு சொட்டு கண்ணீர் வரும். இங்கும், பணக்காரரின் கட்டுப்படுத்தப்பட்ட, கம்பீரமான சோகத்தை வெளிப்படுத்தியிருப்பார் சிவாஜி. இந்த காட்சியையும், வெகுவாக ரசித்தார் ரஜினி. உயர்ந்த மனிதன் படத்தை, ரஜினி பார்ப்பது, அது தான் முதல் முறை. நெற்றிக் கண் படத்தில், செல்வந்தர் வேடத்தில் ரஜினி, அந்த காரெக்டரை உள்வாங்கி நடித்ததற்கு, உயர்ந்த மனிதன் ராஜலிங்கம் பாத்திரம், நிச்சயம் உதவியிருக்க கூடும் என்று, நினைக்கிறேன்.
சிவாஜி மீது, தனக்கு இருக்கும் பாசத்தையும், மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில், படையப்பா படத்தில், தன் தந்தை பாத்திரத்தில் நடிப்பதற்கு சிவாஜியை, 'புக்' செய்த போது, அவருக்கு பெரிய தொகையை அளித்து, அவரை கவுரவப்படுத்தினார் ரஜினி. படப் பிடிப்பின் போது சிவாஜிக்கு எந்த குறையும் ஏற்படாதவாறு கவனமாக பார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தார்.
படையப்பா பட டைட்டிலில், சிவாஜி பெயருக்கு, அடுத்தப்படி தான், ரஜினி பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சிவாஜியின் மீது ரஜினி கொண்டுள்ள மரியாதையின் வெளிப்பாடு தான் இது.
எங்கள் யு.ஏ.ஏ., நாடக குழுவின், 'லைட்ஸ் ஆன்' நாடகத்தின், நூறாவது நிகழ்ச்சி விழாவிற்கு, தலைமை வகிக்க, சிவாஜி கணேசனை அழைக்க, விஜயா - வாஹினி ஸ்டுடியோவிற்கு சென்றிருந்தேன். படையப்பா படத்தின் படப்பிடிப்பு, நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு நேரம். சிவாஜி சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் என்பதால், அவருடைய மேக் - அப் அறைக்குள் போகாமல், வெளியே காத்துக் கொண்டிருந்தேன். அப்போது, சிவாஜியின் உதவியாளர் திரிகோணம், 'சார் தூங்கலை, உள்ளே போய் பாருங்க...' என்றார். உள்ளே போனேன். அடுத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிக்குரிய, வசனங்களை படித்துக் கொண்டிருந்தார் சிவாஜி. எனக்கு ஒரே ஆச்சரியம்.
நடிப்பில் இமாலய சாதனைகளை செய்து முடித்தவர், ஒரு புதுமுகம் போல நடிக்க வேண்டிய காட்சியின் வசனத்தை பார்த்துக் கொண்டிருந்தது, ஆச்சர்யமாக இருந்தது. அது குறித்து அவரிடம் கேட்ட போது, 'நான் இறக்கும் காட்சியைப் படமாக்க போறாங்க... மத்த சீன்களிலே அதிக வேலை இல்லை. இந்த காட்சியில் நான் ஸ்கோர் செய்யணும். அது தான், 'டயலாக்' பார்த்துக் கொண்டிருந்தேன்...' என்றார். தன் தொழில் மீது கொண்டிருக்கும் பக்தி புரிந்தது.
ஜெமினி அதிபர், எஸ்.எஸ்.வாசன் இயக்கி, தயாரித்த வெற்றிப்படம், மோட்டார் சுந்தரம் பிள்ளை. 1966ல் எடுக்கப்பட்ட இப்படத்தில், சிவாஜிக்கு பணக்காரர் வேடம். அப்போது, சிவாஜிக்கு வயது, 37 தான். அப்படத்தில், பதிமூன்று குழந்தைகளுக்கு, அப்பாவாக நடித்திருப்பார். 37 வயதில், பெரிய கமர்ஷியல் கதாநாயகன் என்ற அந்தஸ்து உள்ள, வேறு எந்த ஹீரோவிற்கு, 13 குழந்தைகளுக்கு, அப்பாவாக நடிக்கும் தைரியம் வரும்! மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தை பற்றி, மற்றொரு சுவையான செய்தி: இந்தப் படத்தில். முற்றிலும் மாறுபட்ட, சிவாஜியை, காண்பிக்க வேண்டும் என்பதில், எஸ்.எஸ்.வாசன் தெளிவாக இருந்தார். எனவே, சிவாஜி தவிர மற்ற நடிகர், நடிகையரை அழைத்து, அவர்கள் வசனங்கள் பேசி, நடித்து பழக ஒத்திகைகளுக்கு ஏற்பாடு செய்தார். 'நீங்கள் எல்லாரும் உங்கள் பாத்திரங்களை சரியாக செய்யுங்கள். படப்பிடிப்பின் போது, நான் உங்களை கவனிக்க முடியாது; அதற்கு நேரம் இருக்காது. ஷூட்டிங் சமயத்தில், என்னுடைய முழு கவனமும் சிவாஜியிடம் மட்டும் தான் இருக்கும். சிவாஜியிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக் கொண்டு வருவது தான், என்னுடைய முயற்சியாக இருக்கும்...' என்று விளக்கினார். அவர் கள் அனைவரும், முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டது போல, படப்பிடிப்பின் போது, சிவாஜி மீது மட்டும் அவர் கவனம் செலுத்தினார். இந்த சுவையான செய்தியை, என்னிடம் சொன்னது படத்தில் அவருடைய, சம்பந்தியாக நடித்த, மேஜர் சுந்தர்ராஜன். படம் நூறு நாட்கள் ஓடி, வசூலை வாரி குவித்தது.
ஜெமினி ஸ்டுடியோ அதிபரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.வாசன், இந்தி நடிகர் ராஜேந்திர குமாருடன், ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற, சிவாஜி நடித்த, 'வியட்நாம் வீடு' நாடகத்தை பார்க்க வந்திருந்தார். நாடகம் முடிந்ததும், மேடைக்கு வந்த எஸ்.எஸ்.வாசன், சிவாஜியை கட்டியணைத்து அழுது விட்டார்.
நாடகத்தில், தன் தாயைப் பற்றி, சிவாஜி பேசும்போது, 'பாத்திரத்தோடு பாத்திரமா தேய்ஞ்சாளே, விறகோட விறகா வெந்தாளே...' என்று தன் தாயார் தன்னை வளர்க்க எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்று, வசனங்களில் சொல்வார் சிவாஜி. எஸ்.எஸ்.வாசன், தன் தாயாரை தெய்வமாக மதித்தவர். இந்த நாடகத்தைப் பார்க்கும் போது, தன் தாய், தன்னை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்ற நினைவுகள் வந்து, அழுது விட்டார். வியட்நாம் வீடு நாடக மேடையில், பிரஸ்டீஜ் பத்மநாப அய்யரின் தாயார் படம் மாட்டப்பட்டிருக்கும். அந்தபடம், எஸ்.எஸ்.வாசனின் தாயார் படம். வியட்நாம் வீடு திரைப்படமாக எடுக்கப்பட்டபோதும், எஸ்.எஸ்.வாசனின் தாயார் படத்தையே, படம் முழுவதும் உபயோகித்தார் சிவாஜி.
— தொடரும்.
எஸ்.ரஜத்
ராமஜெயம் சார்,
நேற்று மாலை நாங்கள் [நான் ராகவேந்தர் சார் மற்றும் சித்தூர் (இப்போது சென்னை) வாசுதேவன் மூவரும்] மகாலட்சுமி திரையரங்கிற்கு சென்றிருந்தோம். சரியான கூட்டம். நாங்கள் செல்லும் போதே அலப்பரைகள் ஆரம்பித்து விட்டன. மிகப் பெரிய ராட்சஸ மாலைகள் பானருக்கு அணிவிக்கப்பட்டிருந்தன. வழக்கம் போல் அனைத்து வித சடங்குகளும், அதாவது அபிஷேகம் செய்தல், சூடம் ஏற்றுதல், திருஷ்டி பூசணி சுற்றுதல் போன்றவை பதிவுக்கிரமாய் நடந்தேறியது.
அது என்னவோ தெரியவில்லை அரங்கத்தின் நேர் எதிரே ஒரு போலீஸ் பூத் அமைக்கப்பட்டிருப்பதனால் அங்கே ஒரு காவல் துறையை சேர்ந்த வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இது நீதி இதே அரங்கில் வெளியிடப்பட்டிருந்த போதும் இதே நிலைமைதான் இருந்தது. ஆனால் காவல் துறையினர் ரசிகர்களை எந்த கெடுபிடிகளுக்கும் ஆளாக்காமல் அமைதியாக கடமையை செய்தனர். ரசிகர்களும் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் பார்த்துக் கொண்டனர். அதே நேரத்தில் நாம் மேற்சொன்ன வைபவங்களும் வாழ்த்து முழக்கங்களும் ஆட்டம் பாட்டமும் ஒரு உணர்ச்சி வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வெகு வெகு நாட்களுக்கு பின் நண்பர் மோகன் {ரங்கன்] அவர்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரான மோகனின் Father In Law அவர்களும் நலமாக இருக்கிறார் என்று அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நாங்கள் அங்கே நிற்கும் போதே பால்கனி ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது. அரங்கத்தின் கீழ்த்தள டிக்கெட்டுகளும் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. வழக்கம் போல் பஸ்ஸில் சென்றவர்கள், கார் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் அனைவரும் பார்த்து வியந்து கொண்டே செல்ல சிவாஜி சேனையின் சக்தி மீண்டும் ஒரு முறை ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் நிரூபணமானது. ஒரு தவிர்க்க முடியாத வேலை காரணமாக நானும் ராகவேந்தர் சாரும் முக்கியமான ஒருவரை சந்திக்க செல்ல வேண்டியிருந்ததால் படத்திற்கு செல்லாமல் கிளம்பி விட்டோம். நண்பர் வாசு அவர்களும் வீடு திரும்ப வேண்டிய சூழல்.
படத்திற்கு சென்றவர்கள் இரவு படம் முடிந்தவுடன் தொடர்பு கொண்டு பேசிய போது அரங்கத்தின் கீழ் தளத்திலும் சரியான கூட்டம் என்று சொன்னார்கள்.
படத்தை வெளியிட்டுருப்பவருக்கு நிச்சயமாக லாபத்தை ஈட்டி தரும் என்பதிலும் சந்தேகமில்லை என்பது அங்கே அரங்கத்தை சேர்ந்த சிலருடன் பேசிய போது தெளிவானது. படத்தை வெளியிட்ட நண்பருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
அரங்கத்திற்கு வெளியே எடுத்த சில புகைப்படங்கள். நன்றி ராகவேந்தர் சார்!
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...27348817_n.jpg
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...39362558_n.jpg
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...42822415_n.jpg
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...48486042_n.jpg
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...50853611_n.jpg
அன்புடன்
ராமஜெயம் சார்,
சென்னையில் அடுத்து வெளியாகப் போகும் நடிகர் திலகத்தின் படங்கள் எவை என்று பார்த்தோமென்றால் அவற்றின் பட்டியல் இவ்வாறு அமையலாம்.
தங்க சுரங்கம்.
அண்ணன் ஒரு கோவில்
அவன்தான் மனிதன்
வைர நெஞ்சம்
வெள்ளை ரோஜா
தியாகம்.
மேலும் நமக்கு மிகவும் பிடித்த சில படங்கள் இந்த பட்டியலில் இடம் பிடிக்கலாம். அவை இன்னும் பேச்சு வார்த்தையில் இருப்பதால் அந்த விவரங்களை பிறகு வெளியிடுகிறேன். கலர் படங்கள் மட்டுமல்ல சில கருப்பு வெள்ளைப் படங்களும் அதில் அடக்கம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.
கோவையில் அடுத்து வெளியாகப் போகும் படம் சொர்க்கம். மார்ச் 7 முதல் [tentative date] ராயலில் வெளியாகிறது. சென்னையில் வெளியாகும் அனைத்துப் படங்களும் இனி கோவையிலும் வெளியாகும்.
அது போன்றே மதுரையில் விரைவில் வைர நெஞ்சம் படத்துடன் துவங்கப் போகிறது வெற்றி உலா. நெல்லையில் ஏற்கனவே நமது படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இது போன்ற சூழல் தமிழகமெங்கும் விரைவில் காணலாம்.
மேலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றவுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
thanks Murali sir for sharing not only madras news and also forthcoming rereleases of our BOX OFFICE hero NADIGARTHILAGAM,in all centres. sandippu will dinitely make a record,
Kalangal maralam rasanaigal maralam but our NADIGARTHILAGAM
values remains at skyhigh ALWAYS,being proved every now and then.
my kind enquiries to all our SHANTI friends.
<a href="http://s818.photobucket.com/user/jravikumar/media/MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg.html" target="_blank"><img src="http://i818.photobucket.com/albums/zz107/jravikumar/MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg" border="0" alt=" photo MoondruDeivangalwithout_zps1ebbe773.jpg"/></a>
மூன்று தெய்வங்கள் - சில ஆவணங்கள்
என் அலசலில் - மூன்று தெய்வங்களின் ஆவணங்களை சில technical snag னால் முன்பு பதிவிட முடியவில்லை - வாசுவின் உதவி மூலம் , அந்த இடைஞ்சலை இப்பொழுது தவிர்க்க முடிந்தது - நன்றி வாசு
http://i818.photobucket.com/albums/z...ps1ebbe773.jpg