http://s9.postimg.org/4bjhax7qn/tttsm_MGR_1.jpg
Printable View
http://i60.tinypic.com/262us6o.jpg
மதுரை சென்ட்ரல் அரங்கில் முதல் நாள் வசூல் ரூ.20,000/-
மக்கள் திலகத்தின் "குடியிருந்த கோயில் " புதிய வசூல் சாதனை .
எண்ணற்ற தடவை பல தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படம்
மீண்டும் மீண்டும் அரங்குகளில் பல முறை வெளியாகி வெற்றிநடை போட்ட படம்.
திரையுலகின் ஒரே வசூல் சக்கரவர்த்தி மறைந்தும், மறையாமல் நமது இதயங்களில்
வாழ்ந்து வரும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே என்பது இதற்கு சாட்சி.
தகவல் உதவி:மதுரை திரு.எஸ். குமார்.
ஆர். லோகநாதன்.
கண்கள் கண்ணீரில்..ஏற்கனவே உடல்நிலை எனக்கு சரியில்லை..விஜய் டிவி நிகழ்ச்சியை பார்த்தபோது..தானாக கண்களில் கண்ணீர் வழிந்தது..நன்றி விஜய் டீவீக்கு..என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி இது..நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் என் நன்றி..வாழ்க தலைவரின் புகழ்.. வளர்க அவரின் பக்தர்கள்... http://i59.tinypic.com/zjiavb.jpg
"There cannot be a life without challenges and miseries.
But it will be special (only) when one faces them with grit and overcomes them . The life of Revolutionary Leader MGR (as he is addressed) teaches us this lesson,"
http://www.dnaindia.com/india/report...lithaa-2052995
வேட்டைக்காரன் மற்றும் மாட்டுக்கார வேலன் 100வது நாள் விளம்பரங்கள் என்னும் பொங்கலைவிட இனிப்பான அரிய பொக்கிஷங்களை பதிவு செய்து நமக்கு பொங்கல் பரிசளித்து, திரிக்கும் பெருமை சேர்த்துள்ள திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i49.tinypic.com/2mzfujd.jpg
‘மன்னாதி மன்னன்’
உறவினர்களை நீண்ட காலத்துக்குப் பிறகு ஒன்றாக ஒரே இடத்தில் பார்த்து உணர்வுகளை மனம் விட்டு பேசியது போல இருந்தது. இன்று காலை விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மன்னாதி மன்னன் நிகழ்ச்சியைத்தான் சொல்கிறேன். 2 மணி நேரம் போனதே தெரியவில்லை.
முதலில் இதுபோன்ற பொங்கல் விழா கொண்டாட்ட நாளில் தலைவரைப் பற்றி பிரபலமான டி.வி.யில் 2 மணி நேரத்துக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்றால் மக்கள் அதனை விரும்புகிறார்கள் என்ற காரணம்தானே உண்மை. இந்த நிகழ்ச்சியைத் தவிர, நேற்று இரவு ராஜ் டி.வி.யில் ‘எம்.ஜி.ஆர் தி லெஜன்ட்’ என்ற நிகழ்ச்சியை வேறு அரை மணி நேரம் ஒளிபரப்பினார்கள். நாளை தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சிகளில் குறைந்தது (இப்போது உள்ள நிலவரப்படி) 8 படங்கள் ஒளிபரப்பாகிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது, மறைந்து 27 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் கூட தனியார் தொலைக்காட்சிகளில் தலைவருக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை பார்க்கும்போது அவரது ஆளுமைதான் என்ன? என்ற வியப்பே ஏற்படுகிறது. சரி. நிகழ்ச்சிக்கு வருகிறேன்.
*விஐடி பல்கலைக் கழக வேந்தர் திரு.விஸ்வநாதன் இந்த பல்கலைக்கழகமே எம்.ஜி.ஆர்.போட்ட பிச்சை என்றார்.
* திரு.ஜேப்பியாரின் மகள் மரியா, தனது தந்தை கூறியதாக ஒரு கருத்தை சொன்னார். ‘தனது வேனுக்குப் பின்னால் ஓடிவரும் மக்களைப் பார்த்து தலைவர் ‘இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன்?’’ என்று கண்ணீர் விட்டபடியே கேட்டாராம்.
* திரு. பந்துலுவின் மகள் விஜயலட்சுமி, பந்துலு அவர்கள் மறைந்த பிறகு அவர் குடும்பத்தின் கடன் பற்றிய விவரங்களை அறிந்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை தலைவரே டைரக்ட் செய்து (இதற்கு பணம் கிடையாது) நடித்துக் கொடுத்து கடனை அடைத்தார் என்று தெரிவித்தார். அவரும் அழுதார்.
*ஆரம்பத்தில் தலைவரின் பேச்சை ஒலிபரப்பினார்கள். அந்த மழலை மணிக்குரலை கேட்டதுமே அனைவருக்கும் ஆனந்தக் கண்ணீர். அரங்கில் மட்டுமல்ல, நமக்கும்.
*பேச்சைக் கேட்டதும் ஒருவர் (பெயர் தெரியவில்லை. பெயர்களை போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்) அழுகை தாங்க முடியவில்லை அவருக்கு. அவருக்காக மீண்டும் பேச்சை ஒலிபரப்பினார்கள்.
* நண்பர் திரு.லோகநாதன் குறிப்பிட்டது போல, திரு. ஞான ராஜசேகரனின் மனதைத் தொட்ட பேச்சு.
இன்னும், திரு.மோகன் ராம், தலைவரின் எந்த படத்தை பற்றி, என்ன தகவல் கேட்டாலும் அடுத்த விநாடி பதிலளித்த திரு. ராஜப்பா வெங்கடாச்சாரி, திரு. ஞான.ராஜசேகரன், கரு.பழனியப்பன், இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், 1956ம் ஆண்டு தலைவர் ஆசிரியராக இருந்து நடத்திய ‘நடிகன் குரல் ’ பத்திரிகை தொகுப்பை காட்டியவர், அதை எந்த விலை கொடுத்தும் வாங்குவதற்கு தயாராக இருந்தவர்கள், தலைவரின் அட்டகாச ஸ்டைல் நடிப்பை ரசித்தவர்கள், நடிப்பு பிடித்ததற்கான காரணங்களை சொன்னவர்கள், அவரது அழகிய தோற்றத்தை சிலாகித்தவர்கள்..... கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
ஒரு அம்மையார் தலைவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடைசிவரை பார்க்க முடியவில்லை என்று கதறினார். (அவர் மாட்டுக்கார வேலனுக்கு டிக்கட் வாங்கியது சுவாரசியம்)அப்படியே, என் எண்ணத்தை பிரதிபலித்தார். என் வாழ்நாளில் இனி நிறைவேற வாய்ப்பே இல்லாத, தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றம் அது.
அந்த அம்மையார் உட்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தலைவர் பற்றி குறிப்பிட்டபோது கண்ணீர் விட்டனர். நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் கண்கள் பனித்தன. இதே நிலை நம் எல்லாருக்குமே இருந்திருக்கும். வேனுக்குப் பின்னால் ஓடி வந்த மக்களைப் பார்த்து ‘இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன்?’ என்று தலைவர் கண்ணீர் விட்டாரே? மன்னாதி மன்னன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும், பார்த்துக் கொண்டிருந்த நாமும் கண்ணீர் விட்டோமே? இந்தக் கண்ணீர் துளிகள்தான், தலைவர் மீது நாமும், நம் மீதும் ரசிகர்கள், கட்சியினரைத் தாண்டி பொதுமக்கள் மீது தலைவரும் வைத்திருந்த ஆழம் காண முடியாத அன்பு பெருங்கடலின் துளிகள். அந்தக் கண்ணீரில் நடிப்பு இல்லை. உண்மை இருந்தது.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு பதிவில் எழுத முடியாது. மேலே குறிப்பிட்டவர்களுடன் விட்டுப் போன பிறரையும் சேர்த்து பகுதி, பகுதியாக எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ‘‘தலைவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், கடைசிவரை பார்க்க முடியவில்லை’’ என்று அழுது, என் எண்ணத்தை பிரதிபலித்தார் என்றேனே, அந்த தாயிடம் இருந்தே முதல் பதிவை தொடங்குகிறேன்.
இன்று வெளியூர் புறப்படுகிறேன். அடுத்த வாரமும் வெளியூர் செல்ல வேண்டியிருக்கிறது. நாளை மறுநாள் திரும்பி விடுவேன். தலைவருக்கு நாளை பிறந்த நாள். அட்வான்சாக இன்றே பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு புறப்படுகிறேன். திரும்பி வந்து எழுதுகிறேன். நன்றி.
திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு, எங்க வீட்டுப் பிள்ளை படத்தைப் பற்றியும் நிச்சயம் எழுதுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i62.tinypic.com/2czetkj.jpg
அன்புக்கு பிறந்த நாள்...
ஆற்றலுக்கு பிறந்த நாள்...
இசைபட்ட வாழ்வுக்கு பிறந்த நாள்...
ஈகைக்கு பிறந்த நாள்....
உண்மைக்கு பிறந்த நாள்....
ஊருக்கு உழைப்பவருக்கு பிறந்த நாள்.....
எளிமைக்கு பிறந்த நாள்....
ஏழைப் பங்காளனுக்கு பிறந்த நாள்...
ஐயமில்லா அறிவுக்கு பிறந்த நாள்..
ஒப்பிலா திறமைக்கு பிறந்த நாள்...
ஓங்கு புகழ் வள்ளலுக்கு பிறந்த நாள்....
ஒளவையின் தமிழ் போன்ற இளமைக்கு பிறந்த நாள்...
எஃகு மன உறுதிக்கு பிறந்த நாள்....
சுருக்கமாக..........
பொன்மனச் செம்மலாம் புரட்சித் தலைவருக்கு பிறந்த நாள்....
வாழ்த்துக்கள் தலைவரே!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
SUPER KALAIVENTHAN SIR
http://i57.tinypic.com/293g8dw.png
VERY NICE. THANKS VINOD SIR
http://i59.tinypic.com/2qxvuyu.png
நேற்று (15-01-15) இரவு ராஜ் டி.வி.யில் ‘எம்.ஜி.ஆர் தி லெஜன்ட்’ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி, புரட்சித்தலைவருக்கு மேலும் பெருமை சேர்த்த ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கு, அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பாக நன்றி !
மக்கள் திலகத்தின் பிறந்த நாளினையொட்டி, உயிரெழுத்துக்களை வரிசையாக கையாண்டு, தீட்டப்பட்ட கவிதை அற்புதம். நன்றி திரு. கலைவேந்தன் அவர்களே !
கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்களின் அரிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி !
இன்று மாட்டுப்பொங்கல் http://i60.tinypic.com/16kuemf.jpg
RARE STILL
http://i59.tinypic.com/20qi2w2.jpg
தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த தினத்தில், அவரது சிலை அருகில் - தமிழறிஞர்களை கவுரவப்படுத்தி, தமிழ் பல்கலை கழகத்தினை உருவாக்கி, உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தி, தமிழ் சீர் திருத்த எழுத்துக்களை நடைமுறைக்கு கொண்டு வந்த மகான், உலகத்தமிழர்களின் உண்மைத்தலைவராக உயர்ந்து நிற்கும் உன்னதமான புரட்சித்தலைவர் புகைப்படத்தை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
http://i59.tinypic.com/1zc3bbn.jpg
விஜய் தொலைக்காட்சி நிறுவனம் இன்று ஒலி – ஒளி பரப்பிய “மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர்.” நிகழ்ச்சி, முன்னரே கூறியபடி, அவர்களின் வழக்கமான பாணியில், எடிட் செய்யப் பட்டும், நன்றாக இருந்ததன் காரணம் –
மக்கள் திலகத்தின் மகத்தான மகிமைகளும், அவரின் திரையுலக – அரசியல் சாதனைகளும், அவற்றையெல்லாம் தாண்டி அவரது மனிதாபிமான செயல்களும், அதை ரசிகர்களும், பக்தர்களும், முக்கிய பிரமுகர்களும், எடுத்து சொன்ன விதமும் தான்.
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் தெரிவித்த கருத்தின்படி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பெயரை குறிப்பிட்டிருக்கலாம்.
மறைந்த புகழ் பெற்ற இயக்குனர் பந்துலு திருமதி பி. ஆர். விஜயலட்சுமி அவர்கள், மக்கள் திலகத்தின் மனிதாபிமானத்தையும், பந்துலு இறந்த பின்பு, தங்கள் குடும்பத்துக்கு நம் பொன்மனசெம்மல் அவர்கள் ஆற்றிய உதவிகளையும், பட்டியலிட்டு, கலங்கியது காண்போர் அனைவரின் நெஞ்சை யும் தொட்டது. 2 வருடங்களுக்கு முன்பு, திருமதி பி.ஆர். விஜயலட்சும் அவர்களை சந்தித்து, இறைவன் எம். ஜி. ஆர். பகதர்கள் குழு சார்பில், மறைதிரு பந்துலு அவர்களும், நம் புரட்சித்தலைவரும் இணைந்து நிற்கும் பெரிய படத்தினை பரிசாக அளித்து அதை அவர் தம் அலுவலகத்தில் மாட்டி வைத்ததை நினைவு கூர்ந்து தெரிவித்தது பாராட்டுக்குரியது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து வருடந்தோறும், சுமார் 2 லட்சம் பொறியாளர்களை உருவாக்கிய பெருமை புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களை மட்டுமே சாரும் என்ற தகவலை இன்றைய மாணவ சமுதாயமும், இளம் தலைமுறையினரும் உணரும் வண்ணம், பேசியகல்வியாளர் திரு. விசுவநாதன் அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.
திரு.ஜேப்பியாரின் மகள் மரியா, குண்டடி பட்ட பிறகு நமது இதய தெய்வம் அவர்கள் குரலை யாரும் குறை கூறக்கூடாது என்று சொன்னது, சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் (விஜய் தொலைக்காட்சி உட்பட) மிமிக்ரி செய்வதை சுட்டிக் காட்டி அவர்களுக்கு ஒரு குட்டு வைத்தாற் போல் இருந்தது. கோடானு கோடி எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், இத்திரியின் மூலம் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தது கொள்கிறோம்.
பெண்மணி ஒருவர், கடைசி வரை தலைவரைப் பார்க்க முடியவில்லையே என்று வேதனையுடன் கண்ணீர் விட்டது, நம்மையும் அழ வைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அவர், மக்கள் திலகத்தின் “மாட்டுக்கார வேலன்” காவியத்தை பார்த்த சம்பவத்தை விவரிக்கும் போது நெஞ்சை நெகிழச் செய்தது.
எந்த ஒரு திட்டம் என்றாலும், அதனால் ஏழை மக்களுக்கு என்ன பயன் என ஆராய்ந்து அந்த திட்டத்தின் பலன் ஏழை மக்களுக்கு சரியாக கிட்டுகிறதா என்றுதான் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் பார்ப்பார் என்று திரு. ஜி. விசுவநாதன் அவர்கள் கூறியதை எண்ணும்போது, இனி இது போன்ற ஏழைப்பங்காளன் கிடைப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.
திரு. மோகன்ராம் அவர்கள், தமிழ் திரையுலகிற்கு இரு ஜாம்பவான்களை ( மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் மற்றும் திரு. மகேந்திரன்) நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அறிமுகப்படுத்தியதை பெருமையுடன் சிலாகித்தார். திரு. கே. பாலச்சந்தர் அவர்கள் திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு. கமலஹாசன் போன்றோரை தமிழ் திரையுலகில் அடையாளம் காட்டியதையும், இதற்கு மூல காரணம் எம். ஜி. ஆர். தான் என்றும் திரு. மோகன்ராம் அவர்கள் கூறியதை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் ஏனோ கட் செய்து விட்டனர்.
இசையமைப்பாளர் திரு. (சங்கர்) கணேஷ் அவர்கள், பொன்மனசெம்மலின் பெருமைகளை விவரித்தபோது நம் கண்களில் கண்ணீர் பனித்தது.
இயக்குனர் கரு. பழனியப்பன் தனது பேச்சில், சாலிவாகனன் திரைப்படத்தில் அங் கீகரிப்படாத ஸ்டண்ட் கலைஞர் சின்னப்ப தேவர், பின்னர் தான் கதாநாயகனாக நடித்த முதல் காவியமாகிய “ராஜ குமாரி” யில் அவருக்கு வாய்ப்பினை அளிக்குமாறு சிபாரிசு செய்து அதனை நிறைவேற்றிக்காட்டிய நினைத்ததை முடித்தவர் என்று புரட்சித்தலைவருக்கு புகழாரம் சூட்டியது, போற்றத்தக்கது. தான் கதாநயாகனாக நடிக்கும் முதல் படம் என்ற நிலையில், தனக்கே இந்த வாய்ப்பு திரிசங்கு சொர்க்கம் என்ற நிலையில், இன்னொருவருக்கு சிபாரிசு செய்த தைரியம், துணிச்சல் பற்றியும் அவர் தெரிவித்திருக்கலாம். அவர் அவ்வாறு கூறியிருந்தால், அதையும், அநேகமாக எடிட் செய்து விட்டார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
நிகழ்ச்சியின் இறுதியில், காண்பிக்கப்பட்ட, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் வீடியோ காட்சிகள் வெகு அருமை.
ஏழைகளின் கடவுள் எம்.ஜி.ஆர்., மனித நேயத்தின் சின்னம் எம்.ஜி.ஆர்., அன்பு -அருள் - எம்.ஜி.ஆர்., கொடை வள்ளல் . கர்ணன் எம்.ஜி.ஆர்., பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்
அன்பு - அறிவு - அழகு எம்.ஜி.ஆர்., சகலகலா வல்லவர் எம்.ஜி.ஆர்., என்று ஒரு தனி மனிதரின் இத்தனை குணாதிசயங்களை கொண்டஒருவர் இருப்பது உலகில் எம்ஜிஆர்
ஒருவரே என்ற சகோதரர் திரு. சி. எஸ். குமார் அவர்களின் கருத்து மெத்த சரியே !
பொதுவாக இந்த நிகழ்ச்சி, தொலைக்காட்சி நேயர்கள் விரும்பும் வண்ணம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய திரு. கோபிநாத் அவர்களுக்கும், நிகழ்ச்சியினை ஒலி – ஒளி பரப்பிய விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும், முக்கிய விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் அவர்களுக்கும், வேலூர் பலகலைகழக வேந்தர் திரு. விசுவநாதன் அவர்களுக்கும், திருமதி பி. ஆர். எஸ். விஜயலட்சுமி அவர்களுக்கும், முருகன் திரையரங்க உரிமையாளரின் மகனும், எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவ ஆலோசகருமாகிய திரு. வி. பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கும், திரு. மோகன்ராமன் அவர்களுக்கும், திரு. கரு. பழனியப்பன் அவர்களுக்கும், திரு. ஞான ராஜசேகரன் அவர்களுக்கும், மற்றும் பட்டியலில் விடு பட்ட ஏனைய முக்கிய பிரமுகர்களுக்கும், நன்றி !
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று, புரட்சித்தளைவரின் புகழை பறை சாற்றிய எனதருமை மூத்த சகோதரர் பெரியவர் திரு. ஆழ்வார் திரு நகரி (தூத்துக்குடி மாவட்டம்) ராஜப்பசாமி என்கின்ற வெங்கடாச்சாரி, திரு. கலைவாணன், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. சைதை ராஜ்குமார், மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இத்திரியின் பதிவாளர்கள் திரு,. ஆர். லோகநாதன், திரு. தெனாலி ராஜன் மற்றும் மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திய இதர அன்பர்களுக்கும் நன்றி.
இன்றைய மாலைச்சுடர் தினசரியில் வெளியான செய்தி
http://i58.tinypic.com/qmyzv6.jpg
இன்றைய மாலை முரசு தினசரியில் வெளியான செய்தி
http://i58.tinypic.com/2cmtax4.jpg
இன்றைய மக்கள் குரல் தினசரியில் வெளியான செய்தி
http://i61.tinypic.com/v45tsj.jpg
மக்கள் திலகமே
உங்கள் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுகிறோம் -இன்று
உலகமே உங்களை எண்ணி வியந்து பாராட்டுகிறது .
ஊடககங்கள் உங்களுக்கு புகழ் மாலை சூட்டியது . மய்யம் திரியின்
பங்களிப்பார்கள்
என்றென்றும் உங்கள் புகழையே பாடும் வினோத்தும் -நெஞ்சிலே
உங்கள் நினைவுகளை சுமந்து வரும் திருப்பூர் ரவிசந்திரனும்-தலைவா நீயே என் மூச்சு
என்று சுவாசிக்கும் கலியபெருமாளும் ,என் தெய்வம் எம்ஜிஆர் என்று ஜெய்சங்கரும்
ஸ்ரீ எம்ஜிஆர் .காம் மூலம் அனுதினமும் உன புகழ் பாடும் ரூப்குமாரும் - உங்களையே
பூஜிக்கும் யுகேஷ் பாபுவும் -உங்கள் விழா எதுவானாலும் எட்டு திக்கு சென்று படமெடுத்து
மையம் திரியில் பதிவிடும் உங்கள் பக்தர்கள் வேலூர் ராமமூர்த்தி யும் , லோகநாதனும்
முரட்டு பக்தன் செல்வகுமாரும் , தினமும் உங்களை ஆராதனை செய்யும் கலைவேந்தனும்
உங்கள சினிமா பட காட்சிகளை கண்முன்னே நிறுத்திய முத்தையனும்
கவிதாஞ்சலி புனையும் தெனாலி ராஜனும் -எல்லோரையும் வாழ்த்தும் சுகராமும்
ரத்தத்தின் ரத்தமான பிரதீப் பாலுவும் அடியேன் குமாரும் உங்களை வணங்கி மகிழ்கிறோம்
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளியான விளம்பரம்
http://i58.tinypic.com/kd6a2e.jpg
ஜனவரி 17 தமிழகம் மட்டுமல்ல உலக தமிழர் அனைவரும் இந்த தேதி நினைத்து பார்த்து புளகாங்கிதம் அடைந்த நாள். ஆம், இந்த புண்ணிய பூமியில் காலடிஎடுத்து வைத்து நம் தமிழகத்தில் உள்ளத்தை உறையவைத்து ஏழை எளிய மக்கள் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் அசரீரியாய் அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து, குரல் மட்டுமல்ல...தன்னால் முடிந்தவரை நல்ல ஒரு வாழ்வும் வளமும் பெருக்கிகொடுத்த மூன்றெழுத்து மந்திர சொல்லிற்கு நிரந்தர சொந்தக்காரர் ஏழைகளின் இதய தெய்வம் மக்கள் திலகம் M G R அவர்கள் அவதரித்த நாள்.
இந்த நல்ல நாளில் மையம் திரி மக்கள் திலகம் புகழ் பாமாலையை தமது உயிர் மூச்சாக பாடிகொண்டிருக்கும் உண்மையான பக்தர்கள் மற்றும் அவரின் மட்டுமே உண்மையான விச்வாசியாக என்றும் இருக்கும் திரியின் ஜென்டில்மேன் திரு எஸ்வி, பழுத்த அனுபவச்த்தர் அனைவரையும் தகுதியறிந்து அதற்கேற்றபடி போற்றும் நடுநிலையாளர் திரு குமார் (பெங்களுரு) , தகவல் களஞ்சியம் மற்றும் எண்ணிக்கையால் மட்டுமே வயது ஏறிய முரட்டு பக்தர் பேராசிரியர் திரு செல்வகுமார், இளம் புயல் திரு கலைவேந்தன், இனமான நண்பர் திரு யுகேஷ், மக்கள் திலகம் படங்களை விதவிதமாக செதுக்கும் கைதேர்ந்த சிற்பி திரு முத்தையா அம்மு, திரு ரூப் மற்றும் திரு பிரதீப் பாலு ஆகியோருக்கு மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன்.
மக்கள் திலகம் மட்டுமல்லாது கட்சியை சார்ந்த மற்றவர்களின் விச்வாசியாகவும் இருக்கும் திரு சைலேஷ்பாபு, திரு லோகநாதன், திரு கலியபெருமாள், திரு சுகராம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மக்கள் திலகம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்...!
மானிடராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு மரகன்றயாவது பிறர்க்கு பயன்படுமலவிர்க்கு நடவேண்டும் என்ற ஆன்றோர் சொல்லை எளிய நடையில் மக்களுக்கு கொண்டு சென்ற ஏழைகளின் ஏந்தல் திரு MGR அவர்களின் இந்த பாடலை இந்த நன்னாளில் அவருடைய எனக்கு பிடித்த ஒரு பாடலை இங்குபதிவு செய்கிறேன்.
உங்கள் அனைவரின் சேவையும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திகின்றேன்.
https://www.youtube.com/watch?v=m_d5bAbO0fM
மரியாதைக்குரிய " மக்கள் திலகம் " எம்.ஜி.ஆர் அவர்கள் பிறந்தநாள் _()_..............( 17/01/1917)
" எங்களை வாழவைத்த வள்ளலே
உங்களை நன்றியுடன் வணங்குகிறோம் "
...எங்கள் " நெஞ்சிருக்கும் வரை , உங்கள் நினைவிருக்கும்"...அய்யா எங்கள் தலைமுறைகளும் உங்களை போற்றி வணங்கும் .....
http://i59.tinypic.com/110dcp2.jpg
Our Best Wishes to Sri. Nallathambi NSK, who also celebrates his Birthyday on 17/1.