http://i64.tinypic.com/5x8uab.jpg
Courtesy : Facebook
Printable View
http://i64.tinypic.com/5x8uab.jpg
Courtesy : Facebook
http://i65.tinypic.com/2rp41ep.jpg
வணக்கம் நண்பர்களே
நானும் உங்களைப் போலவே புரட்சித் தலைவரின் பக்தன். திரியை பல மாதங்களாக படித்து வந்தேன். பதிவு செய்த எனக்கு இப்போது அனுமதி கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. திரியில் புரட்சிதலைவர், பொன்மனச் செம்மலின் பெருமைகளை பதிவிட விரும்புகிறேன். நேரம் கிடைக்கும்போது பதிவிடுவேன். என்னை வரவேற்பீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
மதுரை சென்ட்ரலில் 22/07/16 முதல் புரட்சி தலைவர் நடித்த "ஆசை முகம்" தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது.
http://i63.tinypic.com/mc4zt1.jpg
http://i66.tinypic.com/2reod8l.jpg
தகவல் உதவி நண்பர் திரு. மதுரை எஸ்.குமார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த "ரிக்க்ஷகாரன்" போஸ்டர்.
http://i63.tinypic.com/nd9e83.jpg
http://i67.tinypic.com/28hphd4.jpg
http://i66.tinypic.com/2hzk308.jpg
Evergreen Makkalthilagam, Emperor of Cinema World always... His Majestic Mega, Super Duper Hit "Rickshawkkaaran"--- Digital 2K proudly format will be release shortly...That's Fine Posters, Stills too Good...
http://i65.tinypic.com/jl2eqw.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் புதிதாய் இணைந்திருக்கும் திரு. தேவ சேனாதிபதி ராஜராஜன் அவர்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் !
புரட்சித் தலைவரின் தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் சுந்தர பாண்டியன். மக்கள் திலகத்தின் பெயரால் இப்படி ஒரு திரி இருப்பதை ஃபேஸ்புக் நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். ரிக்க்ஷாக்காரன் படம் வெற்றிகரமாக வெளியாகி ஆயிரத்தில் ஒருவன் படம் போல வெள்ளிவிழா காண இருக்கும் நேரத்தில் இங்கே கலந்து கொண்டு பதிவு செய்வதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
ஒப்பீடுகளை எல்லாம் கடந்து யாரும் எட்ட முடியாத உயரத்தில் புகழோடு விளங்கும் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க!
http://i66.tinypic.com/seahs6.jpg
திரைப்படத்தில் மட்டுமின்றி, எப்போதுமே ஸ்டைலாக இருப்பவர் மக்கள் திலகம் என்பது வசீகரிக்கும் இந்த ஃபோட்டோவைப் பார்த்தாலே தெரியும்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்திருக்கும் திரு .தேவ சேனாதிபதி ராஜராஜன் மற்றும் திரு சுந்தரபாண்டியன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் .
நணபர்களே
மக்கள் திலகத்தை பற்றிய உங்களுடைய பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .
NADIGAR THILAGAM SIVAJI GANESAN- NINAIVU NAAL -INDRU
http://i68.tinypic.com/fwbq9.jpg
http://i67.tinypic.com/2ylqmh5.jpg
எனக்கு வரவேற்பு கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.
நான் சிறுவயதில் இருந்தே புரட்சித் தலைவரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். இன்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். அவரைப் போல நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து வாழ்க்கையில் வழிதவறிப் போக சந்தர்ப்பங்கள் வந்தபோதும் நேர்மையாக ஒழுக்கமாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இனிமேலும் அப்படியே இருக்க புரட்சித் தலைவரின் ஆசி வேண்டுகிறேன். மக்கள் திலகத்தின் ரசிகன் என்பதில் கர்வப்படுகிறேன்.
நான் ஆணையிட்டால் எனக்கு மிகவும் பிடித்த படம். அதில் வரும் நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடலும் மக்கள் திலகத்தின் நடிப்பும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
வாழ்க்கையில் தவறான வழிகளில் செல்லாமல் இருந்ததால் நானும் நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன். மக்கள் திலகம் மீது உள்ள காதலை இங்கே அழைத்து வந்தேன்.
கருப்பு வெள்ளை படங்களில் கருப்பு மற்றும் வெள்ளை டிரஸ்கள்தான் பளிச்சென தெரியும். பாக்கி நிறங்கள் தெரியாது. இந்தப் பாடலில் மக்கள் திலகத்துக்கும் சரோஜாதேவிக்கும் கருப்பு வெள்ளையில் உடைகள். ஆரம்பத்தில் மக்கள் திலகத்துக்கு வெள்ளை உடை. சரோஜா தேவிக்கு கருப்பு உடை. பாதி பாடலுக்குப் பின் மக்கள் திலகத்துக்கு கருப்பு உடை. அதில் அவர் இளமை பிளஸ் கொள்ளை அழகு. நடன அசைவுகள் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பாடலின் கடைசியில் சரிவான மேடை மீது விறுவிறுவென்று கால்களை வேகமாக ஸ்டெப் வைத்து பக்கவாட்டில் வரும் சுறுசுறுப்பு 25 வயது இளைஞருக்கு கூட வராது. அவருக்கு என்றுமே 16தான்.
நான் மிகவும் ரசித்த நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடல். எல்லாரும் ரசிப்போம். நன்றி.
https://youtu.be/IACqSG0qUgg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியில் புதிதாய் இணைந்திருக்கும் திரு. சுந்தர பாண்டியன் அவர்களை அன்புடன் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் !
நான் வணங்கும் எங்கள் குல தெய்வம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள், தங்கள் பெயருக்கு முன் " மதுரையை மீட்ட " என்ற வாக்கியத்தை பயன்படுத்தி ஒரு வரலாற்று காவியம் அல்லவா படைத்து விட்டார்.
http://i63.tinypic.com/nzq71u.jpg
ஒரு கோவில் கட்டட நிதிக்காக பொன்மனசெம்மலை வாரியார் சுவாமிகள் பார்க்க சென்றிருந்தார் .தலைவர் அப்போது நம்நாடு படப்பிடிப்பில் விஜயா ஸ்டூடியாவில் இருந்தார்.சுவாமிகள் வந்து இருப்பதை அறிந்த செம்மல் விவரத்தை கேட்டு அறிந்து தொகை குறிப்பிடாமல் செக் ஒன்றை கையொப்பம்மிட்டு கொடுத்து உள்ளார் .இதை பார்த்த சுவாமிகள் தொகை குறிப்பிடவில்லை என்று கேட்டதற்கு தலைவர் சொன்ன பதில் என்ன வென்றால் என்னிடம் வந்த பிறகு நீங்கள் இனி யாரிடமும் கோவில் கட்டட நிதிக்காக வசூலுக்கு செல்லக் கூடாது .உங்களுக்கு வேண்டிய தொகையை நீங்களே எழுதி கொள்ளுங்கள் என்று தலைவர் வாரியார் சுவாமிகளிடம் சொன்னார்.
அதற்கு பிறகு தான் பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை சுவாமிஅவர்களால் எங்கள் சிங்கார தலைவன் செல்ல தலைவனுக்கு அளிக்க பட்டது .
WhatsApp message
நமது திரியில் புதிதாக சேர்ந்துள்ள திரு தேவ சேனாதிபதி ராஜராஜன் மற்றும் திரு சுந்திரபாண்டியன் ஆகியோர் இருவரும் மக்கள் திலகத்தின் புகழ்பாட அன்புடன் வரவேற்கின்ரேன்.
http://i64.tinypic.com/2vvjls8.jpg
உரிமைக் குரல் நாயகி லதாவை அணைத்தபடி இருக்கும் இந்த வாலிபனுக்கு 20 வயசு இருக்குமா?
https://youtu.be/vylKWIFujkI
சுந்தர பாண்டியன், நான் ஆணையிட்டால் பட பாடல் எனக்கும் புடிக்கும். லதாவும் நம் தெய்வமும் சேர்ந்து கலக்கிய இளமை பொங்கித் திமிரும் இந்தப் பாட்டிலே புரட்சித் தலைவர் குந்தி உட்கார்ந்து முட்டியை மடக்கி மடக்கி ஸ்டெப் போட்டு நகர்ந்து செல்வார். அதை எல்லோராலயும் பாக்க மட்டுமே முடியும். யாரும் செய்ய முடியாது.
https://youtu.be/WZeGz5BijUE
உரிமைக் குரல் நாயகி ரோஜா மொட்டு லதாவுடன் தெய்வத்தின் இந்த டான்சு இன்னும் கலக்கும்
நாளை (22/07/16) முதல் சென்னை பாட்சாவில் (மினர்வா) மக்கள் திலகம் நடித்த "சங்கே முழங்கு" தினசரி 3 திரையிடப்படுகிறது.
http://i64.tinypic.com/xmtt2t.png
தகவல் உதவி நண்பர் திரு. பி.ஜி.சேகர்.
இந்த வாரம் குமுதம் இதழில் செய்தி.
http://i64.tinypic.com/x1eukw.jpg
http://i65.tinypic.com/v5hk7q.jpg
http://i65.tinypic.com/b6txc1.jpg
http://i68.tinypic.com/szv0k7.jpg