-
21st July 2016, 12:38 PM
#11
Junior Member
Senior Hubber
எனக்கு வரவேற்பு கொடுத்த நண்பர்களுக்கு நன்றி.
நான் சிறுவயதில் இருந்தே புரட்சித் தலைவரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன். இன்று எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். அவரைப் போல நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து வாழ்க்கையில் வழிதவறிப் போக சந்தர்ப்பங்கள் வந்தபோதும் நேர்மையாக ஒழுக்கமாக இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இனிமேலும் அப்படியே இருக்க புரட்சித் தலைவரின் ஆசி வேண்டுகிறேன். மக்கள் திலகத்தின் ரசிகன் என்பதில் கர்வப்படுகிறேன்.
நான் ஆணையிட்டால் எனக்கு மிகவும் பிடித்த படம். அதில் வரும் நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடலும் மக்கள் திலகத்தின் நடிப்பும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
வாழ்க்கையில் தவறான வழிகளில் செல்லாமல் இருந்ததால் நானும் நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன். மக்கள் திலகம் மீது உள்ள காதலை இங்கே அழைத்து வந்தேன்.
கருப்பு வெள்ளை படங்களில் கருப்பு மற்றும் வெள்ளை டிரஸ்கள்தான் பளிச்சென தெரியும். பாக்கி நிறங்கள் தெரியாது. இந்தப் பாடலில் மக்கள் திலகத்துக்கும் சரோஜாதேவிக்கும் கருப்பு வெள்ளையில் உடைகள். ஆரம்பத்தில் மக்கள் திலகத்துக்கு வெள்ளை உடை. சரோஜா தேவிக்கு கருப்பு உடை. பாதி பாடலுக்குப் பின் மக்கள் திலகத்துக்கு கருப்பு உடை. அதில் அவர் இளமை பிளஸ் கொள்ளை அழகு. நடன அசைவுகள் பார்த்துக் கொண்டே இருக்கலாம். பாடலின் கடைசியில் சரிவான மேடை மீது விறுவிறுவென்று கால்களை வேகமாக ஸ்டெப் வைத்து பக்கவாட்டில் வரும் சுறுசுறுப்பு 25 வயது இளைஞருக்கு கூட வராது. அவருக்கு என்றுமே 16தான்.
நான் மிகவும் ரசித்த நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன் பாடல். எல்லாரும் ரசிப்போம். நன்றி.
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
21st July 2016 12:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks