எல்லோருடைய உணர்வுகளையும் ஒரு வரியில் கூறிவிட்டீர்கள். நன்றி.
Printable View
நடிகர் திலகத்தின் திரிக்கு வருகை தந்து குறுகிய நாட்களிலே பலரது கவனத்தை கவர்ந்திருக்கும் வனஜா அவர்களே! உங்கள் வருகைக்கு நன்றி! பலரையும் எழுத தூண்டும் உங்கள் எழுத்து நடைக்கு நன்றி! இந்த திரியில் இதுவரை அதிகமாக பங்கு பெற்ற சாரதா, சக்திபிரபா, ரோஷன், tfmlover மற்றும் தமிழ் என்ற ஐந்து பெண்மணிகளுக்கு பிறகு ஆறாம் தினையாக வந்துள்ள உங்களை மன மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்! தொடருங்கள்! [உஷா சங்கர் மற்றும் சுதா ஆகிய இரு பெண்மணிகளும் கூட தங்கள பங்களிப்பை இந்த திரிக்கு தந்துள்ளனர். அவர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூறுவோம்]
அதே போன்று புதிய வரவாக களமிறங்கியிருக்கும் நண்பர் முத்துராமன் அவர்களையும் நல்ல இடம் நீங்கள் வந்த இடம் என கூறி வருக வருக என வரவேற்கிறேன்!
கோபால்,
"மாணிக்கத்தை" எடுத்தால் மட்டும் போதாது. அதை துடைத்து பளிச்சென அதன் பிரகாசம் பலருக்கு தெரியும்படி செய்ய வேண்டும். அதற்கு ஏன் இந்த தாமதம்?
அன்புடன்
இந்த திரியில் பங்களித்தவர்களைப் பற்றிய எனது பதிவில் பெயர் விடுப்பட்டு போன அருமை தம்பி செந்திலிடம் (ஹரிஷ்) சொல்ல விரும்புவது மன்னிக்க வேண்டுகிறேன். அது போன்றே சேலம் பாலா ஹைதராபாத் ரவிக்குமார் ஆகியோரிடமும் அதே வார்த்தைகள்!
திரு முரளி சார்
இந்த திரியில் இருக்கிறேன் என்பதைவிட உங்கள் மனதில் இருக்கிறேன் என்பதுதான் எனக்கு பெருமகிழ்ச்சி
சவாலே சமாளி- நடிப்பு தெய்வத்தின் 150 ஆவது காவியம்- 1971- பகுதி-1
1970 களில், 1971 ஆரம்பத்தில்,நடிகர்திலகத்திற்கு, வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள் , சுமதி என் சுந்தரி தவிர்த்து , மிக மிக சுமாரான சராசரியான படங்களே அமைந்து ,அவருடைய youthful ,smart ,trim and handsome காலகட்டத்தை வீணடித்து கொண்டிருந்தன.இந்த நேரத்தில்,சரியான நேரத்தில், எங்களுக்கு full meals என்று சொல்லத்தக்க முறையில் அமைந்த landmark படம்தான் சவாலே சமாளி. சிவாஜி இந்த படத்தில் வேட்டி கட்டிய மன்மதனாக ,அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார். விவசாயமும்,தொழில் துறையும் நாட்டின் இரு கண்கள்.தொழில் துறையில் இரும்புத்திரை வந்ததால், அதே பாதையில் விவசாயிகளின் பிரச்சினையை கையிலெடுத்தது சவாலே சமாளி. கதாநாயகனுக்கு அதே பெயர்-மாணிக்கம்,அப்பா-மகன் எதிர்-நிலை, இறுதி காட்சி தீ பந்தம் ,வீண் பழி என்ற பல ஒற்றுமைகள். வேற்றுமைகள்- இரும்பு திரை தொழிலாளர் பிரச்சினையை முன் நிறுத்தியது. சவாலே சமாளி ,வர்த்தக ரீதியாக குடும்ப பிரச்சினைகளை முன் நிறுத்தியது(தொட்டு கொள்ள ஊறுகாயாய் விவசாய பிரச்சினை). ஒரு சராசரி ரசிகனின் பார்வையில் ஈர்ப்பு அதிகம் நிறைந்தது சவாலே சமாளி.
மல்லியம் ராஜ கோபால் ,மிக சுவாரஸ்ய திரைக்கதைக்கு, K .S .கோபாலக்ருஷ்ணனின் மனிதம் நிறைந்து வழியும் இயல்பு வசனங்களையும்,கே.பாலச்சந்தரின் twist நிறைந்த sharp ,contemporary appeal நிறைந்த வசனங்களையும் கலந்து ,புது பாதை போட்டிருந்தார்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த மாணிக்கம்,சுய மரியாதை நிறைந்த, தலைமை பண்புகள் கொண்ட , சக-விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொண்ட ஒரு கிராமத்து(புளியன்சேரி ) வாலிபன்.அப்பா ஐயா கண்ணு, பெரிய பண்ணைக்கு விசுவாசமான வேலையாள்.தங்கை காவேரி ,மாரிமுத்து என்ற கொல்லன் பட்டறை வாலிபனை மணந்து, அவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதால் ,பிறந்த வீட்டிற்கு விரட்ட பட்டவள். மாணிக்கத்தின் ,விவசாய கூலி சார்பு நிலையும், பண்ணை வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறு நிலத்தில் போடபட்ட கொட்டகையும், பெரிய பண்ணை கண்ணை உறுத்த, தான் காவேரி கல்யாணத்திற்காக கொடுத்த பணத்திற்காக, அந்த நிலத்தை கொடுக்க வற்புறுத்தி, தவறினால், மாணிக்கத்தை பெரிய பண்ணைக்கே வேலையாளாய் சேர சொல்லி ,அந்த முயற்சியில் வெற்றியும் அடைகிறார் பெரிய பண்ணை.(சின்ன பண்ணை,மகன் ராஜவேலு ஆலோசனைகளோடு).பட்டணத்தில் படித்து விட்டு ,நாகரிக மிடுக்கோடு வரும் ,பெரிய பண்ணையின் மகள் சகுந்தலாவை ,ரயில் நிலையத்தில் அழைத்து வர சென்று, அவள் பேசும் பேச்சால் ஆவேச பட்டு,நடு வழியில் சென்று விடுகிறான் மாணிக்கம். ராஜவேலு விற்கும், மாணிக்கத்திற்கும் ,ஒரு கை கலப்பு ஏற்பட, மாணிக்கம் வேலையை விட்டு நீக்க படுகிறான்.
இதற்கிடையில்,சகுந்தலாவை அழைத்து கொண்டு ,அவளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை,அவர்கள் வீட்டாரை அழைத்து வர ராஜவேலு சென்றிருக்கும் போது , சின்ன பண்ணை சூழ்ச்சியால்,பஞ்சாயத்து தேர்தலில் தனக்கு எதிரே நிற்கும் மாணிக்கம் தோற்றால் ஊரை விட்டு ஓட வேண்டும் எனவும்,தான் தோற்றால் தன பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பதாகவும், மாணிக்கத்துடன் ஒப்பந்தம் போடுகிறார் பெரிய பண்ணை. இதன் படி தேர்தலில் தோற்கும் பெரிய பண்ணை ,தன மகளை மாணிக்கத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டு ,சகுந்தலாவின் ஒப்புதல் இன்றி,வற்புறுத்த பட்டு கல்யாணம் நடந்தேறுகிறது.
வேண்டா வெறுப்பாய் கல்யாணத்திற்கு உடன் படும் சகுந்தலா, மாணிக்கத்துடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடு பட மறுப்பதால், அவளே மனமொப்பும் வரை அவளை தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். தனக்கேற்ற மனைவியாக அவளை மாற்ற முயல்கிறான் சிறிது அதிக பட்ச குதர்கத்துடன். சகுந்தலா பிறந்த வீடு சென்று, வர மறுக்க மாணிக்கம், விடியும் வரை கெடு விதித்து,திரும்பி வரவில்லையேல் தாலி தன கையில் வந்து சேர வேண்டும் என்கிறான். அம்மாவின் ,வற்புறுத்தலால்,சகுந்தலா மீண்டும் ,மாணிக்கம் வீட்டுக்கு வருகிறாள். ஆனால் மாணிக்கம் அவளை நாற்று நட வற்புறுத்த,அந்த உழைப்பினால், நோய் வாய் படுகிறாள்.தற்கொலை முயற்சியில் ஈடு படும் சகுந்தலாவை காப்பாற்றி மனம் திறக்கிறான் மாணிக்கம். வீட்டுக்கு வந்து, சகுந்தலாவை ,அழைத்து செல்ல முயலும் ராஜவேலுவை,காவேரி கடுமையாய் பேசி விட, கோப பட்டு ,ராஜவேலு ,நாயை வைத்து ஆடையை பறிக்க, காவேரி ,அம்மனுக்கு சார்த்திய புடவையை தன மேல் போர்த்து , தீபந்தம் ஏந்தி வயலுக்கு நெருப்பு வைக்கிறாள். அவளிடம் இருந்து, அதை பிடுங்கி மாணிக்கம் பழியை ஏற்று, உண்மையை சொல்லாமல்,பெரிய பண்ணை வீட்டில் சவுக்கடி படுகிறான். மனம் மாறி வந்த காவேரி கணவன் ,மாரிமுத்து, ராஜ வேலுவை பழி வாங்க எண்ணி ,அவன் தாயின் வேண்டுகோளால் விட்டு விடுகிறான்.மனைவியை அழைத்து செல்கிறான். சகுந்தலா தன கணவன் உள்ளமறிந்து, தாம்பத்யத்திற்கு உடன் பட எல்லாம் சுகமே.
(தொடரும்)
சவாலே சமாளி- 1971- பகுதி-2
சவாலே சமாளியை பொறுத்த வரை, சிவாஜியை அதிகம் சிரம படுத்தாத பாத்திரம். அவ்வளவு இலகுவாய் கையாள்வார். அப்பாவுடன் செல்லமான முரண்பாடு, ஆதிக்க வர்கத்திடம் இயல்பான ஒரு எதிர்ப்புணர்வு,அதனால் ,அவர்களுடன் சவால் விடும் தோரணை,சுய மரியாதையை விட்டு கொடுக்காத ஒரு பிடிவாதம். அந்த பாத்திரத்திடம் ஈர்க்க பட்டு விடுவோம். ஜெயலலிதா தகாத வார்த்தை பேசும் போது ,பதில் பேசாமல், வண்டியை ஓட்டி அவரை விட்டு செல்லும் ரோஷம்,அம்மா சின்ன வயசில பால் வடியும் மொகம்னு சொல்லுவியே,மோர் வடியுது என்னும் கிண்டல்,சேரான துணியை துவைத்து போட சொல்லும் ஜெயலலிதாவை ,நீ என்ன என் பொண்டாட்டியா என்னும் நக்கல்,ராஜவேலு விடம் காட்டும் சீற்றம், கல்யாணம் ஆன இரவில் வர்க்க பேதம் பற்றி பேசி, அவருடன் தனக்கு முதல் பார்வையில் ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி பேசி, முரண் படும் போது , தொடுவதில்லை என்று சத்யம் செய்வது, சாப்பிட மாட்டேன் என்று சொல்லி,பசி தாளாமல் பழைய சோற்றை அள்ளி தின்னும் மனைவியை மற்றோர் எதிரில் காட்டி அவமான படுத்தும் நக்கல், உன்னோட வயல்தானே மிதி என்று மனைவியை நாற்று நட சொல்வது,ஜுரம் வந்து அவதி படும் மனைவியிடம் உருகுவது, அதனை மறைந்து நின்று பார்க்கும் அவள் தந்தையிடம் தனக்கும் தகப்பனின் மனம் புரியும் என்று உணர்த்துவது, தற்கொலை பண்ண முயலும் மனைவியை காப்பாற்றி தன உள்ளம் திறப்பது,இறுதி காட்சியில் உண்மையை மறைத்து,தண்டனை அனுபவிப்பது(தந்தை கையால்) என்று அதகளம் பண்ணுவார்.
வீ.எஸ்.ராகவன் ,அடிமை ரோலுக்கு படு பொருத்தம்.மகன் விறகு வெட்டி காய்த்த கைகளை பார்த்து உருகுவது, சவாலில் ஜெயித்த சிவாஜியை ஒன்றும் பண்ண முடியாமல், தன்னை துன்புறுத்தும் ராஜவேலு விடம் விசுவாசம் காட்டுவது,உன்னை வெட்டி போட்டுடுவேண்டா என்று மகனை திட்டி, மருமகளை பார்த்து அதற்கும் வழியில்லாம பண்ணிட்டியே என்று உருகுவது,இறுதி காட்சியில் தன கையாலேயே மகனை சவுக்கால் அடித்து விட்டு வருந்துவது எல்லாம் அருமை.
பகவதி ,பெரிய பண்ணையின் கம்பீரம்,குரூரம் எதுவும் காண்பிக்க இயலாமல் miscast ஆக தெரிவார்.நம்பியார் கூட இருந்து அதனை ஈடு செய்வார்.
நாகேஷ் ,கொடுத்த பாத்திரத்தில் பிய்த்து வாங்குவார். இவர் பாத்திரம் படத்திற்கு பெரிய பலம். ஜெயா மேடம், எங்கிருந்தோ வந்தாளுக்கு அடுத்த ,அருமையாய் நடிப்பில் score பண்ணிய படம்.அந்த பாத்திரத்தில் நமக்கு அனுதாபம் வரும் அளவு அருமையாய் நடிப்பார். தந்தையென்று அறியாமல் செருப்பை கழுவி விட ,பிறகு ஒருவரை ஒருவர் அறிந்து உள்ளுக்குள் மருகும் காட்சியில் இருவருமே அபாரமாய் நடித்திருப்பார்கள். முத்து ராமன்,விஜய குமாரி அவர்கள் பங்கிற்கு ,மறுமணம் பற்றி கேள்வி பட்டு முத்து ராமன் கேள்வி மேல் கேள்வி கேட்க , எல்லாவற்றுக்கும் ஆமாம் சொல்லி, அதுக்கு நீ சம்மதிச்சியா என்று கேட்டிருந்தால் இல்லைன்னு சொல்லியிருப்பேனே என்று கணவனை உருக்கும் இடம் அருமை.
supporting cast ,பாத்திர வார்ப்புகள் அருமை. நடித்தவர்களும் அருமை. வரலக்ஷ்மி உட்பட.
(தொடரும்)
சவாலே சமாளி- 1971- பகுதி-3
சவாலே சமாளியை A ,B ,C எல்லா centre க்கும் பிடிக்கும் வகையில் திரைகதை வசனம் எழுதி இயக்கி,தயாரித்திருப்பார் மல்லியம் ராஜகோபால். இதற்கு முன் தெய்வ பிறவி கதை தன்னுடையது என்று கிருஷ்ணன்-பஞ்சு,K .S .G முதலியோருடன் பிணங்கியவர் .பிறகு அதே கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் ,N T படமான இளைய தலை முறைக்கு திரைகதை,வசனம் எழுதினார் . லட்சுமியை அறிமுகம் செய்த இயக்குனர்.(ஜீவனாம்சம்).திறமை இருந்தும் சவாலே சமாளி என்ற one movie wonder வகையில் சேர்ந்தது அவர் துரதிர்ஷ்டமே.இன்னும் நிறைய சாதித்திருக்க வேண்டியவர்.திறமை மிக்கவர்.
வின்சென்ட் காமரா பிரமாதம். கிராமம், இயற்கை, இரவு காட்சிகள் எல்லாம் அவ்வளவு அழகு. சிவாஜிக்கு கூடுதல் அழகு வின்சென்ட் படங்களில்.கமல் நடன உதவியாளராய் பணியாற்றிய N T படங்களில் இதுவொன்று.(மற்றது எங்கிருந்தோ வந்தாள் )
இந்த படத்தில் சொதப்பியவர் விஸ்வநாதன். தெலுங்கு பட dubbing range ல்தான் அத்தனை பாட்டும்.அன்னை பூமியென்று,சிட்டு குரூவிகென்ன(சுசிலா மட்டும் உழைத்து பாடுவார்),ஆனைக்கொரு காலம் வந்தா,நிலவை பார்த்து, என்னடி மயக்கமா எல்லாமே படு மோசமான நாலாந்தர பாடல்கள். 150 வது படத்தில் இசை ,பாடல்கள் நன்கு அமைந்திருந்தால் ,வெள்ளி விழாவே கண்டிருக்கும்.
ஆனால்,பெண்ணுரிமையாளர்கள் ,இந்த படத்தை பார்த்தால் ,மூர்சசையே போட்டு விடுவார்கள்.பெண்ணை பணயம் வைப்பது,விரும்பாத பெண்ணை மணந்து சித்திரவதை செய்வது(வார்த்தையால்),என்று கதாநாயகனின் வீரம் முடக்க பட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு பெப்பே காட்ட பட்டு விடும்.
நேர்மையான திரைகதையமைப்பில், எடுத்து கொண்ட கருவில் என்று பார்த்தால் இரும்பு திரை ஒரு காவியம். சுவாரசியம் என்று பார்த்தால் சவாலே சமாளிதான்.(ஜன ரஞ்சகம்)
எல்லா ஊர்களிலும் நன்கு ஓடி ,வசூல் புரட்சி செய்த காவியம். 150 வது படம் என்ற நற்பெயரை காப்பாற்றி கொடுத்தது.மயிரிழையில்(??) சிறந்த நடிகர் பட்டம் (பாரத்) சிவாஜிக்கு பெற்று தர வேண்டிய வாய்ப்பை இழந்தது.காரணம் இன்று வரை புரிந்த மர்மம்தான்.
(முற்றும்)
இன்றைய தினத்தில் மதுரை மாநகரில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றிருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு துவங்கிய விழா மதியம் 2.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரையிலும் நடைபெற்றிருக்கிறது.
காலையில் நடிகர் திலகம் நடித்த பல்வேறு படங்களின் கிளிப்பிங்க்ஸ் திரையிடப்பட்ட நிகழ்வோடு விழா தொடங்கியிருக்கிறது. 11 மணிக்கு மேல் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றியிருக்கின்றனர். இறுதியாக சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருச்சி சிவா அவர்கள் மதியம் 1.30 மணிக்கு பேச துவங்கி 2.30 வரை பேசியிருக்கிறார். நண்பகல் நேரம் ஆயினும் கூட ஒருவர் கூட கலைந்து செல்லாமல் பேச்சை கேட்டிருந்தனராம்.
மாலை 6 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடைப்பெற்றிருகிறது. நடிகர் திலகம் நடித்த படங்களிருந்து பாடல்கள் பாடப்பெற்றனவாம். மெல்லிசை குழுவில் இசை கருவிகளை இசைத்தவர்களும் பாடகர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்தனர் என்று கேள்வி.
இனி சில விழா துளிகள்.
விழா நடைபெற்ற இடம் காமராஜர் சாலையில் அமைந்துள்ள v.s.செல்லம் கல்யாண மஹால். ஒரு காலத்தில் மதுரையில் மிகவும் பிரபலமாக விளங்கிய v.s.செல்லம் சோப் நிறுவனத்தினர் ஒரு திரையரங்கை புதிதாக கட்ட வேண்டும் என்று எண்ணத்தில் காமராஜர் சாலையில் [மாரியம்மன் தெப்பகுளத்திற்கு சற்று முன்னதாக] கணேஷ் தியேட்டருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் /தினமணி பத்திரிக்கை அலுவலகத்திற்கும் நடுவில் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்தனர். ஆனால் பிறகு அவர்கள் திட்டம் மாறி அந்த இடத்தில கல்யாண மண்டபம் கட்டினார்கள். தியேட்டர் என்பதற்காக பெரிய இடம் வாங்கப்பட்டு பின்னர் அது மண்டபமாக மாறியதால் மதுரையில் அமைந்துள்ள பெரிய திருமண மண்டபங்களில் இதுவும் ஒன்று. அந்த மண்டபம் வழிய வழிய ஆட்கள திரண்டு விட்டனராம்.உள்ளே நிற்க கூட இடம் இல்லாமல் மண்டபத்திற்கு வெளியே, மண்டப வளாகத்தையும் தாண்டி சாலையில் ரசிகர்கள் கூட்டம் அணி திரண்டிருந்ததாம். காலை பத்து மணிக்கு விழாவிற்கு சென்ற நண்பன் அப்போதே மண்டபத்தில் இருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் மண்டபம் நிறைந்து விடும் என அலைபேசியில் தகவல் சொன்னான். அதே போன்றே நடந்தது. ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்திருந்ததாக தகவல்.
காலையில் கே.கே.நகரில் ராஜா முத்தையா மன்றம் மற்றும் நீதிமன்றத்திற்கு எதிரில் அண்மையில் காலமான திரு வி.என். சிதம்பரத்தால் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலாக்தின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ரசிகர்கள் வாகனங்களில் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு சென்றதாக தகவல். செல்லும் வழியெல்லாம் ஒரே அலப்பரையாம்.
மாலையில் மண்டபத்தை சுற்றிலும அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் பானர்களுக்கும் கட் அவுட்களுக்கும் மாலை எல்லாம் அணிவிக்கப்பட்டு தெருவில் ஒரே அமர்க்களமாம்.(வழக்கம் போல்) போலிஸ் வந்து ரசிகர்களை மண்டப வளாகத்திலேயே கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனராம்.
மதியம் உணவு தயாராக இருந்தும் கூட காலை விழா முடியும் வரை யாரும் எழுந்து செல்லாமல் பேச்சை ரசித்து கேட்டனராம். நெருங்கிய உறவினர் வீட்டு திருமணங்களில் கூட சாப்பிட்டவுடன் கிளம்பி போய் விடும் இன்றைய காலகட்டத்தில் மதிய உணவு அருந்திய பிறகும் கூட, அதன் பிறகு மாலை 6 மணிக்குதான் விழா நிகழ்ச்சிகள் என்று தெரிந்திருந்த போதும் யாரும் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே அமர்ந்து பல பழைய நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருந்தனராம்.
நடிகர் திலகத்தின் மேல் ரசிகர்ள் வைத்துள்ள இத்தகைய அன்பை சுட்டிக் காட்டிய திருச்சி சிவா இப்படி பேசினாராம்.ஒரு மனிதன் வாழும் போது மனிதர்கள் அபிமானிகள் அவனை சூழ்ந்திருப்பது அதிசயமல்ல. ஆனால் ஒருவன் மறைந்த பிறகு, அவன் இறந்து 11 வருடங்கள் ஆன பிறகு, இறக்கும் போது எந்த அரசு/கட்சி பதவிகளிலும் இல்லாத ஒரு மனிதன், அவன் பெயர் நினைவில் நிறுத்தப்படுகிறது, அவன் புகழை பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அதன் பின்னால் வலுவான சக்தி இயங்க வேண்டும், அப்படிதான் நாம் இதுவரை கண்டு வருகிறோம். ஆனால் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் கூட்டத்தை பார்த்தோமென்றால் அரசியல் ரீதியிலான இயக்கம் பின்னணியில் இல்லை. அரசாங்க நிர்வாகத்தின் பின்துணை இல்லை. அரசு பதவிகளிலோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலோ இவற்றை தூக்கி நிறுத்தும் முயற்சிகள் இல்லை. இதை செய்தோம் என்றால் பட்டம் பதவி காசு பணம் என்று பிரதி பலன் கிடைக்ககூடிய வாய்ப்புகள் இல்லை. கூட்டத்திற்கு வந்து போவதற்கு காசு பணம் கொடுப்பதில்லை இத்தனை இல்லைகளையும் மீறி இங்கே ஆயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் இன்னும் வர முடியாத இது போன்ற பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட படை இப்படிப்பட்ட ஒரு மாஸ் வேறு யாருக்கும் அமைந்திருக்காது. இப்பேர்பட்ட ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று சொன்னால் நடிகர் திலகம் கொடுத்து வைத்தவர்.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிய சிவாவின் பேச்சு மிகவும் ரசிக்கத்தக்கதாய் அமைந்திருந்தது என்று சொன்னார்கள். மேடையிலும் மண்டபத்திலும் மகாத்மா பெருந்தலைவர் மற்றும் நடிகர் திலகத்தின் படங்கள் வைக்கப்பட்டிருந்தனவாம்.
இது நண்பர்கள் மூலமாக சேகரித்த தகவல்கள். மேலதிக்க தகவல்கள் கிடைத்தவுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த விழாவை இத்துணை சிறப்பாக நடத்திய சந்திரசேகர் அவர்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் பல்வேறு வகையில் உதவி ஓத்துழைப்பு நல்கிய அனைத்து நல இதயங்களுக்கும், வெளியே தன பெயரை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் விழா சிறப்பாக நடைபெற உதவிய நண்பர் மதுரை சந்திரசேகர் போன்றவர்களுக்கும் நான்மாடக்கூடல் வாழ் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் நமது இதயங்கனிந்த நன்றியும் நல்வாழ்த்துகளும்!
தன் மன்னவன் யார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்த மதுரையே! உனக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம்!
அன்புடன்
Mr Gopal,
Excellent analysis on Manickam.
Mr Murali Sir,
We too agree that Madurai city is very affectionate to our NT by giving more hits. We must thank Mr Chandasekarn for
doing this wonderful job by conducting numerous welfare schemes in the name of our NT.
Mr. GOPAL.S,
Excellent analysis about two giant movies Irumbuthirai and Savale Samali.
Your way of analysing the charectors is something different and acceptable. For exgample, what you told about T.K.Bagavathi in savale samaali is correct. It is a miscast. If it was VKR, there would be little powerful (ex: Thiyagam).
MSV music is not that much poor in SS as you told. 'chittukuruvikkenna kattuppaadu' is the national award song for P.Susila. Only 'nilavaippaarthu vaanam sonnadhu' song is little bit like 'urainadai' form.
Verygood analysis.
திரு கோபால் அவர்களே ,
சவாலே சமாளி - தங்களின் விமர்சனக் கட்டுரை அருமை.
திரு.முரளி சார்,
மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா தொகுப்பை சுருக்கமாக அழகாக அளித்ததற்கும், தங்களின் பாராட்டுக்கும் நன்றி.
இந்த நிகழ்வு குறித்து அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வெளியாகியுள்ளது. அவை எனக்கு வரப்பேற்றவுடன் பதிவிடுகிறேன்.
மதுரையில் நடிகர்திலகம் சிவாஜி சமூநலப்பேரவை சார்பில் நடைபெற்ற பராசக்தியின் வைர விழா - பத்திரிக்கை செய்திகள் தொகுப்பு -1
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966- பகுதி-1
ஒரு லாரி டிரைவர் ,அமெரிக்காவில், இரு குடும்பங்களை இரு நகரங்களில் ,ஒருவருக்கு தெரியாமல்,மற்றதை வைத்திருந்து, அவர் ஒரு விபத்தில் இறந்து விட,இரு மனைவியரும் ,இழப்பீடு கோரி ,காப்பீட்டு நிறுவனத்தை அணுகிய பிறகே உண்மை தெரிந்தது என்ற பர பரப்பான உண்மை கதையை, "The Remarkable Mr .Penny Packer" என்ற பெயரில் நாடகமாகவும்,பிறகு இதே பெயரில் ஹாலிவுட் படமாகவும் வந்து வெற்றி கண்டது.
வேப்பத்தூர் கிட்டு என்ற ஜெமினி கதை இலாகா எழுத்தாளர், இதை வாசனுக்கு சிபாரிசு செய்து, திரைக்கதை அமைத்தார். இதில் நடிக்க ,நடிகர் திலகமே சரியானவர் என்று முடிவு செய்து,அவரை 1962இல் அணுகிய போது ,என்ன காரணத்தாலோ மறுத்து விட்டார். வாசன் வேறு வழியின்றி, அசோக் குமாரை வைத்து, க்ருஹஸ்தி என்ற பெயரில் ஹிந்தியில் படமாக்கி வெற்றி கண்டார்.இந்த படத்தை பார்த்த சிவாஜி ,இதில் நடிக்க ஒப்புதல் கொடுக்க மளமளவென்று ,ஜெமினி நிறுவன தயாரிப்பாக ,அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில், வளர்ந்து 1966 இல் வெளியாகி, வெற்றி கண்டது. சிவாஜி,சற்றே உடல் நிலை சரியின்றி,ஓய்வு எடுத்து,துரும்பாக இளைக்க தொடங்கிய 1966 இல் வந்த நான்கே படங்களில் ஒன்றானது.
ஒரு கார் garage வைத்திருக்கும் சுந்தரம் பிள்ளை தன் பழைய vintage காரிலேயே பயணிக்கும் பெரிய குடும்பஸ்தர். மனைவி மீனா, பிள்ளைகள் பாபு,விஜி,ராஜி,லல்லி,நிர்மலா,மாலா,விமலா,கமலா , அக்கா, அக்கா மகன் சாம்பு என அழகான குடும்பம். வெள்ளி இரவு வீடு வந்து, மனைவி மக்களுடன் தங்கி ,திங்கள் காலை தன் தொழிற்சாலை வேலைக்கு பட்டணம் செல்லும் குடும்பஸ்தர். மென்மையான, அதிர்ந்தும் பேசாத நற்பண்பாளர்,அனைவராலும் மதிக்க படும் பெரிய மனிதர், பல உதவிகள் சமூகத்துக்கு புரிபவர். மூத்த பெண் கமலா கல்யாணம் ஆகியும், கணவர் படித்து கொண்டிருப்பதால் ,புகுந்த வீட்டின் நிர்பந்தத்தின் பேரில், பிறந்த வீட்டிலேயே ,தாம்பத்யம் துறந்து ,தங்கியுள்ளாள்.அந்த ஊர் ஸ்டேஷன் மாஸ்டர் பையன் சேகரை, இரண்டாவது பெண் விமலா காதலிக்கிறாள் . சேகரின் தங்கை ரேவதியை சாம்பு விரும்புகிறான். மூன்றாவது பெண் மாலா ,principal பையன் மோகனை விரும்புகிறாள். இதற்கிடையில், மீனா கற்பமாகி, சுந்தரம் பிள்ளைக்கு ஒன்பதாவது குழந்தை பிறக்கிறது.கமலாவின் கணவன் கோபால் அப்பாவுக்கு தெரியாமல், சுந்தரம் பிள்ளை வீட்டுக்கு வந்து ,மனைவி கமலாவுடன் தங்கி செல்கிறான்.
பெண்களின் விருப்பம் அறிந்த சுந்தரம் பிள்ளை , principal ,ஸ்டேஷன் மாஸ்டர் வீடு சென்று சம்பந்தம் பேசி முடித்து, நிச்சயதார்த்த நாளை குறித்து,
நாளும் வருகிறது.
சம்பந்திகள் கூடி இருக்கும் போது ,சுந்தரம் பிள்ளைக்காக அனைவரும் காத்திருக்க, கண்ணன் என்ற விடலை சிறுவன் வீட்டுக்கு வந்து சுந்தரம் பிள்ளைதான் தன தந்தை என்றும்,அவசரமாய் school fees காட்ட பணம் வேண்டியிருப்பதால், factory சென்று அங்கும் இல்லாததால், விலாசம் விசாரித்து இங்கு வந்ததாக சொல்ல வீடே அல்லோல கல்லோல பட்டு நிச்சயதார்த்தம் நிற்கிறது. வீடு வரும் சுந்தரம் பிள்ளை கண்ணனை அன்போடு உபசரித்து பணம் கொடுத்து ,விடை கொடுக்கிறார். மொத்த குடும்பமே ,சுந்தரம் பிள்ளைக்கு எதிராக திரள, சுந்தரம் பிள்ளை வீட்டை விட்டு கிளம்புகிறார்.பிறகு,குடும்பத்தினர் வற்புறுத்தலால் திரும்பி வந்து, எல்லோரையும் சமாதான படுத்துகிறார். மீனா ஒருநாள், கணவனின் அடையாறு வீட்டின் தகவல் தெரிந்து அங்கே செல்ல, அங்கே தாயிழந்து தனித்து வாழும் லீலா,ரமேஷ்,கண்ணன்,சாந்தி என்ற நான்கு குழந்தைகளும் தன கணவன் குழந்தைகளே என்றறிந்து, இறந்த தாயில் படத்தை பார்த்து மயங்கி விழுகிறாள்.இதற்கிடையில் , கணவன் படிப்பு முடிந்து கமலா புகுந்த வீடு சென்று, அங்கே அவள் ஏற்கெனெவே கற்பம் என்ற உண்மை தெரிந்து திருப்பி கொண்டு விட படுகிறாள்.அங்கு ஏற்கெனெவே சுந்தரம் பிள்ளை வேண்டி வற்புறித்தி வர வழித்த ஸ்டேஷன் மாஸ்டர், பிரின்சிபால் இவர்களுடன் மூத்த சம்பந்தியும் அமர வைக்க பட்டு ,தன கதையை சொல்கிறார்.
மாமா வீட்டில் வளரும் சுந்தரம் பிள்ளை மாமாவின் இளைய பெண் மரகதத்தை விரும்ப, மாமா தன மூத்த பெண் மீனாவை அவள் விருப்பபடிsundaram உடன் கல்யாணம் செய்ய திட்டமிடுகிறார். அக்கா விருப்பமறிந்து ,மரகதம் ,காதலை விட்டு கொடுத்து அந்த திருமணத்தை நடத்தி வைக்கிறாள்.சுந்தரம் தன அக்கா கணவர் வேலை வாங்கி கொடுக்க ,குடும்பத்துடன் ரங்கூன் செல்கிறான்(யுத்த காலம்) அங்கு ஒரு விபத்தில் ,மனைவி, அக்கா குடும்பம் இறந்து விட்டதை எண்ணி, திரும்பி ஊர் வந்து சேர்கிறான். தன தவறையுணர்ந்த மாமா வற்புறுத்தலின் பேரில் மரகதத்தை மீண்டும் மணக்கிறான். திடீரென்று, அக்கா,அவள் மகன் சாம்பு, மீனா அனைவரும் உயிரோடு திரும்புவதாக சேதி வர, மாமாவின் கடைசி ஆசை படி, இருவருக்கும் பாதகம் வராமல், இருவரோடும் ஒருவர் அறியாமல் இன்னொருவரோடு குடும்பம் நடத்துகிறான்.கடைசியில் எல்லோரும் உண்மையறிந்து ,சமாதானமாகி சுபமாய் முடியும்.
(தொடரும்)
Motor Sundaram Pillai is a remarkable NT movie in which his subtle acting makes you feel like you are also with him till the end of the movie. No songs for him! He was the father of Jayalalitha, Kanchana .... who has the guts to act like this at this age! Without any dialogue in the climax NT brought the screen down in Karnan and in this movie he makes us tear jerking by his depiction as a victim father of circumstances!
Junior Vikatan - 13-01-13
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
மோட்டார் சுந்தரம் பிள்ளை- 1966- பகுதி-2
நடிகர்திலகத்தின் மிக சிறந்த படங்களில் ஒன்றாக ,பல விமரிசகர்கள் இதை கொண்டாடுகிறார்கள். நடிகர்திலகத்தின் நடிப்பும் மிக மிக சிலாகிக்க படுகிறது. நடிகர்திலகம்,ஒரு இடத்தில் கூட குரலையே உயர்த்த மாட்டார். உடலசைவுகள் பத்திரத்தை ஒட்டியே இருக்கும். பின்னால் அவரின் கதாநாயகிகளாய் வலம் வந்த ஜெயலலிதா, காஞ்சனா ஆகியோருக்கு அப்பாவாக. அதுவும் ,அவர்கள் இருவருடனும் முதல் படம். அகில இந்தியாவிலும், இந்த தைரியம் , இமேஜ் என்பதை நடிப்பு திறமையால் உடைக்கும் திறமை, ரசிகர்களுடன் உள்ள நம்பிக்கை ,எவனுக்கும் இன்று வரை கிடையாது.
குழந்தைகள் ,மனைவி ஆகியோருடன், subtle demonstrative பாணியில் தன் வாஞ்சை,பாசம் ஆகியவற்றை வெளிபடுத்தும் அழகு. வாரம் ஒரு முறை குடும்பத்துடன் கழிக்கும் ,தலைவன் பாத்திரத்துக்கு அவ்வளவு மெருகு சேர்க்கும். இந்த பாத்திரத்தில், ஒரு குற்ற உணர்ச்சியில்லாத , எச்சரிக்கையான ஒரு உணர்வினை படம் முழுதும் தேக்கி ,தனது அசைவுகள் வசனம் பேசும் முறை அனைத்திலும் காட்டுவார். குழந்தை பிறக்க போகும் செய்தியை ஒரு மென்மையான கூச்சத்துடன்,இயல்பாய் அணுகும் கட்டம் இருக்கிறதே ,அடடா. வீட்டுக்கு வந்து,குழப்பத்துக்கு காரணமான மகனுக்கு, துளிகூட ,வேண்டா விருந்தாளி என்ற உணர்வோ, அல்லது குற்ற உணர்வோ எழ கூடாது, என்று அழகாய் உபசரணை செய்து, அனுப்பிய பிறகு, சிறிது uneasiness காட்டுவார். குடும்பத்தினருடன், பிடிபட்ட உணர்வு இன்றி, அவர்கள் நம்பிக்கையை தெரிந்து கொள்ளும் காட்சி, சிறியது ஏமாற்றத்துடன் வெளியேறும் காட்சி, பிறகு தான் தவறு செய்தவன் அல்ல என்ற ரீதியில் எல்லாரையும் பேச்சாலும்,செயலாலும் அணைத்து செல்லும் காட்சிகள்.(எவ்வளவு வேறுபாடு காட்டுவார் ,முன்னாள் வந்த பார் மகளே பார், வர போகும் உயர்ந்த மனிதன் சாயல்கள் துளியும் வராமல்)முரண்டும், சுந்தரராஜன்(சம்பந்தியை) உட்கார வைத்து உண்மையை உணர்த்த , ஒரு சில decibel கண்டிப்போடு உயர்த்தி பணிய வைப்பாரே!!!flashback காட்சியில் சைக்கிள் ஓட்டி வரும் காட்சியில், சிறிது இளைக்க ஆரம்பித்து,இளமையும்,அழகும்,துறுதுறுப்பும் மின்ன அவ்ளோ அழகுனா அப்படி ஒரு அழகு. ஒவ்வொரு வேறு பட்ட உறவுகள் ,நண்பர்களுடன் வேறு பட்ட சூழ்நிலைகளில் பேசும் போது ,subtle acting முறையில் staleness வர வாய்ப்புள்ளது. ஆனால் நடிகர்திலகம்,அதை handle செய்திருக்கும் விதம், ஏன் இன்று வரை இத்தனை கோடி பேர் உலக நடிப்பு மேதைகளில் முதல்வர் என்று கொண்டாடுகிறோம் என்ற காரணம் விளங்கும்.
supporting cast ,நிறைய கூட்டமாக வர வேண்டியிரு ப்பதால் ,NT தவிர யாருக்குமே தனி கவனம் போகாவிட்டாலும், சௌகார், பண்டரி பாய், மணிமாலா மனதில் நிற்பார்கள்.(சரோஜாதேவிக்கு பின் பின்னழகு ராணி என்றால் மணி மாலாதான்). எல்லாரும் ,அவரவர் பங்கை நன்கு பண்ணியிருப்பார்கள். crowded shots ,அபார கவனத்துடன் கையாள பட்டிருக்கும். ரவிச்சந்திரன்,சிவகுமார்,சுந்தரராஜன்,ஜெயலலிதா, காஞ்சனா எல்லோருக்கும் நடிகர்திலகத்துடன் முதல் படம்.
நகைச்சுவை காட்சிகள்,ஆனந்த விகடனில் தொடராக வந்த,தேவன் அவர்களின் துப்பறியும் சாம்பு ,நகைச்சுவையை ஒட்டி அமைந்திருக்கும்.(நாகேஷ் பெயரும் சாம்பு) கதையின் போக்கை ரொம்ப நெருடாமல், சுமாராக இருக்கும். வித்தியாசமான இந்த கதைக்கு, சுவாரஸ்யம் கெடாமல்(அத்தனை பாத்திரத்துக்கும் தேவையான spacing ,காட்சிகள் கொடுத்து) கம்பி மேல் நடக்கும் வித்தையை நன்றாக கையாண்டு,இயல்பான ,உயிரோட்டமான, பாத்திரத்தின் தன்மைக்கு இடைஞ்சல் தராத வசனங்களையும் அமைத்திருப்பார் வேப்பத்தூர் கிட்டு. (கிட்டு, கே.ஜே .மகாதேவன், கொத்த மங்கல ம் சுப்பு போன்றோரை தமிழ் பட உலகம் இன்னும் நன்றாக பயன் படுத்தி இருக்கலாம்).எஸ்.எஸ்.பாலன் இந்த படத்தை மிக நன்றாக ,தந்தை மேற்பார்வையில் கையாண்டிருப்பார். அந்த நாய்க்குட்டியை அழகாக பயன் படுத்தியிருப்பார்.குழந்தையை காட்ட ,எல்லோரும் பார்க்க முந்தும் காட்சியில் ,நாய் குட்டியும் முண்டியடித்து பார்க்கும். சிவாஜிக்கு எதிராக குடும்பமே அம்மா பக்கம் நிற்கும் போது ,நாய் குட்டியும் அம்மா பக்கம் போகும் அழகு.(நீயுமா என்று சிவாஜி செல்லமாக வெதும்புவார்).
சிவாஜி-மணி மாலாவிற்கு ஒரு நல்ல duet கொடுத்திருக்கலாம். காத்திருந்த கண்களே ,MSV இசையில் super -hit பாடல்.ரவிச்சந்திரன்-ஜெயலலிதா ஜோடி கண் படும் அளவு அவ்வளவு பொருத்தம்.மற்ற பாடல்கள் ஓகே ராகம்.(துள்ளி துள்ளி விளையாட, மனமே முருகனின், ஜிகு ஜிகு ஜிகு , காதல் என்றால் என்ன)MSV க்கு வாழ்க் கை படகு அளவு scope உள்ள படமல்ல.
மற்ற படி ஜெமினி நிறுவங்களின் பிரம்மாண்ட படங்களை விடவும்,இன்றளவும் பேச படுகிற படம் இது. (மற்றவை சந்திரலேகா ,ஒளவையார்,வஞ்சிகோட்டை வாலிபன்,இரும்புத்திரை ).
(முற்றும்)
Mr Gopal,
Indepth analysis on MSP. As you mentioned, nobody have the guts
to takeup this type of role. This shows our NT not bothered about
image.
Thamizhaga Arasiyal Magazine
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
திரு. கோபால் அவர்களே,
நடிகர் திலகத்தின் ஒப்பற்ற நடிப்பில் வெளிவந்த படங்களுள் ஒன்றான "மோட்டார் சுந்தரம் பிள்ளை" படத்தைப் பற்றிய ஆய்வு சுருக்கமாக ஆனால், அற்புதமாக வந்துள்ளது.
இந்தப் படத்தை முதலில், ஏதோ ஒரு தொலைக் காட்சி சேனலில் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர், என்னுடைய மனைவி மற்றும் மகள்களுடன் தான் முதலில் பார்த்தேன். அதற்கு முன்னர், தியேட்டரில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. சென்னையில், அவரது பழைய படங்களில், 'ப' வரிசைப் படங்களும், தெய்வ மகன், புதிய பறவை, ஆலய மணி, இருவர் உள்ளம், வசந்த மாளிகை, ராஜா, போன்ற படங்களே வலம் வந்து கொண்டிருந்தன.
இந்தப் படத்திற்கு எனக்கு முன்னர், என் மகள்கள் இருவரும் ரசிகைகளாயினர் என்று பெருமையோடு கூறிக் கொள்கிறேன். அதன் மூலம், அவர்கள் நடிகர் திலகத்தின் மேன்மையை அறிந்து கொண்டனர். இதற்கு முழு முதல் காரணம், அவர்கள் நடிகர் திலகத்தைப் பார்க்கவில்லை. ஒரு பாசமுள்ள தந்தையை எந்த வித சினிமா பாசாங்குகளும் இல்லாத, நிஜத் தந்தையைக் கண் முன் கண்டனர். என்னுடன் (பாசிடிவாகத்தான்! நான் ஏக பத்தினி விரதன் தான்!!) அவர்களால் ஒப்பிட முடிந்தது. இந்தப் படமும், அவ்வளவு இயல்பாக வந்திருக்கும்.
இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே என் மனதில் எழுதி வைத்து விட்டதால், பின்னர் அதை எழுதுகிறேன்.
தொடர்ந்து எழுதி, தாங்களும் இன்புற்று, எல்லோரையும் மகிழ்வியுங்கள். நம் நடிகர் திலகத்தின் மேன்மையை எல்லோரும் சேர்ந்து இன்றைய, மற்றும் வரப் போகும் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளப் பாடுபடுவோம்!
அனைத்து நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Mr. S.GOPAL,
Excellent review and analysis about Motor Sundaram Pillai. Your way of compiling the story in short form and analysing the charector of Shivaji sir and other co artists are remarkable.
well analysed about a sophisticated movie.
Gopal,S, Savale Samali is a special movie for me, I don't know why. On surface it looks like a pre-cursor to PattikAda pattanamA NT vs JJ situation, but unlike PP which is more on cultural clash, SS is about politics. A thoroughly pro-socialism film, and NT, being the actor, not the politician, totally stood on that side for the movie. The songs are fantastic, I still play Anaikkoru kAlam vanthAl, thinking of all those privileged people who doesn't deserve it. The film is a statement. I can't write a review on it, because I am still not politically matured, there's so much of that stuff in that film. I am still wondering who this Malliyam Rajagopal is, that is a very brave film.
But apart from NT, one must bow to Muthuraman here, the climax scene where he beats the crap out of our beloved MNN - you have to see it to believe it. And earlier scenes where he asks his mistress, "ennA, karuvattu kozhambA?", softly, right after a temper flare!, there's something about this actor that the Tamizh film never made justice off. But that is a different complaint.
While all the time,Muthuraman was in the background, someone we are supposed to revile, suddenly turns up and saves the day. I looooove this movie. As you said, no heavyduty for NT, but it is a very thought provoking movie. Thanks for the review. Will be reading your other review soon.
Dear Gopal sir,
Your writeup about Motor Sundaram Pillai is very nice.
Parasakthi Diamond Jubilee Celebration, Madurai - Coverages in English Dailies
The Hindu
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
Deccan Chronicle
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
The Times of India
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
The New Indian Express
http://www.facebook.com/photo.php?fb...type=1&theater
dear chandrasekar
kudos to sivaji peravai for organising parasakthi celebration ,
and all associated
Dear Sankara Sir
Thanks for your appreciation.
Vanaja,
You got the idea of posting same messages in two threads and increase the 'number of posts'. (I am mentioning Manjula matter).
Dr.Siva-vil Manjulavin kavarchi nandraagaththaan irundhathu (jollu). But adhai idam-porul-yeval theriyamal, thalaivar Kamarajar avargalaip patriya paadalin naduve vaiththathuthaan thavaru.
Shivaji sir padangalil kolgaip paadalkal varuvathe apoorvam. Adhilum idaiyil ippadi kularupadi.
ACT thoongikkonde ippadaththai direct seythaara theriyavillai.
கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய ரசிக நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வுறுகிறேன். இதில் இருக்கும் வாசகங்களையே என்னுடைய வாழ்த்தாக அளிக்கிறேன். அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்
http://i872.photobucket.com/albums/a...ps3481b954.jpg
ராகவேந்திரன்
Vanaja,
Vanishreeyum, Devikavum, k.r.vijayavum bikini anindhaal yaar paarkkirathu?.
rasigargalukku avvalavu periya punishment thevaiyaa?.
After your discussion about Sivakamiyin Selvan last week, I watched SS and felt, it would be better if Shivaji sir acted with Latha with some more movies. Oru padamaanalum romba isaivaaga nadiththirundhaar.
deleted.
Hi Friends,
Kindly note that this article is prohibited for Ragavendran sir. Others should read under some intellectual guidance.
I am triggered by exemplary articles by Mr.Ganpat and I would like to give my humble tribute to him by extending Mr.Parthasarathy's psychological approach.
Hope most of you are aware of the self development book on Transactional analysis ,I am OK You are ok by Thomas Harris. His Parent-Adult - Child modelling of Transactional analysis can be applied well to Thiruvilayadal, Nakkeeran in Parent state, Lord Shiva in Adult state, Dharumi in Child state. First meeting on Shiva-Dharumi as Adult-Child crossed Transaction, Dharumi-Nakkeeran as Child-Parent transaction, Shiva-Nakkeeran confrontation as Adult-Parent Transaction.(at times with mild role reversals too)
Child is a recording of internalised events,re-living those child memories yet the stimulus for them may no longer be relevant or helpful in practical life.Parent state is a collection of recordings of external influences that a child observed adults doing and saying and it is a long list of rules and admonitions that the child was expected to believe unquestioningly.(Some are useful,some are opinions). Adult state is the one with measures of control over their environment able to explore and examine the world and have their firm ideas.
The entire episode of Shiva-Dharumi-Nakkeeran is based on I am OK,You are not OK. The communication modelling is 100% based on crossed Transaction of different ego states. Nakkeeran's parent address other states as ridiculous,disgusting and judgemental. Dharumi's Child is absolutely internal and demands his basic needs and throw tandrum on denial. Lord Shiva's adult state imposes should or ought and addressing parent state as prejudiced,child state as delusion.
As their life position affect their communications and relationships and susequent crossed transactions lead to arguments hook the child ego state of one of the participants resulting in over all negative feelings and heated arguments.
Result is fun unlimited for audience,Thanks to A.P.N and his brilliant script.
Mr. S.GOPAL,
ennennamo solreenga
purinja maadhiriyum irukku.
puriyaadha maadhiriyum irukku.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
திரு கோபால்,
முதற்கண் நன்றி.
உங்கள் TA மிக அருமை.யாரும் இதுவரை செய்யாத approach ..இதிலும் கூர்ந்து கவனித்தால் தலைவர் தூள் கிளப்பியிருப்பார்.
தருமியுடன்...ஆரம்பத்தில் parent(நாடகத்தையே நடத்துபவனுக்கு நடிக்க முடியுமா அப்பா?) and child(கேள்விகளை நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா?) level
இரண்டாம் பகுதியில்...adult(உளராமல் அவையில் நடந்ததை சொல்) level
மன்னனுடன் பேசும்போது ..முழுமையான adult level..(சண்டையும் சச்சரவும் புலவர்களுக்கிடையே சகஜம்)
நக்கீரருடன்...child(நடந்தது,நடக்கப்போவது...அனைத்து ம் அறிவோம்...) and parent(என்ன குற்றம் கண்டீர் சொல்லிலா அல்லது...) level...adult level க்கு வரவே மாட்டார்.
நக்கீரர்:தருமியுடன் parent level,சிவனுடன் adult level (எல்லாப்பகுதிகளும்)
தலைவரின் ஒரே நோக்கம் நக்கீரரை child level க்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான்.எனவே ஒரு child level இல் தொடங்குவார்.ஆனால் அது நடக்காது என அறிந்து adult level லில் மோதுவார்.கடைசியாக பொற்றாமரை குளத்தில் நக்கீரர் child level ஆக தலைவர் இல் parent level இல்முடித்து வைப்பர்.
ஏ.பி.நாகராஜரே..உம் மேதைத்தனம்..தருமியை சிவன் அவையில் இழுத்துவந்து தள்ளியவுடன் அவரை நறுக்கென்று கட் செய்து பிறகு கண்ணிலேயே காட்டாமல் விடுவதிலும்,தருமியும் சிவனும் அந்த செய்யுளை சொல்வதிலேயே ஒரு தனி திரைப்படத்தை எடுத்த நேர்த்தியிலும் தெளிவாகின்றன.
நாளை பொங்கல் திருநாள்.உம்மை வணங்க வயதும், வாழ்த்த அன்பும் இருக்கும் தகுதியில் இரண்டையும் செய்து ஒரு கோரிக்கையையும் வைக்கிறேன்.சொர்க்கத்தில் குஷியாக நாளைக்கடத்தாமல் சீக்கிரம் திரும்பி வாரும்..மறக்காமல் உங்கள் ஹீரோவையும் அழைத்துகொண்டு..நல்ல திரைக்கதைகள் காத்திருக்கின்றன..அதைவிட நல்ல அறிவார்ந்த இளைய தலைமுறை ரசிகர்களும் காத்துள்ளனர்.
அனைவர்க்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.
வணக்கம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு பல வருடங்களுக்கு பிறகு நாஞ்சில் மாநகருக்கு தொழிலதிபர் கோபால் வருகை! நாஞ்சில் நகரில் அமைந்துள்ள கார்த்திகை திரையரங்கில் நாள் முதல் நடிகர் திலகத்தின் எவர்க்ரீன் காவியம் புதிய பறவை வெளியாகிறது! இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நண்பர் ராமஜெயத்திற்கு நன்றி!
அன்புடன்
இப்போது தமிழ் திரையுலகில் முக்கியமாக விவாதிக்கப்படுவது DTH பற்றிதான். இந்த DTH முறையில் படத்தை நேரிடையாக வீடுகளில் திரையிடும் முறையிலும் நடிகர் திலகம் நுழைகிறார் என்று ஒரு செய்தி வந்திருக்கிறது. புதிதாக மெருகேற்றப்பட்டு புது பொலிவுடன் தியேட்டர்களில் வெற்றி வலம் வந்து 2012-ல் பல திரையரங்குகளையும் வாழ வைத்த நடிகர் திலகத்தின் கர்ணன் திரைக் காவியத்தை DTH மூலமாக வெளியிட்டால் சிறப்பாகவும் லாபகரமாகவும் இருக்கும் என நினைத்த ஒரு DTH நிறுவனம் ராஜ் டிவியை அணுகியிருப்பதாகவும் அவர்கள் அதை பற்றி யோசித்து சொல்கிறோம் என்று சொல்லியிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
ராஜ் டிவி பற்றி சொல்லும் போது வேறு ஒரு தகவலும் வந்தது. ராஜ் டிவியின் வசம் நெகடிவ் உரிமை இருந்த காலத்தை கடந்து நிற்கும் அற்புத காவியம் நடிகர் திலகத்தின் புகழை பாரெங்கும் பரப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை இந்தியாவின் மிகப் பெரிய வணிக குழுமத்தில் இடம் பெற்றுள்ள entertainment wing பெரிய விலை கொடுத்து வாங்கியிருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது. படத்தை மெருகேற்றி அவர்களே உலகமெங்கும் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது! இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் இந்த காவியம் பெரிய அளவில் reach ஆகும் எனபது திண்ணம்.
அன்புடன்
நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கும் hub-ன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
அன்புடன்