http://i1065.photobucket.com/albums/...psjk26o8i0.jpg
Printable View
வாசு சார்
தங்களுடைய உளமார்ந்த பாராட்டுக்கு என் நன்றி.
யாரும் கண்டு கொள்வதில்லை என்று நீங்கள் வருத்தப்பட்டது எனக்கு ஆறுதலாய் இருக்கிறது.
இருந்தாலும், எதற்கும் ஒரு ராசி வேண்டும். என்னை விடுங்கள். உண்மையிலேயே நாம் அனைவரும் உளமாரப் பாராட்ட வேண்டியது நம்மை விட பல வயது இளையவர்களான பம்மலார், மற்றும் செந்தில்வேல் இவர்களைத் தான். கிட்டத்தட்ட அடுத்த தலைமுறையை் சார்ந்த இவர்களின் பங்களிப்பைப் பாராட்ட வேண்டியது இங்குள்ள ஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் கடமை. அதை அவரவர்கள் உணர வேண்டுமே தவிர நாம் சொல்லி வரக்கூடாது.
இதே போல திரு முத்தையன் அம்மு மற்றும் நமது கனடா சிவா இவர்களின் நிழற்படங்களும் பல புதிய கோணங்களில் நமக்கு கிடைக்கின்றன. இதற்குப் பின்னால் உள்ள இவர்களின் உழைப்பு பிரமிக்கத் தக்க்து.
இது போன்ற ஆக்கபூர்வமான பங்களிப்பாளருக்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுக்களை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சதீஷ்
மேற்கண்ட விழா நிழற்படங்களைத் தாங்கள் அப்படியே சேமித்துக்கொள்ளலாம்.
இவையெல்லாம் இணையத்திற்காகத் தரவேற்றப்படுவதனால் அதிக கோப்பளவு வேண்டாம் என்கிற நோக்கில் குறைந்த ஃபைல் சைஸில் மினிமம் க்வாலிட்டியில் தரவேற்றப்பட்டிருக்கும். தங்களுக்குத் தேவையென்றால் என்னுடைய மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். தங்களுக்குத் தேவைப்படும் கோப்பளவில் அனுப்ப முயல்கிறேன்.
செந்தில்வேல்
தங்களுடைய உளப்பூர்வமான பாராட்டிற்கு மிக்க நன்றி.
பாராட்டுதற்கும் ஓர் மனம் வேண்டும். அதைத் தன் விருப்புகளின் மூலம் வெளிப்படுத்தி இம்மய்யத்திலேயே அதிக பட்சமான விருப்புகளின் மூலம் தன் பாராட்டுக்களைத் தெரிவித்து தன் பரந்த மனதை உலகிற்கு உணர்த்தி ஓரு முன்னோடியாக விளங்கும் திரு கோபு அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் பாராட்டுக்கள். 9000 விருப்புக்களும் அதற்கு மேலும் அளித்து முன்னணியில் இருக்கும் கோபு அவர்களே, தங்களுடைய மௌனமான பாராட்டை விட பலமான பாராட்டு எதுவுமே இல்லை.