-
18th October 2015, 09:13 AM
#11
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்!
பேசும்படம் இதழில் தலைவரின் வெளிவராத படங்களின் ஸ்டில்களை வெளியிட்டு ஆனந்தமடையச் செய்து விட்டீர்கள். இதெல்லாம் எவ்வளவு தேடினாலும் கிடைக்குமா? இப்பேற்பட்ட அரிய ஆவணங்களைப் பார்த்தாலே மனம் துள்ளுகிறது. சிலர் இதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை எனும் போது மனம் வருத்தம் கொள்கிறது. நேரமின்மை போன்ற காரணங்களால் பதிவுகள் இடாமல் இருப்பது வேறு. தலைவர் இப்படியெல்லாம் சில நின்று போன படங்களில் அசத்தி நடித்துள்ளார் என்பதை புகைப்பட வடிவில் ஆவணமாகக் காணும் போது அடையும் மகிழ்வே தனிதான்.
இப்பேற்பட்ட ஆவணங்களை அள்ளி வழங்கும் தங்களுக்கும், அருமைத் தம்பி செந்தில்வேலுக்கும், அட்டகாசமான தலைவரின் இமேஜ்களை அள்ளி வழங்கும் முத்தையன் அம்மு அவர்களுக்கும், இப்போது புதிதாய் புயலெனக் களமிறங்கியிருக்கும் அன்பு நண்பர் சிவா அவர்களுக்கும் என் மனார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
18th October 2015 09:13 AM
# ADS
Circuit advertisement
Bookmarks