உண்மைதான் ! மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் திரையுலக ரசிகர்கள் அனைவரும் விரும்பும் இணை இதுதான். இதற்கு ஈடு இணையில்லை.
கருப்பு வெள்ளை புகைப்படத்தை அழகிய வண்ணத்தில் பதிவிட்ட சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி !
Printable View
தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு.செல்வகுமார் சார்.
நம் தலைவரின் புகழ் இன்றும் நீடித்திருப்பதற்கு காரணம் குறித்தும், ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் இன்றைய அரசியல்வாதிகள் பற்றியும் தாங்கள் தெரிவித்திருந்த கருத்து பொருள் பொதிந்தது. நன்றி
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
மக்கள் திலகத்தின் மீது உண்மையான பற்று வைத்துள்ளவர்கள் எந்த நாளும் அவரை மறக்க மாட்டார்கள் . வாழ்க்கையில் எந்த நிலையில் இருந்தாலும் மக்கள் திலகத்தின் நினைவாகவே வாழ்வார்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர்
நம்மை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆனாலும் மக்களும் அவருடைய ரசிகர்களும் இன்றும் என்றும் நேசித்து கொண்டே இருப்பார்கள் . இது உலகில் எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத பெருமை ..2016 தேர்தல் நேரத்தில் பாருங்கள் .தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடி ஒட்டு வேட்டைக்கு வருவார்கள் .பார்க்கத்தான்
போகிறோம் .எல்லா ஊடகங்களுக்கும் பொதுவானவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ..அரசியல் மேடையிலும் ,ஊடகங்களிலும் ,திரை அரங்கிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்ற மாமனிதரின் பெயரும் ,படங்களும் ,போட்டி போட்டு கொண்டு அலங்கரிக்கபோகிறது . எனவே ஹீரோ 2016 நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பது நமக்கு பெருமைதானே .
மக்கள் திலகத்துடன் நடிகர் அசோகன் தொடர்ந்து நடித்த 19 படங்கள் .
நடிகர் அசோகனுக்கு மட்டும் கிடைத்த பெருமை
1968-1972. கால கட்டத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .]
http://i1273.photobucket.com/albums/...asokan-mgr.jpg
கண்ணன் என காதலன் - புதிய பூமி - கணவன் - ஒளிவிளக்கு - காதல் வாகனம் - அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் - என் அண்ணன் - தலைவன் - தேடிவந்த மாப்பிள்ளை - எங்கள் தங்கம் - குமரிகோட்டம் -ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - ஒரு தாய் மக்கள் - சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேடிய சீதை - மொத்தம் 19 படங்களில்
நடித்திருந்தார் . வில்லனாகவும் , குணசித்திர வேடத்திலும் சிறப்பாக நடித்திருந்தார் .
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
ராஜாதேசிங்கு படத்தில் இடம் பெற்ற பாடலின் ராகத்தையும் , முழு பாடலையும் பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள் .