நன்றி திரு.ராமமூர்த்தி சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Printable View
Dear Kalaivendhan Sir
Even I am mentioning whatever has been mentioned in that book if at all if there is one, it is far from truth. 100% it is written or expressed with vested motive and implied interest.
It is 100% mis represented fake statements. I have put my proof and have explained the hidden facts.
I think people who read my explanation will understand where the truth is..!!!
Regards
RKS
திரு.ஆர்.கே.எஸ்.
தயாரிப்பாளரும் இயக்குநருமான திரு. ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்ததை (புத்தகத்தில் உள்ளதை) நான் கூறியிருக்கிறேன். நீங்களும் உங்கள் கருத்தை கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறியிருப்பது போல, எது உண்மை என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நானும் நம்புகிறேன். தங்கள் விளக்கத்துக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி திரு.செல்வகுமார் சார்,
தலைவருக்கு இக்கட்டான நேரங்களில் தோள்கொடுத்தவர் திரு.ஆர்.எம்.வீ. அவர்கள். 1971ம் ஆண்டு தேர்தலில் தலைவரின் பிரசாரக் கூட்டங்களை வகுத்துக் கொடுத்ததோடு, ரிக்க்ஷாக்காரன் படப்பிடிப்பையும் பிரசாரத்துக்கு வசதியாக தள்ளி வைத்தார்.
மக்கள் திலகத்தின் படங்களை அவர் பிரமோட் செய்யும் திறமையே தனி. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு மேலாக புரட்சித் தலைவரின் உண்மையான கணக்குப்பிள்ளையாக பணியாற்றிய விசுவாசி திரு.ஆர்.எம்.வீ. அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் கூறுவது தான் உண்மை ! மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகத்தை வைத்து, சித்ரயுகா நிறுவனத்தின் சார்பில், "உரிமைக்குரல்" தயாரித்து பெரும் வெற்றி பெற்ற பொழுது, பத்திரிகை நிரூபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விக்கு, "சிவந்த மண்" உட்பட சில படங்களில் தான் பட்ட கடன்களையெல்லாம், இந்த ஒரே படம் (பொன்மனசெம்மலின் "உரிமைக்குரல்") மூலம் அடைக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார். இந்த செய்தி அப்போது (1975 கால கட்டத்தில்) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
"அன்று சிந்திய ரத்தம்" படத்துக்கு வாங்கிய முன்பணம், "உரிமைக்குரல்" காவியத்துக்கான மக்கள் திலகத்தின் சம்பளத்தில் கழிக்கப்பட்டது தான் வரலாற்று உண்மை. ஒரு நாள் படப்பிடிப்புக்கு சில லட்சங்கள் (அதுவும் அந்த காலத்தில்) செலவாயின என்ற கூற்று முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று ! வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று புறம் சொல்லல் ஆகாது. அந்த முதல் நாள் படப்பிடிப்புக்கான சில ஆயிரம் செலவுகளும், "உரிமைக்குரல்" காவியத்தின், அபரிதமான லாபம் என்ற கடலில் கரைந்த சிறு பெருங்காயம் போல்தான். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை பொருத்தவரை, இதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரது கவலையெல்லாம், வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு அதிக முதலீடு செய்த அளவுக்கு, "சிவந்த மண்" வசூல் ஈடுகட்ட முடிய வில்லையே என்பது தான்.
இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மேற்கூறிய பேட்டி, என் சேமிப்பில் உள்ள பத்திரிகையில் ( புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்) வெளி வந்துள்ளது. நேரமின்மை காரணமாக அந்த ஆதாரத்தை தற்போது பதிவிட முடிய வில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில், அதனை தேடி கண்டுபிடித்து பதிவிடுகிறேன்.
இதே போன்று, திரு ஏ. பி. நாகரரஜன் அவர்களும், மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்து பணம் எடுத்தேன் என்றும் கூறினார். இதனையும், இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.
எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் திலகம் திரி அன்பர்கள் ஆரம்பிக்க வில்லை. இது போன்ற ஒப்பீடுகள், மற்றுத்திரியில் எழுதப்படும்போதுதான், எங்களால் வரிந்து கட்டி கொண்டு மறுப்பினை தெரிவிக்க நேருகிறது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வலது கரமாக பல காலம் செயல்பட்டவரும்,
முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரும், சத்யா மூவிஸ் நிர்வாகியுமான
அருளாளர் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு
நேற்று சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
http://i62.tinypic.com/2rctngl.jpg
புரட்சித்தலைவரின் திரைகாவின்யங்கள் மக்களுக்கு தன்னம்பிக்கயுட்டுமே [ கடமை, கண்ணியம், கட்டுப்பட்டு, கனிவு, தெளிவு, துணிவு இப்படி பல] தவிர நம்பிகையை தகர்கின்ற படங்கள் அல்ல. ஆகையால் தான் அவை காலத்தால் அழியாத சிரஞ்சீவித்துவம் அடைந்து நிலைத்து நிற்கிறது.