Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Threaded View

  1. #10
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    இனிய நண்பர் திரு கலைவேந்தன் அவர்களே

    காலை வணக்கங்கள் !



    திரு ஸ்ரீதர் அவர்கள் சிவந்த மண் திரைப்படம் வெற்றி படமா இல்லையா என்பது குறித்த தாங்கள் யாரோ மூன்றாம் நபருடைய இணைய தள பதிவை கல்கியில் திரு ஸ்ரீதர் கூறியது என்று பதிவிட்ட விஷயத்தை பற்றி -

    அன்று சிந்திய ரத்தம் படபிடிப்பு மற்றும் இதர செலவுகள் பல லட்சம் திரு ஸ்ரீதருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது உலகறிந்த விஷயம்!


    திரு ஸ்ரீதர் அவர்களுக்கு பணம் நஷ்டமானது அன்று சிந்திய ரத்தம் திரைப்படம் எடுத்த வகையில் செலவு செய்த லட்சங்கள்தான் !

    அந்த வகைக்கான நஷ்டத்தையும் சிவந்த மண் திரைப்படம்தான் ஈட்டிகொடுக்க வேண்டும் என்று ஒருவேளை எதிர்பார்த்தால், தயாரிப்பாளர் எதிர்பார்த்திருந்தால் அந்த எதிர்பார்ப்பு துளி கூட ஞாயம் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு. !

    ஸ்ரீதர் அவர்களுக்கு சிவந்தமண் எதிர்பார்த்ததை கொடுக்கவில்லை என்று திரு ஸ்ரீதரே கல்கியில் கூறியுள்ளதாக புனையப்பட்ட " ரீல் " எப்படி உண்மையாக இருக்கமுடியும் திரு கலைவேந்தன் ?

    1974இல் அதாவது நான்கு வருடங்கள் திரு ஸ்ரீதர் நஷ்டத்துடன் சும்மா இருந்து....

    பிறகு 1974 இல் ராஜேந்திரகுமார் மக்கள் திலகத்திடம் செல்ல அறிவுரைத்து,

    திரு ஸ்ரீதர் அவர்கள் மக்கள் திலகத்திடம் சென்று,

    மக்கள் திலகம் கால்ஷீட் கொடுத்து ....உரிமை குரல் படத்தின் மூலம் மீண்டும் கோடீஸ்வரன் ஆனார் என்றால்....இது சினிமாவை விட ஒரு படி மேலான "ரீல்" என்பதை தவிர என்ன சொல்வது ?
    திரு.ஆர்.கே.எஸ்., வணக்கம்.

    நான் கொடுத்த இணைப்பில் உள்ளவை கல்கியில் திரு.ஸ்ரீதர் எழுதி நூலாக வந்தது பற்றியது. உங்கள் திரியில் உள்ள நமது நண்பரும் கல்கியில் வந்த தொடரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் மட்டுமல்ல, இதேபோன்ற தொடரை திரு.வி.கே.ராமசாமி அவர்களும் (எனது கலைப்பயணம் என்று நினைவு) கல்கியில் எழுதினார். அதற்கும் அதே சந்திரமெளலி என்பவர்தான் எழுத்தாக்கம் செய்திருந்தார்.

    ஒரு தொடரை ஒரு பிரபலம் எழுதுகிறார் என்றால் அவரே பேனா பிடித்து எழுதினார் என்று அர்த்தமல்ல. அவர் சொல்ல, சொல்ல அதை கேட்டு எழுதி அல்லது டேப் செய்து அதை பத்திரிகையில் எழுதுவார்கள். எப்படி நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை சொல்லச் சொல்ல திரு.நாராயணசாமி அவர்கள் எழுதினாரோ அப்படி. அந்த வகையில் அந்த தொடர் எழுதப்பட்டிருக்கிறது. பின்னர், அது புத்தகமாகவும் வந்துள்ளது.

    ஆனால், நண்பர் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறார்.

    // அந்த எழுத்தாளர் சந்திரமௌலி சிவந்தமண் குறித்து கல்கியில் ஸ்ரீதர் சொன்னதை முற்றிலும் மறைத்து பொய் எழுதியுள்ளார்!//

    என்று கூறியிருக்கிறார். இதற்கு மேல் நான் சொல்ல எதுவுமில்லை. நான் திரு.சந்திரமெளலிக்கு வக்காலத்து வாங்கவில்லை. அவர் முகம் கூட எனக்கு தெரியாது. நமது நண்பரையும் நான் தவறாக சொல்லவில்லை. அவர் கருத்தை அவர் சொல்கிறார். ஆனால், நண்பர் கூறியபடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதா? அதுவும் திரு. ஸ்ரீதர் உயிருடன் இருந்தபோது அவர் பொய்யாக எழுதியிருக்க முடியுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

    திரு.ஆர்.கே.எஸ்.,

    அன்று சிந்திய ரத்தம் படம் வகையில் சில லட்சங்கள் நஷ்டம் என்று கூறியிருக்கிறீர்கள். சில லட்சங்கள் எல்லாம் நஷ்டம் இல்லை. அந்த அளவுக்கு எல்லாம் அந்த கருப்பு வெள்ளையில் எடுப்பதாக இருந்த படம் வளரவில்லை. ஒரே நாள்தான் ஷூட்டிங். மலைமீது நின்றபடி மக்கள் திலகம் பேசுவதுபோல ஸ்டில் கூட வந்தது. அதோடு சரி. மக்கள் திலகத்துக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.25,000 திரு.ஸ்ரீதர் கொடுத்திருக்கிறார். பின்னர், உரிமைக்குரல் படத்தின்போது ரூ.25,000த்தை, மக்கள் திலகம் பேசிய தொகையில் இருந்து கழித்துக் கொண்டு விட்டதாகவும் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

    மேலும், 1980களில் சில படங்கள் எடுத்து நஷ்டம் அடைந்திருந்த நிலையில், வண்ணத்திரை இதழுக்கு ஸ்ரீதர் அளித்த பேட்டியில், ‘‘முன்பு நான் நஷ்டம் அடைந்து நெருக்கடியில் இருந்தபோது எனக்கு கைகொடுத்து மக்கள் திலகம் தூக்கி விட்டார். இப்போது அதுபோன்று யாரும் உதவவில்லை’’ என்றும் திரு.ஸ்ரீதர் பேட்டியில் மனம் வருந்தி குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டிக்கு ‘ஸ்ரீதரின் கண்ணீர் பேட்டி’ என்றே தலைப்பு போட்டிருந்தனர். உரிமைக்குரலால்தான் எனது பண நெருக்கடி தீர்ந்தது என்று திரு.ஸ்ரீதர் கல்கியில் குறிப்பிட்டிருந்தது உண்மை.

    அது மட்டுமல்ல, தேவியில் எஸ்.விஜயன் அவர்கள் எழுதிய எம்ஜிஆர் கதையிலும் ஸ்ரீதர் இதைக் குறிப்பிட்டிருந்தார் . அதுவும் இப்போது புத்தகமாக கடந்த மாதம் இரண்டாம் பதிப்பாக வெளியாகியுள்ளது. நமது திரியிலும் லோகநாதன் விழாப் படங்களை பதிவிட்டிருந்தார். எஸ்.விஜயனும் புளுகுகிறார் என்று சொல்ல முடியுமா?

    முக்கியமாக ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சிவந்தமண் - நம்நாடு ஒப்பீட்டை ஆரம்பித்தது நாங்கள் அல்ல. மேலும், ‘ஸ்ரீதர் கூறியதை வெளியிடட்டும் உண்மைகளை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும்’ என்று நண்பர் கூறியிருந்ததால்தான் நான் ஸ்ரீதர் எழுதிய புத்தகத்தில் உள்ள தகவல்களை வெளியிட நேர்ந்தது. நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 9th September 2015 at 05:45 PM.

  2. Thanks Scottkaz thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •