-
11th September 2015, 04:01 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
நீங்கள் பதிவு செய்துள்ளதற்கு பெயர் ரசிகர் மன்ற நோட்டீஸ் ! சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் பிரிண்ட் செய்து பதிவிடுவது . நம்பகத்தன்மை இல்லாதது !
நான் பதிவு செய்துள்ளது பத்திரிகையில் தயாரிப்பாளர்கள் / விநியோகச்தரால் ப்ரசூரிக்கப்பட்ட விளம்பரம் . இதற்க்கு உங்கள் நோட்டிசை விட நம்பகத்தன்மை அதிகம் உள்ளது !
இதுபோல விளம்பரங்களை பதிவு செய்யுங்கள் COMPARISON செய்வதாக இருந்தால் !
ஒப்பீடு செய்தால் இதுபோல ஒப்பீடு செய்யுங்கள் ...!
ஒரே திரை அரங்கு DEVIPARADISE ....SAME SEAT CAPACITY SAME TICKET CHARGES !
BECAUSE,
1257 இருக்கைகள் கொண்ட GLOBE திரைஅரங்கில் 125 தொடர் அரங்கு நிறைவு காட்சிகள் ......சிவந்த மண்
900 இருக்கைகள் கொண்ட சித்ரா திரை அரங்கில் 125 தொடர் அரங்கு நிறைவு காட்சி நம் நாடு கண்டிருந்தால் கூட சிவந்த மண் வசூலை சமன் செய்யவோ அல்லது ரசிகர் மன்ற நோடிசில் குறிப்பிட்டதைப்போல அதிக வசூல் கண்டிருக்க வாய்ப்பே இல்லை !
That's why am requesting you to put PROPER DOCUMENTS !
RKS

திரு. ஆர்.கே.எஸ். லஞ்ச் முடிச்சாச்சா?
அப்பாடா!.......... நீங்கள் எப்போது ஏற்கனவே வெளியிட்ட இந்த விளம்பரத்தை மீண்டும் வெளியிடுவீர்கள்? என்று காத்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை இன்று மீண்டும் வெளியிட்டு விட்டீர்கள்.
ரிக்க்ஷாக்காரன் படம்
சென்னை தேவி பாரடைஸ் -------------- 4,42,686.00
ஸ்ரீ கிருஷ்ணா ------------------------------- 2,71,428.00
சரவணா ---------------------------------------2,01,502.50
51 நாள் மொத்த வசூல் ----------------------9,15,618.50
ராஜா திரைப்படம்
தேவிபாரடைஸ் ---------------------------- 4,64,457.80
அகஸ்தியா ----------------------------------- 2,00,912.21
ராக்ஸி ----------------------------------------- 2,01,469.45
50 நாள் மொத்த வசூல்-----------------------8,66,839.46
ரிக்க்ஷாக்காரன் 51 நாள் மொத்த வசூல் 9,15,618.50
ராஜா 50 நாள் மொத்த வசூல்----------- 8,66,839.46
கழித்தால் வரும் தொகை ------------------48,779.04
ரிக்க்ஷாக்காரன் திரைப்படம் 48,779 ரூபாய் அதிகம் வசூல் செய்துள்ளது.
ரிக்ஷாக்காரன் படம் 51 நாள் வசூல், ஆனால் ராஜா 50 நாள் வசூல் அதனால் குறைவு என்று நீங்கள் கூறலாம். ஆனால், ஒரு நாளைக்கே 48,779 ரூபாய் வசூல் என்றால் ரிக்க்ஷாக்காரன் பெருமையை என்னென்பது?
ராஜா படம் 50 நாளில் ரூ.8,66,839.46 வசூல் ஆகியுள்ளது என்றால்.....
உங்களுக்காக, நீங்கள் எங்கள் அன்புக்குரிய நெருங்கிய நண்பர் என்பதற்காக விட்டுத் தருகிறேனே.
ராஜா திரைப்படம் 50 நாளில் ரூ.10,00,000 வசூல் என்றே வைத்துக் கொள்வோம். கிட்டத்தட்ட ரூ.1,40,000 கூடுதலாகத்தான் உங்களுக்காக போட்டுள்ளேன் ஆர்.கே.எஸ்.. ஒரு நாள் வசூல் எவ்வளவு?
10,00,000 த்தை 50 ஆல் வகுத்தால் = ரூ.20,000 (அதாவது ஒரு நாள் வசூல்)
இந்த ஒரு நாள் வசூலை ரிக்ஷாக்காரனின் 51 நாள் வசூலில் கழியுங்களேன்.
ரிக்ஷாக்காரன் 51 நாள் மொத்த வசூல் 9,15,618.50
ராஜா ஒரு நாள் வசூலை கழித்தால்... (அதிகமாக போட்டும்) 20,000.00
-----------------
ஆக, ரிக்ஷாக்காரன் 50 நாள் வசூல் ------------8,95,618.50
ராஜா 50 நாள் வசூல் ------------------------------------------------8,66,839.46
-------------------
ரிக்ஷாக்காரன் கூடுதல் வசூல் -----------------------28,779.04
விளம்பரத்தை பதிவிட்டு உதவியதற்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
இந்த உண்மை தெரிந்து விடப் போகிறேதே என்றுதானே முதலில் போட்ட பதிவில் இருந்து நைசாக ராஜா விளம்பரத்தை எடுத்து விட்டீர்கள். மீண்டும் அதை பதிவிட வேண்டுகிறேன் திரு.ஆர்.கே.எஸ். உண்மைகள் எல்லாருக்கும் தெரியட்டும்.
ரிக்க்ஷாக்காரன் - ராஜா ஒப்பிட்டுக்கு இது ஒரு ஆவணமாக இருக்கும். தயவு செய்து ராஜா விளம்பரத்தை மீண்டும் பதிவிடுங்கள் ஆர்.கே.எஸ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
11th September 2015 04:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks