Originally Posted by
makkal thilagam mgr
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் கூறுவது தான் உண்மை ! மறைந்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள், மக்கள் திலகத்தை வைத்து, சித்ரயுகா நிறுவனத்தின் சார்பில், "உரிமைக்குரல்" தயாரித்து பெரும் வெற்றி பெற்ற பொழுது, பத்திரிகை நிரூபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட கேள்விக்கு, "சிவந்த மண்" உட்பட சில படங்களில் தான் பட்ட கடன்களையெல்லாம், இந்த ஒரே படம் (பொன்மனசெம்மலின் "உரிமைக்குரல்") மூலம் அடைக்க முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் பேட்டியளித்தார். இந்த செய்தி அப்போது (1975 கால கட்டத்தில்) பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
"அன்று சிந்திய ரத்தம்" படத்துக்கு வாங்கிய முன்பணம், "உரிமைக்குரல்" காவியத்துக்கான மக்கள் திலகத்தின் சம்பளத்தில் கழிக்கப்பட்டது தான் வரலாற்று உண்மை. ஒரு நாள் படப்பிடிப்புக்கு சில லட்சங்கள் (அதுவும் அந்த காலத்தில்) செலவாயின என்ற கூற்று முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று ! வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று புறம் சொல்லல் ஆகாது. அந்த முதல் நாள் படப்பிடிப்புக்கான சில ஆயிரம் செலவுகளும், "உரிமைக்குரல்" காவியத்தின், அபரிதமான லாபம் என்ற கடலில் கரைந்த சிறு பெருங்காயம் போல்தான். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை பொருத்தவரை, இதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அவரது கவலையெல்லாம், வெளிநாடுகளில் எடுக்கப்பட்டு அதிக முதலீடு செய்த அளவுக்கு, "சிவந்த மண்" வசூல் ஈடுகட்ட முடிய வில்லையே என்பது தான்.
இயக்குனர் ஸ்ரீதர் அவர்களின் மேற்கூறிய பேட்டி, என் சேமிப்பில் உள்ள பத்திரிகையில் ( புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். ஆதரவு பத்திரிகை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்) வெளி வந்துள்ளது. நேரமின்மை காரணமாக அந்த ஆதாரத்தை தற்போது பதிவிட முடிய வில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில், அதனை தேடி கண்டுபிடித்து பதிவிடுகிறேன்.
இதே போன்று, திரு ஏ. பி. நாகரரஜன் அவர்களும், மற்றவர்களை வைத்து படம் எடுத்தேன், ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்களை வைத்து பணம் எடுத்தேன் என்றும் கூறினார். இதனையும், இத்தருணத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.
எந்த ஒரு பிரச்சினையையும் மக்கள் திலகம் திரி அன்பர்கள் ஆரம்பிக்க வில்லை. இது போன்ற ஒப்பீடுகள், மற்றுத்திரியில் எழுதப்படும்போதுதான், எங்களால் வரிந்து கட்டி கொண்டு மறுப்பினை தெரிவிக்க நேருகிறது.