Originally Posted by
RAGHAVENDRA
உலகத் தமிழரின் உள்ளத்திலெல்லாம் இறைவனைப் போல் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகத்திற்கு தமிழ் நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரில் சிலையாக நிற்கக் கூட உரிமை இல்லையாம். போக்குவரத்திற்கு இடைஞ்சலாம். பார்வையை மறைக்கிறாராம். பார்வைக்கே அர்த்தம் தந்தவருக்கு பார்வை மறைக்கிறார் என்கிற பழி பாவம். தரையிலிருந்து கிட்டத் தட்ட 20 அடி உயரம் உள்ள நடிகர் திலகத்தின் திருவுருவச் சிலை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். தமிழகத்தின் பெருமையாய் விளங்குபவருக்கு சென்னையில் இருப்பதோ ஒரே ஒரு சிலை. அதுவும் இவர்கள் கண்களுக்கு உறுத்துகிறது.
2006ம் ஆண்டிலிருந்து இன்று வரை நடிகர் திலகத்தின் சிலையால் போக்குவரத்து ஒரு நாளும் பாதித்ததில்லை. இருந்த போதும் மற்றவர்க்குத் தொல்லை தராத நடிகர் திலகம் இறந்த பிறகா தருவார். சிவாஜி ரசிகர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் உலகம் முழுதுமிருந்தும் இந்தியாவின் பிற ஊர்களிலிருந்தும் சென்னை வரும் சுற்றுலா பயணிகள் என்று அன்றாடம் பலர் வந்து மரியாதை செலுத்தி விட்டுப் போகின்றனர். இருந்த போதிலும் ஒரு நாள் கூட போக்குவரத்து பாதிக்கப் பட்டதாக செய்திகள் இல்லை. நடிகர் திலகத்தின் பிறந்த நாளானாலும் சரி, நினைவு நாளானாலும் சரி, ரசிகர்கள் அமைதியாக அவரவர் வந்து மரியாதை செலுத்தி விட்டுப் போகின்றனர். இன்று வரை இதற்காக ஒரு முறை கூட போக்குவரத்து நிறுத்தப் பட்டதில்லை. பாதிக்கப் பட்டதில்லை.