முன்பு வாசு ஜி ஸ்ரீப்பிரியா பற்றி சொல்லும் கிளாமராக, தாராளாமாக நடித்தவர் என்று சொல்லியிருந்தார், இருந்தாலும் ஆண்களை டம்மியாக்கி பெண்களுக்கு முக்கியத்துவமான பாத்திரங்களை செய்ததில் ஜெய்சித்ராவும் ஸ்ரீப்பிரியாவும் உண்டு .. என்பது என் தாழ்மையான கருத்து
Printable View
முன்பு வாசு ஜி ஸ்ரீப்பிரியா பற்றி சொல்லும் கிளாமராக, தாராளாமாக நடித்தவர் என்று சொல்லியிருந்தார், இருந்தாலும் ஆண்களை டம்மியாக்கி பெண்களுக்கு முக்கியத்துவமான பாத்திரங்களை செய்ததில் ஜெய்சித்ராவும் ஸ்ரீப்பிரியாவும் உண்டு .. என்பது என் தாழ்மையான கருத்து
லலிதா ஸ்ரீ பற்றி உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி
சிரி சிரி முவ்வ - தமிழில் சிரிக்கும் சலங்கை என்று டப் ஆன நினைவு
மிக அருமையான படம் மற்றும் பாடல் .
இந்த ஜுவந்தி நாதம் பாடலை இரவு நேரத்தில் தனியாக கேட்டு பாருங்கள்
அப்படியே மனது எங்கோ செல்லும்
இப்போது அடிகடி ஜெமினி லைப் இல் இந்த பாடலை கேட்கிறேன்
பாடலில் இசைஅரசியின் குரலில் ஒருவித சோகம் இருக்கும்
இதற்கு திரு விஸ்வநாத் ஓர் பேட்டியில் விளக்கம் கூறி இருந்த நினைவு
'கதாநாயகியிடம் அருமையான பரதம் என்ற கலை குடி புகுந்து உள்ளது
ஆனால் வாய் பேச முடியாத ஊமை .மேலும் சித்தி கொடுமை
ஆனால் இதை எல்லாம் மீறி அவள் காணும் கனவு தன பரதத்தின் மேல் உள்ள காதல் இதை எல்லாம் வெளிப்படும் போது சோகம் வரத்தானே செய்யும் .ஆனால் நாங்கள் rerecording போது காட்சி அமைப்பையும் கதாநாயகி யார் என்பதை மட்டும் தான் கூறினோம் .சுசீலா அம்மாவின் கற்பனையில் உதித்த மெருகு அது '
ஜெயப் ப்ரதா பற்றிப் பேச்சு வந்ததனால்..இன்னொரு தங்கப் பதுமை - ஜொலிக்கும் ஜீஹி சாவ்லா..
ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஹீரோ..ஜூஹி சாவ்லா அறிமுகம் ஜூலி என்று..
ஒருஅழகான பாட்டு (படத்தில் நிறையப் பாடல்களும் அழகு) மனதில் நின்றது..
ஒரு மின்னல் போல என் முன்னால் போவது யாரு
என்ன பேரு..என்ன ஊரு
அவள் கண்ணில் நானும் நிலா பார்க்கிறேனே..
நல்ல பாட்டு..முழுக்க வர்ணிப்பு தான் ஜூஹியை.. பார்த்திருக்கிறீர்களா..
THUNIVE THUNAI -1976
PRABHA
http://i61.tinypic.com/16jgayr.jpg
கிருஷ்ணா சார்!
தங்கள் வாழ்த்திற்கு நன்றி! மறந்து போன பல தென்னக திரைப்படக் கலைஞர்களைப் பற்றிய நினைவுகளுக்காக நீங்கள் பல்வேறு சிரமப்பட்டு பலரிடம் தொடர்பு கொண்டு அளித்து வரும் பதிவுகள் மெச்சத் தகுந்தவை.
நிஜமாகவே அனைவரும் பாராட்டி மகிழ வேண்டிய சேவை.
என் உளப்பூர்வமான நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.