-
11th August 2014, 10:23 AM
#11

Originally Posted by
rajeshkrv
வாசு ஜி , கிருஷ்ணா ஜி, சி.கா
ஜெயப்பிரதாவின் அறிமுகம் சிரி சிரி முவ்வா
இசையரசிக்கு 3வது முறையாக தேசிய விருது பெற்று தந்த பாடல்
மகாதேவன் ஐயாவின் அற்புத இசை
ஜும்மந்தி நாதம் சையந்தி பாதம்...
ஹிந்தியில் சர்க்கம் .. டஃப்லி வாலே டஃப்லி பஜா
லலிதா ஸ்ரீ பற்றி உங்கள் நினைவூட்டலுக்கு நன்றி
சிரி சிரி முவ்வ - தமிழில் சிரிக்கும் சலங்கை என்று டப் ஆன நினைவு
மிக அருமையான படம் மற்றும் பாடல் .
இந்த ஜுவந்தி நாதம் பாடலை இரவு நேரத்தில் தனியாக கேட்டு பாருங்கள்
அப்படியே மனது எங்கோ செல்லும்
இப்போது அடிகடி ஜெமினி லைப் இல் இந்த பாடலை கேட்கிறேன்
பாடலில் இசைஅரசியின் குரலில் ஒருவித சோகம் இருக்கும்
இதற்கு திரு விஸ்வநாத் ஓர் பேட்டியில் விளக்கம் கூறி இருந்த நினைவு
'கதாநாயகியிடம் அருமையான பரதம் என்ற கலை குடி புகுந்து உள்ளது
ஆனால் வாய் பேச முடியாத ஊமை .மேலும் சித்தி கொடுமை
ஆனால் இதை எல்லாம் மீறி அவள் காணும் கனவு தன பரதத்தின் மேல் உள்ள காதல் இதை எல்லாம் வெளிப்படும் போது சோகம் வரத்தானே செய்யும் .ஆனால் நாங்கள் rerecording போது காட்சி அமைப்பையும் கதாநாயகி யார் என்பதை மட்டும் தான் கூறினோம் .சுசீலா அம்மாவின் கற்பனையில் உதித்த மெருகு அது '
-
11th August 2014 10:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks