Originally Posted by அருண் வைத்யநாதன் ஃபேஸ்புக்கில்
உனது பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன். உன்னைப் போல் பேசி பழகியிருக்கிறேன். உன்னை இயக்குநராய் தான் சந்திப்பேன் என்று சபதமெடுத்து, அச்சமுண்டுவின் முதல் அழைப்பிதழை உன்னிடம் தான் கொடுத்தேன். நீ நம்பாத ஆண்டவனின் அனுக்கிரகத்தால்...நாம் நம்பும் சினிமாவைப் பற்றி உன்னிடம் நிறைய பேசியிருக்கிறேன். கட்டை விரல் கேட்காத துரோணரே , எனக்குள் கலை வளர்த்த அய்யா கமல்ஹாசனே ...சொகுசான வேலையை விட்டு, ஏன் திரைத்துறைக்கு வந்தாய் என்று கேள்வி எழுப்பிய சிலருக்கு, 2014ல் உனது பாராட்டு வார்த்தைகள் தான் பதிலாய் அமைய வேண்டும் என்று. எழுதப்பட்டுள்ளது போலும். நண்பர்களே....அப்துல் கலாம் உலகத்துக்கு சொன்னார், நான் எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆம், ஒரு சீர்காழி இளைஞனின் கனவு தான் எனது பயணம் - அச்சமுண்டுவில் அமெரிக்க வாழ் மாலினி பேசுவதாய் ஒரு வசனம் வரும் "இந்த லிவ்விங் ரூம் சைஸ் தான், நான் வளர்ந்த வீடே!" - அது வசனம் இல்லை, எனது பால்யம்! கனவுகள் தான் வாழ்க்கையின் நம்பிக்கை உண்டியல். எனது கனவுகளுக்கு உறுதுணையாய் இருக்கும் எனது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் முதல் நன்றிகள். என் மேல் நம்பிக்கை வைத்து, தட்டிக் கொடுத்த ஒவ்வொரு இதயத்திற்கும் வந்தனங்கள். 'தெய்வம் மனுஷ்ய ரூப' என்று சொல்வார்கள். விருதுகள் கமல்ஹாசனின் வார்த்தைகள் ரூபமாக எங்களை வந்தடைந்திருக்கிறது. க.ச.சாவின் இயக்குனர் பிரசன்னாவில் ஆரம்பித்து, படப்பிடிப்பின் போது எங்களுக்கு அன்பாய் தேனீர் பரிமாறியவர் வரை, இந்த கௌரவம் சமபங்காய் பகிர்ந்து மகிழப்படுகிறது.