http://i1170.photobucket.com/albums/...psfce1afbf.jpg
எம்.ஜி.ஆரின் கனவு நிறைவேறுமா ? அல்லது எம்.ஜி.ஆரின் கனவு கனவாகவே போய்விடுமா?
------------------------------------------------------------------------
1970-களின் பிற்பகுதிகளில் “சர்க்காரியா கமிஷன்” என்று கருணாநிதியைப் (மன்னிக்கவும், ‘அறிவியல் ரீதியான ஊழலாளர்) பற்றிப் பேசும்போது சொல்வார்கள்.
ஆனால் இக்காலத்தில் நடுவயதினர் (35-50 வயதுடையவர்கள்) கூட, பெரும்பாலும் இதன் பெயர் மட்டும் தான் கேள்விப்பட்டிருப்பார்கள். நம் இளைஞர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
என்ன நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவைத் தொடங்கினார் , அதிலிருந்து எப்படி அ.தி.மு.க விலகிவிட்டது என்பதை மட்டும் கருணாநிதி எச்சரிக்கையாக சொல்லாமல் விட்டுவிட்டார். அது என்ன என்று தெரியாதவர்கள், எம்.ஜி.ஆர் ஏதோ உன்னதமான சமூக கொள்கைகளை தூக்கிப் பிடிக்க கட்சி தொடங்கியதாகவும் அதிலிருந்து அந்தக் கட்சி விலகிவிட்டதாகவும் அந்த மேன்மையான கொள்கைகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றுவது தி.மு.கதான் என்றும் மயக்கம் கொள்ளவைப்பதே கருணாநிதியின் நோக்கம்.
உண்மையில் ஏன் எம்.ஜி.ஆர் 38 வருடங்.களுக்கு முன்னால் அ.தி.மு.கவைத் தொடங்கினார் என்ற காரணங்கள் இப்போது 55வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே நினைவில் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளைக் குழப்புவதற்காகவே கருணாநிதி இப்படி பேசியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
கருணாநிதி என்ற தீய சக்தியை அரசியலிலிருந்து அகற்றவும், அண்ணா உருவாக்கிய தி.மு.கவின் அசல் நோக்கங்களைக் காப்பாற்றவும்தான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவைத் தொடங்கினார் என்பதை 1972லிருந்து 1987ல் அவர் இறக்கும்வரை எம்.ஜி.ஆர் பல முறைத் திரும்பத் திரும்ப சொல்லி வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இறக்கும்வரையில் கருணாநிதியால் ஒரு தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கவேமுடியவில்லை என்பதும் இன்னொரு முக்கிய வரலாற்றுச் செய்தி.
1972ல் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன் கருணாநிதிக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அளித்தார். அவற்றுக்கெல்லாம் சட்டமன்றத்தில் கருணாநிதி அளித்த மழுப்பலான பதில்களை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. பிரதமர் இந்திரா காந்தி நீதிபதி சர்க்காரியா கமிஷனை நியமித்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கச் செய்தார். சர்க்காரியா கருணாநிதி அரசு ஊழல்களைச் செய்திருப்பதாக தெளிவாக அறிவித்தது. அதன் அடிப்படையில் கருணாநிதி மீதும் அவரது சகாக்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த வழக்குகளைத் திரும்பப் பெற செய்ய, கருணாநிதி படாத பாடு பட்டார். அப்போது அவரது கூட்டாளியாக இருந்த ஜனதா கட்சி ஆட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் வழக்குகளை திரும்பப் பெற மறுத்துவிட்டார். மறுபடியும் வழக்கு போட்ட இந்திரா காந்தி காலிலேயே விழுந்துதான் கருணாநிதி அந்த வழக்குகளைத் தொடர விடாமல் தப்பிக்க முடிந்தது. இந்த சரித்திரமெல்லாம் நன்றாகத் தெரிந்த காங்கிரஸ்காரர்கள்தான் ப.சிதம்பரமும், தங்கபாலுவும்.
1980ல் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டு எம்.பி.தேர்தலில் ஜெயித்தபின்னர், எம்.ஜி.ஆர் அரசைக் கலைக்கும்படி இந்திராவை கருணாநிதிதான் வற்புறுத்தினார். 356ம் பிரிவின் கீழ் மாநில அரசைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கக்கூடாது என்று தி.மு.க அரசு கலைக்கப்படும்போதெல்லாம் சத்தம் போடும் கருணாநிதி அதே 356ஐ எம்.ஜி.ஆருக்கு எதிராகப் பயன்படுத்தத் தயங்கவே இல்லை.
ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சிக் கலைப்புக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் அணி படு தோல்வி அடைந்தது. அதன்பின்னர் காங்கிரஸ் அ.தி.மு.க பக்கம் போய்விட்டது. அடுத்த 13 வருடங்கள் அ.தி.மு.கவுடன் தானிருந்தது.
அப்போது சர்க்காரியா கமிஷன் தொடர்பான ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க காங்கிரசிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தன் குடும்பத்தினரும் மாட்டிவிடாமல் தடுப்பதற்கு காங்கிரசிடம் சரணாகதி அடையும் நிலையில் இருக்கிறார்.
எப்படிப் பார்த்தாலும், எந்த நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவைத்தொடங்கினாரோ அந்த நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. இந்தத் தேர்தல்தான் அதை இறுதியாகத் தீர்மானிக்கப் போகிறது. எம்.ஜி.ஆரின் கனவை ஜெயலலிதா சாதிப்பாரா, அல்லது எம்.ஜி.ஆரின் கனவு கனவாகவே போய்விடுமா என்பது தீர்மானிக்கப்படும்.