Originally Posted by
KALAIVENTHAN
சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,
தங்களின் வருத்தம் புரிகிறது. ஆனால், கவலைப்பட வேண்டாம். தாங்கள் பதிவிடும் படங்கள் சிறியதாக இருந்தாலும் தலைவர் எப்போதும் பெரியவர்தான். அதுதான் முக்கியம். உங்கள் பதிவுகளை திரு. வினோத் சார், திரு.செல்வகுமார் சார், திரு.ராமமூர்த்தி சார் மற்றும் நண்பர்கள் எல்லாருமே பாராட்டியுள்ளோம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. ஐந்து விரல்களும் ஒன்றுபோல இல்லை. ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.
*கட்டை விரலின் உதவி இல்லாமல் எந்த பொருளையும், பென்சிலை கூட எடுக்க முடியாது. எழுதவும் முடியாது.
*மற்றவர்களையும் பொருட்களையும் காட்சிகளையும் சுட்டிக் காட்ட மட்டுமல்ல, எதிரிகளை எச்சரிக்கவும் ஆள்காட்டி விரல் பயன்படுகிறது.
*நடுநாயகமாக உள்ள விரலுக்கு உயரம்தான் அதன் பெருமையே.
*ஐந்து விரல்கள் இருந்தாலும் மோதிர விரலுக்குத்தான் தங்க மோதிரத்தை மாட்டுகிறோம்.
*சுண்டு விரல் குட்டையாகவும் பயனில்லாதது போலவும் தோன்றும். ஆனால், தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்த தமிழ் பண்பாட்டின்படி மற்றவருக்கு வணக்கம் சொல்லும் போது அதுதான் முன்னே நிற்கும்.
எல்லா விரல்களுக்கும் தனிச்சிறப்பு உள்ளதைப் போல நம் ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. படங்களை இதுபோன்று அருமையாக பதிவிடும் திறமை எனக்கு கிடையாது.
எனவே, படங்கள் பெரிதாக இல்லையே என்ற வருத்தம் வேண்டாம். திரு.எஸ்.வி.சார், திரு.ரூப் குமார் சார் சொன்னதுபோல உங்கள் பணியை தொடருங்கள். நீங்கள் படங்களையே பதிவிடாமல் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று போஸ்டிங் போட்டால் கூட எல்லாரும் மகிழ்வோம். காரணம், தனிநபர்களை விட தலைவருக்குத்தான் மரியாதை... இங்கே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்