-
Quote:
Originally Posted by
KALAIVENTHAN
http://i60.tinypic.com/4hywep.jpg
‘இரக்கம் காட்டத்தான் நாதியில்லே....’
ஏழைகளுக்கு இரக்கம் காட்ட கடைசியாக இருந்த ஒரே நாதியும் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அன்று போய்விட்டது. இப்போது...
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
உண்மைதான் திரு. கலைவேந்தன் அவர்களே !
ஏழைகள் மீது அளவற்ற அன்பு, பாசம், நேசம், இரக்கம் காட்டி அவர்களின் பங்காளனாகவே வாழ்ந்து வரலாறு படைத்த நம் ஏழைப்பங்காளன் இப்போது இல்லையே என்ற ஏக்கம் மிக மிக அதிகமாகவே உள்ளது.
உலகத்தின் எந்த ஒரு மூலை முடுக்கிலாவது ஒரு தமிழன் தாக்கப்பட்டால், அதனை கண்டித்து முதலில் ஓங்கி ஒலிப்பது நமது மக்கள் திலகத்தின் குரலாகத்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உடனடி தேவைகளையறிந்து, உரிய நடவடிக்கை எடுத்தவர்தான் உத்தமத்தலைவர் உன்னதமான நம் மக்கள் திலகம். அதன் காரணமாகவே உலகத்தமிழர்களின் உண்மைத்தலைவர் என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் அழைக்கப்பட்டார்.
இந்த துயர சம்பவத்தின் நிலையை, நன்கு அலசி, உண்மையை உலகறிய செய்த தங்களுக்கு நன்றி !
-
நாகூர் அனீபா - மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் . அவர் பாடிய திமுக கொள்கை பாடல்கள் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆரை புகழ்ந்த பாடிய பாடல்கள் அன்றைய கால கட்டத்தில் மிகவும் பிரபலம் . குறிப்பாக ''கொடுத்து சிவந்த கரங்கள் '' எங்க வீட்டு பிள்ளை , ஏழைகளின் தோழன் மக்கள் திலகம் எம்ஜிஆர் எங்கள் அண்ணன் , பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக ஒலித்த பாடல் .
-
Quote:
Originally Posted by
KALAIVENTHAN
http://i60.tinypic.com/4hywep.jpg
‘இரக்கம் காட்டத்தான் நாதியில்லே....’
நேற்று இரவு நெடுநேரம் தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் காட்சியாய் விரியும் சடலங்கள். மனித உயிர்கள் எவ்வளவு மலினமாகப் போய்விட்டன? திருப்பதியில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக 20 பேர்.... தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். செம்மரங்களை அவர்கள் வெட்டுவதை நியாயப்படுத்தவில்லை. அவர்கள் செய்தது தவறுதான் என்றாலும் அவர்களை சுட்டுக் கொன்றிருக்க வேண்டிய தேவையில்லையே. கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, அந்த குற்றத்துக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தந்திருக்கலாமே?
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் திங்கட்கிழமை மதியமே பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தாரின் கதறலையும், தந்தையை இழந்து தவிக்கும் குடும்பங்களையும் அவர்களது கைக்குழந்தைகளையும் பார்த்தால் வேதனை வயிற்றை பிசைகிறது.
இத்தனைக்கும் கொல்லப்பட்டவர்கள் செம்மரங்களை கடத்துபவர்களா என்றால் இல்லை. கடத்தல்காரர்களின் கைப்பாவையாக, கூலிக்கு ஆசைப்பட்டு மரம் வெட்டுபவர்கள். இங்கே, வறட்சியால், விவசாயம் பொய்ப்பதால் திருப்பதி வனப்பகுதிக்கு கூலிக்காக மரம் வெட்ட சென்றுள்ளனர்.
கூலிக்காக மரம் வெட்ட சென்ற ஏழை அப்பாவிகள் என்ன தீவிரவாதிகளா? நக்சலைட்டுகளா? அவர்களை உயிருடன் பிடிக்க முடியாதா? இதில் பல சந்தேகங்கள்.
இறந்தவர்கள் அனைவரின் மார்பிலும் நெற்றிப் பொட்டிலுமே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அருகில் இருந்து போலீசார் சுட்டதற்கான தடயங்கள் அவை என்று கூறுகிறார்கள். காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சிந்தா மோகன் என்பவர், இறந்தவர்களின் கைகளைக் கட்டி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆந்திர அரசும் போலீசாரும் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். செம்மரங்கள் குடோனில் இருந்து எடுத்து வரப்பட்டு சடலங்களுக்கு அருகே போடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
அதற்கு ஏற்றார்போல, புதிதாக வெட்டப்பட்ட மரங்கள் பச்சையாக ஈரத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்த மரங்கள் காய்ந்து கிடக்கின்றன.
செம்மரங்களுக்கு வெளி நாடுகளில் மதிப்பு அதிகம். இந்தியாவில் ஒரு கிலோ செம்மரம் ரூ.5,000 என்றால் சீனாவில் ரூ.1 லட்சம். ஜப்பானில் இன்னும் அதிகம். அந்த நாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்படுகின்றன. சீனாவில் பொம்மைகள் தயாரிக்க செம்மரம் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில் திருமணம் ஆன தம்பதிகளுக்கு சீதனமாக இரண்டு செம்மரக்கட்டைகளை வழங்குவார்களாம். நோய் தடுப்பு ஆற்றல் கொண்டதாகவும், கதிர்வீச்சு பாதிப்பை தடுக்கும் சக்தி கொண்டதாக மருத்துவ குணம் நிறைந்துள்ளதாகவும் செம்மரம் கூறப்படுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி அழிவுக்குப் பிறகு ஜப்பானில் செம்மரத்துக்கு மதிப்பு அதிகம்.
இங்கே, கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு வியக்க வைக்கும். பல ஆண்டுகளுக்கு முன் சிறுவயதில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு மரப்பாச்சி பொம்மைகளை கொடுப்பார்கள். நாம் கூட விளையாடியிருப்போம். அந்த பொம்மைகள் இந்த செம்மரங்களால் செய்யப்பட்டவை. குழந்தைகளுக்கு நோய் தடுப்பு ஆற்றல் கிடைக்கட்டும் என்ற நோக்கத்திலேயே அவற்றைக் கொடுத்திருக்கிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டால், அந்த மரப்பாச்சி பொம்மையை உரைத்து நெற்றியில் பத்து போட்டால் காய்ச்சல் குணமாகும். நமது முன்னோருக்கு செம்மரத்தின் நோய் தடுப்பாற்றல் தெரிந்திருக்கிறது.
விஷயத்துக்கு வருவோம்... செம்மரங்களுக்கு மதிப்பு அதிகம் என்பதால்தான், வெளிநாடுகளுக்கு இவை கடத்தப்படுகிறது. இதை செய்பவர்கள் மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகள் அல்ல. பெரும்புள்ளிகள் என்று கூறப்படுகிறது. ‘‘பெரிய கடத்தல்காரர்களை காப்பாற்ற அப்பாவிகள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்களா?’’ தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொடூர சம்பவத்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவைச் சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தேசிய மனித உரிமை ஆணையம் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டத்தின் பார்வையில் குற்றம் செய்பவர்களை விட அதை செய்ய தூண்டுவோருக்கு தண்டனை அதிகம். கூலிக்காக மரம் வெட்டும் ஏழைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்களே? மரம் வெட்ட அவர்களை தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?
பிழைக்க வழியின்றி கூலிக்காக மரம் வெட்டப் போய், உயிரை விட்டிருக்கிறார்களே? அவர்கள் ஏழைகளாய் பிறந்ததுதான் மிகப் பெரிய குற்றம்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கலைவேந்தன் - உங்கள் இந்த பதிவு , விளக்கிய விதம் , அந்த கோர சம்பவத்தை விட அதிகமாக என்னை உலுக்கி விட்டது என்றால் அது மிகை ஆகாது . அவர்கள் சுட்டது , தமிழர்களை அல்ல , நம்மிடம் மிஞ்சி , இன்னும் கொஞ்சமாக ஒட்டிகொண்டிருந்த மனிதாபிமானத்தை ! இன்று மிகவும் சுலபமாக கிடைக்கும் ஒரே பொருள் மனித உயிர் மட்டுமே - மலர்ந்தும் மலராத , விடிந்தும் விடியாத , வாழ்க்கையின் முதல் படிகளில் கால்களை வைத்த அந்த பள்ளி சிறுவர்களை , மனித போர்வையில் திரிந்த மிருகம் ஒன்று குருவிகளைப்போல் சுட்டு கொன்ற ஈரம் இன்னும் மறையவில்லை - வானத்தில் depression வரலாம் - ஆனால் வந்ததோ ஒரு co -pilot க்கு - முடிவு 300 பேர்களுக்கும் மேல் , விமானம் மலைகளில் மோதி அவர்களின் உயிர்களை குடித்தது - இப்படியே சென்று கொண்டிருந்தால் இந்தியாவோ , மற்ற நாடுகளோ வல்லரசுகளாக மாறாமல் , சுடுகாடுகளாக மாறும் அபாயம் உள்ளது - நாம் இதயங்களுடன் வாழ வேண்டும் - வெறும் எலும்புகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் !!
கண்ணதாசன் நம் தலைவர்களுக்கு எழுதிய பாடல்கள் தான் இன்னும் சிரஞ்சீவியாக உள்ளன -
"யாரடா மனிதன் இங்கே ! கூட்டி வா அவனை இங்கே - இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே !!"
" எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன் தீயவன் ஆவதும் , நல்லவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே !!"
பிறக்கும் முன் இருந்த உள்ளம் , வாழும் போது நம்மிடம் விடை பெற்று செல்கிறது - இறந்தபின் கிடைக்கும் அமைதி வாழும்போது நம்மிடம் வர மறுக்கின்றது ----
ஒரு சின்ன புராண கதை ஒன்று நினைவிற்கு வருகின்றது - பல யுகங்களுக்கு முன் , மனிதனுக்கும் , தெய்வத்திற்கும் வித்தியாசமே இல்லாமல் இருந்ததாம் - மனிதனிடம் தெய்வீகத்தன்மை நன்றாக குடியிருந்த காலம் அது - சில வருடங்களுக்கு பின் - மனிதனிடம் குடியிருக்க - பொறாமை , கர்வம் , அகம்பாவம் , விஷம் கக்கும் வார்த்தைகளை பேசும் சுபாவம் இவைகள் கெஞ்சியதாம் - இறைவன் தடுத்தும் , மனிதனின் இரக்க குணத்தால் அவைகளுக்கு அவன் மனதில் வசிக்க இடம் கிடைத்ததாம் --- இந்த கொடிய குணங்களுடன் போட்டி போட முடியாமல் , அவனிடம் இதுவரை குடி கொண்டிருந்த தெய்வீகத்தன்மை அவனை விட்டு பிரிந்ததாம் - இறைவன் மீண்டும் அவனிடம் இரக்கப்பட்டு அவன் உள்ளத்திலே அதை ஒளித்து வைத்தாராம் - ஆனால் இன்று வரை மனிதன் அதை தேடுவதும் இல்லை - எங்கே இறைவன் ஒளித்து வைத்திருக்கிறான் என்பதையும் அறியவும் இல்லை - இதனால் மிகவும் சுலபமாக கிடைக்கும் மிருக குணத்தை தனக்குள் அதிகமாக சேர்த்து வைக்க ஆரம்பித்து விட்டான் மனிதன் - விளைவு ??? இப்படிப்பட்ட கொலைகள் தினமும் நடந்தவண்ணம் உள்ளன ..
இரு திலகங்களும் அவர்கள் வாழும் போதே , ஒளித்து வைத்த தெய்வீகத்தன்மையை கண்டு பிடித்து விட்டார்கள் - அதனால் தான் , எதிலும் , எந்த விஷயத்திலும் அவர்களை சம்பந்த படுத்தி , நாம் தொலைத்த நிம்மதியை திரும்ப பெற்றுக்கொண்டுருக்கின்றோம் .
உங்கள் அருமையான பதிவுக்கு மீண்டும் என் நன்றிகள்
அன்புடன்
ரவி
-
-
-
-
-
-
-