கட்டித்தங்கம் வெட்டியெடுத்து..
ஆயிரமாயிரம் உணர்வுகளை அழுத்தம் திருத்தமாய் சொல்வது கதை!
அதனிலும் அடர்த்தியாய் ஒரு சில வரிகளில் உரைப்பது கவிதை! கதையும் கவிதையும் கைகோர்த்து நடத்திய ஊர்வலம் திரைப்படம்! இன்னிசை என்னும் பின்னணியாலே இதயத்தைத் தொடுகின்ற கலையை நம் திரைக்கலைஞர்கள் செவ்வனே செய்தளித்திருக்கிறார்கள் என்பதற்கு இன்றும் நம் இதயம் தொடுகின்ற அப்பாடல்களே சாட்சி!!
மக்கள் திலகத்தை வைத்து அதிகமான திரைப்படங்களைத் தயாரித்த மாபெரும் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பத் தேவர் ஆவார். அத்தனைப் படங்களிலும் அற்புத இசையமைப்பு கே.வி.மகாதேவன் அவர்கள். பாடல்கள் அனைத்தும் கவியரசு கண்ணதாசன் அவர்களே!!
தேவர் படங்களென்றால் விறுவிறுப்பும், சண்டைக் காட்சிகளும் விலங்குகளைச் சாகசம் செய்ய வைத்த வித்தியாசமான படைப்பாகவும் ஒருபுறமிருக்க, தேனான இசையில் நம்மை மயக்கும் தெள்ளுத் தமிழ்ப்பாடல்களுக்கும் பஞ்சமில்லை. இவ்வரிசையில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான பாடல்கள் - இன்றும் சாகாவரம் பெற்றவையாக மக்கள் மனதில் உலா வந்து கொண்டிருக்கின்றன. திரைக்கதையின் ஓட்டத்தில் தொய்வின்றி இருக்க தேவரின் ‘பார்முலா’ ஒவ்வொரு இருபது நிமிட இடைவெளியிலும் சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் இடம் பெற வேண்டுமென்பதாகும்.
தாய்க்குப் பின் தாரம் எனத் தொடங்கி.. ‘த’ வரிசையில்.. அதுவும் மக்கள் திலகம் கதாநாயகனாக.. தர்மம் தலைகாக்கும், தாயைக் காத்த தனயன், தாய் சொல்லைத் தட்டாதே.. தனிப்பிறவி என பட்டியல் நீளும்!
இவ்வரிசையில் அமைந்த ‘தாயைக் காத்த தனயன்’ திரைப்படத்தில் விளைந்த பாடலொன்று காதல் சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் நடத்தியதுபோல விளங்குகிறது!
ஒரு பெண்ணை வர்ணித்துப் பாடல் புனைவது.. மரபாக நடந்து வருகின்ற ஒன்றுதான்.. அதிலே கண்ணதாசன் பாணி இதுவோ..
கட்டித் தங்கம் வெட்டியெடுத்து
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டிதட்டிச் சிற்பிகள் செய்த உருவமடா!-அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!... (கட்டி)
தொட்டுத் தொட்டு நின்றன கைகள்!
சுட்டுச் சுட்டுக் கொன்றன கண்கள் - தான்
கிட்டக் கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டிச் சென்றது வண்டு!... (கட்டி)
தங்கரதம் போல வருகிறாள்! - அல்லித்
தண்டுகள் போலே வளைகிறாள்!
குங்குமப் பூப்போல் சிரிக்கிறாள்-இன்பக்
கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்!... (கட்டி)
காலையில் மலரும் தாமரைப் பூ! - அந்திக்
கருக்கலில் மலரும் மல்லிகைப் பூ!
இரவில் மலரும் அல்லிப்பூ! - அவள்
என்றும் மணக்கும் முல்லைப் பூ!... (கட்டி)
காதல் ரசம் பொழியும் பாடலாகவே எல்லோரும் நோக்கும் இந்த வரிக்கு (பம்மல்) கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத் தலைவி பேராசிரியை டாக்டர் சரசுவதி ராமனாதன் அவர்கள் தந்த விளக்கமிதோ..
குங்குமப் பூ போல் சிரிக்கிறாள்..
ஒரு பெண் குங்குமப்பூ போல் சிரிக்க வேண்டும். குங்குமப்பூ எப்படியிருக்கும்? இதழ் எப்படியிருக்கும் என்பதை நோக்கும்போது .. மிகச் சிறிய கோடு விழுந்ததுபோல். தெரியுமாம்.. அதுதான் அந்தப்பூவின் இதழ் திறப்பு.. பெண்கள் அப்படித்தான் மெல்லிய புன்னகை புரிந்தால்தான் அழகு! (எனவேதான் பொம்பளை சிரிச்சா போச்சு என்கிற பழமொழி கூட வந்துள்ளது).
ஞாயிற்றுக் கிழமைகளில் எம்.ஜி.ஆருக்கு, காலையில் மட்டும் தான் சிகிச்சை செய்வேன்; "மாலை நேரத்தில் சிகிச்சை வேண்டாம்...' என சொல்லி விடுவார் எம்.ஜி.ஆர்., ஒரு ஞாயிறு காலை, நான் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த போது, "இன்று மாலை, "டிவி'யில் நான் நடித்த கலர் படம் ஒளிபரப்புகின்றனர்; நீங்கள் பார்த்து, "என்ஜாய்' பண்ணுங்க. வீட்டில் என்ன, "டிவி' வெச்சிருக்கீங்க?' எனக் கேட்டார்; "சாலிடார், ப்ளாக் அண்ட் ஒயிட்' என்றேன்.
"பிளாக் அண்ட் ஒயிட், "டிவி'யில பார்த்தால் நல்லா இருக்காதே...' என்றார்.
பின்னர், உதவியாளரிடம், "இப்போ நல்ல காஸ்ட்லி கலர், "டிவி' எது, என்ன விலை?' என்று கேட்டார். ஒனிடா, "டிவி!' 12 ஆயிரத்து, 500 ரூபாய் என்று தகவல் கிடைத்தது. "டாக்டர் ராஜாமணி வீட்டில், மதியம் இரண்டு மணிக்குள்ளே, ஒனிடா கலர், அன்று "டிவி' இருக்கணும்...' எனக் கூறினார் எம்.ஜி.ஆர்.,
அவர் சொன்னதைப் போல, பிற்பகல், 12:30 மணிக்கே, எங்கள் வீட்டுக்கு புது ஒனிடா, "டிவி' கொண்டு வரப்பட்டு, பொருத்தப்பட்டது. 2:30 மணிக்கு நான் வீட்டுக்குச் சென்ற போது, புது, "டிவி' என்னை வரவேற்றது. எனக்கு கொடுத்ததைப் போல, அவரது பி.ஏ.,க்கள், செக்யூரிட்டி அதிகாரிகள் என, 18 பேருக்கு, அன்று "டிவி' வாங்கி, அன்பளிப்பாக வழங்கினார் எம்.ஜி.ஆர்.,
அந்த, "டிவி'யை பார்க்கும் போதெல்லாம், அதை, பரிசாக அளித்த எம்.ஜி.ஆரின் நினைவு தான் எங்களுக்கு வரும்.
மறுநாள் காலை, எம்.ஜி.ஆரை சந்தித்த போது, அவருக்கு மனமார நன்றி சொன்னேன். "டிவி'யில் ஒளிபரப்பப்பட்ட தன் படத்தைப் பற்றியும், அவர் சில விஷயங்களைப் பேசினார்.
ஜன., 17ம் தேதி, எம்.ஜி.ஆருக்கு பிறந்த நாள்; அன்று தான் எனக்கும் பிறந்த நாள். அன்று, அவருக்கு நான் மாலை அணிவித்தேன்; எனக்கும் அன்று தான் பிறந்த நாள் என அறிந்த எம்.ஜி.ஆர்., அதே மாலையை எனக்கு அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்தார்; மிகவும் பெருமிதமாக இருந்தது.
இந்திராவின் நினைவாக, பல அரசியல்வாதிகள் பங்கேற்ற பெரிய மீட்டிங், டில்லியில் நடந்தது. சென்னையிலிருந்து, டில்லிக்கு சென்று அந்த கூட்டத்தில் பங்கு பெற்ற எம்.ஜி.ஆர்., இந்திராவைப் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசினார். அது, அவருக்கே மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. சென்னைக்கு வந்ததும், ஜானகி அம்மாவிடம், "டில்லி மீட்டிங் கில், முப்பது நிமிடங்கள் பேசினேன்; டாக்டர் ராஜாமணி தான் அதற்கு முழுக் காரணம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது!' என்றார்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகு, மதிய வேளையில் என்னை அழைத்த ஜானகி அம்மா, "உங்ககிட்டே ஒரு குட் நியூஸ் சொல்லணும்...' என்றார். எனக்கு சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை; இருந்தாலும், என் ஆவலை அடக்கிக் கொண்டேன். "உங்களுக்கு கார் தரச் சொல்லியிருக்காங்க...' என்றார்.
மறுநாளே, பச்சை நிற புது பியட் கார், பட்டினப்பாக்கத்தில் உள்ள என் வீட்டிற்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. என் மனைவிக்கும், எனக்கும், இன்ப அதிர்ச்சி; மகிழ்ச்சி.
என் வாழ்க்கையில், எனக்கு சொந்தமாக கிடைத்த கார், எம்.ஜி.ஆர்., எனக்கு கொடுத்த கார் தான்.
என் மருத்துவத் துறை நண்பர்களுக்கு, இந்த கார் பரிசு, ஆச்சரியமாக இருந்தது.
courtesy-(வர்ம சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாமணி பேட்டி)
நாடோடி மன்னன்”, எம்.ஜி.ஆர் நடித்தும், தயாரித்து, இயக்கமும் செய்த திரைப்படம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்படத்திற்கான பிரத்யேக போட்டோக்கள் சிலவற்றையும் நான் படப்பிடிப்புத் தளத்திலேயே எடுத்துவைத்திருந்தேன். அப்புகைப்படங்களுள் சில பத்திரிக்கைகளில் வெளியாகின. படத்திற்கான எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே இருந்தது. பின்னர் அத்திரைப்படம் வெளியான முதல் தினத்தின் (ஆகஸ்டு 22, 1958) பொழுதெல்லாம், காலை பத்துமணிக்கு காட்சி என்றால் அதற்குள் பத்திரிக்கையாளர்கள், எல்லாம் திரையரங்கத்தினுள் அமர்ந்திருப்பார்கள், அடுத்த பத்து நிமிடங்கள் கழித்துகூட எந்த பத்திரிக்கையாளர் வந்தாலும் அவர்களுக்கு திரையரங்கத்தினுள் அனுமதி மறுக்கப்படும். ஏனென்றால் பத்து நிமிடங்கள் தாமதாகமாகவந்தவர்கள் படத்தைதவறுதலாக புரிந்துகொண்டு எழுதிவிட்டால், என்னசெய்வது என்பதற்காகத்தான் அவர் இதில் உறுதியாக இருந்தார். இவ்விஷயம் எனக்கு நன்றாகவேத் தெரியும் என்பதற்காக, நான் பத்து நிமிடங்கள் முன்பாகவே ஆஜராகிவிடுவேன். என்னளவில் சில பத்திரிக்கை நண்பர்களையும் காட்சிக்கு வரும்படி உடன் அழைத்து வருவேன். அவர்களும் இப்படத்தைப் பற்றிய செய்திகளை அவரவர் பணிபுரியும் பத்திரிக்கைகளில் வெளியிடுவார்கள். எம்.ஜி.ஆரின் விருப்பத்தின்பேரில் பத்திரிக்கையாளர் சந்திப்பினை ஏற்படுத்துவதும் நானாகத்தான் இருப்பேன். படம் வெளியான தினத்திலிருந்தே மக்களிடத்தில் வரவேற்பும் பாராட்டும் அதிக அளவில் இருந்தது. லாபமும் கூட.
படத்தின் வெற்றியைக் கொண்டாடுவது எனவும் எம்.ஜி.ஆரின் வாயிலாக முடிவுசெய்யப்பட்டது. சி.என்.அண்ணாத்துரை அவர்கள் ”நாடோடி மன்னன்”, வெற்றி விழாவை தலைமை தாங்குவதாக ஒப்புக்கொண்டதும் விழாவிற்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடந்தேறின. விழா மேடையில், இந்தப் படத்தில் பணியாற்றியவர்களுக்காக, 120பதக்கங்கள் தயார் செய்யப்பட்டு இருந்தன.
அப்பொழுதெல்லாம் படத்தின் வெற்றிவிழாவில் 40, 50 பதக்கங்கள் வழங்குவதே பெரியவிஷயமாக கருதப்பட்டது. அதில் நடித்த நடிகர், நடிகைகள் , தொழிற்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமான பதக்கங்களின் எண்ணிக்கைதான் நூற்றி இருபது. நாடோடிமன்னன் வெளியான காலகட்டத்திலெல்லாம் பி.ஆர்.ஓக்கள் என்பதற்கான அடையாளங்களே இல்லை. அதனால் எனக்கும் எந்த விருதும் கிடைக்கவில்லை. என் வேலைக்கும் அங்கீகாரம் கிடையாது.
G.k.ராம் என்பவர்தான் எம்.ஜி.ஆருடன் அநேக பொழுதுகளில் உடன் இருப்பவர்.
நாடோடி மன்னன் கதை ,வசனத்திலும் உதவியாக இருந்தவர். விழா முடிந்ததும் எம்.ஜி.ஆர் என்னைச் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் சிவந்த கன்னங்கள் மேலும் சிவக்க என்னை விசாரித்தார். G.k.ராம் கூறியதன்படி, ”ஆனந்தனுக்கு பரிசு ஏதும் கொடுக்கவில்லையே!”, என்று எம்.ஜி.ஆரும் உணர்ந்திருந்தார். பின்பு நானே அவரிடம், ”எனக்கு என்ன பெயரில் விருது கொடுப்பது, நான் செய்த வேலைக்கு ஓர் பிரிவேகிடையாதே!” என்றேன். ஆனால், எம்.ஜி.ஆர் சமாதானம் ஆகவில்லை, அடுத்த ஒருவார காலத்திற்குள் எனக்காக ஒரு பதக்கம் தனியாக தயார் செய்யப்பட்டு, அவரது அலுவலகத்திலேயே பதக்கத்தை எனக்கு அளித்தார். அது நூற்றி இருபத்தி ஒன்று. எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு இது ஓர் உதாரணம்.
courtesy- film news ananthan
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்
கணீரென ஒலிக்கும் இந்த குரலுக்கு சொந்தக் காரர் யார்? MGR ! தவறு. இந்த பாடலை பாடியவர் TMS ஆனால் பிம்பம் - இமேஜ் MGR
என்ன உங்க கருத்துப் பதிவுகள் எல்லாவற்றிலும் MGR பாடல் இருக்கிறதே என்று சிலர் என்னைக் கடிந்து கொள்வார்கள் சிலர் கனிந்து கொள்வார்கள்.
வானத்தில் பறப்பதும் பூமியில் நடப்பதும் அவரவர் எண்ணங்களே..
இதுதான் என்னது புன்னகை பதில்.
புரட்சி தலைவர் MGR தவறு, கார்ல் மார்க்ஸ் புரட்சி தலைவர். அது MGR இமேஜ். அவர் குழந்தைகளுக்கு பாடுவார்.
"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தை இடம் நீர் அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்"
மணமக்களை வாழ்த்துவார்.
"இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை...
மணமகளை வாழ்த்துவார்
"உன் கால் பட்ட இடமெல்லாம் மலராகனும்
கை பட்ட பொருளெல்லாம் பொன்னாகணும்
உன் கண் பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்த கண்ணீரே என்றாகணும்
நாகாரிகம் பேசுவார்
"புரியாத சில பேர்க்கு புது நாகரிகம்
அறியாத சில பேர்க்கு இது நாகரிகம்
முறையோடு வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்"
பெரிய மனிதர்கள் சின்னத்தனமாக நடக்கும்போது சொல்வார்
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
தொழிலாளர்களுக்கு பாடுவார்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடுபள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாருங்கள்
அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்
மீனவர்களுக்கு பாடுவார்
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ...
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை
அள்ளி அள்ளிக் கொடுப்பவர்களுக்கு பாடுவார்
நாம் பாடு பட்டு சேர்த்த பணத்தை கொடுக்கும்போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை காணும்போதும் இன்பம்
கொடுக்காதவர்களுக்கும் பாடுவார்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருவருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
அரசியலுக்கு வந்த பிறகு கலைஞரையும் சாடினார்
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
மக்களின் முதல்வர் சொன்னதை போல் எனக்கு எதிரிகளே இல்லை என்று மமதையுடன் சொல்ல மாட்டார். என் எதிரிகளுக்கு தோல்வியையே பரிசாக கொடுத்து பழக்கப் பட்டவன் நான் என்பார்..
இப்படி சமூகத்தின் பல் வேறு தரப்பினருக்கும் அவர் பாடினார் - இல்லை வாய் அசைத்தார் அது MGR - அவரவர்களுக்கு சொன்ன அறிவுரையாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால்தான் அவர் மரணிப்பதை கூட விரும்பாத அவர் ஆதரவாளார்கள் இப்படி பாடினார்கள்..
உள்ளமது உள்ளவரை அள்ளி தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்ன செய்யும்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
எப்போதும் ஒருவனுடைய இமேஜ் முக்கியமானது. அதை இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம் என்பதற்கு அந்த மூன்றெழுத்து நாயகன் ஒரு நல்ல முன்னுதாரணம். அதற்கு நாம் செய்ய வேண்டியது
"பதவி" வரும்போது "பணிவு" வரவேண்டும் - "துணிவு" வரவேண்டும். பாதை தவறாமல் "பண்பு" குறையாமல் "பழகி" வரவேண்டும்.
எம்.ஜி.ஆர். அவர்கள் 1987ஆம் ஆண்டில் காலமானபோது எனக்கு வயது 12.
தான் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் - திமுக வேட்பாளர் நெல்லை நெடுமாறனை எதிர்த்து அதிமுக சார்பில் இரா.அமிர்தராஜ் போட்டியிட்டார். (இரண்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பதைத் தவிர அந்த வயதில் எனக்கு வேறெதுவும் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை.) தன் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக, நான் சார்ந்த இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், 22.00 மணியளவில் வந்து சேர்ந்தார். வெள்ளைக்காரனுக்கு சற்றும் குறையாத வெள்ளைவெளேர் முகத்தில் கருப்புக் கண்ணாடியணிந்து அவர் காட்சியளித்ததும், “என் இரத்தத்தின் இரத்தமே” என்ற சொற்களுடன் தனதுரையைத் துவக்கியதும் இன்றளவும் என் மனதில் நீங்காமல் நிற்கிறது.
1987ஆம் ஆண்டு அவர் இறந்த நிகழ்வை, தூர்தர்ஷன் சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பியபோது, மற்ற நண்பர்களெல்லாம் விளையாடிக் கொண்டிருக்க - நான் அவரது நல்லடக்கப் பேரணி காட்சிகளைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஓரளவுக்கு விபரம் தெரியும் வயதை எட்டியது முதல், அவர் நம்முடன் இல்லையே என்று ஓர் ஆதங்கம் இருந்துகொண்டே இருக்கிறது...
அச்சு, காட்சி ஊடகங்களில் எம்.ஜி.ஆர். குறித்து சிறிய துணுக்குச் செய்தி வந்தாலும் கூட முதல் முக்கியத்துவம் கொடுத்து அவதானிக்கத் தோன்றுகிறது.
மொத்தத்தில், என் காலத்தில் வாழும் அரசியல் தலைவர்களுள் முற்றிலும் மாறுபட்டவராகவே அவர் காட்சியளிக்கிறார்.
ஏழை - எளியோர் மனதில் இன்றளவும் அவரும், அவரது இரட்டை இலை சின்னமும் நீக்கமற நிறைந்திருப்பதிலிருந்தே அவரது வாழ்வின் நல்ல தாக்கத்தை நன்குணர முடிகிறது.
என் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்ட ஷுஅய்ப் காக்காவுக்கு நன்றிகள் பல!
COURTESY-mackie noohuthambi
தனக்கு சிகிச்சை அளித்தவருக்கு மட்டுமின்றி, பி.ஏ.க்கள், செக்யூரிட்டி அதிகாரிகளுக்கும் கலர் டி.வி.க்கள். அதோடு, சிகிச்சை அளித்தவருக்கு பியட் கார். இந்த தாராள மனப்பான்மையும் கொடையுள்ளமும் யாருக்கு வரும்? நன்றி. திரு.குமார் சார்.
அன்புடன் :கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
‘இரக்கம் காட்டத்தான் நாதியில்லே....’
நேற்று இரவு நெடுநேரம் தூக்கம் வரவில்லை. கண்ணை மூடினால் காட்சியாய் விரியும் சடலங்கள். மனித உயிர்கள் எவ்வளவு மலினமாகப் போய்விட்டன? திருப்பதியில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக 20 பேர்.... தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். செம்மரங்களை அவர்கள் வெட்டுவதை நியாயப்படுத்தவில்லை. அவர்கள் செய்தது தவறுதான் என்றாலும் அவர்களை சுட்டுக் கொன்றிருக்க வேண்டிய தேவையில்லையே. கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி, அந்த குற்றத்துக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தந்திருக்கலாமே?
சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் திங்கட்கிழமை மதியமே பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தாரின் கதறலையும், தந்தையை இழந்து தவிக்கும் குடும்பங்களையும் அவர்களது கைக்குழந்தைகளையும் பார்த்தால் வேதனை வயிற்றை பிசைகிறது.
இத்தனைக்கும் கொல்லப்பட்டவர்கள் செம்மரங்களை கடத்துபவர்களா என்றால் இல்லை. கடத்தல்காரர்களின் கைப்பாவையாக, கூலிக்கு ஆசைப்பட்டு மரம் வெட்டுபவர்கள். இங்கே, வறட்சியால், விவசாயம் பொய்ப்பதால் திருப்பதி வனப்பகுதிக்கு கூலிக்காக மரம் வெட்ட சென்றுள்ளனர்.
கூலிக்காக மரம் வெட்ட சென்ற ஏழை அப்பாவிகள் என்ன தீவிரவாதிகளா? நக்சலைட்டுகளா? அவர்களை உயிருடன் பிடிக்க முடியாதா? இதில் பல சந்தேகங்கள்.
இறந்தவர்கள் அனைவரின் மார்பிலும் நெற்றிப் பொட்டிலுமே துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. அருகில் இருந்து போலீசார் சுட்டதற்கான தடயங்கள் அவை என்று கூறுகிறார்கள். காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சிந்தா மோகன் என்பவர், இறந்தவர்களின் கைகளைக் கட்டி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆந்திர அரசும் போலீசாரும் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். செம்மரங்கள் குடோனில் இருந்து எடுத்து வரப்பட்டு சடலங்களுக்கு அருகே போடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
அதற்கு ஏற்றார்போல, புதிதாக வெட்டப்பட்ட மரங்கள் பச்சையாக ஈரத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். ஆனால், அங்கிருந்த மரங்கள் காய்ந்து கிடக்கின்றன.
செம்மரங்களுக்கு வெளி நாடுகளில் மதிப்பு அதிகம். இந்தியாவில் ஒரு கிலோ செம்மரம் ரூ.5,000 என்றால் சீனாவில் ரூ.1 லட்சம். ஜப்பானில் இன்னும் அதிகம். அந்த நாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்படுகின்றன. சீனாவில் பொம்மைகள் தயாரிக்க செம்மரம் பயன்படுத்தப்படுகிறது. ஜப்பானில் திருமணம் ஆன தம்பதிகளுக்கு சீதனமாக இரண்டு செம்மரக்கட்டைகளை வழங்குவார்களாம். நோய் தடுப்பு ஆற்றல் கொண்டதாகவும், கதிர்வீச்சு பாதிப்பை தடுக்கும் சக்தி கொண்டதாக மருத்துவ குணம் நிறைந்துள்ளதாகவும் செம்மரம் கூறப்படுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி அழிவுக்குப் பிறகு ஜப்பானில் செம்மரத்துக்கு மதிப்பு அதிகம்.
இங்கே, கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். நம் முன்னோர்களின் மருத்துவ அறிவு வியக்க வைக்கும். பல ஆண்டுகளுக்கு முன் சிறுவயதில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு மரப்பாச்சி பொம்மைகளை கொடுப்பார்கள். நாம் கூட விளையாடியிருப்போம். அந்த பொம்மைகள் இந்த செம்மரங்களால் செய்யப்பட்டவை. குழந்தைகளுக்கு நோய் தடுப்பு ஆற்றல் கிடைக்கட்டும் என்ற நோக்கத்திலேயே அவற்றைக் கொடுத்திருக்கிறார்கள். காய்ச்சல் ஏற்பட்டால், அந்த மரப்பாச்சி பொம்மையை உரைத்து நெற்றியில் பத்து போட்டால் காய்ச்சல் குணமாகும். நமது முன்னோருக்கு செம்மரத்தின் நோய் தடுப்பாற்றல் தெரிந்திருக்கிறது.
விஷயத்துக்கு வருவோம்... செம்மரங்களுக்கு மதிப்பு அதிகம் என்பதால்தான், வெளிநாடுகளுக்கு இவை கடத்தப்படுகிறது. இதை செய்பவர்கள் மரம் வெட்டும் கூலித் தொழிலாளிகள் அல்ல. பெரும்புள்ளிகள் என்று கூறப்படுகிறது. ‘‘பெரிய கடத்தல்காரர்களை காப்பாற்ற அப்பாவிகள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்களா?’’ தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கொடூர சம்பவத்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவைச் சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தேசிய மனித உரிமை ஆணையம் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டத்தின் பார்வையில் குற்றம் செய்பவர்களை விட அதை செய்ய தூண்டுவோருக்கு தண்டனை அதிகம். கூலிக்காக மரம் வெட்டும் ஏழைகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்களே? மரம் வெட்ட அவர்களை தூண்டியவர்களுக்கு என்ன தண்டனை?
பிழைக்க வழியின்றி கூலிக்காக மரம் வெட்டப் போய், உயிரை விட்டிருக்கிறார்களே? அவர்கள் ஏழைகளாய் பிறந்ததுதான் மிகப் பெரிய குற்றம்.
சபாஷ் மாப்ளே படத்தில், தலைவர் வேலை தேடி மும்பைக்கு செல்வார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவார். பல வேலைகளில் ஈடுபடுவார். திரைப்படத்தில் கூட நடிப்பார். அப்போது, என்னைக் கவர்ந்த காட்சி ஒன்று, தலைவரின் இயல்பான குணத்தையே பிரதிபலிப்பது போல இருக்கும்.
எங்கோ அலைந்து, திரிந்து, உழைத்து உணவு வாங்கி சாப்பிடப்போகும்போது, அருகே பசியோடிருக்கும் ஒரு ஏழைத் தாயின் அவலக் குரல். தான் வைத்திருந்த சாப்பாட்டை அந்த தாய்க்கு கொடுத்து விடுவார் தலைவர். நிஜ வாழ்வில் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் ஏழ்மையின் பிடியில் சிக்கியிருக்கும்போது கூட தனக்கு கிடைத்ததை பிறருக்கு கொடுப்பவராகத்தான் இருந்திருக்கிறார் தலைவர்.
மும்பையில் அங்குள்ள ஏழைகளின் நிலையை பார்த்து இசைப் பேரறிஞர் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் தலைவர் பாடும் கருத்துள்ள பாடல்..
‘சிரிப்பவர் சில பேர்
அழுபவர் பல பேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?..
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே...
... உருக்கும் வரிகள்.
ஏழைகளுக்கு இரக்கம் காட்ட கடைசியாக இருந்த ஒரே நாதியும் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி அன்று போய்விட்டது. இப்போது...
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks