http://www.metacafe.com/watch/yt-hZn...ishiko_sneham/
Printable View
என் வேண்டுகோளை ஏற்று சித்ராலயா இதழின் பக்கங்களை பதிவேற்றியதற்கு நன்றி ராகவேந்தர் சார்!
.
இந்த வாரத்தை சவாலே சமாளி சிறப்பு வாரமாக மாற்றிய சுவாமிக்கு நன்றி. இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்யப்படும் விஷயங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது என் மனம் ஐந்து வருடங்கள் பின்னோக்கி பறக்கின்றது.
நான் இந்த திரியில் அடியெடுத்து வைக்கும்போது சிவாஜி என்ற நடிகர் திறமையானவர்,சில நல்ல படங்களில் நடித்திருக்கிறார் என்றளவிலே தான் பலரின் சிந்தனை இருந்தது. நாம் இங்கே நடிகர் திலகம் என்ற மனிதனின் பல்வேறு பரிணாமங்களை இங்கே பதிவிட பலருக்கும் அது ஒரு வியப்பூட்டும் செய்தியாக மட்டுமே இருந்தது.
நண்பர் ஜோ ஒரு முறை பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார் "சார், நீங்கள் திரியில் நடிகர் திலகத்தின் சாதனைகளைப் பற்றி எழுதியதை படித்த பிறகுதான் மதுரை நடிகர் திலகத்தின் கோட்டை என்பதை புரிந்துக் கொண்டேன். அதுவரை மதுரை மற்ற யாரோ ஒருவரின் கோட்டை என நினைத்துக் கொண்டிருந்தேன்" என்றார். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் புத்தகங்கள், பத்திரிக்கைகள், வலைப்பூக்கள மற்றும் இணையதளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றி எந்த ஒரு செய்தியையும் விடாமல் தேடிப் படிக்கும் ஜோ போன்றவர்களின் பார்வைக்கு கூட இந்த தகவல்கள் கிடைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில்தான் திரியில் வரும் செய்திகளுக்கும் புள்ளி விவரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்தன. நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் சாதனைகளையும் தவிர நடிகர் திலகம் கலையுலக மற்றும் அரசியலில் எப்படிப்பட்ட ஒரு ஆளுமையாக இருந்தார் என்பதனை முதலில் எழுத்துக்களில் சொன்னோம். அப்போதும் கூட இங்கே இந்த திரிக்கு தொடர்ந்து வாசகர்களாக இருக்கக்கூடியவர்கள், ரசிகர்களாக இருக்கக்கூடியவர்கள் கூட, இங்கே பதிவிடுபவர்கள் சிலர் சிவாஜியின் மீது கொண்டுள்ள அதீத அன்பின் காரணமாக சற்று மிகைப்படுத்தி சொல்வதாக ஒரு எண்ணத்தை கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தை மாற்றி நாம் நடிகர் திலகத்தைப் பற்றி பதிவிட்டவை அனைத்துமே உண்மை என்பதற்கும் இப்போது நாம் குறிப்பிட்ட அந்த ஆளுமையின் பலவாறு பரிணாமங்களை எல்லோரும் உணர்வதற்கும் இந்த பத்திரிக்கை செய்திகளும் விளம்பரங்களும் பெரிதும் பயன்பட்டிருக்கும்.
இன்னொன்று. இந்த சவாலே சமாளி படம் வெளியான போதும் சரி, விழா் நடந்த 1971 ஜூலை 10,11 தேதிகளிலும் சரி அந்தக் காலக் கட்டத்தில் இவற்றை நேரில் பார்த்த எங்களைப் போன்றோர் இந்த நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மட்டும் சொல்லி போக, அந்த காலக் கட்டத்தில் இந்த பூமி பந்தில் ஜனனம் கூட கண்டிராத நண்பர் சுவாமியின் மூலமாக இன்று உலகில் பல்வேறு இடங்களில் வாழும் பல்வேறு தலைமுறையினரும் அதை புகைப்பட வடிவிலும் செய்தியாகவும் கண்டு களிக்கிறார்கள் என்றால் அனைத்தும் அந்த "சுவாமியின் " கருணை.
உண்மைதானே! தந்தைக்கே உபதேசம் செய்ததால்தானே அவன் "சுவாமிநாதன்" ஆனான்!
அன்புடன்
சவாலே சமாளி பதிவுகள் மிகவும் அருமை. புள்ளி வைத்து ஆரம்பித்த திரு.முரளி, அதைக் கோலமாக்கி, இனிய நினைவுகளை நமக்களித்த திரு.பம்மலார், திரு.ராகவேந்திரன் ஆகியோருக்கு நன்றிகள்.
பம்மலார் சார், ராகவேந்தர் சார், முரளி சார்....... உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி.
முரளி அவர்கள் சொன்னது போல இந்த வாரம் முழுவது 'சவாலே சமாளி' சிறப்பு மலராக நமது திரி அமைந்து அழகு சேர்த்துள்ளது. இதற்கு முழுமுதற்காரணம் நீங்கள் மூவருமே.
எனக்குத்தெரிந்து 'சவாலே சமாளி' உதய தினம் கொண்டாடப்பட்ட அளவுக்கு நமது திரியில் மற்றைய படங்கள் கொண்டாடப்படவில்லை என்று எண்ணுகிறேன். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, திருச்சி மலைக்கோட்டை மாநகரில் நடந்த 150 வது பட விழா. அவ்விழா நிகழ்ச்சிகளை எழுத்துக்களால் தொகுத்தால் முழுமையடையாது, அல்லது தகவல்கள் கூடுதல் குறைவாக ஆகிவிடுமோ என்ற எண்ணத்தில், அவ்விழா பற்றிய அன்றைய தின, வார, மாத இதழ்களின் பங்களிப்பை அப்படியே இங்கே பதிவேற்றி அட்டகாசம் செய்துவிட்டீர்கள்.
** சவாலே சமாளி வெளியீட்டு விளம்பரம் (தினமணி, முரசொலி)
** சவாலே சமாளி 100 வது நாள் விளம்பரம், தியேட்டர் பெயர்களுடன் (தினத்தந்தி)
** 150 வது படவிழா பற்றி மாலைமுரசு நாளிதழில் வெளியான செய்தி (படங்களுடன்)
** விழாவில் பங்கேற்ற பிரபலங்கள், நடிகர்திலகத்துக்கு செய்யும் மாலை மரியாதைகள், மற்றும் சிற்ப்புப்பேச்சுக்கள், நடிகர்திலகத்தின் உணர்ச்சிப்பிரவாக பேச்சு - (பேசும் படம் மாத இதழின் பத்துபக்கங்களின் பதிவேற்றம்).
** திருச்சி விழா நிகழ்ச்சிகள் பற்றிய செய்தித்தொகுப்பு, படங்களுடன் (சித்ராலயா மாதமிருமுறை இதழ்)
** பெருந்தலைவருடன் அவரது உண்மைத்தொண்டன் இணைந்து நிற்கும் சீரிய தோற்றம், மற்று சவாலே சமாளி படப்பிடிப்புக் காட்சி (இதயக்கனி மாத இதழ்) (அண்ணன் மாணிக்கமும், அண்ணி சகுந்தலாவும் வயலில் இறங்கி நிற்கும் காட்சி கொள்ளை அழகு)
** முத்தாய்ப்பாக சென்னையில் நடந்த 100-வது நாள் நிகழ்ச்சியின் படத்தொகுப்பு.
அடடா... அடடா... தேடித் தேடிக்கொண்டு வந்து குவித்து விட்டீர்கள். அவ்ற்றுக்கு கூடுதல் வலு சேர்க்க, சவாலே சமாளி வெளியீட்டின்போது நடந்த நிகழ்வுகள் பற்றி முரளி, பம்மலார், ராகவேந்தர், பார்த்தசாரதி, சாரதா உள்ளிட்டோரின் சிறப்புப் பதிவுகள் (கூடவே சிறிய அளவில் எனது நினைவுகளும்) எல்லாம் கூடி 'சவாலே சமாளி' உதய தினத்தை களைகட்டச்செய்து விட்டன.
ஒளிப்பதிவு மேதைகள் பி.என்.சுந்தரமும், தம்புவும் படமாக்கிய திருச்சி விழா நிகழ்ச்சிகளை இப்போது மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது. இப்போது அதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. இதுபோன்ற அபூர்வமான ஆவண ஒளிப்பதிவுகளை தலைமை மன்றத்திலோ அல்லது சிவாஜி பிலிம்ஸிலோ பாதுகாத்து வைத்திருக்க வேண்டாமா?. விரைவில் அவை நம் கண்களுக்கு விருந்தாகப் பிரார்த்திப்போம்.
ரசிகப்பெருமக்களால் முடிந்தது அன்றைய நாட்களில் வெளியான, செய்தித்தாள், வார, மாத இதழ்களில் வெளியானவற்றைச் சேகரித்து வைப்பதுதான். அதனை அவர்கள் செவ்வனே செய்து வருகின்றனர். அதனால்தான் அவை இப்போது நமக்கு மட்டுமல்ல, இன்றைய புதிய தலைமுறையினருக்கும் கூட விருந்தாகப் பரிமளிக்கின்றன. நமது திரி, நடிகர்திலகத்தின் ஆவணக்க்காப்பகமாக உருவெடுத்து வருகிறது என்று சொன்ன எனது வாயில் நானே சிறிது சர்க்கரையை அள்ளிப்போட்டுக்கொண்டேன். பின்னே?. இப்போது இங்கே பதிக்கப்பட்டு வரும் ஆதாரங்கள் எத்தனை நடிகர்திலகத்தின் ரசிகர்களின் (என்னையும் சேர்த்து) கணிணியில் சேமிக்கப்பட்டிருக்கும் தெரியுமா?.
பம்மலார், ராகவேந்தர், முரளியார் போன்றோரின் திருத்தொண்டு வாழ்க.
பாலா சார்,
சிரமம் பாராமல் நீங்கள் அள்ளி அளித்திருக்கும் பாடல் தொகுப்புகள் மிக மிக அருமை. அதிகமதிகம் நன்றிகள்.
Guys,
Just looked at NT's rare photos at https://www.facebook.com/photo.php?f...type=1&theater
Cheers,
Sathish
மிக உண்மை முரளி சார்.
சிங்கையில் தமிழ் வலைப்பதிவுகள் மூலமாக ஏற்பட்ட ஒரு குழுமத்தில் இளைய தலைமுறையினரோடு கலந்துரையாடும் வாய்ப்புகள் நிறைய வாய்த்ததுண்டு ..அவர்களிடையே சிவாஜி என்ற பெயரை கேட்டதும் நினைவுக்கு வருபவனாக நான் அமைந்துவிட்டது எனக்கு பெருமை ..பொதுவாக அவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் நடிகர் திலகம் மிகச்சிறந்த நடிகர் என்பதை ஒத்துக்கொள்ளும் அதே நேரத்தில் நடிகர் திலகம் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்பதை அறிந்திருக்கவில்லை ..அதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு பிறகு வந்த தலைமுறைக்கு எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்கு பெற்ற மாபெரும் வெற்றியாளர் , சிவாஜி அரசியலில் தோல்வி கண்ட மிகச்சிறந்த கலைஞர் என்றே அறிந்திருக்கிறார்கள் .. எனவே எம்.ஜி.ஆர் என்பவர் மிகப்பெரிய மாஸ் ஹீரோ , சிவாஜி அந்தளவுக்கு ரசிகர் கூட்டம் கொண்டிருந்தவரல்ல என்றே ஒரு அனுமானம் இருக்கிறது . இதற்கு முழுக்காரணமும் எம்.ஜி.ஆரின் அரசியல் விஸ்வரூபம் தான் ..அதைத் தாண்டி , எம்.ஜி.ஆரும் .சிவாஜியும் ஒன்றாக கோலோச்சிய காலத்தில் வணிகரீதியிலும் , ரசிகர்கள் எண்ணிக்கையிலும் நடிகர்திலகம் யாருக்கும் குறைந்தவர் அல்ல என நாம் சொன்னாலும் அதை ஏற்க அவர்கள் மனம் மறுக்கிறது . இது பற்றி நண்பர் ஒருவரோடு என் தொடர்ச்சியான விவாதத்தின் இறுதியில் உங்களின் நடிகர் திலகம் சாதனைப்பட்டியலை படிக்க கொடுத்த பின்னர் தான் அவர் தன் கருத்தை மாற்றிக்கொண்டார் .
ஒரு காலத்தில் ஒன்றை ஒன்று ஒட்டி உரசி செல்லும் சாதனை நட்சத்திரங்களாக விளங்கிய இருவர் , காலப்போக்கில் அரசியல் ஓட்டத்தில் கிடைத்த ஓடங்களின் தன்மையைப் பொறுத்து ஒருவர் முக்கியத்துவம் அதிகமாக பெற்றுவிட்ட காரணத்தால் , ஏதோ ஒரு வகையில் ஒருவர் ஏற்படுத்திய அமைப்பு இன்றும் மாபெரும் சக்தியாக வலம் வரும் நிலையில் , பின்னர் வந்த தலைமுறை முந்தைய வரலாற்றை வேறு கண் கொண்டு பார்ப்பது தவிர்க்க முடியாது .. ஆனாலும் முடிந்த வரை நமக்கு தெரிந்தவர்களிடம் உண்மையை உரக்கச்சொல்வதை எப்போதும் தொடர்வோம் .
Cometh the hour ! Cometh the Man !
King Barrister is Back With a Bang !
In Shanthi Cinemaas [Chennai] from 15th of July.
Cometh the hour ! Cometh the King !