டியர் பம்மலார்,
என்னென்று சொல்ல,,, அதை எப்படிச் சொல்ல...கோடான கோடி நன்றிகள்...
வளர்பிறை திரைப்படத்தைப் பொருத்த வரை நான் மட்டுமல்ல, அத்தனை ரசிகர்களும் என் கருத்தில் உடன் படுவார்கள் என்பது திண்ணம்.
உதாரணத்திற்கு கூண்டு திறந்ததம்மா பாடலைக் கேளுங்கள்.
http://musictub.com/album.php?id=128...il_Movie_Songs
பாடல் வரிகள்.. கவியரசர் கண்ணதாசன்
வாய் பேசாத ஊனம் வாட்டும் போது அன்பு காட்டிய மனைவி சந்தர்ப்ப வசத்தால் பிரிந்து விடுகிறாள். தாய் காலமாகிறாள். தந்தை இவனை சேர்ப்பதில்லை. இப்படிப் பட்ட சூழலில் அந்த கதாபாத்திரத்தின் உள்ளத்தை அப்படியே வரிகளில் கொண்டு வந்து விட்டார் கவியரசர். அதுவும் படத்தின் கதையையே இந்த வரிகளில்Quote:
தொகையறா
கன்னத்தில் முத்தமிட்டு
கையணைத்துத் தாலாட்டி
கண்ணழகு பார்த்து கனிந்தாயே - பிள்ளை
இனம் பிரிந்த மான் போல
இங்கே கலங்கி நிற்க
தான் பிரிந்து சென்றாயே தாயே
பல்லவி
கூண்டு திறந்ததம்மா - தாய்ப்
பறவை பறந்ததம்மா
கூடிய துணையும் குஞ்சும் தனியே
வாடிக் கலங்குதம்மா
-- கூண்டு திறந்ததம்மா...
சரணம் 1
தாரம் பிரிந்து
தாயும் மறைந்து
வாயும் இழந்தால் வாழ்வேது..
வஞ்சகர் நடுவே
வாழ்ந்திடும் தந்தை
நெஞ்சினில் உனக்கு இடமேது
--- கூண்டு திறந்ததம்மா...
சரணம் 2
பால் போல் வெளுத்து
நூல் போல் இளைத்து
பத்தியம் இருந்து செத்தாளே
பாசம் கோபம்
ஆசைகள் இடையே
பாலம் போட்டவள் சென்றாளே
அள்ளி அணைத்தவள்
அன்புக் கைகளை
கொள்ளியில் வைத்திட வந்தாயே
உள்ளம் கனிந்து
உலவிடும் தாய்க்கு
ஒரு பிடி அரிசியைத் தந்தாயே
-- கூண்டு திறந்ததம்மா..
தாரம் பிரிந்து
தாயும் மறைந்து
வாயும் இழந்தால் வாழ்வேது..
வஞ்சகர் நடுவே
வாழ்ந்திடும் தந்தை
நெஞ்சினில் உனக்கு இடமேது
சொல்லி விட்டார். இந்த சூழலில் இந்தப் பாடல் பின்னணியில் அசரீரி இவரைப் பார்த்துப் பாடுவது போல் ஒலிக்கும். வாயசைப்பு இல்லை. அத்தனை உணர்வுகளையும் ஒரு சேர இந்த காட்சியில் கொண்டு வரவேண்டும். மனைவி பிரிவினால் ஏற்பட்ட துயரம், தாய் பிரிவினால் ஏற்பட்ட துக்கம், தந்தையின் பாசம் இல்லாத ஏக்கம் இப்படி பல விதமான உணர்வுகளை பிரதிபலிக்க எந்தக் கண்ணாடியால் முடியும் நடிகர் திலகம் என்ற கண்ணாடி மட்டும் தான். படம் பார்க்காவிட்டாலும் கூட அவருடைய இந்த தோற்றத்தையும் இந்த பாடலில் அவருடைய உணர்வு பூர்வமான நடிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை யூகித்து பாருங்கள்... அந்த யூகத்திலேயே நீங்கள் உணர்ச்சி வசப் பட்டு விடுவீர்கள். ஆனால் அவர் தான் யூகத்திற்கப்பாற்பட்டவராயிற்றே... ஏகத்துக்கும் நம்மை கட்டிப் போடுபவராயிற்றே...
அமைதியான முகத்திலேயே அத்தனை உணர்வுகளையும் வரவைத்து நம்மையும் அந்த சூழலில் கலந்து விட செய்வார்.
சும்மாவா சொன்னார்கள் நடிகர் திலகம் என்று..
நாம் என்னதான் எழுதினாலும் அந்தக் காட்சியை நாம் காணும் போது தான் நம்மால் அதை உணர முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சான்று.
பம்மலாருக்கு கோடான கோடி நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்