-
2nd August 2012, 07:40 PM
#351
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார்,
என்னென்று சொல்ல,,, அதை எப்படிச் சொல்ல...கோடான கோடி நன்றிகள்...
வளர்பிறை திரைப்படத்தைப் பொருத்த வரை நான் மட்டுமல்ல, அத்தனை ரசிகர்களும் என் கருத்தில் உடன் படுவார்கள் என்பது திண்ணம்.
உதாரணத்திற்கு கூண்டு திறந்ததம்மா பாடலைக் கேளுங்கள்.
http://musictub.com/album.php?id=128...il_Movie_Songs
பாடல் வரிகள்.. கவியரசர் கண்ணதாசன்
தொகையறா
கன்னத்தில் முத்தமிட்டு
கையணைத்துத் தாலாட்டி
கண்ணழகு பார்த்து கனிந்தாயே - பிள்ளை
இனம் பிரிந்த மான் போல
இங்கே கலங்கி நிற்க
தான் பிரிந்து சென்றாயே தாயே
பல்லவி
கூண்டு திறந்ததம்மா - தாய்ப்
பறவை பறந்ததம்மா
கூடிய துணையும் குஞ்சும் தனியே
வாடிக் கலங்குதம்மா
-- கூண்டு திறந்ததம்மா...
சரணம் 1
தாரம் பிரிந்து
தாயும் மறைந்து
வாயும் இழந்தால் வாழ்வேது..
வஞ்சகர் நடுவே
வாழ்ந்திடும் தந்தை
நெஞ்சினில் உனக்கு இடமேது
--- கூண்டு திறந்ததம்மா...
சரணம் 2
பால் போல் வெளுத்து
நூல் போல் இளைத்து
பத்தியம் இருந்து செத்தாளே
பாசம் கோபம்
ஆசைகள் இடையே
பாலம் போட்டவள் சென்றாளே
அள்ளி அணைத்தவள்
அன்புக் கைகளை
கொள்ளியில் வைத்திட வந்தாயே
உள்ளம் கனிந்து
உலவிடும் தாய்க்கு
ஒரு பிடி அரிசியைத் தந்தாயே
-- கூண்டு திறந்ததம்மா..
வாய் பேசாத ஊனம் வாட்டும் போது அன்பு காட்டிய மனைவி சந்தர்ப்ப வசத்தால் பிரிந்து விடுகிறாள். தாய் காலமாகிறாள். தந்தை இவனை சேர்ப்பதில்லை. இப்படிப் பட்ட சூழலில் அந்த கதாபாத்திரத்தின் உள்ளத்தை அப்படியே வரிகளில் கொண்டு வந்து விட்டார் கவியரசர். அதுவும் படத்தின் கதையையே இந்த வரிகளில்
தாரம் பிரிந்து
தாயும் மறைந்து
வாயும் இழந்தால் வாழ்வேது..
வஞ்சகர் நடுவே
வாழ்ந்திடும் தந்தை
நெஞ்சினில் உனக்கு இடமேது
சொல்லி விட்டார். இந்த சூழலில் இந்தப் பாடல் பின்னணியில் அசரீரி இவரைப் பார்த்துப் பாடுவது போல் ஒலிக்கும். வாயசைப்பு இல்லை. அத்தனை உணர்வுகளையும் ஒரு சேர இந்த காட்சியில் கொண்டு வரவேண்டும். மனைவி பிரிவினால் ஏற்பட்ட துயரம், தாய் பிரிவினால் ஏற்பட்ட துக்கம், தந்தையின் பாசம் இல்லாத ஏக்கம் இப்படி பல விதமான உணர்வுகளை பிரதிபலிக்க எந்தக் கண்ணாடியால் முடியும் நடிகர் திலகம் என்ற கண்ணாடி மட்டும் தான். படம் பார்க்காவிட்டாலும் கூட அவருடைய இந்த தோற்றத்தையும் இந்த பாடலில் அவருடைய உணர்வு பூர்வமான நடிப்பு எவ்வாறு இருக்கும் என்பதை யூகித்து பாருங்கள்... அந்த யூகத்திலேயே நீங்கள் உணர்ச்சி வசப் பட்டு விடுவீர்கள். ஆனால் அவர் தான் யூகத்திற்கப்பாற்பட்டவராயிற்றே... ஏகத்துக்கும் நம்மை கட்டிப் போடுபவராயிற்றே...
அமைதியான முகத்திலேயே அத்தனை உணர்வுகளையும் வரவைத்து நம்மையும் அந்த சூழலில் கலந்து விட செய்வார்.
சும்மாவா சொன்னார்கள் நடிகர் திலகம் என்று..
நாம் என்னதான் எழுதினாலும் அந்தக் காட்சியை நாம் காணும் போது தான் நம்மால் அதை உணர முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சான்று.
பம்மலாருக்கு கோடான கோடி நன்றிகள்.
அன்புடன்
ராகவேந்திரன்
Last edited by RAGHAVENDRA; 2nd August 2012 at 07:42 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd August 2012 07:40 PM
# ADS
Circuit advertisement
-
2nd August 2012, 07:55 PM
#352
Senior Member
Seasoned Hubber
டியர் கார்த்திக்,
தங்களுடைய மலரும் நினைவுகள் சூப்பர்... உண்மையிலேயே அந்தக் காலத்தில் பல படங்கள் நம் நினைவுகளை விட்டு மறைந்தாலும் அவற்றின் சுவடுகள் போல் அந்தப் போஸ்டர்கள் மறைவதில்லை. 1969ல் தெய்வ மகன் படத்தின் போஸ்டர் ஒன்று சென்னை ஒயிட்ஸ் சாலையில் ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பில் சத்யம் திரையரங்கிற்காக செல்லும் திசையில் இடது புறம் ஒரு மரம் இருக்கும் அதன் அருகே அந்த சர்ச்சின் சுவற்றில் ஒட்டப் பட்டிருந்தது. கிட்டத் தட்ட 1987 வரை அந்தப் போஸ்டர் அங்கிருந்தது. பல ஆண்டுகள் அங்கிருந்த போஸ்டர் எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருக்கும். பல ஆண்டுகள் கழித்து அங்கே அந்த மரமருகே ஒரு பெரியவர் நடைபாதையில் குடியிருந்தார். அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலை வைத்து எந்த அளவிற்கு நடிகர் திலகம் ரசிகர்களைக் கொண்டிருக்கிறார் என்பதை அறியலாம். தெய்வ மகன் அந்த போஸ்டரில் விஜய் கேரக்டர் அன்புள்ள நண்பரே தோற்றத்தில் இருக்கும். அது அந்த முதியவருக்கு மிகவும் பிடித்தமானதாம். வறுமையின் காரணமாக நடைபாதையிலேயே வாழ்க்கையைக் கழித்து வந்தாராம். அவ்வப்போது இடத்தை மாற்றுவாராம். அவர் ஒரு தீவிர சிவாஜி ரசிகராம். தெய்வ மகன் போஸ்டரைப் பார்த்ததிலிருந்து இடத்தை மாற்றாமல் அங்கேயே இருந்து வாழ முடிவெடுத்தாராம். காலையில் எழுந்தால் முதலில் அந்தப் போஸ்டரைத் தான் பார்ப்பாராம். அன்றிலிருந்து அங்கேயே இருந்து எந்தப் படத்துக்கு யார் போஸ்டர் ஒட்ட வந்தாலும் தெய்வ மகன் போஸ்டரை எடுக்கவோ கிழிக்கவோ அல்லது அதன் மேல் வேறு போஸ்டர் ஒட்டவோ விடமாட்டாராம். அந்த அளவிற்கு அதனைப் பாதுகாத்து பல ஆண்டுகள் அங்கே வாழ்ந்திருக்கிறார்.
ஒரு நாள் அந்தப் பக்கம் போன போது அந்தப் போஸ்டரைக் காணவில்லை. அந்த முதியவரையும் காணவில்லை. சற்றுத் தள்ளி சாலை ஓரத்தில் டீக்கடை வைத்திருந்த ஒருவரிடம் டீ சாப்பிட்டுக் கொண்டே [டீ சாப்பிட்டதே அந்த சாக்கில் அந்த முதியவரைப் பற்றி விசாரிக்கத் தான்] அவரிடம் முதியவரைப் பற்றிக் கேட்டேன். அப்படியே அந்தப் போஸ்டரையும் விசாரித்தேன். அவர் சொன்ன பதில் ..
சார் அந்தக் கிழவர் கொஞ்ச நாளைக்கு முன்னால் இறந்து விட்டார். இறக்கும் போது அந்தப் போஸ்டரை சேதமடையாமல் அப்படியே எடுத்து நடைபாதையின் மீது போட்டு அதன் மேல் படுத்தார். படுக்கும் போது சொன்னது, நான் போயிட்டா இந்தப் போஸ்டரை சேதப் படுத்திடுவாங்க..
டீயாலும் அந்த செய்தியாலும்
நெஞ்சம் கனத்து விட்டது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd August 2012, 07:58 PM
#353
Moderator
Platinum Hubber
வரவேற்கத் தக்க கருத்து தான். ஆனால் சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி யிருந்தால் பயன் கிட்டியிருக்க வாய்ப்புண்டு.
நேராகவே சொல்லலாமே சார்.
மீண்டும் பேசி கசப்பைக் கிளரவேண்டாம் என்று இருந்தேன். ஆனால் என்னவோ என் நெருக்கடியால் தான் திரி பிளந்தது போன்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. அதனால் குறைந்தபட்சம் ஒரு தன்னிலை விளக்கமாவது கொடுக்கவேண்டும் என்று நினைப்பதால் இந்த இடுகை.
தனி திரி வேண்டுகோளை நான் முன்வைத்தது உண்மைதான். மறுக்கவில்லை. அதை ஒரு யோசனையாக மட்டுமே முன்வைத்தேன்.
அதேபோல, அதற்கு வந்த எதிர்வினைகளைப் பார்த்து அந்த வேண்டுகோளை முற்றிலும் விலக்கிக்கொண்டேன் அல்லவா?
நீங்களே சொல்லுங்கள்.
அது உங்கள் திரி. எப்போதாவது வந்துபோகும் என்னைப் போன்றவர்கள் எங்கள் எதிர்பார்ப்புகளை உங்கள் எல்லார் மீது திணிக்கக்கூடாது என்றுகூட தெளிவாக சொல்லியிருந்தேன்.
இதுபோல தனி திரி தொடங்குவது உங்கள் விருப்பம் சார்ந்தது. இது எங்கள் கட்டாயத்தால் என்பதுபோல சொல்வது சரியல்ல.
என்னவோ, Archive பதிவுகளை யாருமே விரும்புவதில்லை என்று நான் சொன்னது போல, 'எத்தனை பேர் படிக்கிறார்கள் பார்த்தாயா, இப்போதாவது சிலருக்கு புரியும்' என்று ஒரு இடுகை. Punching a straw man!
'மேதாவித்தனம் இங்கு இருக்காது' என்று ஒரு இடுகை.
'எழுதுகிறேன் என்று ஜம்பமாய்ச் சொன்னவர்கள் எங்கே காணோம்?' என்று ஒரு இடுகை.
இதற்கெல்லாம் என்ன எதிர்வினை ஆற்றுவது?
இப்படிப்பட்ட சூழல் உருவாக, நான் ஆரம்ப காரணமாக இருந்ததற்காக வருந்துகிறேன்.அவ்வளவு தான்.
இதற்குமேல் எனக்கு சொல்வதற்கு வேறேதும் இல்லை.
திரி இணைப்பதோ, தனித்து இயங்குவதோ எல்லாம் இப்போதும் உங்கள் விருப்பம் சார்ந்தது மட்டுமே.
மீண்டும் சொல்கிறேன்: அது உங்கள் திரி.
Loosen up. Have fun.
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
2nd August 2012, 09:22 PM
#354
Senior Member
Seasoned Hubber
டியர் பிரபு சார்,
நான் முன்னமேயே சொன்னேன். திரி தனியாகப் பிரித்தாலும் அப்படியே தொடர்ந்தாலும் அதைப் பற்றி நான் மாற்றுக் கருத்து எதுவும் கொள்ள வில்லை என்று கூறியிருந்தேன். அதில் மாற்றமில்லை. அதைக் கூட நான் கூறினேன், நிர்வாகக் காரணமாக இருந்தால் சரி என்று. ஆனால் தாங்கள் தான் அதில் நிர்வாகக் காரணம் எதுவும் இல்லை, உள் நோக்கம் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள்.
தற்போதைய என் பதிவில் தாங்கள் சுட்டிக் காட்டிய வார்த்தைகள் பொதுவானவை தான், தங்களுக்கெனத் தனியாக அல்லவே. அப்படித் தங்களுக்கு மட்டும் நான் கூறவேண்டுமென்றால் தனி மடல் உள்ளதே. அதில் நம் முடைய உள்ளங்களைப் பரிமாறிக் கொள்ளலாமே. தங்களுடைய ஆலோசனைக்கு அவரவர் கருத்தை உடனடியாக நானும் பம்மலாரும் வாசுதேவனும் மற்றும் சில நண்பர்களும் உடனடியாக வெளிப்படுத்தினோம். இந்த வாதப் பிரதிவாதங்களெல்லாம் தனியே பிரிக்கப் பட்டு தற்போது அவையெல்லாம் முடக்கப் பட்டு விட்ட பின் வரும் கருத்துக்களுக்குத் தான் பதில் தர நேரிடுகிறது. அதைத் தான் அப்போதே சொல்லியிருக்கலாமே என்று சுட்டிக் காட்டினேன். இதில் தாங்கள் வருத்தப் பட எதுவும் இல்லை. இது பொதுவான கருத்து, இப்போது சொல்வதை அப்போதே சொல்லியிருக்கலாமே என்கிற ஒரு பொதுவான அபிப்ராயமே தவிர யாரையும் குறிப்பிடுவன அல்லவே.
தங்களுடைய எழுத்துக்களுக்கு அனைவரையும் போல் நானும் ஒரு ரசிகன் என்பது உறுதி. அதனால் அதிலும் என்னுடைய அபிப்ராய பேதம் எதுவும் இல்லை.
பொதுவாகவே ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப் படுவதும் அதனை வேண்டாம் என்று சொல்வதும் சகஜம். ஆனால் அந்தக் கருத்துப் பரிமாற்றங்களில் சில நேரங்களில் வெளிப்படும் குணாதிசயங்களே விளைவுகளுக்குக் காரணமாகின்றன என்பது தங்களுக்குத் தெரியாததல்லவே.
எனவே தாங்கள் மன வருத்தப் படுவதில் எந்தக் காரணமும் இல்லை, தங்கள் மேல் இங்கு யாருக்கும் கோபமும் இல்லை. அதனால் தாங்கள் என்றும் நமது நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் என்பதும் திண்ணம்.
அன்புடன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd August 2012, 09:35 PM
#355
Senior Member
Diamond Hubber
போஸ்ட்டர் என்றதும் நினைவுக்கு வருகிறது. 'திரிசூலம்' வெளியீட்டிற்கு ஒரு வாரத்துக்குமுன் கடலூரில் பாடலி தியேட்டரில் படம் ரிலீஸ் என்று கன்பார்ம் செய்து கொண்டோம். நேராக பாடலி சென்று நாங்கள் ரசிகர் மன்றங்களை சேர்ந்தவர்கள் என்று கூறி தியேட்டரில் பணி புரியும் ஊழியர்களிடம் கொஞ்சம் சில்லறை அடித்து போஸ்டர்கள் வாங்கினோம். (படம் வெளிவருமுன் தியேட்டரின் உள்ளே போஸ்ட்டர் போர்டில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன). அதில் இரண்டு முக்கியமான போஸ்டர்களை நான் லாவிக்கொண்டேன். இரண்டும் ஆயில் பிரிண்ட் போஸ்டர்கள். ஒன்றில் தலைவர் (தந்தை ராஜசேகரன்) ஆள் வைத்து தன்னை சாட்டையால் அடித்துக் கொள்ளும் போஸ்டர். மற்றொன்று போஸ்டரின் மேல் பகுதியில் நேர்ப் போஸில் தந்தை நடிகர் திலகம் தாடியுடன், கீழே வலது இடதாக சங்கர் மற்றும் குரு இருவரும் (தலைப்பகுதிகள் மட்டும்) சைட் போஸ்களில் உள்ள போஸ்டர்.
பத்திரமாக வீட்டிற்குக் கொண்டு வந்து எனது அறையில் அந்த இரண்டு போஸ்டர்களையும் மைதா மாவு பசை கொண்டு ஒட்டி வைத்து விட்டேன். நான் எனது தாத்தா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்ததால் தாத்தாவிற்கு வீட்டின் அறையினில் போஸ்ட்டர் ஒட்டியிருந்தது பிடிக்கவில்லை. ஓயாது திட்டி கொண்டே இருப்பார். ஆனால் நான் போஸ்டர்களை ஏதாவது செய்தால் நடப்பதே வேறு என்று அவரை பயமுறுத்திக் கொண்டே இருப்பேன். "இவன் அவன் ஆளுக்காக எது வேணும்னாலும் செய்வான்" என்று என் தாத்தா ஒன்றுமே பேசுவதில்லை. காலையில் எழுந்திரும் போது கண்களைத் திறக்காமல் அந்த மூன்று நடிகர் திலகங்களையும் கொண்ட அந்த போஸ்டரைப் பார்த்தபடிதான் கண் விழிப்பேன். பிறகுதான் மற்ற வேலைகள் எல்லாம். பிறகு கால வெள்ளத்தில் அவையெல்லாம் அழிந்து விட்டன. ராகவேந்திரன் சார் சொன்ன அந்த வயதானவர் இறக்கும் தருவாயில் கூட கண்ணும் கருத்துமாக அவருக்கு விருப்பமான தலைவர் போஸ்டரைப் பாதுகாத்தாரே... ஆனால் நாம் எல்லா வசதிகள் இருந்தும் ஒழுங்காகப் பாதுகாக்க முடிய வில்லையே என்ற குற்ற உணர்வில் வெட்கித் தலை குனிகிறேன்.
Last edited by vasudevan31355; 2nd August 2012 at 09:45 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd August 2012, 09:52 PM
#356
Senior Member
Veteran Hubber
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் பாராட்டுப் பதிவுகள் மூலம் என்னைப் பாராட்டு மழையில் நனையச் செய்தமைக்கு தூய்மையான நன்றிகள்..! "வளர்பிறை" வீடியோ கூடிய விரைவில், தங்கள் பெருமுயற்சிக்கு ஏற்றாற்போல், தங்கள் அன்புக்கரங்களை வந்து அலங்கரிக்கும், வாழ்த்துக்கள்..!
தாங்கள் கூறியது சரி, "கண்கள்(1953)", ஐம்பதுகளில் வெளியான பாசமலர்.
"பட்டாக்கத்தி பைரவன்(1979)" பற்றி யாராவது பாதகமாகக் கூறினார்களென்றால், அதற்கு பதிலளிப்பதற்காக தங்கள் பதிவையே பட்டாக்கத்தி போல் கூர்மையாக்கி விடுகின்றீரே..! ஒரே ரகளைதான் போங்கள்..!
அன்புடன்,
பம்மலார்.
-
2nd August 2012, 10:01 PM
#357
Senior Member
Diamond Hubber
-
2nd August 2012, 10:22 PM
#358
Senior Member
Diamond Hubber

Originally Posted by
P_R
இதற்கெல்லாம் என்ன எதிர்வினை ஆற்றுவது?
எதிர்வினை ஆற்றாமல் கடந்து செல்வது தான் நல்லது

Originally Posted by
P_R
இப்படிப்பட்ட சூழல் உருவாக, நான் ஆரம்ப காரணமாக இருந்ததற்காக வருந்துகிறேன்.
வருந்த கூட தேவையில்லை .பல தெளிவுபடுத்தலுக்குப் பின்னரும் நீங்கள் இப்படித் தான் நினைத்தீர்கள் என (நீங்கள் எத்தனை முறை மறுத்தாலும்) உங்களுக்கே சொல்லப்பட்டு ஒரு சூழல் வம்படியாக உருவாக்கப்பட்டதென்றால் அதற்கு நீங்கள் எப்படி பொறுப்பாக முடியும் ? இன்னும் சொல்லப்போனால் , சொல்லப்பட்ட கருத்துகள் திரிக்கப்பட்டு ஏதோ நீங்கள் வற்புறுத்தியது போல ஒரு எதிர்மறை பிம்பம் உங்கள் மீது சாத்தப்பட்டதற்கு மட்டுமே நீங்கள் வருந்த வேண்டும். அதையும் கடந்து போவது ஒன்றே வழி.
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
2nd August 2012, 10:27 PM
#359
Senior Member
Veteran Hubber

Originally Posted by
parthasarathy
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. வாசு, திரு. கார்த்திக் (உங்களுடைய கிரிக்கெட் வர்ணனை அற்புதம்!) அவர்களே,
உங்கள் எல்லோரையும், நடிகர் திலகத்தின் புதிய வேறொரு திரியில் சந்திப்பதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி - மறு விதத்தில், சிறிது வருத்தமாகத் தான் இருக்கிறது.
என்னைப் பொறுத்த வரை, அனைத்து வித விஷயங்களும் - பட ஆவணங்கள், வீடியோ பதிவுகள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள் - போன்றவை அனைத்தும் ஒரே திரியில் இருந்தால் தான் அது அறுசுவை உண்டி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி

வருகைக்கு நன்றி, சாரதி சார்..!
-
3rd August 2012, 12:31 AM
#360
Senior Member
Veteran Hubber
"சித்ரா பௌர்ணமி" கறுப்பு-வெள்ளை மற்றும் வண்ணப்படங்களை உள்ளடக்கிய 'பொம்மை' இதழ் ஆவணப்பதிவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ், esvee சார்..!
மிக்க நன்றி, சந்திரசேகரன் சார்..! தாங்கள் Facebookகிலிருந்து இங்கு இடுகை செய்துள்ள நமது நடிகர் திலகத்தின் நிழற்படம் மிகமிக அரிய ஒன்று..!
Bookmarks