http://i1170.photobucket.com/albums/...psazpelf6h.jpg
Printable View
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் உடல் நலம் பெற பிரார்த்திப்போம்.
"நன்றாக போய்க்கொண்டிருக்கும் திரியில் வேண்டாம் வம்பு" என்று இருக்க முடியவில்லை. என் மீது சொல்லப்பட்டிருக்கும் அவதூறுக்கு நான் பதில் சொல்லாவிடின், அவதூறு உண்மையாக்கப்படும், என்னுடைய நண்பர்களும் இந்த அவதூறு உண்மையோ என்று எண்ணக்கூடும். முந்தைய கல்நாயக்காக நான் இருந்திருந்தால் "ஆமாம் நானும் ஆதிராமும் ஒருவர்தான்" என்று சொல்லி இருந்திருப்பேன். இப்போதைக்கு நிறைய பதிவுகளை இங்கு நான் இட்ட பிறகும் அவ்வாறு தொடர விரும்ப வில்லை. எனவே இது என்னை தங்கள் நண்பனாக நினைக்கும் நண்பர்களுக்கு மட்டுமே.
ஆதிராமிற்கும், எனது ஊரைச்சேர்ந்த நண்பர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும் பிரச்சினை என்றால் அவர்களாகவே தீர்த்துக் கொள்வார்கள். நடந்திருக்கிறது. நண்பர் ஆதிராமும் கண்டிக்கப்பட்டார். முடிந்தது பிரச்சினை. இப்போது ஆதிராம் தொடர்கிறார். வாசு அவர்களை பாராட்டுகிறார். தெரிந்ததுதானே. இதில் இருந்து நான் ஆதிராம் அல்ல என்று எப்படி இவர்கள் தெரிந்து கொள்வார்கள்? யாரேனும் கேட்கலாம்.
ஆதிராம் சில அல்லது பல பெயர்களில் எழுதி இருக்கலாம். அதை அவர் ஒப்புக்கொண்டும் இருக்கிறார். அதற்காக அதில் நானும் ஒருவன் என்பதை எப்போதாவது யாராவது எந்த ஆதாரத்தொடாவது சொல்லி இருக்கிறார்களா என்றால் இல்லை. அதுமட்டுமில்லை. எங்கள் இருவரின் எழுத்துக்களை யாராவது தொடர்ந்து படித்து வந்தால் இருவரின் நடைமுறைகளை (ஸ்டைல்) கட்டாயமாக கவனிக்க முடியும். யாராவது அதை அலசி ஆராய்ந்து செய்து இருவரும் ஒருவர்தான் என்று விஞ்ஞான முறையில் நிருபித்திருக்கிறார்களா? குறை சொல்லும் அண்ணன் கொண்டுவரட்டும் அந்த நிருபணங்களை. யாரோ, எங்கோ பிதற்றுவதை இங்கே எடுத்து வந்து வாந்தி எடுப்பவரை என்னவென்று சொல்வது?
இரண்டாவதாக 'ஆதிராமும், நானும் ஒருவர்தான் என்று பலர் சொல்கிறார்கள், பலர் சொல்கிறார்கள்' என்று சொல்லி வம்பிழுக்கும் அண்ணன், நடிகர் திலகம் திரியில் திரு முரளி ஸ்ரீநிவாசன் அவர்கள் என்னைப் பற்றி சொல்லி இருந்தார் - எனது கணிப்பொறியில் இருந்து கல்நாயக் என்ற பெயரில் மட்டுமே பதிவுகள் இடப் படுகிறது என்று. அதை கவனிக்க கண்கள் கெட்டுப் போய்விட்டனவா அந்த பிரகஸ்பதிக்கு?
மூன்றாவதாக இந்த திரியில் பலரும் உற்றுக் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும் - நண்பர் ரவி அவர்களின் கருவின் கரு தொடரில் உருக்கமாக தாயைப் பற்றி அவர் எழுத ஆரம்பித்த போது, ஆதிராம் சொல்லியிருந்தார் - தனது தாயை நினைத்து, அவர்களை உடன் இருந்து கவனித்து கொள்வதற்காக தனது வேலையை விட்டுவிட்டு தாயகம் கூட திரும்பி வந்துவிடலாம் என்று நினைப்பதாக என்று. பின்பு நான் எழுதி இருந்தேன் - எனது தாய் மறைந்து எட்டு வருடங்களுக்கு மேலாகி விட்டன, எனது நினைவில் என்றும், எப்போதும் இருக்கிறார்கள் என்று. இதை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் - உண்மை எது, பொய்மை எது என்பது. இதற்கு மேலும் நானும் ஆதிராமும் ஒருவர் என்று நினைக்கும் வரதக் குமார்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நானே புதிய திரியில் சந்திக்கிறேன்.
எங்களுக்காக எழுதவந்து பல்பொடி விளம்பரத்திற்கு உதவிய எங்கள் நடிகர் திலகம் குழாம் நண்பர் கோபால் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். நான் கடலூர்காரன் என்பதை நன்றாக அறிந்தவர் வாசு. என்னை முதன் முதலில் எழுத வைத்து அழகு பார்த்தவர் அவர்தான். அவரும் உண்மைகளை நன்றாக அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன். நான் எழுதாத சமயத்தில் எனக்கு அழைப்பு விடுக்கின்ற நண்பர்கள் ரவி மற்றும் கலைவேந்தன் அவர்களுக்கும் எனது நன்றிகள். எனக்கு கவிதை எழுத கற்றுக் கொடுத்து, இங்கே நிறைய எழுத உற்சாகம் கொடுக்கும் சி.க. வை என்னால் மறக்க முடியாது. எனக்குத் தெரியாத பல விவரங்களை சொல்லி என்னைத் தேற்றிக் கொண்டிருக்கும் நண்பர்கள் ராஜேஷ் ஜி அவர்களுக்கும், திரியில் வந்து நல்ல பல விவரங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா அவர்களுக்கும், ஜுகல் பந்தி மூலம் கலக்கிக் கொண்டிருக்கும் சீனியர் ராஜ்ராஜ் அவர்களையும் நான் நினைவில் கொள்ளவேண்டி உள்ளது நன்றி சொல்வதற்கு. நடிகர் திலகம் புகழ் பரப்புவதே தன் பணி எனக்கொண்டிருக்கும் எங்கள் சீனியர் நண்பர் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல திரு. வினோத் அவர்களையும், மற்றும் யுகேஷ் பாபு அவர்களும்(எங்களுக்குள் முன்பு மோதல் இருந்ததால் - நாங்கள் அரிதாகவே ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வோம்.) நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒருவர் சொன்னதால் மட்டுமே இருவர் ஒருவராக முடியாத நண்பர் ஆதிராமுக்கும் எனது நன்றிகள். கல்யாணப் பரிசு தங்கவேலு எழுத்தாளர் பைரவன் போல வேடமிட்டது நினைவிற்கு வருகிறது, இவர்கள் என்னை உங்களையாக வேடமிடுவது.
இப்போது நான் அந்த மோதல் முறைகளை கைவிட்டதால் மட்டுமே இப்படி ஒரு பதிவு. இல்லை எப்போதும் போல மோதல் பதிவுகள் வேண்டுமென்றால் கொடுக்க நான் தயார். நீங்கள் தடை செய்யாமல் இருக்க வேண்டுமே. இது போதவில்லை என்றால், அண்ணன் வரதக் குமார் அவர்களே, உங்கள் பதிவை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து எனது பதில் பதிவை கொடுக்கிறேன்.
நீண்ட பதிவாகி விட்டது. மன்னிக்கவும். அடுத்த முறை இவ்வளவு நேரம் கிடைத்தால், மற்றவர்களின் பிரத்யேக பதிவுகளை படித்து எனது கருத்துக்களை பகிர்வதுடன் எனது பூவின் பாடலுடன் வருகிறேன். அதுவரை வணக்கம்.
ரவி
ஆஹா திரையில் பக்தியே பேசுவதாக என்ன அருமையாக ஒரு கேள்வி கேட்டுள்ளீர்
சில காரணங்களால் வர இயலவில்லை. திரையில் பக்தி எங்கும் போகவில்லை. தொடரும்.
இனிய நண்பர் திரு கல் நாயக்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் விரிவான பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி .நம் இருவருக்கும் என்றுமே கருத்து மோதல் வந்ததில்லையே . திரு குமார் எழுப்பிய கேள்விகளுக்கு உங்கள் பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது . சென்னயில் இருக்கும் நீங்கள் ஒரு முறைசென்னயில் வசிக்கும் திரு குமாரை நேரில் சந்தித்து விட்டால் எல்லோருடைய குழப்பங்களும் தீர்ந்து விடும் .செய்வீர்களா கல்நாயக் ?
எஸ்வி,
எங்கள் திரியில் எல்லோருமே கௌரவமான நபர்கள். அவர்கள் தங்கள் இருப்பை நிரூபிக்கும் அவசியம் வேண்டாதவர்கள். ஒருவர் என்ன பொய் சொன்னாலும் தாய் இல்லை என்று பொய் சொல்ல மாட்டார்கள். இனியாவது ,எங்கள் திரி சார்ந்தவர்களை அனாவசியமாக காய படுத்தாதீர்கள்.
அப்படி நிரூபணம் அவசியமானால், நான் ஒரு இடத்தில் ரிஜிஸ்தர் வைக்கிறேன். போட்டோ ஐடீ காண்பித்து ,உங்கள் திரியை சார்ந்த எல்லோரும் கையெழுத்து போட்டு விட்டு போன பிறகு(கலைவேந்தன்,ராஜா,மசானம், உட்பட) ,ஆதிராம், கல்நாயக் போன்றோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்ற ஏற்பாடு செய்கிறேன்.
நன்றி ஆதிராம் சார்.
உண்மைதான். 'மாணிக்கத் தேரில்' பாடல் படப்பிடிப்பு முடிந்ததும் அலங்கார ஒளிவிளக்குகள் பொதுமக்களின் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த மேலதிக தகவலை இங்கு நினைவுபடுத்தியதற்கு நன்றி!
இதற்குத்தான் நீங்கள் வேண்டுமென்பது. அருமையான சுவையான தகவல்களை தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
'என்னதான் முடிவு? படித்து ரசித்ததற்கும் என் நன்றிகள்.
'பௌர்ணமி நிலவு' விரைவில் ஒளி வீசும்.
வேலைப்பளுவால் தாமதமான நன்றி சொல்ல வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.
ராகவேந்திரன் சார்!
பதினாறு அடி பாய்கிறீர்கள். மிக அபூர்வமான 'அம்மா அப்பா' படத்திலிருந்து 'மாப்பிள்ளை நீயல்லவோ' என்ற சூப்பர் பாடல் அளித்து திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். அடேயப்பா! எத்தனை நாட்கள் ஆயிற்று இந்தப் பாடலைக் கேட்டு? நிஜமாகவே அனுபவித்துக் கேட்டும், பார்த்தும் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல வார்த்தை இல்லை வேந்தரே!
என் ராட்சசியின் குரல் அல்லவா!
அதே போல அபூர்வ ஜோடியாய் ஜெய், விதுபாலா பாடும் ராசி நல்ல ராசி படப் பாடலுக்கும் நன்றி! இதுவும் மறைந்து போன ஒரு பாடலே!
'மலைச்சாரலில் ஒரு பூங்கொடி'பற்றி சொல்லவும் வேண்டுமோ!
கருவின் கரு - 114
பாகம் 2 - தந்தை
உண்மை சம்பவம் 16
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன )
என் நண்பன் சீனு - ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான் - அவனுடைய புத்திசாளித்தனதிர்க்கும் , செய்யும் உழைப்பிற்கும் தனியார் துறையில் வேலை செய்திருந்தால் இன்று அவன் வாழும் நிலைமை பல மடங்கு உயர்ந்திருக்கும் ........என்னவோ அவன் தன் மனதை மாற்றிக்கொள்ளவே இல்லை . அவன் என்னுடன் பேசும்போதெல்லாம் அவன் திறமையை எண்ணி வியர்ந்திருக்கிறேன் - அவன் ஆசைகள் அளவானவை - எதற்குமே அவனிடம் ஒரு எல்லை இருந்தது - அவனுக்கு இரண்டு மகன்கள் - முதல்வன் பள்ளியை முடித்துவிட்டு இன்ஜினியரிங் காலேஜ் செல்லவேண்டும் - இரண்டாவது இப்பொழுதுதான் 10வது ...... அவன் மனைவியும் அவனைப்போல - தன் குழந்தைகள் தான் அவர்கள் உலகம் - விருந்தோம்பலில் அவர்களுக்கு எந்த விதத்திலும் நான் இணயாக மாட்டேன் ..
அன்று வெள்ளிக்கிழமை - சீனுவின் வீட்டிருக்கு சென்றிருந்தேன் - அவன் மனைவி மட்டும் தான் இருந்தாள் .. " வாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வந்துவிடுவார் - நீங்கள் வந்தால் இருக்கச்சொன்னார் !"
" ஆமா சீனு தனக்கு வெர்டிகோ problem என்று சொன்னானே ! இப்ப எப்படி இருக்கு ? "
" எங்க கேட்கிறார் - நேற்று பையனின் interview க்கு அவன் தூங்கின பிறகு கூட இவர் முழித்திருந்து படித்துக்கொண்டு இருக்கிறார் - laptop தான் அவருக்கு முதல் மனைவி "
சீனு வந்துவிட்டான் " ஏய் நீ எப்படா வந்த ? " - மிகவும் தளர்ந்து இருந்தான் - முகத்தில் அழிக்கமுடியாத ஒரு சோகம் . கண்கள் சரியான தூக்கத்தைப்பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கும் "
"சீனு ! நான் உன் உயிர் நண்பன் - என்ன problem உனக்கு - இரண்டு நாளா ஆபீஸ்க்கு கூட போகல ---- "
" அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை --- everything is fine ........ யாருக்கு என்று புரியாமல் குழம்பினேன் ....
சீனுவாக சொல்லாமல் , அவனிடம் இருந்து ஒன்றையும் கறக்க முடியாது .......
சீனுவின் மகன் மகிழ்ச்சி கலந்தும் கலக்காமலும் ஓடி வந்தான் " அங்கிள் எனக்கு சென்னை SRM இல் seat கிடைத்துவிட்டது - அப்பாவிற்கு உடம்பு முடியவில்லை - ஆஸ்பத்திரிக்கு கூடிக்கொண்டு போகிறோம் -----
நானும் கண்ணு முண்ணு தெரியாமல் சீனுவைப்பார்க்க ஓடினேன் --- பல மருத்துவர்கள் புடை சூழ நடுவில் என் சீனு படுத்திருக்கிறான் --- சீனு உனக்கு என்ன ?? உதடுகள் மனதுடன் சேர்ந்து புலம்பின ..
சில நாட்கள் ஓடின -- சீனுவை அவன் வார்டில் பார்க்கப்போயிருந்தேன் --- " என் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டான் -- " ரகு ! நான் என் மகனைப்பற்றி வெறும் கனவுகள் தான் கண்டேன் - நீ அந்த கனவுகளில் வரவில்லை - ஆனால் நீதான் என் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய் - இரண்டு இலக்ஷம் யார் தருவார்கள் இந்த காலத்தில் ??? "
"சீனு -- எனக்கு பிள்ளையா குட்டியா - நான் ஒரு தனி மரம் -- இந்த உதவி கூட அதுவும் உனக்கு நான் செய்யமாட்டேனா ?? இது நமக்குள் இருக்கட்டும் - உன் மகன் நன்றாக படித்து பெரிய ஆளாக வரவேண்டும் - அதுதான் என் விருப்பமும் .... பிள்ளைகளுக்காக தன்னையே மெழுகுவர்த்தியாக பண்ணிக்கொண்டவன் சீனு - அவனுக்கு ஒரு சிறிய முறையில் உதவி செய்யக்கூடிய அந்த பாக்கியத்தை கொடுத்த இறைவனை நான் என்றுமே மறப்பதில்லை ....
இந்த பாடல் திரு ராஜ் ராஜ் அவர்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் பிடிக்கும் பாடல் என்று நினைக்கிறேன்
https://youtu.be/VsJ-TDXJgIQ?list=PL4091AF071027ECDB
தாய் தந்தை தவறு செய்தால் தங்கமே நீ மாற்றி விடு...
இப்படி பெற்றோரே பிள்ளைய அறிவுறுத்தி நல்வழிப் படுத்தும் அற்புதமான பாடல்..
பிள்ளையின் கடன் என்ன.. பெற்றோரின் கடன் என்ன...
இதோ தந்தை தாய் இருவருமே இணைந்து பிள்ளைக்கு அறிவுறுத்தும் அபூர்வமான பாடல்..
வள்ளி தெய்வானை படத்தில் மலர்களின் ராஜா பாடலை அளித்த அதே டீமின் இன்னோர் அருமையான பாடல்..
சமர்ப்பணம் படத்திலிருந்து தனசேகரன் மல்லிகா பாட என்.எஸ்.தியாகராஜன் இசையில்...
தந்தைக்கு ஒரு பிறவி, தாயாருக்கோ மறுபிறவி,
ரவி, மேலே நீங்கள் சொன்ன சீனு கதையைப் படித்தவுடன் மனதில் தோன்றிய பாட்டு இது.
http://www.inbaminge.com/t/s/Samarppanam/
பாடலின் வரி ஒவ்வொன்றும் சிந்தனையைத் தூண்டும் அர்த்தமுள்ள வரிகள்.
விஜயகுமார் நடிகர் திலகத்தைப் போலவே ஒப்பனையும் செய்து கொண்டு அதே பாணியைக் கடைப்பிடித்து நடித்த படம்.
1974ல் வெளியான போது பார்த்தது. அதற்குப் பிறகு இதுவரை சந்தர்ப்பம் கிட்டவில்லை.
கருவின் கரு - 115
பாகம் 2 - தந்தை
தாயை நவரத்தினங்களால் அலங்கரித்தோம் - தந்தையை எந்த நகையால் அலங்கரிப்பது - மற்றவர்களை அலங்கரிக்கும் அவனை ஒரு சின்ன புகழ்மாலைக்குள் அடக்கமுடியுமா - முடியும் மேற்கில் சூரியன் உதிக்கும் என்றால் -- ஒரு சிறிய முயற்சி - புதிய கண்ணோட்டத்தில் .
அவனுடைய பாசத்தை கூறு போடவில்லை - இரண்டு /மூன்று பாகங்களில் அலசலாம் என்று ஒரு சின்ன ஆசை .
1. தந்தையும் மகளும்
2. தந்தையும் மகனும் - பல பரிமாணங்கள்
முதலில் தந்தையும் மகளும் :
இந்த பந்தத்தை விளக்க தனி வேதம் வேண்டும் - ஒரு மனிதன் ரிலையன்ஸ் இன் " complete man " ஆவது தனக்கு மகள் பிறந்தபோது தான் - இது மிகை அல்ல - இதனால் மகன்கள் மட்டுமே இருப்பவர்கள் தயவு செய்து கோபிக்க வேண்டாம் ( எனக்கும் ஒரு மகன் உண்டு )- கடைசி வரை பாசத்தின் அளவுகோல் அப்படியே இருப்பது மகளிடம் மட்டும் தான் - பல உண்மை சம்பவங்களை இதற்க்கு சார்பாக என்னால் கூற முடியும் - அதானால் தான் சொல்கிறேன் - இந்த பந்தத்தை விளக்க முடியாது - அனுபவிக்க வேண்டும் . மீண்டும் இந்த பதிவை தொடருவோம் சில பாடல்களை ரசித்தபின் ---- ரசிக்க வைப்பவர் - ?? வேறு யார் - எதற்குமே பொருத்தமான நபர் அவர் ஒருவர் தானே !
கருவின் கரு - 116
பாகம் 2 - தந்தை
மகள் தன்னுடன் இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்க மாட்டாளா என்று நெஞ்சார ஏங்குபவன் -- அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தபின் அவனை விட அதிகமாக சந்தோஷம் அடைபவர்கள் யாருமே இருக்க முடியாது .....
https://youtu.be/YKo4y7B1iWI
ரவி சார்!
தந்தை கருவின் கரு தொடரில் அம்சமாக நடிகர் திலகத்தின் 'இரு மலர்கள்' படப் பாடலான 'மகராஜா' பாடலைப் போட்டு தூக்கத்தைக் கெடுத்ததற்கு உங்களுக்கு என்ன தண்டனை அளிப்பது?
http://i.ytimg.com/vi/RpgUkozdBpI/hqdefault.jpg
எனக்கும், முரளி சாருக்கும் உயிரோடு கலந்த பாட்டு. நிச்சயம் ரசிக வேந்தர் சண்டைக்கு வருவார். அவருக்கும் இது உயிர்தான். அப்புறம் கோ வருவார். இப்படிப் போய்க் கொண்டேதான் இருக்கும்.
எவ்வளவு அழகு நடிகர் திலகம்! மன்மதனுக்கெல்லாம் மன்மதன் அவர்.
'ஓடிப் பிடித்து விளையாட ஒரு தம்பிப் பாப்பா' வை
மகள் ரோஜாரமணி இவரிடம் கேட்டு கோரிக்கை வைக்க,
வாயைப் பிளந்தவாறே 'டக்'கென்று மனைவி பக்கம் திரும்பி 'அதான் சொல்றாளே...அப்புறம் என்ன? ரெடியாகிறது'....என்று ராணியம்மாவை மனது வைக்க கைஜாடை காட்டி அழைத்து,
'ஆகட்டும் தாயே! அது போல் நீங்கள் நினைத்தை முடிப்பேன் மனம் போல'
என்று மகளின் கட்டளைக்கு மகிழ்ச்சியுடன் அடிபணிந்து,
அப்படியே மனைவியை அணைத்து, ஓரக்கண்களால் 'தன்னம்பிக்கை'யை கண்களில் காட்டி, பெருமிதம் பொங்க, ஆண்மை நிறைந்த சிங்கமாய் கட்டிலுக்கு உள்ளுக்குள் ரெடியாவதை, அடுத்த தொட்டிலுக்கு மனைவியை ரெடியாகச் சொல்வதை மறைமுகமாக இவர் காட்டும் தோரணை இருக்கிறதே! ஒரு சில வினாடிகளே! அந்தக் கண்கள்தான் எப்படியெல்லாம் விரிந்து சுருங்கி ஜாலங்கள் புரிகின்றன! அந்த புருவங்கள்தான் என்ன மாதிரி ஏறி இறங்குகின்றன!
ரவி! அப்படியே உங்களை.... ஆ....நற... நற.
கருவின் கரு - 117
பாகம் 2 - தந்தை
மகளை தாயாக நினைப்பவன் தந்தை - இப்படிப்பட்ட உயர்ந்த மதிப்பு எந்த நவரத்தின கற்களுக்கும் கிடையாது ------
https://youtu.be/jkjpKFIij38
கருவின் கரு - 118
பாகம் 2 - தந்தை
மகள் மட்டுமே அதிகமாக உரிமை எடுத்துக்கொள்ளுவது தந்தையிடம் மட்டும் தான் - உயிரின் உயிராய் , கருவின் கருவாய் இருப்பவள் அவள் மட்டும் தானே !
https://youtu.be/yXnbMxFpT7A
கருவின் கரு - 119
பாகம் 2 - தந்தை
கண்களில் கண்ணீரைத்தேக்கி , நெஞ்சில் பாசத்தைத் தேக்கி , வார்த்தைகளில் வாழ்த்துக்களைத் தேக்கி , வசதிகளில் கடன்களைத்தேக்கி , உடம்பில் வியாதிகளைத்தேக்கி , மெழுகுவர்த்தியில் ஒளியைத்தேக்கி வாழும் ஒரு அப்பாவியின் பெயர் " அப்பா " !!!
https://youtu.be/026qHaAnsFc
மீள முடியவில்லை. 'மன்னிக்க வேண்டுகிறேன்'. அருமையான பாடல்கள் நிறைந்த படம். எஸ்கேப்.:)
http://padamhosting.me/out.php/i1237...h34m54s136.pnghttp://padamhosting.me/out.php/i1237...h37m34s195.pnghttp://padamhosting.me/out.php/i1237...4h35m34s24.png
http://padamhosting.me/out.php/i1237...h34m33s178.pnghttp://padamhosting.me/out.php/i1237...h33m20s214.pnghttp://padamhosting.me/out.php/i1237...h35m22s157.png
http://padamhosting.me/out.php/i1237...h34m12s231.pnghttp://padamhosting.me/out.php/i1237...h31m53s120.pnghttp://padamhosting.me/out.php/i1237...h33m37s136.png
ஆதிராம் சார்!
தங்கள் தந்தையார் பற்றி தாங்கள் மனம் நெகிழ இங்கே அளித்திருந்த பதிவு நான் உட்பட எல்லோரயும் பாதித்து விட்டது என்று இங்கு வந்த பதில் பதிவுகளிலிருந்தே உணரமுடிகிறது. கண்ணீர் வரச் செய்யும் பதிவு. தங்கள் தாயார் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வாருங்கள் கடலூர் நண்பர் கல்நாயக் அவர்களே! தங்கள் பூப்பதிவுகளை தொடர்ந்து தருக. இனி இடைவெளி விட்டால் உரிமையுடன் கோபித்துக் கொள்வேன். சரியா?
ஜி! எங்கே போனீர்கள்? சொல்லிவிட்டுப் போகக் கூடாதா? எங்கே எங்கே நிறையக் கேள்விகள் போங்கள்.. வந்து பாலை வார்த்தீர்களே!:)
ராகவேந்திரன் சார்,
கவலையே வேண்டாம். எங்கள் ரசிக வேந்தர் கவலைப்படலாமா?
இதோ! உங்கள் நெடுநாள் ஆசையைக் கொஞ்சம் தணித்துக் கொள்ளுங்கள். இப்போது பாருங்கள். வித்தியாசமான மல்லிகா,(கொஞ்சம் கிறீச்) தனசேகரன் குரல்களில் 'தந்தைக்கு ஒரு பிறவி...தாயாருக்கோ மறுபிறவி,. இனிமையான வித்தியாசம்.
கையகலக் கண்ணாடி அணிந்து வித்தியாச தோற்றத்தில் ஒரு அருமையான தந்தையாய் மகனுக்கு நற்கருத்துக்கள் கூறும் விஜயகுமார்.
உடன் பாந்தமாய் விதுபாலா. குழந்தையாய் பேபி இந்திரா.
அருமையான பாடல். நினைவூட்டலுக்கு நன்றி ராகவேந்திரன் சார்.
https://youtu.be/bf6rubjPbMk
'வானத்தில் பறந்து வல்லரசு நாடு கண்டு வருவாய் நியூட்டனைப் போல்
என்றும் வாழ்வில் நீ உயர்ந்து'
என்று அன்றைய தகப்பன் மகனுக்கு நல்வாழ்த்து சொன்னான்.
அதற்கப்புறம் வந்தவன்
'அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பைத்தான் அடியேனும் அந்நாளில் செய்தேனப்பா'
என்று பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்தான்.
இப்போதோ அப்பனும் பிள்ளையும் ஒன்றாக சேர்ந்து தண்ணியடிக்கிறான்.
தண்ணி இல்லாத தமிழ்ப்படமே இல்லை.
'பார்' காட்டாத படமே இல்லை.
பீர் இல்லாமல் பிக்சரே இல்லை.
நடப்பது கலிகாலம்தானே!
எஸ்வி,
தங்கள் பதிலுக்கு நன்றி. இங்கு எழுதுபவர்கள் எல்லோரும் தாங்கள் உண்மையிலேயே இருப்பவர்கள்தான் என்று ஒன்று கூடி நிருபித்து விட்டு எழுதிக் கொண்டிருந்தால், அதை நான் மட்டும் செய்யாது இருந்தால், நீங்கள் என்னை அண்ணன் வரதக்குமார் அவர்களை சந்திக்கச் சொல்லி கேட்பதில் நியாயம் இருக்கிறது. அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் இவ்வாறு நீங்கள் கேட்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. சந்தித்தால் குழப்பம் தீர்ந்துவிடும் என்கிறீர்கள். சந்திக்காவிட்டால்...? நகைச்சுவை பதிவு என்று உங்கள் நகைச்சுவையும் சூப்பர்!!! இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனக்கு வேண்டியவர்கள் என்னை நம்புகிறார்கள் அது போதும். வேறு யாருக்கும் நான் எந்த ஒன்றையும் நிரூபிக்க வேண்டியதில்லை.
'திருப்பம்' படத்தின் ஸ்டில் 'தங்கப்பதக்கம்' என்று தவறாக 'சினிமா எக்ஸ்ப்ரஸ்' இதழில் (15 மே 1996) குறிப்பிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் ஒன்றுக்கு இரண்டு தரம் பத்திரிகை நடத்தும் நிர்வாகிகள் கவனிக்கவே மாட்டார்களா? அதுவும் நடிகர் திலகம் என்றால் கேட்கவே வேண்டாம்.
பூவின் பாடல் 25: "பூவ பூவ பூவ பூவப் பூவே பூவ பூவ பூவ பூவப் பூவே"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ~~~
திரை அரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பதை மக்கள் குறைத்து விட்டிருந்த நேரம். பாடல்கள் கேசட்டுகளில் வருவதுடன், சீடி மற்றும் டீவீடிக்களில் நல்ல விற்பனையில் சென்று கொண்டிருந்த காலம். எங்கிருந்தோ காற்றின் வழியே வந்த இந்த பாடல் என்னை கவனம் ஈர்த்த கணம், நான் கடலூரில் இருந்து பாண்டிக்கு சென்று கொண்டிருந்தேன். அருகில் இருந்த எனது சகோதரன் (கசின்) சொன்னான் "பூவெல்லாம் கேட்டுப்பார்" என்று புதுப்படம், "பாட்டெல்லாம் கேட்டுப் பார்க்கலாம்" என்றான். யார் படம் என்று கேட்டேன். சூரியா நடித்தது, வசந்த் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜ இசை என்றான். கேசட் வாங்கி கேட்டுப் பார்த்தேன். எனக்கு நன்றாகவே பிடித்திருந்தது. உங்களுக்கும் பிடித்திருந்திருக்கும்.
நக்மா நடித்து முடித்து இன்னொரு தங்கையும் நடித்து முடித்திருந்த காலம். இந்தியில் காதலுக்கு மரியாதையில் நடித்த நக்மாவின் இளைய சகோதரி இதில் அறிமுகம் என்றறிந்தேன். அவரே அஜித்தின் 'வாலி'யிலும் சிறிய பாத்திரம். பின்பு அவரே சூரியாவின் மனைவியாக ஆகி இப்போது '36 வயதினிலே' ஆனது காலம் உருவாக்கிய வரலாறு.
'பூவெல்லாம் கேட்டுப்பார்' ஒரே கதையை பலர் மறு உருவாக்கம் செய்த படம்தான். இது இயக்குனர் வசந்த்தின் பார்வையில். இதை தொலைக்காட்சியில்தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்க முடிந்தது. பாடல் முழுவதும் பல பூக்களைக் காட்டுகிறார்கள். என்ன சொல்வது, ஜோதிகா துள்ளிக்குதித்து, பல உடற்பயிற்சிகள் செய்து நடனமாடி பூக்களிடம் அவ்வப்போது சில கேள்விகள் கேட்கிறார்கள். அவ்வப்போது பூக்களுக்கெல்லாம் ஒரே பாராட்டு மழைதான். மற்றபடி பாட்டுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. கேட்கவும் நன்றாகவே இருக்கிறது.
பாடியது யார்? யாராவது கேட்பீர்களோ இல்லையோ. சொல்லிவிடுகிறேன். நித்யஸ்ரீ மகாதேவன்.
https://www.youtube.com/watch?v=47T9Mtqo09g
poova poova poova poova poove(3)
poova poova poove
poove undhan maeniyil aedho oru vaasanai
neeyum kooda kadhal kondaayo?
poova poova poova poova poove(3)
poova poova poove
ovoru naaLum oru azhagil poothu nee kulinginaai
vanna vanna idhazhgalai ellam enge nee vaanginaai?
poova poova poova poova poove(3)
poova poova poove
vannagalodu malarugiraai vasanaiyodu vaazhugiraai
parithidum pozhudilum sirikindraai
poove siru poove unai pol vaazhndidum vaazhkaye vendume
nee oru naaLil ulagai aaLum raani
needhaane endrum ennakku nalla thozhi
poove undhan maeniyil aedho oru vaasanai
neeyum kooda kadhal kondaayo?
poova poova poova poova poove(3)
poova poova poove
vasandham vandha saedhiyinai vandukku eppadi solvayo?
vannathila vaasathila irandiluma?
thaenai nee thandhu edhai nee peruvai poove poove
un thaegam theendi parandhu sendra vandu
pira poovai paarthal kobam unnakku varuma?
poove undhan maeniyil aedho oru vaasanai
neeyum kooda kadhal kondaayo?
poova poova poova poova poove(3)
poova poova poove
poove undhan maeniyil aedho oru vaasanai
neeyum kooda kadhal kondaayo?
poova poova poova poova poove(3)
poova poova poove
இதற்கு ஆண் குரல் பாடல் ஒன்றும் உண்டு. பாடியவர் உண்ணிக்கிருஷ்ணன். இத்திரைப் படத்தின் பாடல்கள் எல்லாவற்றையும் எழுதியவர் கவிஞர் பழனி பாரதி
கல்நாயக் சார்
அத்திப்பூத்தாற்போல வராமல் தொடர்ந்து அன்றாடம் மலரும் மலர்களாய் இங்கு பங்கெடுத்து பூக்களிலிருந்து தேனெடுத்துத் தாருங்கள் என வேண்டுகிறேன்.
கடந்த பல ஆண்டுகளில் உள்ளத்தைத் தொடும் பாடல்களாய் அமைந்திருந்தவற்றுள் இப்பாடலுக்கு இடம் உண்டு. இதுபோல் இன்னும் பாடல்களைப் பகிர்ந்து கொள்க.
குமார் சார்
சற்று நேரத்திற்கு முன் தான் நடிகர் திலகத்தை மனதில் வைத்து உருவ அமைப்பை வடித்து சமர்ப்பணம் படத்தில் நடிகர் விஜயகுமாரை இயக்குநர் நடிக்க வைத்ததைப் பற்றி எழுதியிருந்தேன். இதே அடிப்படையில் மாஸ்டர் பிரபாகரை நடிகர் திலகத்தின் இளவயது உருவகமாகவே அமைத்திருந்தார் ஏபி.என். அவர்கள். வா ராஜா வா படம் முழுதும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் மாஸ்டர் பிரபாகரின் ஒவ்வொரு அசைவையும் நடிகர் திலகத்தை மனதில் வைத்தே செதுக்கியிருந்தார் இயக்குநர். உண்மை எது பொய் எது பாடலில் முழுக்க முழுக்க நடிகர் திலகத்தின் உடல் மொழியைப் புகுத்தி மாஸ்டர் பிரபாகரை நடிக்க வைத்திருந்ததை இப்பாடலில் நாம் காணலாம்.
நடிகர் திலகத்தை நினைவூட்டும் பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
வாசு சார்
சமர்ப்பணம் பாடல் காணொளிக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்களுக்குப் பின் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு உளமார்ந்த நன்றி, தரவேற்றிய நண்பருக்கும் தங்களுக்கும்.
இந்நாளைய தகப்பன் பிள்ளை உறவு முறை பற்றிய தங்கள் கருத்து நெஞ்சைத் தொடுவதாக உள்ளது.
இருமலர்கள். .. ஆஹா.... அட்டகாசம்...
தலைவர் இல்லாமல் வாசுவின் பதிவா.. தூள் கிளப்புங்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
மிக மிக ஸ்பெஷல் பதிவு
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
12
'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்'
பாலா தொடரில் அடுத்து வருவது 'வீட்டுக்கு வீடு' (1970) செம ஜாலி காமெடிப் படம்.
http://padamhosting.me/out.php/i9140...2522.58.05.jpghttp://padamhosting.me/out.php/i9140...2523.00.42.jpg
ஜெய், லஷ்மி, முத்துராமன், 'வெண்ணிற ஆடை' நிர்மலா, நாகேஷ், வி.கே.ஆர், மேஜர் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி' என்று நட்சத்திரக் கும்பல். நகைச்சுவைக் கும்பல். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கென்றே எடுக்கப்பட்டு ஓஹோ என்று ஓடிய படமும் கூட.
துணிச்சல் பெண்ணான லஷ்மி அப்பாவுக்குப் பயந்த கோழையான பணக்கார ஜெய்யைக் கல்யாணம் செய்து கொள்கிறார். இருவரும் முத்துராமன் வீட்டிற்கு குடித்தனம் வருகின்றனர். அங்கு லஷ்மியின் தோழி நிர்மலா அவர் கணவர் முத்துவால் கொடுமைப் படுத்தப்பட, அதைக் கண்டு லஷ்மி கொதித்து தோழியின் வாழ்விற்காக குரல் கொடுத்து போராட ஆரம்பிக்கிறார்.
நிர்மலாவின் ஒரே ஆதரவான பெரியப்பா (முத்துவின் லட்சணம் தெரிந்தவர்) திடீரென வெளியூரில் இறக்க நேரிட, அவர் இறக்கும் தருவாயில் தன்னிடமுள்ள ரூபாய் இரண்டு லட்சத்தை மகள் நிர்மலாவுக்குத் தரும்படி மானேஜர் வி.கே.ஆரிடம் சொல்லி விட்டு இறக்கிறார். ஆனால் ஒரு கண்டிஷன். (முத்து மேல் நம்பிக்கை இல்லாததால்)
.
முத்துவும் நிர்மலாவும் ஒற்றுமையாக வாழ்ந்தால்தான், அதை மானேஜர் வி.கே.ஆர் சில நாட்கள் அவர்கள் வீட்டிலேயே தங்கி கண்ணால் பார்த்து ஓ.கே சொன்னால்தான் பணம் நிர்மலாவிற்கு சேரும்.
அப்படி ஒரு கண்டிஷன்.
ஆனால் அது நடக்க சாத்தியமில்லாமல் முத்து கெட்ட பழக்கங்களுடன் ஒரு பெண்ணிடம் வேறு அடிமைப்பட்டுக் கிடக்கிறார். முத்துராமன் இல்லாத சூழ்நிலையில் நிர்மலாவின் நல்வாழ்விற்காக வேண்டி லஷ்மி தன் கணவனான ஜெயசங்கரை நிர்மலாவின் கணவன் என்று வி.கே.ஆரிடம் பொய் சொல்லி நாடகமாட வேண்டிய கட்டாயம். நேரம்.. சூழ்நிலை.
அதை நம்பும் வி.கே.ஆரும் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்துவதைப் பார்த்துவிட்டுத்தான் பணத்தைத் தர முடியும் என்று சில நாட்கள் அங்கேயே தங்கியும் விடுகிறார். உடன் அவரின் உருப்படாத மகன் கிடார் நாகேஷ். வி.கே.ஆர் முன்னால் தர்ம சங்கடத்துடன் லஷ்மியின் கட்டாயத்தின் பேரில் ஜெய், நிர்மலா பல்லைக் கடித்துக் கொண்டு கணவன் மனைவியாக நடிக்கிறார்கள்.
வெளியே தங்கியிருக்கும் முத்துராமனிடம் பணம் கிடைக்கப் போகும் விஷயத்தைச் சொல்லி லஷ்மி, ஜெய் இருவரும் அவரை வீட்டிற்குக் கூட்டிவருகின்றனர். இப்போது முத்து லஷ்மியின் கணவனாக நடிக்க வேண்டும்.
ஜோடி மாறி பணத்துக்காக கள்ள நாடகம். ஆனால் நல்ல நாடகம். நல்லதுக்காக நாடகம். ஜோடிகள் வி.கே.ஆருக்காக மாறி மாறி வேடம் போடுவதும் வி.கே.ஆர் ஏமாந்த சமயத்தில் ஒரிஜினல் கணவன் மனைவி ஒன்று சேர்வதுமாக கும்மாளக் கதை. இதை நாகேஷ் கண்டுபிடித்து விட்டு தந்தை வி.கே.ஆரிடம் நிரூபிக்கப்படும் பாடு மீதி கதை. லஷ்மியை ஒருதலையாய் பேயாய்க் காதலிப்பதும் இடைச் செருகல். இறுதியில் எல்லாக் குழப்பமும் முடிந்து சுபம்.
கலகலவென்று நகரும் படம். ஒரு இடம் கூட சலிப்புத் தட்டாது. நடிகர்கள் அனைவரும் நல்ல காமெடி ஒத்துழைப்பு.
இதே படத்தை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்து பின்னால் ராமநாராயணன் 'விஸ்வநாதன் ராமமூர்த்தி' என்று ஒரு கூத்து எடுத்தார் ராம்கி, விந்தியா, விவேக், ரோஜா, கோவை சரளா கும்பலுடன்.
http://padamhosting.me/out.php/i9140...2522.54.31.jpghttp://padamhosting.me/out.php/i9140...2522.55.50.jpghttp://padamhosting.me/out.php/i9140...2523.01.26.jpghttp://padamhosting.me/out.php/i9140...2523.01.47.jpg
லஷ்மி
'டாண்.. டாண்' வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு. அலட்சிய நடிப்பு கொடி கட்டுகிறது.
நிர்மலா
பரிதாபமான முத்துவின் மனைவி. கணவனே கண் கண்ட தெய்வம் அவன் கொடுமைக் காரனாய் இருந்தும்.
ஜெய்
பயந்தாங்கொள்ளிக் கணவன். லஷ்மியின் ஜோடி. அடுப்பங்கரை நளன். இடுப்பில் புடவை போல் தூக்கிக் சொருகப்பட்ட வேட்டியுடன் கரண்டியும் கையுமாய் மனிதர் செமையாய் சமையல் அமர்க்களம்.
முத்துராமன்
குடி கூத்தி, சீட்டாட்டம், ரேஸ் அத்தனைக்கும் அதிபதி. நிர்மலாவை நிர்மூலமாக்கும் கணவர்.
வி.கே.ஆர்
கண்காணிப்பு குடுமி மானேஜர். பிள்ளை நாகேஷின் தொல்லைகளை ஹேண்டில் பண்ணும் விதமே தனி. சரளமான காமெடி டயலாக்ஸ் சகட்டு மேனிக்கு. கொஞ்சமும் அலட்டல் இல்லாமல். ('சங்கீத மழை' "மழையிலேயே பாடுவானோ?!!)
http://2.bp.blogspot.com/-ZbnGfMDTuR...600/nagesh.JPG
நாகேஷ்
உண்மை நாயகர். 'சங்கீத மழை' பட்டு பாகவதர். கிடார் வைத்து கிடுகிடுக்க வைப்பார் காமெடியில். ஜோடிகள் மாறுவதைக் கண்ணால் கண்டு 'ம்ம். மாட்டிகிட்டான்'...'ம்ம். மாட்டிகிட்டான்' என்று சொல்லி தந்தையை தடுமாறச் செய்வது ஒன்றே போதும்,.
மேஜர்
வழக்கமான பணக்காரத் தந்தை. ஜெய்க்கு.
'மேஜிக்' ராதிகாவும் உண்டு கவர்ச்சிக்காக.
http://padamhosting.me/out.php/i9140...2522.56.19.jpg
சி.சுந்தரம் அளிக்கும் பாபு மூவிஸ் 'வீட்டுக்கு வீடு'. கவிஞரின் பாடல்களுக்கு அற்புதமான இசை தந்தவர் 'மெல்லிசை மன்னர்'.
சுசீலா, ராட்சஸி, சாய்பாபா, பாலா பாடல்களைப் பாடியிருப்பார்கள்.
ஒளிப்பதிவை கர்ணனும், பாஸ்கர் ராவும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
கதை வசனம் காமெடி கோபு. அன்றைய 'கிரேஸி' மோகன்.
இயக்கம் சி.வி.ராஜேந்திரன். தெளிவான, குழப்பமான திரைக்கதைக்கு குழப்பமில்லாத அம்சமான இயக்கம்.
இயக்கத்தில் இவர் 'ராஜா'
'நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி',
சாய்பாபாவின் 'அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ' (நான் இந்தப் பாடலுக்கு வாழ்நாள் அடிமை)
'நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே' (ராட்சஸி)
'தொட்டுத் தொட்டுப் பார்த்தால்' (சுசீலா அமர்க்களம்)
போன்ற அமர்க்களமான பாடல்கள்.
இப்போது தொடரில் பார்க்கப் போவது பாலா, ராட்சஸி இணைவில் யாரும் இணையே செய்ய முடியாத ஒரு அற்புதப் பாடல்.
'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு'
http://padamhosting.me/out.php/i9139...2522.53.44.jpg
லஷ்மி, ஜெய் இருவரின் டூயட்.
தொடை நடுங்கி ஜெய் அடுத்தவர்களுக்கு பயந்து பயந்து, லஷ்மியை ஒளிந்து ஒளிந்து காதலிக்க, துணிவோடு லஷ்மி வெளியே வந்து துள்ளாட்டம் போடுவார். லஷ்மி மிக எளிய நைலக்ஸ் சேலை அணிந்து தலை நிறைய கனகாம்பரம் வைத்திருப்பார். ஜேம்ஸ்பாண்டுக்கும் ஜே!
'லாலாலாலால்லா' என்று லஷ்மி ஈஸ்வரியின் குரலில் பாடலை உற்சாகமாய்த் தொடங்க, பயந்து ஒளிந்தபடி ஜெய் 'ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்' என்றபடி 'மாட்டேன்' என்று முரண்டுபிடிக்க, ரகளையாய் பாடல் ஆரம்பிக்கும். கவிஞரின் தமிழ் வரிகள் அமுதமோ அமுதம்.
'லாலாலாலால்லா
ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்
லாலாலாலால்லா
ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்... ம்ம்ம்ஹூம்
லா... லா...
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசயக் கனவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசயக் கனவு
நவரச நிலவு
அதிசயக் கனவு
நவரச நிலவு
அதிசயக் கனவு
பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வெண்ணிற மேனியில்
விளையாடும் பொன்னழகு
லாலால்லா..லாலா...லாலால்லா
பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வெண்ணிற மேனியில்
விளையாடும் பொன்னழகு
மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு
லாலால்லா..லாலா...லாலால்லா
மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு
கற்பனை அற்புதம்
காதலே ஓவியம்
தொட்டதும் பட்டதும்
தோன்றுமே காவியம்
கற்பனை அற்புதம்
காதலே ஓவியம்
தொட்டதும் பட்டதும்
தோன்றுமே காவியம்
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசயக் கனவு
தேன் சுவையோ இல்லை நான் சுவையோ
என தேடி அணைக்கும் அழகே
மைவிழி நாடகப் பார்வையில்
கதை நாளும் சொல்லிவிடு
பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய
பருவ கால இசையே
பார்த்தது மட்டும் போதுமா
ஒரு பாடம் சொல்லிவிடு
வந்தது கொஞ்சமே
வருவதோ ஆயிரம்
ஒவ்வொரு நினைவிலும்
உலகமே நம்மிடம்
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசயக் கனவு
ஹோய் நவரச நிலவு
ஹோ அதிசயக் கனவு
ஹாங் நவரச நிலவு
அ தி சயக் கனவு
அடா! அடா! அடா! என்ன பாடல்! பாலாவும் ராட்சஸியும் துவைத்துக் காயப் போட்டு விட்டார்கள் இந்தப் பாடலை. பாலாவின் அந்த அலட்சிய குரல் பாவங்கள்...ஏற்ற இறக்கங்கள்.
'அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம்
நங்கை முகம் நவரச நிலவு'
எட்டு வார்த்தைகளையும் ஒரே சமயத்தில் ஒன்றாக்கி அவர் கொஞ்சும் வித்தையை மிஞ்ச வேறு யார்?
அதற்கு ஈடு கொடுக்கும் ஈஸ்வரியின் வித்தை ஜாலங்கள்.
(லாலால்லா..லாலா...லாலால்லா)
'கற்பனை அற்புதம்' என்று பாலா ஆரம்பித்து பின் அதையே திரும்ப இன்னும் பேஸ் வாய்ஸில் அழுத்தமாய்க் கொடுப்பாரே. இது கற்பனையையும் மீறிய அற்புதம் அல்லவா? 'மைவிழி நாடகப் பார்வையில்' எனும் போது 'மைவிழி'யை இவர் உச்சரிக்கும் விதம் அசத்தலோ அசத்தல்.
இரண்டாவது சரணத்தில் வரும் 'வந்தது கொஞ்சமே' முதல் சரணத்தின் 'கற்பனை அற்புதம்' போல ரிப்பீட் ஆகாமல் நமக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சும். இன்னொரு முறை பாலா திரும்ப பாட மாட்டாரா என்று மனம் ஏங்கும். அவ்வளவு ஏன்?... கோபமே கூட வரும்.
பாடல் முடியும் போது இவர் 'ஹோய்.. நவரச நிலவு' என்று கொஞ்ச, ராட்சஸி அது பங்கிற்கு 'ஹோ... அதிசயக் கனவு' என்று பதில் கொஞ்சல் கொஞ்ச,
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று நாம் கெஞ்ச,
உலகத்தின் இன்பத்தை எல்லாம் ஒன்றாக்கித் தரும் பாடல்.
பாலாவின் வைரக் கிரீடத்தில் ஒரு மாணிக்கம் இந்தப் பாடல் என்று நன் கூற மாட்டேன்.
வைரக் கிரீடமே இந்தப் பாடல் என்றுதான் கூறுவேன்.
'மெல்லிசை மன்னர்' வீடு கட்டி அடிப்பார்.
பாடலின் ஆரம்பத்தில் உன்னிப்பாகக் கேளுங்கள். 'அங்கம் புதுவிதம்' என்று ஆரம்பிப்பதற்கு முன்னால் விசு ஒரு அருமையான சங்கதி பின்னணி கொடுத்திருப்பார். அப்படியே நடிகர் திலகத்தின் 'சிவந்த மண்' படத்தின் 'ஒரு ராஜா ராணியிடம்' பாடலின் துவக்கத்தில் அந்த சங்கதியை ஒரு 70% அப்படியே உணரலாம்.
https://youtu.be/JqD6SRwLHuE
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
கோடானு கோடி நன்றிகள் to ரவி & வாசு.
வாசு, நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை! அதிலும் " மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்ததம்மா" என்ற வரிக்கு வலது கையை இடுப்பிலிருந்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக உயர்த்துவாரே, அந்த இடத்திலேயே நான் சரண்டர்.
வேண்டாம் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்
வாசு, ஒரு விஷயம் தெரியுமா? விளையாட்டு பிள்ளை படத்தை 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மகாலட்சுமியில் ரிலீஸ் செய்த திரு ரகுபதி அவர்கள்தான் [ நமது ஹப்பிலும் உறுப்பினர்] இரு மலர்கள் படத்தின் rights -ஐ வைத்திருக்கிறார். அவரை பார்க்கும்போதெல்லாம் [நமது NT FAnS மாதாந்திர திரையிடலுக்கு ரெகுலராக வருவார்] நல்ல ஒரு A/c தியேட்டரில் இரு மலர்கள் படத்தை ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அவரும் நிச்சயமாக என்பார். பார்க்கலாம்!