இரண்டு நாள்களாக மையம் திரிகள் வரவே இல்லை. ப்ளாக் என்று கான்பிக்கிறது. இப்பத்தான் திறக்கிறது. ஏன்? என்ன ஆனது? எனக்குதான் நெட் டவுனாக இருப்பதால் வரவில்லியா? யாருக்குமே வரவில்லியா?
Printable View
இரண்டு நாள்களாக மையம் திரிகள் வரவே இல்லை. ப்ளாக் என்று கான்பிக்கிறது. இப்பத்தான் திறக்கிறது. ஏன்? என்ன ஆனது? எனக்குதான் நெட் டவுனாக இருப்பதால் வரவில்லியா? யாருக்குமே வரவில்லியா?
http://i68.tinypic.com/9sb6gl.jpg
முன்னாடி எல்லாம் பேஸ்புக் வாட்ஸப் எல்லாம் கிடயாது. இப்போது அதெல்லாம் வந்துவிட்டது. எல்லாம் அதிலேயே தொடர்பு கொள்ளுகின்றனர். நினைச்சதை குரூப்பாக இருந்து ஒருத்தருக்கொறுத்தர் சொல்லிக் கொள்கின்றனர். அந்த குரூப்புக்குள் சண்டை வராது. எல்லாம் ஒரே கருத்து உள்ளவர்கள்தானே. அ ்தான் இங்கே யாரும் அவ்வளாவாக வருவதில்லை போல. ஆள்கள் வராததால் சுவாரஷ்யமாக இல்லாமல் போரடிக்கிறது. நம்ப பங்காளிங்கள் திரியிலும் இப்பிடித்தான் இருக்கு. ஒ ருத்தர் ரெண்டு பேர் தவிர்த்து யாரயும் காணும்.
எங்கே இருந்தாலும் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் எட்டாவது வள்ளல் மனிதப் புனிதர் புரட்சித் தலைவர் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்லுவோம்.
மனிதக் கடவுள் புரட்சித் தலைவர் வாழ்க!
MAKKAL THILAGAM MGR IN ''GULEBAHAGAVALI'' - 61 YEARS COMPLETED TO DAY.
29.7.1955
http://i1273.photobucket.com/albums/...ee6/33-2-1.jpg
Thanks for Malaimalar --- sharing with ourselves... Mr. Vinoth sir... What's the matter about Mayyam website strumming?
மய்யம் திரியில் சில நாட்களாக பதிவுகளை வழங்க இயலாமல் இருந்த நிலையில் இனிய நண்பர் திரு ராகவேந்திரன்
சார் மூலம் திரு நவ் அவர்களை தொடர்பு கொண்டதன் மூலம் மய்யம் திரியில் மீண்டும் பதிவிடவும் பார்வையிடவும் புதிய இணைப்பை தந்துள்ளார் .நண்பர்கள் இனி இந்த புதிய இணைப்பின் மூலம் திரியில் தொடர்ந்து பதிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன் .
திரு ராகவேந்திரன் , திரு நவ் இருவருக்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் .
புதிய இணைப்பு
http://www.mayyam.com
DECCAN CHRONICLE- TODAY
http://i63.tinypic.com/2z829du.jpg
An ardent fan of MGR is digitally restoring his 1971 blockbuster Rickshawkaran as a tribute to his matinee idol and releasing it in a big way
With late legendary actor-politician MGR’s centenary celebrations around the corner, P. Mani and Krishnakumar, (who have no filmy connection but are ardent fans of the former Chief Minister), are digitally restoring his 1971 blockbuster film Rickshawkaran as a tribute to their matinee idol and releasing it on a grand scale.
At a time when the life span of even a big star’s film is hardly a week, the re-release of the re-mastered digital version of MGR’s Aayirathil Oruvan a couple of years back completed a massive run of 175 days in the city breaking all records at the box-office. It was thespian Sivaji Ganesan’s epic historical drama Karnan, which was given a makeover with colour correction, enhanced sound quality, and DI, which when released in 2012, ran for 100 days, setting the ball rolling for similar initiatives.
Rickshawkaran also marked the introduction of actress Manjula as the lead heroine. The commercial mass entertainer directed by Krishnan Nair and produced by Sathya Movies, which catered to all types of audiences, also fetched the Best Actor award from the state for MGR. The songs by MS Viswanathan were the biggest asset for the film.
Right from my childhood, I am a zealous fan and sincere devotee of MGR I have grown up watching Thalaivar’s films. I have never missed FDFS of his movies. I hail from a business family and have no links in cinema. Out of love and affection towards MGR, I have ventured into this — the first being Rickshawkaran, which is very close to my heart,” Kovai-based Krishnakumar tells DC.
He adds, “As far as I am concerned, MGR is the only Superstar of Tamil cinema. Since Rickshawkaran is a mass movie, I am releasing it in 100 screens in Tamil Nadu and I am confident of its success.” The icing on the cake is that Krishnakumar is releasing the film’s trailer on August 21 at Devi Paradise in Chennai — the same venue where the film was released 47 years ago. Plans are on to release it in September.
Rikshakaran is one among the many megahit movies that MGR had given. For the first time in Tamil film industry, a Tamil actor won the National Award for the movie. It is none other than Makkal Thilagam MGR. The movie was a directorial venture by Krishnan Nair. MGR had done the role of Rickshaw Karan in the movie. The movie had other actors as Manjula, Padmini, Asokan, Major Sundarrajan, Thengai Srinivasan, and Cho Ramaswamy. Many numbers in the movie turned out to be super hits.
RM Veerappan produced the movie under the banner Sathya Movies. The movie that hit the screens in 1971 proved to be a super hit. In a development, many old Tamil movies are being converted to digital and are being released so that the movies adhere to the taste of the present generation.
Many such movies have turned super hits. Many of MGR starrers and Sivaji starrers have been released in digital. Following MGR starrers as Naadodi Mannan, Maattukaran Velan, the movie Rikshakaran is being made in digital. Krishnakumar hailing from Coimbatore has been a distributor for the last five years. Now, he is into efforts to make the movie Rikshakaran in digital. The digital movie has features as DTS and cinemascope.
எம்,ஜி.ஆர் நடித்த 'ரிஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது.
எம்.ஜி.ஆர்., நடித்த பல சூப்பர் ஹிட் படங்களில் 'ரிக்ஷாக்காரன்' படமும் ஒன்று. முதன்முறையாக தமிழ் நடிகர் ஒருவருக்கு தேசிய விருது கிடைத்தது என்றால் அது எம்.ஜி.ஆர்., தான். அந்த தேசிய விருதை எம்.ஜி.ஆரு.க்கு பெற்று தந்த படமும் 'ரிக்ஷாக்காரன்' தான். டைரக்டர் கிருஷ்ணன் நாயர் இயக்கிய இப்படத்தில் எம்.ஜி.ஆர்., ரிக்ஷாக்காரனாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்., உடன் மஞ்சுளா, பத்மினி, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ ராமசாமி என பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. சத்யா மூவிஸ் சார்பில் ஆர்எம் வீரப்பன் தயாரித்திருந்தார். 1971-ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.
கோவையை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து வருகிறார். இவர் இப்போது ரிக்ஷாக்காரன் படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்றபடி டிஜிட்டலில் வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார். 2கே, டிடிஎஸ், சினிமாஸ்கோப்... என இன்றைய நவீன சினிமாவிற்கு ஏற்றபடி' ரிக்ஷாக்காரன்' படம் டிஜிட்டலில் வெளியாக இருக்கிறது. முதற்கட்டமாக டிஜிட்டல் தரத்துடன் கூடிய டிரைலரை வெளியிட உள்ளனர். அதனைத்தொடர்ந்து படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்கின்றனர்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ‘ரிக்ஷாக்காரன்’ காமெடி, காதல், செண்டிமெண்ட் என அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட தரைப்படமாக 1971 ஆம் ஆண்டு வெளியானது.
அந்த வகையில், இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் அமோக வெற்றி பெற்றது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்கு தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் என்று இந்திய அரசின் ‘பாரத்’ பட்டத்தையும் பெற்று தந்தது.
இந்நிலையில், ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படமானது தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் தமிழகத்தில் வெளியாக உள்ளது.
சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் டிஜிட்டல் பதிப்பை ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் ‘பிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு ஆகியோர் வெளியிடுகின்றனர்
‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் அனைத்து பாடல்களும் இசையமைப்பாளர் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவாக்கப்பட்ட நிலையில், எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாக இருந்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா விரைவில் கொண்டாடவுள்ள நிலையில், அந்த விழாவின் முதற்கட்டமாக ‘ரிக்ஷாக்காரன்’ படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி, எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த நவீன டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம், எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
When this "mayyam" website net work problem solve... Otherwise thanks to Administrator Mr Nov sir...
"Rickshawkaaran" Makkalthilagam's Grand Mega Hit Digital Version contents--- informations Super Sir...
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
கூண்டுக்கிளி -1954
புதுமைபித்தன் -1957
நாடோடி மன்னன் -1958
நல்லவன் வாழ்வான் -1961
குடும்ப தலைவன் -1962
பாசம் - 1962
நீதிக்கு பின் பாசம் -1963
கலங்கரை விளக்கம் -1965
தாலி பாக்கியம் -1966
கணவன் -1968
தேடிவந்த மாப்பிள்ளை -1970
பட்டிக்காட்டு பொன்னையா -1973
இதயக்கனி -1975
மீனவ நண்பன் -1977.
உலக வரலாற்றில் பல சாதனைகள் நிகழ்த்திய நம் ''நாடோடி மன்னன் .'' திராவிட இயக்கத்தின் மன்னன் நம் அண்ணாவின் '' இதயக்கனி ''- மக்களுக்கு ''நல்லவன் வாழ்வான் '' என்று அறிவுரை கூறிய வள்ளல் எம்ஜிஆர
எழுதிய கதை ''கணவன் ''.. ''குடும்ப தலைவன் '' எல்லோரும் விரும்பும் மக்கள் திலகம் .
கோடிகணக்கான ரசிகர்களின் ''பாசம் '' பெற்ற தலைவன் . ''நீதிக்கு பின் பாசம் '' என்ற
படிப்பினை தந்த மக்கள் திலகம் .''கூண்டுக்கிளி''யாக இருந்தவர் பல பெண்களின் மனதில் இவர் நம் வீட்டுக்கு
''தேடி வந்த மாப்பிளை''யாக வருவாரா ''தாலி பாக்கியம் '' கிடைக்காதா என்று ஏங்கிய பெண்களின் மனதை கவர்ந்த உலக பேரழகன் .
''பட்டிக்காட்டு பொன்னையா '' படத்துடன் ஜோடி பிரிந்த ஜெயாவின் மான் சீக தலைவன் .
''புதுமை பித்தன் '' மீனவ சமுதாயத்தின் என்றுமே ''மீனவ நண்பன் ''
என்றென்றும் மனித நேய தலைவன் - மக்களின் ''கலங்கரை விளக்கம் '' எம்ஜிஆர் .
http://i64.tinypic.com/256cidk.jpg
MAKKAL THILAGAM MGR IN
http://i64.tinypic.com/256cidk.jpg
ADIMAIPEN
31.7.2016
SUNDAY- 2.30 PM
AT RED CARPET HALL
http://i64.tinypic.com/256cidk.jpg
RKV FILM INSTITUTE PREVIEW THEATREhttp://i64.tinypic.com/256cidk.jpghttp://i64.tinypic.com/256cidk.jpg
DR.NSK SALAI [ ARCOT ROAD]
OPP VIJAYA HOSPITAL
VADAPALANI
CHENNAI
PROGRAMME BY
http://i64.tinypic.com/256cidk.jpg http://i64.tinypic.com/256cidk.jpg http://i64.tinypic.com/256cidk.jpg
ANITHTHULAGA MGR PODHUNALA SANGAM
MESSAGE BY THIRU SELVAKUMAR.
http://i64.tinypic.com/256cidk.jpg [http://i64.tinypic.com/256cidk.jpg
சினிமாவை பொறுத்த வரை எம்.ஜி.ஆர் ஒரு மிக லாபகரமான saleable brand. அவருக்கும் அது தெரிந்திருந்தது. அவர் தயாரிப்பாளர்களை வைத்து தன் பிராண்டை பலப்படுத்திக்கொண்டார். அவரை நம்பி தயாரிப்பாளர்கள் பணத்தை கொட்டினார்கள். படம் வெளிவந்தால் பொதுவாக அவர்கள் ஏமாற்றம் அடைந்ததில்லை. அந்த பேரும் mostly part of the brand building exercise, அவ்வளவுதான். உண்மையில் அவர் எஸ்.எஸ். வாசன், செசில் பி. டிமில், ராஜ் கபூர் போன்றவர்கள் வரிசையில் சேர்க்கப் பட வேண்டியவர்.
நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை, அலிபாபா, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண் போன்றவை அருமையான பொழுதுபோக்குப் படங்கள். எங்க வீட்டுப் பிள்ளையில் அவர் நம்பியாரை சாட்டையால் அடித்துக் கொண்டே நான் ஆணையிட்டால் என்று பாடும் காட்சி பார்க்கும் அனைவரையும் குதூகலம் அடைய செய்யும். ஆயிரத்தில் ஒருவனில் அவர் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்றால் விசில் பறக்கத்தான் செய்யும். நாடோடி மன்னனில் பி.எஸ். வீரப்பா “சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்கக்கூடாது போலிருக்கிறது” என்றால் அதற்கு எம்ஜிஆர் “இல்லை ஏழைகளே இருக்கக்கூடாது” என்று சொன்னால் கை தட்டத்தான் செய்யும். அவர் சிலம்பம் ஆடுவதும் கத்தி சண்டை போடுவதும் இன்றும் பார்க்கலாம்.
தமிழ் சினிமா வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான பகுதி. அவர் வழியில்தான் ரஜினி, விஜயகாந்த், விஜய் போன்றவர்கள் செல்கிறார்கள். அவரது பாதிப்பு இல்லாத ஹீரோ தமிழ் சினிமாவில் இல்லை.
அவரது அரசியல் வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது. அண்ணா அவரை கூட்டம் கூட்டவும் ஓட்டு வாங்கவும் பயன்படுத்தினார். கலைஞர் அவரது ஆதரவால்தான் நாவலரை வென்று முதல்வரானார்.
நடிகனுக்கும் நாடாளத் தெரியும் என்று காண்பிக்கிறேன் என்று சவால் விட்டு விட்டு அதிமுகவை ஆரம்பித்தார். மக்களுக்கோ அவர் என்ன சொல்கிறார் என்பது ஒரு பொருட்டே இல்லை. அவர் முகத்தைப் பார்த்தால் போதும்.
அவரது மனோதிடம் அசாதாரணமானது. தொண்டையில் குண்டு பாய்ந்ததும் அவரது சினிமா வாழ்க்கை முடிந்திருக்க வேண்டியது. ஆனால் அதற்குப் பிறக்கும் பத்து வருஷம் வெற்றிகரமாக நடித்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் கலைஞர் எம்ஜிஆருக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சநஞ்சம் இல்லை. உலகம் சுற்றும் வாலிபன் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் அவரே பணத்துக்கு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எப்படியோ சமாளித்து நின்றார். 87ல் உடல் நலம் சரி இல்லாமல் போன போதும் மீண்டும் கடுமையாக உழைத்து பேச ஆரம்பித்தார்.
அவரது இமேஜ் அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தொப்பியும் கண்ணாடியும், படங்களில் எந்த வித கெட்ட குணமும் இல்லாத கதாபாத்திரமாக வருவதும், ரிக்ஷாக்கரார்களுக்கு ரெயின்கோட் வழங்குவதும், வள்ளல் என்று பேர் வாங்கியதும் brand buildingதான்.
அவர் ஒரு நல்ல சினிமாக்காரர். அசாத்தியமான மனோதிடம் கொண்டவர். தனது பிராண்டை வைத்து அரசியலில் வென்றார். . தமிழ் சினிமா உலகில் அவர் ஒரு மைல் கல்.
COURTESY -RV- NET
முரசு தொலைக்காட்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு மக்கள் திலகத்தின் ''நல்லநேரம்'' ஒளி பரப்பாக உள்ளது .
கடந்த வாரம் மதுரை நகரில் மக்கள் திலகத்தின் ''ஆசை முகம் '' 7 நாட்களில் 95,000 வசூலாகியதாக தகவல் .
இந்த வாரம் கோவை - ராயல் அரங்கில் மக்கள் திலகத்தின் ''இன்று போல் என்றும் வாழ்க '' நடை பெறுகிறது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் சங்கமம் .
சென்னையில் நேற்று அனைத்துலக எம்ஜிஆர் பொது நல சங்கத்தின் சார்பாக மக்கள் திலகத்தின் அடிமைப்பெண்
திரைப்படம் திரையிடப்பட்டது .அரங்கம் நிரம்பியது , ஏராளமான மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் வெளியூர்களில் இருந்து வந்தார்கள் .இதர செய்திகள் விரைவில் .......
ANNAMITTA KAI - 1972
http://i66.tinypic.com/2ij2sjs.jpg
UNRELEASED MOVIEI
http://i67.tinypic.com/2lo4z82.jpg
மக்கள் திலகத்தின் தேடிவந்த மாப்பிள்ளை -1970 படத்திற்கு இசை அமைத்த மெல்லிசை மன்னர் தொடர்ந்து
எங்கள் தங்கம்
குமரிக்கோட்டம்
ரிக்ஷக்காரன்
நீரும் நெருப்பும்
ஒருதாய் மக்கள்
சங்கே முழங்கு
7 படங்களுக்கு இசை அமைத்தார் . 7 படங்களில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகத்தின் இனிமையான காதல் கீதங்கள்
இடமோ சுகமானது ...
அட ஆறுமுகம் இது யாரு முகம்
மாணிக்க தேரில் மரகத கலசம் ....
டோன்ட் டச் மீ மிஸ்டர் எக்ஸ்
நான் அளவோடு ரசிப்பவன்
தங்கப்பதக்கத்தின் மேலே
நாம் ஒருவரை சந்திப்போம் ...
அழகிய தமிழ் மகள் இவள்...
கன்னி ஒருத்தி மடியில் ..
மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
தமிழில் அது ஒரு இனியக்கலை
இரண்டு கண்கள் பேசும் மொழியில்
கண்ணன் எந்தன் காதலன் ..கண்ணில் ...
இன்றைய சமுதாயத்தில் பள்ளிக்கூடங்களில் தினமும் மக்கள் திலகத்தின் பாடல்களை ஒளி பரப்பினால் நிச்சயம் மாணவர் சமுதாயம் சிந்தித்து தங்களுடைய வாழ்க்கையை செம்மை படுத்தி கொள்வார்கள் என்பது உறுதி .
ஆனந்த ஜோதி
ஒரு தாய் மக்கள் நாமென்போம் .........
நாடோடி மன்னன்
தூங்காதே தம்பி தூங்காதே
மன்னாதி மன்னன்
அச்சம் என்பது மடமையாடா
அரசிளங்குமரி
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
திருடாதே
திருடாதே பாப்பா திருடாதே
ஆயிரத்தில் ஒருவன்
ஏன் என்ற கேள்வி இங்கு ....
பணம் படைத்தவன்
கண் போன போக்கிலே கால் போகலாமா ..
பெற்றால்தான் பிள்ளையா
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
நம்நாடு
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நீரும் நெருப்பும்
கடவுள் வாழ்த்து பாடும் ...
உலகம் சுற்றும் வாலிபன்
சிரித்து வாழ வேண்டும் ..பிறர் சிரிக்க...
மக்கள் தீர்ப்பைப் பொறுத்தது. படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி’’ என்று சர்வ சாதாரணமாக சொன்னார் எம்.ஜி.ஆர்.
மக்கள் எம்.ஜி.ஆரை மன்னனாக்கி னர். அதுவரை வெளியான படங்களை வசூலில் புரட்டிப் போட்டு அமோக வெற்றி பெற்றது ‘நாடோடி மன்னன்’. 19 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆர். நிஜமாகவே முடிசூடியதற்கு கால்கோள் நடத்தியது ‘நாடோடி மன்னன்’.
மதுரையில் பல லட்சம் மக்கள் முன் னிலையில் நடந்த வெற்றி விழாவைத் தொடர்ந்து சென்னையிலும் 30.11.1958ல் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் பேரறிஞர் அண்ணா தலைமையில் வெற்றி விழா கொண்டாட்டம் நடந்தது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு வீரவாளை அண்ணா பரிசளித்தார்.
இந்தக் கூட்டத்தில்தான், ‘‘மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்லவேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன். எம்.ஜி.ஆரை பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வது போலாகும்’’ என்று அண்ணா பேசினார்.
Thanks sridhar - tamil hindu
நாடோடி மன்னன்” படத்தின் வெற்றி விழா மதுரை முத்துவின் மேற்பார்வையில் மதுரையில் தடபுடலாக ஏற்பாடாகியது. நான்கு குதிரைகள் பூட்டிய அலங்கார ரதத்தில் எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ஊர்வலத்தின் முன்னால் கொண்டு செல்லப்பட்ட உலக உருண்டை மீது 110 பவுனில் தயாரிக்கப்பட்ட தங்க வாள் மின்னியது. ஊர்வலத்தின் இறுதியில் தமுக்கம் மைதானத்தில் நடந்த பிரமாண்டமான வெற்றி விழாவில் ‘பளபள’வென்று மின்னிக் கொண்டிருந்த வீரவாளை நாவலர் நெடுஞ்செழியன் எம்.ஜி.ஆருக்கு பரிசளித்தார்.
நடிகர்கள் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, டி.கே.பகவதி, கவிஞர் கண்ணதாசன், டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமி போன்றோர் விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள்.
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு மதுரை வந்த எம்.ஜி.ஆர் நான் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்கும் வரநேர்ந்தது. அவரது முன்னிலையில் பேசிய மூன்று மாணவர்களில், எனது பேச்சு அவரை மிகவும் கவர்ந்தது. அது சினிமாவைப் பற்றிய பேச்சு. ஆனால், பாராட்டுரை அல்ல. நடைமுறை யதார்த்தத்திலிருந்து தமிழ் சினிமா எவ்வளவு தூரம் விலகிப் போலித்தனமாயிருக்கிறது என்பதைப் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய விமரிசன உரை அது. சினிமாத்துறையின் மிக மிக முக்கியமான மனிதரின் முன்னிலையில் தைரியமாக விமரிசித்து, தயக்கம் ஏதுமின்றிப் பேசினேன்.
எனக்கு அப்போது உனக்குள்ளதைப் போன்ற சினிமாக் கனவுகள் ஏதுமில்லை. ஆனால், அதன்மீது நேசம் இருந்தது. நமது சினிமா தமிழுக்குப் பெருமை சேர்க்கவில்லை என்கிற ஆதங்கம் இருந்த்து. அப்போது என்மீது விழுந்த எம்.ஜி.ஆரின் கவனம் ஐந்தாண்டுகளுக்குக் பிறகு, நான் ஒரு நிருபராக அமர்ந்திருந்த சந்திப்பின் போது என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்கிற அளவுக்குக் கூர்மையாக இருந்த்து.
Director - mahendran
தி இந்து
மதுரையில் 61 வயது விநோத ரசிகர்
எம்ஜிஆருக்கு அதிக ரசிகர்கள் கொண்ட ஊர் மதுரை. எம்ஜிஆர் ரசிகர்களை மகிழ்விக்க இங்குள்ள திரையரங்குகளில் இன்றும் மாதம் 2 முறை எம்ஜிஆர் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த படங்க ளுக்கு இன்றைய நட்சத்திர நடி கர்கள் படங்களுக்கு இணையான வரவேற்பு, வசூல் கிடைக்கிறது. அந்தளவுக்கு எம்ஜிஆர் வாழ்ந்த நாட்களிலும் சரி, இறந்தபிறகும் சரி மதுரையில் அவரது ரசிகர்கள் அவரை ரசித்து வருகின்றனர்.
ஒரு திரையரங்கில் எம்ஜிஆர் படம் திரையிடப்பட்டால் அந்த தகவலை எல்லா ரசிகர்களுக்கும் தெரியப்படுத்துவது, அவர்களை ஒருங்கிணைப்பது, திரையரங்கு முன் கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என இளம் நடிகர் ரசிகர்களுக்குப் போட்டியாகத் திகழ்கிறார் மதுரையை சேர்ந்த 61 வயது எம்ஜிஆர் ரசிகர் தமிழ்நேசன். இவர் மதுரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை கிராமம். குடும்பத்தினர் அங்கு வசிக்கின்றனர். இவர் 15 ஆண்டுகளாக மதுரை கே.கே.நகர் விடுதியில் அறை எடுத்து தங்கி யிருக்கிறார். இவர் தங்கியிருக்கும் அறை முழுவதுமே எம்ஜிஆர் படங்கள் மயமாக இருக்கின்றன.
அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் எம்ஜிஆர் நினைவாக அவரது பட ஸ்டிக்கர், படங்களை ஒட்டி வைத்துள்ளார். சுவிட்ச் பாக்ஸ், சேவிங் செட், பவுடர் டப்பா, மின் விசிறி, டி.வி., ரிமோட், புத்தகங் கள், காலண்டர், கைக்கடிகாரம் உட்பட அனைத்து பொருட்களிலும் எம்ஜிஆர் ஸ்டிக்கர், படங்களை ஒட்டிவைத்துள்ளார். அந்த காலம் முதல் தற்போதுவரை எம்ஜிஆர் படத்தின் டிக்கெட்டுகளை சேகரித்து வைத்துள்ளார். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் எம்ஜிஆர் படத்துக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்கிறார்.
இதுகுறித்து தமிழ்நேசன் கூறியதாவது: 9-ம் வகுப்பு படிக்கும் போது வீட்டுக்குத் தெரியாமல் எங்க காட்டுல இருக்கிற பருத்தி யைப் பறித்து எடைக்குப் போட்டு அந்த பணத்தில் டி.கல்லுப்பட்டி டூரிங் தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த ‘முகராசி’ படம் பார்த்தேன். அன்று முதல் எம்ஜிஆர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு இன்றுவரை தொடர்கிறது. எம்ஜிஆர் நடித்த 134 படங்களை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு படத்தையும் எத்தனை முறை பார்த்தேன் என்பதை கணக்கு வைத் துக்கொள்ள முடியாத அளவில் பார்த்துள்ளேன். எம்ஜிஆரின் அனைத்து படங்களின் பாட்டுப் புத்தகங்களையும் வைத்துள்ளேன். எல்லா படங்களின் பாடல்க ளையும் மனப்பாடமாக என்னால் பாடமுடியும். எந்தெந்த படத்தில் எம்ஜிஆர் என்னென்ன வேடங்க ளில் நடித்தார் என யோசிக்காம லேயே கூற முடியும். மதுரையில் பெரிய நடிகர்கள் படம் போட்டு நஷ்டமடைந்த திரையரங்கு உரி மையாளர்கள், அடுத்து எம்ஜிஆர் படத்தைப் போட்டு அந்த நஷ்டத் தை ஈடுகட்டுவார்கள் என்றார்.
எம்ஜிஆர் நூலகம் அமைப்பேன்
தமிழ்நேசன் கூறியது: என் ஓய்வூதியத்தில் பாதியை வீட்டுக்கு கொடுத்துவிடுவேன். மீதி பணத்தில் என்னுடைய செலவு போக எம்ஜிஆர் நினைவு நாள், பிறந்த நாட்களில் நலிவடைந்தவர்களுக்கு உதவுவேன். எம்ஜிஆர் பிறந்த நாள், நினைவு நாளில் சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டுக்கும், கடற்கரையில் இருக்கும் நினைவிடத்துக்கும் செல்வேன். எம்ஜிஆரை ஒரே ஒருமுறை மட்டும் பார்த்துள்ளேன். மதுரையில் உலக தமிழ் மாநாட்டுக்கு வந்த எம்ஜிஆர் கையை தொட்டு மகிழ்ந்தேன். எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள், நாளிதழ்கள் செய்திகளை சேகரித்து வைத்து வருகிறேன். அவற்றைப் பத்திரப்படுத்தி எதிர்காலத் தலைமுறையினர் எம்ஜிஆரைப் பற்றி தெரிந்துகொள்ள மதுரையில் விரைவில் ‘எம்ஜிஆர் நூலகம்’ அமைப்பது என்னுடைய திட்டம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
So many thanks to our prestigious newspaper" The Hindu" Tamil...Super article ... Thanks again to Hindu- Editor Mr. Asokan sir, & Journalist Mr. Sridhar Swaminathan sir...Always Live the Fame of Emperor of Cinema World, & Politics World "Bharat Ratna" Makkalthilagam MGR.,
Hello viewers, easy method for mayyam.com log... http:// anonymouse.org and then http://www.mayyam.com thank you...
ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய தொகுப்பு
கூண்டுக்கிளி - மக்கள் திலகம் & நடிகர் திலகம் இணைந்து நடித்த ஒரே படம் .
நாடோடி மன்னன் - 1958ல் இமாலய வெற்றி அடைந்து மதுரை மாநகரில் பிரமாண்ட வெற்றி விழா கொண்டாடிய படம் .
நல்லவன் வாழ்வான் - மக்கள் திலகத்தின் 50 வது படம் . பேரறிஞர் அண்ணா அவர்களுடன் இணைந்த 2வது படம் .
குடும்பத்தலைவன் - தேவரின் தாயை காத்த தனயன் படம் வெளிவந்த 4 மாதத்தில் தேவரின் இன்னொரு படமாக வந்த படம் .
பாசம் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த படம்.
நீதிக்கு பின் பாசம் - மக்கள் திலகம் வக்கீலாக நடித்த படம் . சோக காட்சியிகளில் பிரமாத சோபித் திருப்பார் .
கலங்கரை விளக்கம் - எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .மக்கள் திலகம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்த படம் .
தாலி பாக்கியம் - கிராமத்து கதை .மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் வந்த படம் .
கணவன் - மக்கள் திலகம் எழுதிய கதை . சில காட்சிகளில் இடம் பெற்ற உரையாடல்கள் இன்றைய அரசியல் சூழ் நிலைக்கு பொருத்தமாக இருப்பது மூலம் மக்கள் திலகம் ஒரு தீர்க்கதரசி என்பதை உணராலாம் .
தேடிவந்த மாப்பிள்ளை - பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த பொழுது போக்கு சித்திரம் .
பட்டிக்காட்டு பொன்னையா - மக்கள் திலகத்தின் இரட்டை வேடத்தில் வெளிவந்த இனிமையான படம் .
இதயக்கனி - 1975ல் வசூலில் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கிய காவியம் .
மீனவ நண்பன் - மக்கள் திலகம் தமிழக முதல்வராக பதவி ஏற்ற பின்னர் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி படம் .
எம்ஜிஆர் என்ற பெயருக்கு அப்படி என்ன காந்த சக்தி உள்ளதோ தெரியவில்லை, அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் அவர் மீதான கிரேஸ் குறையவில்லை. முகத்தை பார்த்த உடனே வசீகரிக்கும் ஆற்றலை கொண்டவர் எம்ஜிஆர். அவர் நடித்து வெளியான திரைப்படங்களும், முதல்வராக அவரது ஆட்சி முறையும் இணைந்து எம்ஜிஆருக்கு மலைபோன்ற ஒரு பிம்பத்தை மக்களிடம் கொடுத்துள்ளன. அதிலும் அதிமுக தொண்டர்களின் நாடி நரம்பெல்லாம் எம்ஜிஆர்தான் நிறைந்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., என்ற மூன்றெழுத்து மந்திரம், அவர் காலமாகி, கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகியும், தமிழக மக்களால் இன்றும் ஜெபிக்கப்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், மெத்தப் படித்தவர்களும், மேட்டுக்குடி மக்களும் அல்ல; உதிரத்தை வியர்வையாக்கி உழைத்து, பிழைக்கும் அடித்தட்டு மக்களின் மனதில், அவர் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான்!
சினிமா மோகத்தால் மட்டுமே, அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என சிலர் சொல்வதுண்டு. அதுமட்டுமே காரணமாயிருந்தால், வெள்ளிதிரையில் இருந்து வந்த நட்சத்திரங்கள் எல்லாம், அரசியலில் ஜொலித்திருக்க வேண்டுமே... சினிமா என்பதையும் தாண்டி, அவரிடம் உள்ள, 'காந்த சக்தி' தான், மக்களை அவர்பால் ஈர்த்தது; ஈர்த்துக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆரிடம் நெருங்கிப் பழகிய எத்தனையோ பெரிய மனிதர்களும், தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து அவரை பார்த்து, ரசித்த என்னைப் போன்ற லட்சக்கணக்கான ரசிக, ரசிகைகளும் இன்றளவும் எம்.ஜி.ஆரை நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதில் மதுரை மக்கள், மக்கள் திலகத்தின் மீது எல்லையில்லாத அன்பு கொண்டவர்கள். என் சிறுவயது சம்பவம் ஒன்று...
ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக எம்.ஜி.ஆர்., எங்கள் பகுதிக்கு வரவிருப்பதாக தகவல் வந்தது. காலையில் இருந்தே சாலை ஓரத்தில் அவர் வருகையை எதிர்நோக்கி தவம் இருந்தனர் மக்கள்.
'எம்.ஜி.ஆர்., இதோ வந்து கொண்டிருக்கிறார்.... இப்போது வந்து விடுவார்...' என்று கூறிக் கூறியே பொழுது போனது. ஆனால், காத்திருந்த கூட்டம் மட்டும் நகரவேயில்லை. எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக, 10 வயதான என் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார் என் அம்மா. எம்.ஜி.ஆர்., வரும் வரை கூட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த என் அண்ணன் காலில் முள் குத்தி விட்டது. அதனால், மாலை, 06:30 மணிக்கு மேல் வந்த எம்.ஜி.ஆர்., காரில் அந்தப் பகுதியை தாண்டும் போது ஓடி போய் பார்க்க முடியவில்லை. இதனால், 'எம்.ஜி.ஆரை பார்த்தே ஆகணும்'ன்னு அழுது அடம்பிடித்தார். முள் குத்தியிருந்த என் அண்ணனை, இடுப்பில் தூக்கி கொண்டு, 2 கி.மீ., தூரம் தள்ளி இருந்த பிரசார மேடை பகுதிக்கு அழைத்து சென்று காட்டினார் என் அம்மா. அதன்பின் தான், என் அண்ணன் முகத்தில் சிரிப்பைக் காண முடிந்தது.
இதேபோன்று, எங்கள் பகுதியில், வீட்டு வேலை செய்யும் ஒரு வயதான பாட்டி இருந்தார். அவர், எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பற்று கொண்டவர். அவரை சீண்ட வேண்டுமானால், எம்.ஜி.ஆரைப் பற்றி ஏதாவது சொன்னால் போதும்... அந்தப் பாட்டிக்கு வரும் கோபம் இருக்கிறதே... அதை சொல்ல முடியாது.
உடல்நலக் குறைவு காரணமாக, எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அவருக்காக நடந்த பிரார்த்தனைகள் ஏராளம். குறிப்பாக, ஒளிவிளக்கு படத்தில், 'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...' என்ற பாடல், காலையில் ஒலிக்கத் துவங்கினால், இரவு வரை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அப்பாடல், அப்போது, கிட்டதட்ட தமிழக மக்களின் தேசிய பாடல் போலாகிவிட்டது டிச., 24, 1987ல் எம்.ஜிஆர்., இறந்த போது, தமிழகமே கதறி அழுதது.
அவர் உயிர் நள்ளிரவில் பிரிந்ததால், காலையில் வெளிவரும் தினசரி நாளிதழ்களில், அவரின் இறப்பு செய்தி வெளியாகவில்லை. தூர்தர்ஷன், 'டிவி' மூலம் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், 'தினமலர்' நாளிதழ், 'ரத்தத்தின் ரத்தங்களே... விடைபெறுகிறேன்...' என வாசகங்கள் அடங்கிய போஸ்டரை, சென்னை முழுவதும் ஒட்டி, மக்கள் திலகத்தின் மறைவை வெளிபடுத்தியது. அத்துடன், இந்த போஸ்டர் விஷயம், தினமலர் - வாரமலர் இதழில் கட்டுரையாக வெளிவந்தது, இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது.
எம்.ஜி.ஆரின் இறுதி பயணம், வங்கக்கடல் ஓரத்தில் நடந்த போது, அதை, 'டிவி'யில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து, கண்ணீர் சிந்தி, கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினர் மக்கள்.
பின், ஒவ்வொரு ஆண்டும், அவரது நினைவு நாளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்துவது இன்றளவும் தொடர்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகர்கள், அவர் மறைந்த, டிச., 24ல், மாலை அணிந்து, விரதமிருந்து, நடை பயணமாக மதுரையிலிருந்து, சென்னைக்கு சென்று, அவரது பிறந்த நாளான ஜன., 17ல், அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவர். அந்த அளவிற்கு அவர்மீது அளவு கடந்த பக்தி கொண்டவர்கள்.
இன்றைய அரசியல்வாதிகள் கட்சிப் பாகுபாடின்றி, ஓட்டுக்காக எம்.ஜி.ஆர்., பெயரை பயன்படுத்துவதிலிருந்து, எம்.ஜி.ஆர்., மீதான அபிமானமும், ஈர்ப்பும் இன்றளவும் குறையவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மதுரையில் ரிக் ஷாக்களில் இன்றும் எம்.ஜி.ஆர்., படம் தான் ஒட்டப்பட்டு உலா வந்து கொண்டிருக்கிறது. அவரது திரைப்படங்களுக்கோ சிறிதளவும் மவுசு குறையவில்லை.
இந்த அளவிற்கு, அவர் மக்களின் மனங்களில் நிறைந்துள்ளதற்கு காரணம், மக்களோடு மக்களாய் கலந்து, இயல்பாக பழகியதும், அவர்கள் மீது அவருக்கு இருந்த உண்மையான அன்பும், அக்கறையும் தான்!
எம்.ஜி.ஆர்., போல ஒரு மாமனிதரை, இனி உலகம் காணப் போவதுமில்லை; நூறாண்டு கடந்தாலும், அவர் மீதான மக்களின் அன்பும் குறையப் போவதில்லை.
courtesy — எஸ்.ஆர்.சாந்தி
காலத்தை வென்ற எம்ஜிஆர் . . .
மக்கள் திலகம் எம்ஜிஆர் உயிரோடிருந்தவரை அவரின் கருத்துக்கும் கொள்கைக்கும் வேண்டாதவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியேதான் இருந்திருக்கின்றனர், ஆட்சியிலும் சரி மற்ற விசயங்களிலும் சரி. இது மறுக்கப்பட முடியாத உண்மை.
அவரின் அழகான தோற்றத்தினால் மக்கள் அவர்பால் கவரப்படுகின்றனர் என சிலர் எண்ணியிருக்கக்கூடும். அதனால், இப்படி நினைப்போர் எதிர் தரப்பில் இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆயினும், அழகுக்கும் அப்பாற்பட்ட பல அரிய, உன்னதமான கொள்கைகளைக் கொண்டவர் எம்ஜிஆர் எனத் தெரிந்ததனால்தான் பெரும்பாலோர் அவரைத் தங்களின் இதயதில் வைத்துப் பூஜிக்கிறார்கள்.
அவர் காலமான பின், அவரின் உயிலைப் படித்து உள்ளம் உருகி அதனால் ஈர்க்கப்பட்டோரும் உண்டு. ஊடல் நலக் குறை உள்ளோருக்கு அவர் விட்டுச்சென்றது போல் வேறு யாரேனும் செய்யக்காணோம். வாய் நிறைய பலர் பேசலாம். செயலில் காட்டி சிகரத்தைத் தொட்டவர் பொன் மனச் செம்மல் எம்ஜியார் அவர்கள் மட்டுமே.
தனி நாடு கோரி பல இடர்பாடுகளில் சிக்கித் தவித்த இலட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வு ஏற்படும் என பெரிதும் நம்பினார். ( பின்னாளில், அவர் ஆட்சியில் இல்லாதபோது ஏற்பட்ட போரைத் தடுக்க முடியாது அந்த இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிர் பலியை பார்க்க நேர்ந்தது தமிழகம்).
காலத்துக்கேற்ப தன்னை புதுமையாக காட்டியவர் எம்ஜிஆர். ராஜா ராணி பாணியிலான காலங்களில் இருந்து சமூக படங்களில் 'பேண்ட் சூட்' என கண்களைக் கவரும் வண்ணம் திரையில் தோன்றி பார்ப்போரைக் கவர்ந்தவர் அவர்.
“ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை….” ஏன அவர் பாடியபோது, அவரை தங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி உள்ளம் குளிர்ந்த பெரியோர் பலர்.
60ம் ஆண்டுகளில், எனக்கு விவரம் தெரிந்து கண்கூடாக நான் கண்ட உண்மை இது. அவர் அங்கே செய்யும் ஒவ்வொரு நல்ல விசயமும் இங்கே நமது நாட்டிலும், வேறு பல அயல் நாடுகளிலும் எதிரொலித்தது. அதுவே அவரின் புகழை உச்சிக்கு கொண்டு சென்று சேர்த்தது. இது ஒரு நடிகராக இருப்பதனால் மட்டுமே சாதிக்க முடியாத ஒன்று. அதையும் தாண்டி உயர்தர எண்ணம் கொண்டோர் மட்டுமே இதுபோன்ற இமாலய சாதனைகளைச் செய்ய இயலும்.
இப்போது நம் நாட்டில் உள்ள மற்ற இனத்தவரிடம் தங்களுக்கு பிடித்த ஒரு நடிகரை சொல்லச் சொன்னால், அவர்கள் சொல்வதில் தமிழ் நடிகர்கள் பெயர் இடம் பெறுவது அபூர்வமானாதாக இருக்கும். சிலருக்கு ரஜினியைத் தெரிந்திருக்கலாம். ஆனல், அன்று கிட்டத்தட்ட அனைவருக்கும், அதாவது மலாய், சீன இனத்தவருக்கும் எம்ஜிஆரைத் தெரிந்திருந்தது. தோட்டப் புறங்களில் திரையிடப்பட்ட அவர் படங்களை சீனர்களும் மலாய்க்காரர்களும் ஆர்வத்தோடு அமர்ந்து கண்டு களித்தனர். இது மக்கள் திலகத்துக்கே உரிய தனிச் சிறப்பு.
அவர் திரையில் பாடிய "ஹெல்லோ மிஸ் ஹெல்லோ மிஸ் எங்கே போரீங்க..." எனும் பாடலை அந்த காலத்தில் பாடதவர்களே இல்லை எனலாம். எல்லா இனத்தவர் வாயிலும் புகுந்து விளையாடிய பாடல் இதுவாகும். இதுவும் எம்ஜிஆர் சிறப்புகளில் ஒன்று. வேறு எந்த நடிகரின் பாடலுக்கும் இப்படி ஒரு காந்த சக்தி இருந்ததாக நான் பார்த்ததும் இல்லை, கேள்வி பட்டதும் இல்லை.
அவரின் பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தைப் போல் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் பல. அதே கதை, அதே பாணியிலான நடிப்பு. திரைக்கதைகளில் மட்டுமல்ல, சினிமாவில் அவர் கையாண்ட பல விசயங்களையும் பின்பற்றுவோர் இன்று நிறைய உண்டு. அப்படி பின்பற்றி வெற்றிபெற்றோரும் அதிகம்.
அன்றைய நடிகர்களில் சுறுசுறுப்பாக திரையுலகில் ஆட்சி புரிந்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். ஸ்டன்ட் நடிகர்களின் வயிற்றுப் பிழைப்புக்காகவே தனது எல்லாப் படங்களிலும் சண்டைக் காட்சிகளை வைத்த ஒரே நடிகர் இவர்தான் எனலாம். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்ஜிஆர் பாடல்களில் புத்துணர்வு பெருகும். ஆது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி. எதிர் மறை எண்ணங்கள் எங்கேயும் இல்லாது பார்த்துக் கொண்டார். மற்ற நடிகர்களைப் போல ஒரு சில பக்கங்களில் இவரின் இசையார்வத்தை வெளிப்படுத்திவிட முடியாது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காதுக்கினிய இசையுடன் திரையில் ஒலிக்கச்செய்த மாபெரும் கலைஞர் இவர்.
'டி.எம்.எஸ்ஸின்' குரல் வலிமையை வெளிக்கொணர்ந்தது எம்ஜிஆருக்காக அவர் பாடிய பாடல்களே. அதன் பின்னர் மற்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்து பேரும் புகழும் பெற்றார் 'டி.எம்.எஸ்'. அதே நேரத்தில் எம்ஜிஆர் யாரையும் சார்ந்து அவர்களது கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. இதற்கு உதாரணமாக இன்றும் நம்மிடையே கம்பீரமாக உலாவருபவர்தான் எஸ் பி பாலா.
‘கண் கவரும் சிலையே, காட்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே…”
எனும் மென்மையான குரலும் ஒத்துப்போகும்.
‘பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று….’
ஏனும் வித்தியாசமான குரலும் ஒத்துப்போகும்.
இதற்குக் காரணம், எம்ஜியாரின் பாடல்களை யார் பாடினாலும், படத்தைப் பார்த்த அடுத்த சில தினங்களில் அந்தப் பாடலை எம்ஜிஆர் அவர்களே பாடுவது போல தோன்றியதால்தான். அப்படி ஒரு மகிமையை எம்ஜிஆர் கொண்டிருந்தார்.
பூவோடு சேர்ந்து தங்களை மணக்கச்செய்தவர் பலர். அவர்கள் அனைவரும் நன்றியோடு பார்ப்பது பொன் மனச் செம்மலை. இப்போதும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என தங்களது மலரும் நினைவுகளில் அவரை குறிப்பிடத் தவறுவதில்லை.
“காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ…….”
courtesy - ராஜ்பாவ்