டியர் SoftSword,
அப்படி ஒரு படத்தைத் தனித்துக் கூறுவது என்னைப் பொறுத்தவரை மிக மிகக் கடினம். பெருமதிப்பிற்குரிய நமது நண்பர் திரு.பார்த்தசாரதி அவர்கள் குறிப்பிட்டது போல், நடிகர் திலகம் நடித்த 306 திரைப்படங்களில், குறைந்தபட்சம் சற்றேறக்குறைய 150 படங்கள் அவசியம் பார்க்க வேண்டியவை.
நடிகர் திலகம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும், 'என் உயிரும், உள்ளமும், உணர்வும் இந்தப் படத்தில் தானே' என்று தான் நடித்த ஒரு படத்தைப் பற்றி கருத்து கூறியிருக்கிறார். அந்தப் பெரும் பெருமைக்குரிய பொற்காவியம் "கப்பலோட்டிய தமிழன்".
இன்று இரவு "வீரபாண்டிய கட்டபொம்ம"னை தரிசிக்கப் போகும் தாங்கள் நாளை இரவு "கப்பலோட்டிய தமிழ"னை தரிசியுங்கள்.
ஈரேழு பதினான்கு லோகங்களிலும் நடிகர் திலகமே தலைசிறந்த நடிகர் என்பது எந்தவித சந்தேகமுமின்றிப் புரிய வரும்!
தங்களுக்கு தற்பொழுது இருக்கும் தேசபக்தி இன்னும் பற்பல மடங்கு உயர்ந்துவிடும்.
'ஒரு' நடிகர் திலகத்தின் படம் என்று நீங்கள் கேட்டதால், நான் உங்களுக்கு அன்புடன் பரிந்துரைப்பது "கப்பலோட்டிய தமிழன்".
அன்புடன்,
பம்மலார்.