ராகவ் ஜி... Thanks for T.M.S. version of Venkittu ..
அப்படியே சுசீலாம்மா வெர்ஷனையும் கொடுங்க ஜி..
ஆடை துவைக்க ஆள் கிடைத்தானே.. கிடைத்தானே..
அதுதான் இனிமேல் பிரம்ம்மாதம் பிரம்மாதம்...
Printable View
ராகவ் ஜி... Thanks for T.M.S. version of Venkittu ..
அப்படியே சுசீலாம்மா வெர்ஷனையும் கொடுங்க ஜி..
ஆடை துவைக்க ஆள் கிடைத்தானே.. கிடைத்தானே..
அதுதான் இனிமேல் பிரம்ம்மாதம் பிரம்மாதம்...
மது சுசீலா version ready யாக இல்லை. கூடிய விரைவில் தேடித் தருகிறேன்.
பொங்கும் பூம்புனல்
பொதுவாக ஒருவரைத் திட்டும் போது நீயெல்லாம் ஒரு மனுஷனா என்று கேட்போம்.. ஆனால் காதலர்கள் இருவர் ஒருவருக்கொருவர் தங்களைத் தாமே இவ்வாறு பாடுவதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா..
அப்படித்தான் துவங்குகிறது இப்பாடல்.. பாதியில் இருவரும் கருத்தொருமித்து நானும் ஒரு ஜீவனே எனதும் ஒரு ஹ்ருதயமே என கூறுவதைக் கேளுங்கள்..
1956ம் ஆண்டு வெளிவந்த மறுமலர்ச்சி திரைப்படத்திலிருந்து..
http://www.inbaminge.com/t/m/Marumalarchi%20OLD/
பொங்கும் பூம்புனல்
பராசக்தி வெளிவந்த 1952ம் ஆண்டின் திரைப்படப் பாடல்கள் எப்படியிருக்கும் என்று லேசாக ஒரு எண்ணம் நம்மில் பலருக்கு ஒரு கட்டத்தில் தோன்றியிருக்கும்..
முதன்முதலாக குரலில் yardling கொண்டு வந்தவர் கிஷோர் குமார் என்பார்கள். ஆனால் உண்மையில் 1952ல் சந்திரபாபு அவர்கள் சின்னதுரை படத்தில் இடம் பெற்ற போடா ராஜா பொடி நடையாக என்ற இந்தப் பாடலிலேயே அதனைச் செய்து விட்டார்...
சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்...கேளுங்கள்...
பாடலிலுள்ள கருத்தையும் கவனியுங்கள்..
http://www.inbaminge.com/t/c/Chinnadurai/
பொங்கும் பூம்புனல்
http://www.inbaminge.com/t/j/Jameendhar/
ஆஹா.. வெறும் கிடாரை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பாடலை இசையமைத்தால் அது நிச்சயம் மெலோடியாகத் தான் இருக்கும். புதுமையாகத் தான் இருக்கும். இதுவும் 1952லேயே நடந்துள்ளது. ஜமீன்தார் படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி டூயட் பாடலான வானில் நிலாவுமே உலாவுதே... இந்தப் பாடல் கேட்கும் பொழுதெல்லாம் பரவசமூட்டும் பாடல்.. தாள இசைக்கருவிகள் ஏதுமின்றி முழுப்பாடலையும் கிடாரை மட்டுமே வைத்து தந்திருப்பது ஆஹா...ஓஹோ.. பேஷ் பேஷ் என நம்மை ரசிக்க வைக்கிறது.
கேளுங்கள்..
பொங்கும் பூம்புனல்
சக்ஸஸ் சக்ஸஸ்.. இந்த வார்த்தைகளுடன் தொடங்கிய ஒரு கலைஞனின் வாழ்க்கை அதை நிரூபித்தும் விட்டது... 1952ல் பராசக்தியில் தொடங்கிய நடிகர் திலகத்தின் சக்ஸஸ், இறுதி வரை அப்படியே தொடர்ந்தது.
அந்த சக்ஸஸ் ஒரு பாடல் முழுதுமே ஒலித்ததும் 1952ல் தான்... கல்யாணி திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலும் சூப்பர் ஹிட். இதில் டக்டக்டக் என்ற பாடலும் மிகப் பிரபலம். சக்ஸஸ் பாடல் மிகவும் பிரபலமானது என கேள்விப் பட்டுள்ளேன். யாராவது ஏதாவது கேட்டால் வரும் பதில் இந்த சக்ஸஸ் பாட்டாகத் தான் அந்தக் காலத்தில் இருக்குமாம்.
நீங்களும் கேளுங்களேன்.. இன்று மட்டுமின்றி என்றுமே நீங்கள் சக்ஸஸைப் பெற வேண்டும். அதற்கு இப்பாடல் உறுதுணையாக இருக்கட்டும்.
http://www.inbaminge.com/t/k/Kalyani%201952/
அநைத்துப் பாடல்களையும் கேட்டுப் பாருங்கள். மிகவும் விரும்புவீர்கள்.
பொங்கும் பூம்புனல்
சி.ஆர். சுப்பராமன்... இன்னும் நீண்ட நாட்கள் இருந்திருக்கக் கூடாதா என ஏங்க வைத்த இசையமைப்பாளர்.. வித்தியாசமான மெட்டுக்கள் ... இசைக் கருவிகளின் பிரயோகங்கள்.. இவரிடம் மெல்லிசை மன்னர் பெற்ற பயிற்சி இன்று வரை இவரை அசைக்க முடியாத உயரத்தில் இடத்தில் வைத்திருக்கிறது என்பதே சி.ஆர்.எஸ். சிறப்பிற்கு சான்று.
இவர் இசையமைத்த இந்த தர்மதேவதா படத்தில் இடம் பெற்ற லம்பாடி லம்பாடி என்ற இப்பாடல் வித்தியாசமாக அமைக்கப் பட்டிருக்கிறது. தாளம் திடீரென்று வேகமெடுக்கிறது. எப்போது என்பது நாமே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் அந்த அளவிற்கு smooth transitionல் வேகமெடுக்கிறது இப்பாடல். ஜிக்கியின் குரலில் இப்பாடலைக் கேட்கும் பொழுது நாம் இந்த வித்தியாசத்தை நன்றாக உணர்வோம்.
http://www.inbaminge.com/t/d/Dharma%20Devatha/
TO DAY'S PIC & SONG
http://i61.tinypic.com/2j65s78.jpg
http://youtu.be/6xgzRMWtw08