-
12th August 2014, 06:43 AM
#3591
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
madhu
சர்ர்ரிய சொன்னீங்க.. அவங்க மட்டும் நளினமாக ஆடியிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க.. "பொன் மகள் வந்தாள்" பாட்டுக்கு அபினயத்துல ரெண்டு வெட்டு வெட்டுவாங்க.. தியேட்டர்ல ஒரு பாட்டி "ஏன் இப்படி ஆடறா ? ஃபிட்ஸ் வந்துடுச்சா?" என்று கேட்டு ஆடியன்ஸை அலற வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
பாட்டியின் கமெண்ட் சூப்பர்
விஜி அழகு தான் மது அண்ணா.. ஆம்பள சிஐடி சகுந்தலாவிற்கு விஜி 100% பெட்டர்
-
12th August 2014 06:43 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 06:57 AM
#3592
Senior Member
Diamond Hubber
பத்மினி பிரியதர்சினி ?
நெஞ்சம் மறப்பதில்லை இளைய ஜமீந்தாரிணியா நடிச்சாங்களே ? அவங்களா ?
பி.சுசீலா தேன் சொட்ட பாடிய "என்னாளும் வாழ்விலே" பாட்டு மாதிரியே ஏறக்குறைய அதே டியூனில் பாட தன் மனைவி ஜிக்கிக்கும் ஒரு சான்ஸ் ஏ.எம்.ராஜா "விடிவெள்ளி" படத்தில் கொடுத்திருப்பார்.
அந்தப் பாட்டுக்கு நடனம் ஆடுவபரும் அவரேதானா ?
-
12th August 2014, 07:01 AM
#3593
Senior Member
Seasoned Hubber
உள்ள(த்)தை அள்ளித்தா
5000 பதிவுகளைக் கடந்து வெற்றி நடை போடும் வாசு சாருக்கு என் உள்ளம் கனிந்த பாராட்டுப் பதிவினைத் தொடர்ந்து இப்பாடல் அவருக்காக அளிக்கப் படுகிறது.
திரியின் நாயகனிலிருந்து மய்யத்தின் மய்யமாக விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஆவலுடன் காத்திருக்கிறோம்.
தங்களுக்காக பழைய எல்லாம் இன்ப மயம் படத்திலிருந்து ஏ.எம்.ராஜா பி.லீலா குரல்களில் வண்டும் மயிலும் என்ற இனிமையான பாடல் தரமான ஒலிப்பதிவில்
https://www.mediafire.com/?np9ud5inwwk5gyt
Last edited by RAGHAVENDRA; 12th August 2014 at 07:06 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th August 2014, 07:06 AM
#3594
Junior Member
Newbie Hubber

Originally Posted by
madhu
சர்ர்ரிய சொன்னீங்க.. அவங்க மட்டும் நளினமாக ஆடியிருந்தா எங்கேயோ போயிருப்பாங்க.. "பொன் மகள் வந்தாள்" பாட்டுக்கு அபினயத்துல ரெண்டு வெட்டு வெட்டுவாங்க.. தியேட்டர்ல ஒரு பாட்டி "ஏன் இப்படி ஆடறா ? ஃபிட்ஸ் வந்துடுச்சா?" என்று கேட்டு ஆடியன்ஸை அலற வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
அடடா ....அல்வா மாதிரி பாயிண்ட் எடுத்து கொடுத்த மது ,வாசுதேவா உங்களுக்கு நன்றி. மேலும் எவ்வளவோ சொல்ல நாவு துடித்தாலும்,ஜோதியின் ரசிகன் என்றாலும்,திரியில் இருந்து சற்றே ஓய்வெடுக்கும்,கார்த்திக்கை சீண்ட வேண்டாம் (இல்லாத போது)என்ற நல்லெண்ணத்தால் தற்போது ,இச்சையை தள்ளி வைக்கிறேன்.
-
12th August 2014, 07:06 AM
#3595
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் வெளிவந்த பாடகர் திலகம் இசையரசி டூயட்கள் என்றைக்குமே தனித்தன்மையுடன் காலம் காலமாய் நினைவில் நிற்பவை. அப்படி ஒரு பாட்டுத் தான் பட்டத்து ராணி படத்தில் இடம் பெற்ற இப்பாடல்.
கேளுங்கள் உணருங்கள்
http://www.inbaminge.com/t/p/Pattathu%20Rani/
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 07:08 AM
#3596
Junior Member
Newbie Hubber
[QUOTE=RAGHAVENDRA;1155207]பொங்கும் பூம்புனல்
மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் இசையில் வெளிவந்த பாடகர் திலகம் இசையரசி டூயட்கள் என்றைக்குமே தனித்தன்மையுடன் காலம் காலமாய் நினைவில் நிற்பவை. அப்படி ஒரு பாட்டுத் தான் பட்டத்து ராணி படத்தில் இடம் பெற்ற இப்பாடல்.
QUOTE]
Thank you Sir. My Day is done.
-
12th August 2014, 07:10 AM
#3597
Senior Member
Seasoned Hubber
உள்ள(த்)தை அள்ளித்தா
வேதா ... இவர் பெயரைச் சொன்னாலே அந்தக் கால இளைஞர்களின் நெஞ்சில் தனி ஈர்ப்பு உண்டாகும். இவரின் இசை பெரும்பாலான இளைஞர்களை சுண்டி இழுத்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் காதல் பறவை. 1967ம் ஆண்டு வெளிவந்த இப்படப் பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவை. இவை ஒலிக்காத இடமே இல்லை எனலாம். துரதிருஷ்டவசமாக இது வரை மறுவெளியீடு காணாத இப்படத்தின் பாடல்கள் கேட்கும் போதே படத்தைப் பார்க்கத் தூண்டும்.
வேத காலப் பிராணியைப் பாரு வெங்கிட்டு என்பது இவரது பேரு... நண்பர்கள் வட்டாரத்தில் அந்தக் காலத்தில் ஒருவனைக் கிண்டல் செய்ய வேண்டுமென்றால் வெங்கிட்டு என்று நக்கலாக சொல்வார்கள். இந்தப் படப் பாடலின் தாக்கம் அவ்வாறு.
இணையத்தில் வேறு எங்கும் இப்பாடல் உள்ளதா தெரியவில்லை. நம் நண்பர்களுக்காக பகிரந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
https://www.mediafire.com/?vgwepbqem6d1x9a
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 07:11 AM
#3598
Junior Member
Newbie Hubber
Vasu,
Congrats. Yours deserve special mention as you took effort for all your postings. Many others achieved this mile stone but not as impressive as you did it.But my pick is enathu giramam, sivaji udai , thunai ,and efforts to start this thread.
-
12th August 2014, 07:15 AM
#3599
Junior Member
Newbie Hubber
[QUOTE=RAGHAVENDRA;1155209]உள்ள(த்)தை அள்ளித்தா
வேதா ... இவர் பெயரைச் சொன்னாலே அந்தக் கால இளைஞர்களின் நெஞ்சில் தனி ஈர்ப்பு உண்டாகும். இவரின் இசை பெரும்பாலான இளைஞர்களை சுண்டி இழுத்தது. அப்படிப்பட்ட ஒரு படம் தான் காதல் பறவை. 1967ம் ஆண்டு வெளிவந்த இப்படப் பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவை. இவை ஒலிக்காத இடமே இல்லை எனலாம். துரதிருஷ்டவசமாக இது வரை மறுவெளியீடு காணாத இப்படத்தின் பாடல்கள் கேட்கும் போதே படத்தைப் பார்க்கத் தூண்டும்.
வேத காலப் பிராணியைப் பாரு வெங்கிட்டு என்பது இவரது பேரு... நண்பர்கள் வட்டாரத்தில் அந்தக் காலத்தில் ஒருவனைக் கிண்டல் செய்ய வேண்டுமென்றால் வெங்கிட்டு என்று நக்கலாக சொல்வார்கள். இந்தப் படப் பாடலின் தாக்கம் அவ்வாறு.
இணையத்தில் வேறு எங்கும் இப்பாடல் உள்ளதா தெரியவில்லை. நம் நண்பர்களுக்காக பகிரந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
(QUOTE)
Very Famous during our childhood. Another song also "Kathal paravaigale ganam padungal padungal". Vedha, away from Modern theatres ,proved his worth in Athe kangal,kathal paravai,mana satchi.
-
12th August 2014, 07:22 AM
#3600
Senior Member
Seasoned Hubber
பொங்கும் பூம்புனல்
எஸ்.பாலச்சந்தர்..
தமிழ்த்திரையுலகிற்கு இவரது பங்களிப்பு மகத்தானது. பல புதுமைகளை அந்தக் காலத்திலேயே முயன்றவர். மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர். சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர்.. என்று பலரும் அறிந்திருப்பர்.
இவர் ஒரு தேர்ந்த பாடகர் கூட... இது எத்தனை பேருக்குத் தெரியும்...
இதற்கு சான்றாக ... இதோ ஒரு பாடல்...
இது நிஜமா படத்திலிருந்து... மாதரெல்லாம் பாடத்தில் எஸ்.பாலச்சந்தர் ஜெயலக்ஷ்மி பாடிய டூயட் பாடல்.
http://www.inbaminge.com/t/i/Ithu%20Nijama/
இந்தப் பாடலை இவரோடு பாடியுள்ள ஜெயலக்ஷ்மி இவரது சகோதரி என நினைக்கிறேன்.

Bookmarks