Mr C K
Don't worry Be happy Do contribute as usual with your humourus postings.
Printable View
Mr C K
Don't worry Be happy Do contribute as usual with your humourus postings.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
35 ஆவது சிறப்புப் பதிவு
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
(நெடுந்தொடர்)
35
பாகம் 1
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
'சபதம்'
http://cf-images.emusic.com/music/im...94/600x600.jpg
இன்றைய பாலாவின் தொடரில் சிகரங்களைத் தொட்ட பாடல். என்றுமே சிரஞ்சீவித்துவம் நிறைந்து மனமெல்லாம் சுகந்த தென்றலை இனிமையாக வீசச் செய்யும் பாடல். மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களின் வரிசையில் முன்னால் நிற்க போட்டி போடும் பாடல். நீங்கள் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் இந்த பாட்டை ஒருமுறை கேளுங்கள். பிளாட் ஆகி விடுவீர்கள். குரலினிமையா... குழலினிமையா என்று போட்டி வைத்தால் பாலாவின் குரல்தான் இனிமை என்று ஒட்டுமொத்தமுமே கூக்குரல் எழுப்பும் அளவிற்கு அவரது வசந்த சுகந்த குரலால் பாராட்டு பெற்ற பாடல். 'சபத'மிட்டு சொல்கிறேன்.
ஆமாம். 'சபதம்' (1971) படத்தில் பாலா பாடிய
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல்தான் அது.
அதற்கு முன் 'சபதம்' படத்தைப் பற்றி ஒரு முன்னோட்டம் பார்த்து விடுவோம். அதனால் இந்தத் தொடரை உங்கள் வசதிக்காக இரண்டு பாகமாகப் பிரித்து தனித்தனியே தருகிறேன். படம், கதை பற்றிய விவரங்களை ஒரு பாகமாகவும், பாடல் பற்றிய சிறப்பம்சங்களை இன்னொரு பாகமாகவும் தருகிறேன்.
தேவநாயகி பிலிம்ஸ் 'சபதம்' ஓர் அருமையான ஒரு படம். ரவிச்சந்திரன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், டி கே.பகவதி, வி.கே.ராமசாமி, சஹஸ்ரநாமம், அஞ்சலிதேவி, பண்டரிபாய் நடித்த இத்திரைப்படம் கதாநாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்த ஒரு படம். நடனத்தை சலீம் அமைத்திருப்பார். நமது பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றி இருப்பார். இயக்கம் நமது பிரிய பி.மாதவன்.
கதை
http://i.ytimg.com/vi/yPRAkU6T8zk/0.jpg
மிக நல்லவரான பெரிய மனிதர் செல்வநாயகத்திற்கு (டி கே.பகவதி) அவரைப் போலவே உருவ ஒற்றுமையும், குரல் ஒற்றுமையும் கொண்ட துரைசிங்கம் (டி கே.பகவதி) என்ற தறுதலை தம்பி. அண்ணனிடமிருந்து சொத்தை பாகம் பிரித்துக் கொண்டு குடி, காமம் என்று சொத்தை அழிக்கிறான் அவன். தம்பியின் போக்கு கண்டு, மனம் நொந்து, மறுபடியும் அவனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் செல்வநாயகம். தன் மனைவி கண் தெரியாத ராஜேஸ்வரி (அஞ்சலிதேவி), மகன் முத்து மேல் அதிக பாசம் அவருக்கு. தம்பி துரைசிங்கத்திற்கு லஷ்மி (பண்டரிபாய்) என்ற பண்பான மனைவி.
வியாபார விஷயமாக அண்ணனும் தம்பியும் வெளியூர் புறப்பட, அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்கிறான் தம்பி. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி, அண்ணனைக் கொன்றுவிட்டு, அண்ணன் வேடத்தில் வந்து நல்லவன் போல ஊரில் கபடமாடுகிறான் துரைசிங்கம். ஊரும் அவனை செல்வநாயகம் என்று பரிபூரணமாக நம்பி ஏமாறுகிறது. குழந்தையுடன் இருக்கும் தன் அண்ணியை பைத்தியம் என்று பட்டம் கட்டி அவள் வீட்டை விட்டு ஓடும்படி செய்கிறான் செல்வநாயகம்.
தன் கணக்கப்பிள்ளை வள்ளிமுத்துவின் (சஹஸ்ரநாமம்) மகள் சிவகாமி (கே.ஆர்.விஜயா) என்ற பெண்ணின் மீது காமப் பித்து பிடித்து அலைந்து, அவளை ஆசைநாயகியாய் வைத்துக் கொள்ள வள்ளிமுத்துவிடமே அனுமதி கேட்கிறான். இல்லையென்றால் கொன்று விடுவதாக பயமுறுத்துகிறான். அவன் சுயரூபம் தெரிந்து கொண்ட வள்ளிமுத்து செய்வதறியாமல் திகைத்து தூக்கில் தொங்குகிறான். (உண்மையில் துரைசிங்கத்தால் தூக்கில் தொங்கவிடப் படுகிறான்) வெளியூரில் படிக்கும் சிவகாமி தன் தந்தை இறந்த சேதி கேட்டு துடிதுடித்துப் போகிறாள். தன் தந்தையின் கடிதம் மூலம் செல்வநாயகம் ஒரு காமுகன் என்று புரிந்து கொள்கிறாள். தந்தை சாவுக்குக் காரணமானவனை பழி வாங்கத் துடிக்கிறாள். ஆனால் செல்வநாயகம் போர்வையில் இருக்கும் துரைசிங்கம் ஊர்மக்களை அப்படியே தன்னை நல்லவன் என்று நம்பும்படி செய்திருக்கிறான். இதனால் சிவகாமி துரைசிங்கம் கெட்டவன் என்று ஆதாரத்துடன் ஊர் மக்களிடம் நிரூபித்தாலும் தன் சாமர்த்தியப் பேச்சாலும், பசுத்தோல் போர்த்திய புலி நடிப்பாலும் சிவகாமியின் ஆதாரங்கள் ஒவ்வொன்றையும் உடைத்தெறிகிறான் துரைசிங்கம். அவனை அயோக்கியன் என்று ஊர் மக்கள் முன்னிலையில் விரைவில் நிரூபிப்பதாக துரைசிங்கத்திடம் 'சபதம்' போடுகிறாள் சிவகாமி.
வீட்டை விட்டு ஓடிப்போன ஓடிப்போன ராஜேஸ்வரியின் மகன் முத்து (ரவிச்சந்திரன்) வளர்ந்து பெரியவனாகி எல்லா உண்மையையும் தன் தாயின் மூலம் அறிகிறான். முத்து சிவகாமியைக் காதலித்து துரைசிங்கம் மூலம் சிவகாமி பட்ட துயரங்களை அறிந்து கொள்கிறான். பாதிக்கப்பட்ட சிவகாமி, முத்து இருவரும் கூட்டணி அமைத்து, திட்டம் போட்டு துரைசிங்கம் வீட்டில் தம்பதிகளாக நுழைகிறார்கள். இவர்களுடன் துரைசிங்கத்தின் மகன் நாகேஷும் தன் தந்தையின் கபட நாடகத்தைத் தெரிந்து கொள்ள, மூவரும் துரைசிங்கத்துடன் ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டி அவனை நிலைகுனிய வைத்து ஊருக்கு 'அவன் துரைசிங்கம்தான்...செல்வநாயகம் இல்லை' என்று புரிய வைக்கிறார்கள். இறுதியில் இறந்து போன செல்வநாயகமே உயிருடன் திரும்ப நேரில் வர, அதிர்ச்சியடைந்து தான் வாயாலேயே தன் அண்ணன் செல்வநாயகத்தைக் கொன்றதாக தன்னையுமறியாமல் ஊர் மக்கள் முன்னிலையில் கூறி காவலர் வசம் மாட்டிக் கொள்கிறான் துரை சிங்கம். ('புதிய பறவை' கோபால் போல) ஆனால் வந்தது உண்மையான அண்ணனா?..
இறுதியில் தன் 'சபத'த்தில் மாபெரும் வெற்றி காணுகிறாள் சிவகாமி.
'புன்னகை அரசி'க்கு இந்த மாதிரி சிவகாமி.ரோல் அல்வா சாப்பிடவது போல. கலக்கிவிடுவார். டி .கே.பகவதி நல்ல அண்ணனாகவும், கெட்ட தம்பியாகவும் அருமையான நடிப்பைத் தந்திருப்பார். படம் நெடுக கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சிரித்தபடியே வில்லத்தனம் புரிவது ஏ.ஒன். இந்தப் படம் சென்னையில் பாரகன், கிரௌன், புவனேஸ்வரி ஆகிய தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.
தொடரும்
பாகம் 2
http://www.stephenprayog.com/image/gkvenkatesh.jpg
இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமான தூண் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். என்ன ஒரு திறமை! இவர் நம் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு குறிஞ்சி மலர். இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகரும் கூட.
https://i.ytimg.com/vi/BAlryz7Jl2Q/hqdefault.jpg
இப்படத்தில் இடம் பெற்ற எஸ்.பி.பாலா தங்கக் குரலில் பாடிய சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான,
'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ'
பாடல் ஒன்று போதும் ஜி.கே.வெங்கடேஷ் அவரின் திறமையை காலம் முழுதும் பறைசாற்ற. நமக்கு இறப்பு என்று ஒன்று வரும்போது இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டே கண் மூடினால் கண்டிப்பாக சொர்க்கம் கிடைக்கும்.
இந்தப் பாடலின் 19 வினாடி துவக்க இசை இருக்கறதே! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இந்திரஜால இசை அது. அதைக் கேட்கும் போதெல்லாம் உடல் சில்லிட்டுத்தான் போகும். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் உன்னதம் அது.
பாலாவின் இளநீர்க் குரல் அப்படியே நம்மைக் குளிர்விக்கும். அவ்வளவு மென்மையாக இப்பாடலை அவர் ரசித்து அனுபவித்துத் தந்திருப்பார். நானெல்லாம் பாலா பைத்தியமானதற்கு முழு முதற் காரணமே இந்தப் பாடல்தான் என்று சொல்லலாம். இந்தப் பாடலைக் கேட்டால் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் அமர்ந்து விடுவேன். இந்தப் பாடலை நான் கேட்கும் போது எனக்கு எந்த இடைஞ்சலும் இருக்கவே கூடாது. இந்தப் பாடல் ஒலிக்கும் போது வீடு அப்படியே நிசப்தமாகி விடும். பாலா பாடுவது போல் அவர் வாயிலிருந்து வருவது தென்றலா, மலர்களா, கனிகளின் இனிமையோ,தேன் துளிகளின் சுவையோ என்று நமக்குள் ஒரு பெரும் குழப்பமே ஏற்பட்டுவிடும்.
பாடல் முழுக்க பாடலுடனேயே இணைந்து வரும் அந்த கிடாரின் மெல்லிய சுகம் வலியது. (டிடிங்... டிடிங்... டிங் டிங் டிங் டிங் டிங்க் என்று ஒலிக்கும்போது நாம் உணரும் சுகங்களை எழுத்தில் வடித்து விட முடியாது.) சரணங்களுக்கு முன் இடையிசை வரும்போது ஒவ்வொரு முறையும் மிகப் பொருத்தமாக இந்த இசை தொடர்வது இப்பாடலுக்கே மிக அழகும், இனிமையும், பெருமையும் சேர்க்கிறது. அதே போல எப்படி அந்த இனிமையான ஓசையுடனேயே இந்தப் பாடல் துவங்குமோ அதே இனிமையான இசையுடன் வெகு சுகமாக முடிவடையும்.
'தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று'
என்று பாலா அட்டகாசம் பண்ணிவிட்டு திடுமென்று
'உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ'
என்று வேகம் எடுப்பாரே! வாவ்! கிரேட்! அது மட்டுமா? திரும்ப அதே வரிகளை பாடும் போது 'விட்டாளோ' என்னும் போது அந்த 'ளோ' வுக்கு ஒரு நடுக்கம் கொடுப்பார் பாருங்கள். அடடா! ஹேட்ஸ் ஆப் பாலா!
http://i4.tinypic.com/15dvsie.jpg
அதே போல
'இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யாரோ
அவள் யா........ரோ'
இரண்டாம் முறை அந்த 'யாரோ' வை 'யாஆ ஆ ஆஆரோ' என்ற ரீதியில் அவர் பாடும் போது இவன்தான் பாடகன் என்று உரக்கக் கத்தத் தோணும்.
பாடல் முழுக்க மென்மையான இசையும், பாலாவின் மென்மையான குரலும் பலத்த போட்டியிலேயே இருக்கும். இதனால் காலத்தால் அழியாத இன்ப சுகம் நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
'ம் ம் ம் ம்....ஆ ஆ ஆ'.. ஆனந்த இன்ப அதிர்ச்சி! வார்த்தைகள் வரவில்லை அந்த இன்பத்தை எழுத.
பாடலின் வரிகள் பின்னிப் பெடலெடுக்கின்றன. பாருங்கள்.
'இன்று சித்திர முத்தங்கள்
சிந்திய ரத்தினம் யாரோ'
'இளம் சிட்டுமுகம் கொண்ட
பொட்டு குலம் அவள் யாரோ'
இது போன்ற அற்புதமான பாடல்களை படமாக்குவதில் கோட்டை விட்டு விடுவார்கள். ஆனால் இந்தப் பாடல் விதிவிலக்கு. பாடலின் தன்மை கொஞ்சமும் கெடாமல் அதியற்புதமாகப் படமாக்கியிருப்பார்கள். இதற்காக 'சபதம்' பட யூனிட்டிற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கலாம். அவ்வளவு அற்புதம்.
http://i60.tinypic.com/2vt37fs.jpghttp://oi62.tinypic.com/vo8lya.jpg
பல்லவி வரிகளுக்கு துண்டு கட்டிக் கொண்டு கிணற்றடியில் ரவி குளிக்க, வெகு சிம்பிளாக புன்னகை அரசி டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணி டிரேட் மார்க் சிரிப்புடன் வெட்கி, நாணி பாவம் காட்டுவது டாப்.
ஒவ்வொரு வரியையும் அனுபவித்து எடுத்திருப்பார்கள். பாடலைப் போலவே மிக மென்மையான சோப்புக் குமிழ்கள் பறக்கும் மிக எளிமையான செட் தான். ரவி தூக்கி வாரிப் படிய சீவிய சிகை அலங்கார 'விக்'கில் அட்டகாசமாக இருப்பார். மிக அழகாகப் பண்ணியிருப்பார். பாலா குரல் பாந்தமாக இவருக்குப் பொருந்தும். குளோஸ்-அப் காட்சிகளில் குறிப்பாக சைட் போஸ்களில் நடிகர் திலகத்திற்குப் பிறகு அம்சமாக காமிராக் கோணங்களுக்குப் பொருந்தக் கூடியவர் ரவி ஒருவர் மட்டுமே.
'அதை நடக்க விட்டாளோ
எனை மிதக்க விட்டாளோ'
வரிகளுக்கு மனிதர் சைட் வாங்கியபடி பக்கவாட்டில் நளினமாக லேசான பெண்மைத் தன்மையுடன் நெளிந்தபடி ஒரு நடை நடப்பார் பாருங்கள். சும்மா அள்ளும். பாடல் ஒரு பக்கம் பட்டை கிளப்பும் என்றால் ரவி வேறு அவர் பங்குக்கு அட்டகாசம் செய்வார். இந்த ஒரு பாடலில் எவ்வளவு இனிமைகளைத்தான் தாங்குவது?
இதுவரை பாலா தொடர்களில் எழுதிய பாடல்கள் மட்டுமல்லாமல் இனி எழுதப் போகும் பாலா பாடல்களுக்கும் சேர்த்து இதுதான் என்றும் முதலிடம் பெற்ற முழுமையான பாடல். இந்தப் பாடலுக்குப் பிறகுதான் பாலாவின் மற்ற பாடல்கள் எதுவாயிருந்தாலும். இதில் மாற்றமேதும் கிடையாது.
https://i.ytimg.com/vi/tZng3eguV2c/hqdefault.jpg
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று
தேரில் ஏறி தேவதை வந்து
இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
உடல் தேய்த்து விட்டாளோ
முகம் பார்த்து விட்டாளோ
இன்று சித்திர முத்தங்கள்
சிந்திய ரத்தினம் யாரோ
அவள் யா........ரோ
ம் ம் ம் ம்....ஆ ஆ ஆ..
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
காமதேனு பால் கறந்தாளோ
அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
காமதேனு பால் கறந்தாளோ
அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ
அதை நடக்க விட்டாளோ
எனை மிதக்க விட்டாளோ
அதை நடக்க விட்டாளோ
எனை மிதக்க விட்டாளோ
இளம் சிட்டுமுகம் கொண்ட
பொட்டு குலம் அவள் யாரோ
அவள் யா.........ரோ..!
ம் ம் ம் ம் ஆ ஆ ஆ..!!
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ (பாலாவின் சிரிப்பு அட்டகாசம்)
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
உடலெங்கும் குளிராவதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவதென்ன
ஆ ஆ ஆ ஆ..!
தொடுவதென்ன தென்றலோ மலர்களோ
பனியில் வந்த துளிகளோ கனிகளோ
https://youtu.be/BAlryz7Jl2Q
From Facebook
மகாராஜன் உலகை ஆளலாம்..
படம் : கர்ணன் (1964)
நடிப்பு : சிவாஜி கணேசன் & தேவிகா
பாடியவர்கள் : டி.எம்.சௌந்திரராஜன் & பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர்கள்
பாடல்கள் : கவியரசு கண்ணதாசன்
இயக்கம் : பி.ஆர்.பந்துலு
https://www.youtube.com/watch?v=DBVdIzzgwgc
தெலுங்கிலும் 'சபதம்'
http://images.boxtv.com/clips/4/3004...8_3004_q80.jpg
சூப்பர் பாடலான 'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ' பாடல் அதே மெட்டில் தெலுங்கிலும் அற்புதமாக நமது பாலாவின் குரலில் ஒலித்தது. தெலுங்கிலும் நமது 'புன்னகை அரசி' தான் நாயகி. ரவிக்கு பதில் தெலுங்கு 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணா.படத்தின் பெயர் 'கோடலு பிள்ளா'
'நன்னுதாக்கரெவ்வரோ எவ்வரோ' என்று அதே சிச்சுவேஷனில் ஒலிக்கும் பாடல். காட்சியமைப்புகள் தெலுங்கிலும், தமிழிலும் ஒன்றே. இதே 'சபதம்' படம்தான் தெலுங்கிலே 'கோடலு பிள்ளா' ஆனது. ஆனால் வெளியான ஆண்டு 1972. விஜயா 'சபதம்' படத்தை விட இன்னும் குண்டடித்திருப்பார். நன்றாகத் தெரியும். தமிழில் டி.கே.பகவதி நடித்திருந்த இரட்டை வேடத்தை தெலுங்கில் நாகபூஷணம் ஏற்று நடித்திருந்தார். தமிழிலும், தெலுங்கிலும் அதே அஞ்சலிதேவி. நாகேஷுக்கு பதிலாக ராஜ்பாபு. இசை இனிமை நாயகர் ஜி.கே.வெங்கடேஷ்தான்.
https://youtu.be/univNcTN7l0
வாசு சார்
தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா நமது ரவிசந்திரனின் பிம்பம்தான்!
டப்பிங் பட போஸ்டர்களில் கிருஷ்ணா ரவியைப் போலவே இருப்பார் !!
குழந்தைக்காக தமிழ் படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணா ஆடும் ஸ்டெப்புலு டான்சை அதன் தெலுங்கு ஆக்கத்தில் ரவிச்சந்திரன் ஆடியிருப்பார்!!
படத்தின் ஆரம்பத்தில் ஒரு டான்ஸ் வருமே வாசு சார்! கிருஷ்ணா ஆடி முடித்ததுடன் கொல்லப்பட்டு பேபி ராணி அனாதையாகி விடுவார் என்று
ஞாபகம் ...!!
இந்த டான்சை தெலுங்கில் எடுக்கும்போது ரவிச்சந்திரன் கஸ்ட் ஸ்டாராக ஆடியிருப்பார் ....எதற்கும் வெரிபை பண்ணிப் பார்க்கிறேன்!!
ஹாய் குட் ஆஃப்டர் நூன் ஆல்..
காலையிலிருந்து ஒரே மீட்டிங்க்ஸ்லில் பொழுது போனதினால் வர முடியவில்லை..
வாசு, சி.செ ஸாரி..மன்னிச்சுக்கோங்கோ ஷமிக்கணும் என்னுடைய குழந்தைத்தனமான கோபத்திற்கு..
மதுண்ணா சாக்லேட்டிற்கு நன்றி அச்சோ நான் டயட்ல இருக்கேனே
எஸ். வாசு தேவன் தாங்க்யூ..
BAGPIPER music and songs!
Quote:
பேக்பைபெர் என்றதும் அந்தக்கால உற்சாகபானமான விஸ்கி ஞாபகத்துக்கு வந்தால் உங்களுக்கு வயது 40க்கு மேல்...அது ஒரு காற்றடைத்த பையை இசைக்காக வெவ்வேறு துவாரக் குழாய்கள் வழியாக முறையாக காற்றை வெளியேற்றும் இசைக்கருவி என்று மனதில் பட்டால் உங்கள் வயது 80க்கு மேல்தான்!! அது என்னவென்றே தெரியாதென்றால் நீங்கள் இந்த இளைய தலைமுறை சார்ந்தவரே!!
இந்த இசைக்கருவியை வாசித்துத்தான் யாரோ ஒருவர் எலிகளை எல்லாம் தன பின்னால் வரவைத்து கடலில் முக்கினாராம் கதை ! எப்போதோ கேட்ட கதை!
சங்கம் இந்திப்படத்தில் நான் இந்த இசைக்கருவியை முதல்முதல் பார்த்து இசையில் லயித்தேன் !!
https://www.youtube.com/watch?v=9a-ONy8iGNQ