இது வரை காணாத புகைப்படம். பதிவிட்ட திரு. வினோத் அவர்களுக்கு நன்றி. !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Printable View
இன்றைய தினம் காணப்படும் தொழில் நுட்பம் மற்றும் நுணுக்கங்கள் இல்லாத அந்த கால கட்டத்திலேயே காண்போர் வியக்கும் வண்ணம் " உலகம் சுற்றும் வாலிபன் " காவியத்தை தயாரித்தார். அவர் திரையுலகை விட்டு விலகும் வரை அவரது நிழலைக்கூட எவரும் நெருங்க முடிய வில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சாதனைகளின் சிகரம் நம் மக்கள் திலகம் மட்டுமே !
மிக குறைந்த எண்ணிக்கையிலான 115 காவியங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து, அதிக அளவில் வெள்ளி விழாக் காவியங்களையும், 100 நாட்கள் கடந்த வெற்றிக் காவியங்களையும் அளித்த புகழுக்கு சொந்தக்காரர் நம் பொன்மனச்செம்மல் மட்டுமே !.
உலகின் 9வது அதிசயம் ஒப்பற்ற நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர்.
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவக்கிய இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் இன்று தன்னுடைய 1001 பதிவுகளை நிறைவு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .
தன்னுடைய அலுவலக பணிகளுக்கிடையே நேரம் கிடைத்தபோதெல்லாம் மக்கள் திலகம் திரியில்
அருமையான ஆவணங்கள் - கட்டுரைகள் - விளம்பரங்கள் என்று பதிவிட்டு பெருமைகள் சேர்த்த
பேராசிரியருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
'இன்று ' ஆயிரத்தில் ஒருவனாக '' நம் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் தயாரிப்பு தகவல்கள் மற்றும் 14 .3.2014 முதல் ஆயிரத்தில் ஒருவன் 101வது
நாள் விழா வரை தொடர்ந்து அன்றாட நிகழ்வுகள் - நண்பர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் - ஆயிரத்தில் ஒருவன் வெற்றி செய்திகளை உடனுக்குடன் பதிவிடுதல் என்று தன்னை முழுமையாக பயன் படுத்தி கொண்டவர் .அவருக்கு நம் பாராட்டுக்கள் . அவருடன் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து எம்ஜிஆர் மன்றங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி .
மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவங்கி இன்றுடன் 67 நாட்களில் 3600 பதிவுகளுடன் 73000 பார்வையாளர்களுடன் சிறப்பாக நடந்து வருகிறது .விரைவில் இந்த திரி நிறைவு பெற்று நம் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் பாகம்-10 துவக்கி வைப்பார் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றேன் .
மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் திரு யுகேஷ் - திரு சைலேஷ் - திரு ரவிச்சந்திரன் - திரு லோகநாதன் - திரு செல்வகுமார் - திரு ரூப் குமார் திரு தெனாலி - திரு பிரதீப் பாலு - திரு கலிய பெருமாள் - திரு ஜெய்சங்கர் - திரு ராமமூர்த்தி மற்றும் பல நண்பர்களுக்கும் நன்றிகள் . தொடர்ந்து பதிவுகள் வழங்கி மக்கள் திலகத்தின் பெருமைகளை
அளித்திடுமாறு கேட்டு கொள்கிறேன் .
அன்புடன்
வினோத்
"திரி கண்ட திரவியம்" திரு செல்வகுமார் அவர்களுக்கு ..
ஆயிரத்தில் ஒருவன் நவீனமயமாக்கப்பட்டு வெற்றிகரமாக 100 நாட்கள் நிறைவு செய்திருக்கின்ற வேலையில் ..ஆயிரத்தில் ஓராவது பதிவு ..மிகுந்த அலுவலுகிடயே பதிவு செய்தமைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
பலகாலம் பழகி இருந்தால்தான் பழரசம் முதல் தர பழரசம் என்பதுபோல தங்களுடைய பல வருட காலம் (சுமார் 40 - 45 காலம் இருக்கலாம் என்ற எனது அனுமானம்) பழக்கமுள்ள சிறந்த அனுபவங்கள் தாங்கள் இங்கு பகிர்ந்துகொள்வது மக்கள் திலகம் அவர்களது புகழுக்கு மற்றும் ஒரு வைரம். இதை தாங்கள் ஒரு just for sake என்றில்லாமல் ஒரு தொண்டாக செய்துவருவது மிகவும் பாராட்டுக்குரியது !
நீங்கள், திரு எஸ்வி, திரு யுகேஷ் மற்றும் ஒரு சிலர் இந்த திரியின் பெருமைகள் ! Pride of this thread !
இது உங்களுக்கு ice வைக்கவேண்டும் என்ற எண்ணத்திலோ, தங்களை impress செய்யவேண்டும் என்ற எண்ணத்திலோ எழுதுவதல்ல !
உள்ளத்தின் அடித்தளத்தில் உள்ள எண்ணம் !
ஆல்போல் தழைத்து வளர்க உங்கள் தொண்டு !
Rks
Thanks Vinod Sir for the info, sir just for doubt i am asking ,i did not see any scene in this costumes in Rajakumari movie ,there was only one fight sequence with Devar sir.
திரு. வினோத் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களுடன் கூடிய நன்றி. !
புரட்சித் தலைவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், கோட்டையில் அமர்ந்த இனிய நாள் 04-07-1977. இன்று, தாங்களும் இத்திரியின் 9வது பாகத்தில் மட்டும் 1001 பதிவுகளை கடந்துள்ளீர்கள். தங்களுக்கும் எனது பாராட்டுக்கள் !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i59.tinypic.com/qoi0at.jpg
Can Anyone Tell Me Which Movie is this.