-
4th July 2014, 10:33 AM
#11
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவக்கிய இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் இன்று தன்னுடைய 1001 பதிவுகளை நிறைவு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .
தன்னுடைய அலுவலக பணிகளுக்கிடையே நேரம் கிடைத்தபோதெல்லாம் மக்கள் திலகம் திரியில்
அருமையான ஆவணங்கள் - கட்டுரைகள் - விளம்பரங்கள் என்று பதிவிட்டு பெருமைகள் சேர்த்த
பேராசிரியருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
'இன்று ' ஆயிரத்தில் ஒருவனாக '' நம் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் ஆயிரத்தில் ஒருவன் டிஜிடல் தயாரிப்பு தகவல்கள் மற்றும் 14 .3.2014 முதல் ஆயிரத்தில் ஒருவன் 101வது
நாள் விழா வரை தொடர்ந்து அன்றாட நிகழ்வுகள் - நண்பர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் - ஆயிரத்தில் ஒருவன் வெற்றி செய்திகளை உடனுக்குடன் பதிவிடுதல் என்று தன்னை முழுமையாக பயன் படுத்தி கொண்டவர் .அவருக்கு நம் பாராட்டுக்கள் . அவருடன் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து எம்ஜிஆர் மன்றங்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி .
மக்கள் திலகம் எம்ஜியார் பாகம் - 9 துவங்கி இன்றுடன் 67 நாட்களில் 3600 பதிவுகளுடன் 73000 பார்வையாளர்களுடன் சிறப்பாக நடந்து வருகிறது .விரைவில் இந்த திரி நிறைவு பெற்று நம் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் மக்கள் திலகம் எம்ஜியார் பாகம்-10 துவக்கி வைப்பார் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கின்றேன் .
மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் திரு யுகேஷ் - திரு சைலேஷ் - திரு ரவிச்சந்திரன் - திரு லோகநாதன் - திரு செல்வகுமார் - திரு ரூப் குமார் திரு தெனாலி - திரு பிரதீப் பாலு - திரு கலிய பெருமாள் - திரு ஜெய்சங்கர் - திரு ராமமூர்த்தி மற்றும் பல நண்பர்களுக்கும் நன்றிகள் . தொடர்ந்து பதிவுகள் வழங்கி மக்கள் திலகத்தின் பெருமைகளை
அளித்திடுமாறு கேட்டு கொள்கிறேன் .
அன்புடன்
வினோத்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
4th July 2014 10:33 AM
# ADS
Circuit advertisement
Bookmarks