நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு,
எங்கே உங்களை ரொம்ப நாளாக வரவில்லை என்று நினைத்தேன். புரட்சித் தலைவர் நினைவு நாளுக்குக் கூட திரிக்கு வந்து அஞ்சலி பதிவு போடவில்லையே என்று நினைத்தேன். இன்றுதான் வராததற்கு காரணத்தை தெரிந்து கொண்டேன். நன்றி.
வராத நாளுக்கும் சேர்த்து வைத்து சும்மா குமுறிவிட்டீர்கள் குமுறி. எத்தனை பதிவுகள் தங்களின் உழைப்புக்கும் புரட்சித் தலைவர் மேலே உள்ள பக்திக்கும் நன்றி.
ஒரு திரியில் புரட்சித் தலைவரைப் பற்றி ஒரு நடிகருக்கு அடுத்த நிலையில் இருந்தார் என்று கூசாமல் பொய் புளுகுகிறார்கள். சிரிக்க வாய் மட்டும் போறாது. ஒரு பொய்யை திரும்பியும் திரும்பியும் சொன்னால் அதுவே உண்மையாகி விடும் என்று நினைத்து புளுகுகிறார்கள். யார் முதல் நிலையில் இருந்தார்கள், யார் மக்களால் ஒதுக்கப்பட்டு இப்போது மறக்கப்பட்டார்கள் என்பது எல்லாம் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
புரட்சித் தலைவர் எங்கும் எதிலும் முதல் நிலையில் இருந்தார் என்பதற்கு உதாரணமாய் நீங்கள் வராத பதினைந்து நாட்களில் (எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. ஒன்றிரண்டு நாட்கள் கூட குறைச்சு இருக்கலாம்) எவ்வளவு செய்திகள் அவரைப் பற்றி பத்திரிகைகளில் வந்திருக்கின்றன என்பதை உங்கள் பதிவுகள் மூலம் தெரிய முடிகிறது. இதிலேருந்தே புரட்சித் தலைவரின் செல்வாக்கும் புகழும் புரியும். வேறு எந்த நடிகரைப் பற்றி 15 நாட்களில் இவ்வளவு செய்திகள் அதுவும் மறைந்த பிறகு வரும்?
உங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். தவறாக நினைக்காதீர்கள். மன்னியுங்கள். புரட்சித் தலைவரோடு நமக்கு பிடிக்காத நடிகர் உடன் இருப்பது போல படங்கள் இருந்தால் அதை வெட்டி அல்லது மறைத்து பதிவிடவும். நம் திரியில் நமக்கு பிடிக்காத நடிகரின் படங்கள் வேண்டாம். அவர்களுக்கே அவ்வளவு இருக்கும்போது நமக்கு எவ்வளவு இருக்கும். மன்னிக்கவும். நன்றி.