டியர் mr_karthik,
தன்யனானேன் சார், தன்யனானேன்..! "வளர்பிறை" விஷுவல் ஆவணப்பதிவு தங்களின் குழந்தைப்பருவ நினைவுகளை தூண்டியதாக தாங்கள் குறிப்பிட்டதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அந்த நினைவுகள் வரும்போதெல்லாம், 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே' என்கின்ற உவகையும், அந்த ஃப்ளாஷ்பேக்கிலிருந்து மீண்டு வரும்போது 'இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே' என்ற ஏக்கமும் கொள்ளாதார் இவ்வுலகில் யார்? தங்களின் ஞாபகசக்திக்கு பிடியுங்கள் ஒரு 'சபாஷ்'. தங்களுடைய இனிய நினைவுகளை இங்கே பதித்ததற்கு நன்றி..!
தங்களுடைய அந்த தித்திப்பான நினைவுகளை மேலும் விஸ்தரிக்க, இதோ தங்களுக்காகவும், வாசு சாருக்காகவும், "மஞ்சள் மகிமை(1959)"யிலிருந்து கானகந்தர்வர் கண்டசாலா-பாடகியர் திலகம் பி.சுசீலாவின் பின்னணிக் குரல்களில், திரை இசை மாமேதை மாஸ்டர் வேணுவின் இசையில், நம் அனைவரையும் கவர்ந்த 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா'. [ஆக்கம் : உடுமலை நாராயண கவிராயர்]
http://www.youtube.com/watch?v=Em6XbRpn4r4
வேணு இசையில் வந்த இந்த கானம், நிஜமாகவே வேணுகானம்தான்..! அமிதாப்பையும் கவர்ந்த நடிகையின் நடிப்பு அநாயாசத்தைப் பற்றிப் பற்பல அத்தியாயங்களே எழுதலாம், What an actress..!
[நெய்வேலியாரே, வாய்பிளந்து கண்டசாலாவின் குரலில் மயங்கி, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது என் மனக்கண்ணில் தெரிகிறது. தங்களுக்காகவே இதோ இன்னும் இரு பாடல்கள்:]
நமது நடிகர் திலகத்தின் அதியற்புத நடிப்பில், மெல்லிசை மாமன்னர்கள் விஸ்ராமின் இசையில், கானகந்தர்வரின் கம்பீர கமக்கக் குரலில், 'உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்' பாடல், "தெனாலிராமன்(1956)" திரைக்காவியத்திலிருந்து...
இப்பாடலை இயற்றியவர் கவிஞர் தமிழ்மன்னன்..!
http://www.youtube.com/watch?v=aE80C7G9xAo
நடிகர் திலகம்- சகலகலாவல்லி பானுமதி இணையில், கானகந்தர்வரின் இசையில்-பின்னணிக் குரலில், "கள்வனின் காதலி(1955)"யிலிருந்து 'வெயிற்கேற்ற நிழலுண்டு'. [ஆக்கம் : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை]
http://www.youtube.com/watch?v=Lwimqfw8E9U
mr_karthik அவர்களே, "வளர்பிறை"யை இதுவரை பார்க்கவில்லை என்று கவலைகொள்ள வேண்டாம். நெய்வேலியாரின் தொடர் திரைக்காவியத் தேடலில், இக்காவியத்தின் பிரதி உலகத்தின் எந்த இண்டுஇடுக்கில் இருந்தாலும் அதை அப்படியே அவர் 'லபக்'கிக் கொண்டுவந்துவிடுவார்.
கவலையை விடுங்கள்..!
தங்களின் இதயங்கனிந்த பாராட்டுக்களுக்கு எனது இனிய நன்றிகள்..!
அன்புடன்,
பம்மலார்.