-
2nd August 2012, 01:46 PM
#341
Senior Member
Diamond Hubber
Dear chandrasekaran sir,
Thanks a lot. Rare N.T stiil is simply superb. Thanks for the sharing.
Dear esvee sir,
Thanks for 'bommai' chitra pournami pages. 'Mannavan vanthanadi' one of my favourite movie.
Last edited by vasudevan31355; 2nd August 2012 at 01:49 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd August 2012 01:46 PM
# ADS
Circuit advertisement
-
2nd August 2012, 02:04 PM
#342
Senior Member
Veteran Hubber
அன்புள்ள பம்மலார் சார்,
தாங்கள் அதிரடியாகத் தந்துள்ள 'வளர்பிறை' காவியத்தின் பேசும்படம் இதழ்கள் மட்டில்லா மகிழ்ச்சியைத் தருகின்றன. கிடைத்தற்கரிய இந்த ஆவனங்கள் என் குழந்தைப்பருவ நினைவுகளைத்தூண்டுகின்றன. நான் இதுவரை இப்படத்தைப் பார்த்ததில்லை. காரணம் இதுவரை கண்ணில் படாததே.
என் சின்னஞ்சிறு பிராயத்தில், நாங்கள் குடியிருந்த சென்னை மண்ணடி தம்புச்செட்டித்தெருவிலிருந்து பக்கத்திலுள்ள பவழக்காரத்தெருவுக்கு பால் வாங்கச்செல்லும்போது, அத்தெருவிலிருந்த, வெகு ஆண்டுகளாக வெள்ளையடிக்கப்படாமல் இருந்த வீட்டின் சுவரில் உயரத்தில் இரு பெரிய போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று நடிகர்திலகம் நடித்த "வளர்பிறை" இன்னொன்று நாகேஸ்வரராவ், சாவித்திரி நடித்த "மஞ்சள் மகிமை". (அப்போது அதில் நடித்தவர்கள் யார் என்பதெல்லாம் துல்லியமாகத்தெரியாது. அதில் பெரிய படமாக இருப்பவர் சிவாஜி என்பது மட்டும் தெரியும். அவ்வளவு சிறிய வயது). மழை வெயில் படாத தாழ்வாரம் போன்ற இடத்தில் ஒட்டப்பட்டிருந்ததால் பல ஆண்டுகளாக அந்த போஸ்ட்டர்கள் அப்படியே இருந்தன. நானே எப்படியும் ஒரு ஐந்து வருடங்கள் அவற்றைப்பார்த்திருப்பேன்.
அதன்பிறகு வளர்பிறை பற்றிய எந்த ஒரு சிறு துணுக்கைக்கூட பார்த்ததில்லை. இப்போதுதான் சுமார் இரண்டு ஆண்டுக்கு முன்பு நமது ராகவேந்தர் சார் அளித்த பாட்டுப்புத்தக மேல் அட்டையையும், சகோதரி கிரிஜா அவர்களின் தளத்தில் வளர்பிறை படத்தின் சிறு விளம்பரத்தையும் பார்த்தபோது, எனக்கு அன்று அரைக்கால்சட்டை போட்டுக்கொண்டு திரிந்த காலத்தில் பார்த்த மெகா போஸ்ட்டர் நினைவில் நிழலாடியது. இப்போது தாங்கள் அள்ளித்தந்துள்ள பொக்கிஷப்பதிவுகள் மூலம் மீண்டும் இளம் பிராய நினைவுகளுக்குச் சென்றுவிட்டேன்.
(அந்த இளம்பிராய போஸ்ட்டர் நினைவுகளுக்காகவே, பின்னொருமுறை 'மஞ்சள் மகிமை' பிராட்வேயில் மறு வெளியீட்டின்போது பார்த்தேன். நல்ல படம். 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா' போன்ற பாடல்களைக்கேட்டபோது என் சிறுவயது நினைவுகளை எண்ணி கண்கள் கசிந்தன).
'வளர்பிறை'தான் இன்னும் காணக்கிடைக்கவில்லை. ராகவேந்தர் சார் முன்பு எழுதிய குறிப்புகளிலிருந்து இது ஒரு அற்புதமான படம் என்பதை உணர்கிறேன். எப்போது பார்க்க முடியுமோ தெரியவில்லை.
-
2nd August 2012, 02:51 PM
#343
Senior Member
Veteran Hubber
அன்பு வாசுதேவன் சார்,
தாங்கள் அதிரடியாகத்துவக்கியிருக்கும், 'நடிகர்திலகத்தின் கதாநாயகிகள்' தொடர் ஒரு இன்ப அதிர்ச்சி. அட்டகாசமான துவக்கம். நீங்கள் மட்டும் எப்படி வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
முன்பு நடிகர்திலகம் தனது படங்களில் இசைத்திருந்த இசைக்கருவிகளை ஸ்டில்களுடன் தந்து அசத்தினீர்கள் . சுமார் 60 ஸ்டில்களைத் தந்து ஆச்சரியப்படுத்தினீர்கள். அடுத்து அவர் பல்வேறு படங்களில் நடித்த ஸ்டண்ட் சீன்களை வீடியோவகத்தந்து அசர வைத்தீர்கள். இப்போது இது புதிய தொடர். முதலில் பண்டரிபாய் பற்றி நீங்கள் பதித்ததும், அதற்காகவே காத்திருந்தது போல பம்மலார் அவர்கள் பண்டரிபாயின் பேட்டிக்கட்டுரை வடிவத்தை தந்து இன்பத்தில் மூழ்கடித்துள்ளார்.
தங்களின் புதிய தொடருக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள், நன்றிகள்.
-
2nd August 2012, 03:31 PM
#344
Senior Member
Seasoned Hubber
-
2nd August 2012, 05:23 PM
#345
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. வாசு, திரு. கார்த்திக் (உங்களுடைய கிரிக்கெட் வர்ணனை அற்புதம்!) அவர்களே,
உங்கள் எல்லோரையும், நடிகர் திலகத்தின் புதிய வேறொரு திரியில் சந்திப்பதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி - மறு விதத்தில், சிறிது வருத்தமாகத் தான் இருக்கிறது.
என்னைப் பொறுத்த வரை, அனைத்து வித விஷயங்களும் - பட ஆவணங்கள், வீடியோ பதிவுகள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள் - போன்றவை அனைத்தும் ஒரே திரியில் இருந்தால் தான் அது அறுசுவை உண்டி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
2nd August 2012, 06:05 PM
#346
Senior Member
Seasoned Hubber
NT with Rajkapoor and Devika
Dear all,
Rare photo of NT with Rajkapoor and Devika.

Karthik sir, this is for you.
Cheers,
Sathish
-
2nd August 2012, 06:09 PM
#347
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்தின் நாயகியர். (ஒரு விஷுவல் தொடர் பதிவு)
(தொடர்-2)
நடிகர் திலகத்தின் இரண்டாவது காவியமான 'பணம்' படத்தில் அவரது நாயகி 'நாட்டியப் பேரொளி' பத்மினி அவர்கள். ராசியான ஜோடியாக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த ஜோடி பல சரித்திர சாதனை புரிந்த காவியங்களைக் கொடுத்தது. நடிகர் திலகம் பத்மினி ஜோடி கன கச்சிதமான ஜோடி என்று மக்களால் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. பத்மினி அவர்களை செல்லமாக நமது தலைவர் 'பப்பி' என்றுதான் கூப்பிடுவார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. அந்த அளவிற்கு நெருங்கிய நட்பைக் கொண்ட இந்த ஜோடி திரையுலகைக் கலக்கியது. வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தது. கேரளா சகோதரிகள் என்று செல்லமாக அழைக்கப்பட்ட லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் சிறுவயதிலேயே திரைத்துறையில் நுழைந்து ஒரு பாடலுக்கான நடனக் காட்சிகளில் நடிக்கத் துவங்கி, பின் திரையுலகையே ஆக்கிரமிப்பு செய்த சகோதரிகள். 'பணம்' காவியத்தில் நடிகர் திலகத்தின் இரண்டாவது ஜோடியாக நடித்த அதிர்ஷ்டத்தை அடைந்த பெருமை பத்மினி அவர்களை சாரும்.
நடிகர் திலகத்தின் நாயகியர் (2) 'நாட்டியப் பேரொளி' பத்மினி
படம்: 'பணம்'

முதன் முதலாக நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி இக்காவியத்தில் இணைந்ததால் இந்தப் பாடல் இத்தொடருக்கு அழகு சேர்க்கும் என்று நம்புகிறேன். டூயட்டாக இல்லாவிட்டாலும் நடிகர் திலகமும், பத்மினி அவர்களும் ஜோடியாகவே இப்பாடலில் வருவதால் இந்த ஸ்பெஷல் பாடல்.
"குடும்பத்தின் விளக்கு... நல்ல குடும்பத்தின் விளக்கு"...(எம். எல். வசந்த குமாரி அவர்களின் அற்புதக் குரலில்)
(ஜோடிகள் தொடரும்)
அன்புடன்,
வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 11th August 2012 at 09:00 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
2nd August 2012, 06:17 PM
#348
Senior Member
Seasoned Hubber
டியர் பார்த்தசாரதி சார்,
தங்களுடைய வரவு மிகவும் மகிழ்வூட்டுகிறது. வருகைக்கு நன்றி.
அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. பம்மலார், திரு. வாசு, திரு. கார்த்திக் (உங்களுடைய கிரிக்கெட் வர்ணனை அற்புதம்!) அவர்களே,
உங்கள் எல்லோரையும், நடிகர் திலகத்தின் புதிய வேறொரு திரியில் சந்திப்பதில் ஒரு விதத்தில் மகிழ்ச்சி - மறு விதத்தில், சிறிது வருத்தமாகத் தான் இருக்கிறது.
என்னைப் பொறுத்த வரை, அனைத்து வித விஷயங்களும் - பட ஆவணங்கள், வீடியோ பதிவுகள், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துப் பரிமாற்றங்கள் - போன்றவை அனைத்தும் ஒரே திரியில் இருந்தால் தான் அது அறுசுவை உண்டி.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
வரவேற்கத் தக்க கருத்து தான். ஆனால் சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி யிருந்தால் பயன் கிட்டியிருக்க வாய்ப்புண்டு.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd August 2012, 07:17 PM
#349
Senior Member
Seasoned Hubber
டியர் சந்திரசேகர்,
ஆனந்த விகடன் பக்கங்கள், நெல்லை நிகழ்ச்சிகளின் நிழற்படங்கள் என தங்களுடைய அர்ப்பணிப்புகள் அனைத்தும் பாராட்டத் தக்கவை வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd August 2012, 07:20 PM
#350
Senior Member
Seasoned Hubber
டியர் வாசுதேவன் சார்,
நாயகியர் தொடரில் தங்களுடைய பங்கு ... சூப்பர்... தொடக்கமே அருமையாக உள்ளது. பணம் சேர்த்து வைத்த ஜோடி அவர்களை உச்சியில் கொண்டு சென்றுள்ளது. பணத்தில் ஜோடி சேர்ந்த நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி ஜோடி தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து போல், மற்றொரு ஜோடி விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இவர்களும் தங்களுக்கென்று உயர்ந்த இடத்தில் தனி ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டு அங்கிருந்தவாறு அனைவரையும் பார்த்துக் கொண்டுள்ளனர். தங்களுடைய ஒவ்வொரு பதிவிலும் ஈடுபாடு ஜொலிக்கிறது. பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks