https://i.postimg.cc/TwYgS7CQ/c6b7dc...10b64fc7f5.jpg
நன்றி - பேராசிரியர் திரு செல்வகுமார்
Printable View
https://i.postimg.cc/TwYgS7CQ/c6b7dc...10b64fc7f5.jpg
நன்றி - பேராசிரியர் திரு செல்வகுமார்
https://i.postimg.cc/50rRPCb7/IMG-3787.jpg
கலை மற்றும் அரசியலில் யாரும் அடைய முடியாத இமாலய வெற்றி கண்டவர்
முக்கிய அறிவிப்பு ....*04.10.19 முதல் சென்னை அகஸ்தியா அரங்கில் மக்கள் திலகத்தின் வெற்றிக் காவியம் "நாடோடி மன்னன்" திரையிடப் படுவதையொட்டி, பதாகைகள் வைக்க ஏற்பட்டுள்ள சிக்கலான இந்த சமயத்தில், மாற்று ஏற்பாடாக 6.10.19 ஞாயிறு அன்று மாலை அரங்க வளாகத்துக்குள், கொடைவள்ளலுக்கு கொலு வைத்து நைவேத்தியம் செய்து படையலிட்டு, சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் அளித்து சிறப்பிக்க, கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை; அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் மற்றும் இதர அமைப்புக்கள் சார்பில், ஏற்பாடு செய்யவிருந்தோம். இதனை முன்னிட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்க செயலாளர் செல்வகுமார் மற்றும் இணை செயலாளர் திரு. சந்திரசேகர் ஆகியோர் வினியோகஸ்தர் ரிஷி மூவிஸ் திரு. நாகராஜன் அவர்களை தொடர்பு கொண்டு, அரங்கத்தில் நிகழ்ச்சியை மேற்கொள்ள உதவுமாறு கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து, மரியாதை நிமித்தம், முறைப்படி கீழ்கண்ட கடிதம் மூலம் கோரிக்கை அளிக்க இன்று (3.10.19) வியாழக்கிழமை, கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் திரு. ஷிவபெருமாள் அவர்கள், திரையரங்க மேலாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களை நேரில் சந்தித்து அனுமதி கோரினார். ஆனால், நமது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்தாலும் 30 ஆண்டுகளுக்கு முன்பு 'படிக்காதவன்' படம் வெளியான பொழுது நடைபெற்ற ரசிகர் ஒருவரின் மரண விபத்தை சுட்டிக் காட்டி அரங்க வளாகத்துக்குள் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுத்து விட்டார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் இதற்கு அனுமதியளித்தால், இதனையே முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பிற படங்களுக்கு அனுமதி கேட்கும் சூழ்நிலை ஏற்படும் எனக் கூறி, நமது இயலாமையை வருத்தத்துடன் அரங்க மேலாளர் பகிர்ந்து கொண்டார். எனவே, ஆவலுடன் இருந்த பக்தர்களின் உணர்வை மதிக்கும் இந்த சமயத்தில் அனுமதி மறுக்கப் பட்ட செய்தியினை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புதுமையான நிகழ்வை பிறிதொரு சந்தர்ப்பத்தில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தற்காலிகமாக முடிவு மேற்கொள்ளப் பட்டுள்ளது* . இவண் : சௌ.செல்வகுமார்.
* எல்லாப் புகழும் தலைவனுக்கே, எல்லாம் நன்மைக்கே:**
"விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை", உத்தமபுத்திரன் டைட்டிலை தலைவர் விட்டுக்கொடுத்ததால் தான் நமக்கு காலத்தால் அழியாத அதைவிட பன்மடங்கு சிறப்பு வாய்ந்த, ஈடு இணையே இல்லாத "நாடோடி மன்னன்" கிடைத்தார்.
கர்ணன் தலைவர் நடிக்காமற் போனதால் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த மணிமாறனை வாராது வந்த மாமணியாய் "ஆயிரத்தில் ஒருவன்" மூலம் அடையப் பெற்றோம். அன்று சிந்திய இரத்தம் (சிவந்த மண்) இரத்தானதால் தான் "உலகம் சுற்றும் வாலிபன்" என்கிற உன்னத காவியத்தை நமக்காக அளிக்க வேண்டுமென்கிற உத்வேகம் தலைவர் எண்ணத்தில் உதித்தது. இன்று அச்சாகாவரம் பெற்ற திரைப்படம் உலகத்தை மீண்டுமொரு முறை மிகப்பெரிய வலம் வர ஆயத்தமாக உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. உலகிலேயே நம் தலைவர் மட்டும் தான் இத்தகைய உயர்வானதொரு நிலையில் நீடித்து வருகிறார் என்பதை விட வேறு பேறு நமக்கு தேவையற்ற ஒன்று. இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் தலைவரைப் பற்றி கூறிக் கொண்டே இருக்கலாம். பணம், பதவி புகழுக்கு பின்னால் அவர் செல்லவில்லை. இவையெல்லாம் அவரைப் பின்தொடரும் படி வாழ்ந்த தனிப்பிறவி தான் நமது தானைத் தலைவர்.
எனவே இன்று அனுமதி மறுக்கப்பட்டதென்பது தலைவர் இதைவிட பெரிய வாய்ப்பை நமக்கு பெற்றுத் தரப்போகிறார் என்பதற்கான அடித்தளமாகும்.
கொலு வைப்பதற்கான முயற்சியில், கால அவகாசம் குறைவாக இருப்பினும், சாதித்து விட வேண்டும் என்று முழுமூச்சாக செயலில் ஈடுபட்ட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை, அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கம் மற்றும் ஏனைய மன்றங்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனம் தளர வேண்டாம். ஏனெனில் தியேட்டர் மானேஜரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, வழக்கம் போல் நீங்கள் அனைவரும் வந்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டுடன் திருவிழா போல் கொண்டாடுங்கள், அதற்கு எவ்வித தடையும் கிடையாது என்று கூறிவிட்டார். சென்னையிலிருந்து விலகி இருந்தாலும் பட வெளியீட்டாளர் திரு ஸாய் நாகராஜ் தொலைபேசி மூலம் தியேட்டர் மானேஜரிடம் தொடர்பு கொண்டு எங்களுக்கு எப்படியாவது உதவும்படி கேட்டுக் கொண்டார். அதற்காகவும் எங்களுடனும் உடனுக்குடன் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கியதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
புரட்சித் தலைவர் நாமம் வாழ்க
பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக ✌✌......... Thanks.............
அறைவேக்காடு அரைகுறையாக உளறுவது போலவே உளருக்கின்றன. குடிகார படம் தூங்க விடாமல் செய்ததாம்.. அஹ் ஹா கா... ஸ்டுண்டு நடிகராமல்ல... அந்தாளு உளறி குளரி வாந்தி எடுக்குது, அந்த நடிகர் போலவே... ஆஹா என்ன பொருத்தம். அப்புறம் இன்னொரு உளரலின் மிச்சம் ஆள், அதிகாரம் கொண்டு நிறுத்தினார்களாம், ஐயகோ ஐயோ. நம்மாட்கள் நிறுத்தினால் அதை மீற எவன் உள்ளான்? இந்த அடிப்படை விடயம் கூட தெரியாமல், அறியாமல், அல்லது தெரிந்தும் புரியாதது போல அவர்கள் உருப்படாதது போலவே கக்குகின்றனர். கேவலம்... சிலை மணி மண்டபம் னு யார் காலை பிடித்து கெஞ்சினர் இந்த ஒப்பாரி நடிகனின் தத்திகள்... பேசும்போதும், எழுதும்போதும் மனநிலை பாதிக்காமல் எழுத நல்ல மன நல மருத்துவரை அணுகுவது நன்மை பயக்கும்...
திருவள்ளுவர் தினம்..!!
வள்ளலார் நினைவுநாள்..!!
குடியரசுத் தினம்..!!
மகாத்மா காந்தி நினைவு நாள்..!!
மகாவீர்ஜெயந்தி..!!
மேதினம்..!!
சுதந்திர தினம்..!!
காந்தி ஜெயந்தி..!!
மிலாடி நபி..!!
தேர்தல் நடைபெறும் தினம்..!!
முக்கிய அரசியல்வாதிகள், மாபெரும் தலைவர்கள்.. மரணம்..!!
ஆக வருடம் 365 நாட்களில் சுமார் 10,12 நாட்கள் விடுமுறை Tasmac கடைகள்... இந்த 12நாட்களில் குடியை கட்டுப்படுத்த முடியாத குடிமகன்கள் பாட்டில் விலைக்கு மேல் 50ரூ..100ரூ கொடுத்து வாங்கி குடிக்க ஆளாய் பறக்கிறார்கள்.. காரணம் குடி அவர்களை அடிமையாக்கி விட்டது.. ஒருநாள், ஒரு வேளை குடிக்கவில்லை என்றால், அவர்களால் அவர்களையே கட்டுப்படுத்த முடியாது.. குடும்பத்தில் ரகளை, மனைவி, மகன், மகளிடம் சண்டை, நண்பர்களிடம் வாக்குவாதம், அநாகரீகமான வார்த்தைகள், பேச்சுகள்.. இவையனைத்தும் அரங்கேறும்..
இனி தமிழகத்தை மது இல்லா மாநிலமாக மாற்றுவது மிக மிக கடினம்..
1977ல் முதல்வராக பதவி ஏற்ற அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தார்.. குடியினால் ஏற்படும் விபரீதங்களை எண்ணி நாடு முழுவதும் கடுமையாக நடந்து கொள்ளும் படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.. அவர் ஆட்சியில் தான் மதுவிலக்கு கலால் துறை என்பது உருவாக்கப்பட்டது.. கருணாநிதியால் குடிக்கு அடிமையாகி விட்ட மக்கள் பரிதவித்தனர்.. மூட்டை தூக்குவோர், ரிக்ஷா இழுப்போர், கூலி வேலை செய்வோர் நாளெல்லாம் உழைத்த அலுப்பு தீர சாரயத்தை தேடினர்.. இவர்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி கள்ளச்சாராய வியாபாரிகள், காவல்துறை உதவியோடு கள்ளச் சாராயம் காய்ச்ச முற்பட்டனர்.. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்பது போல மக்கள் அந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடிக்க துவங்கினர்..
முதலில் பெரிய பேரிடி விழுப்புரம் மாவட்டத்தில் தான் விழுந்தது.. கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் துடிதுடிக்க மாண்டனர்.. பலருக்கு கண் போயிற்று.. ஒருசிலர் கை, கால் முடங்கியது..எங்கும் மரண ஓலம் பத்திரிகைகள் தாறுமாறாக எழுதின.. கருணாநிதி எரியும் நெருப்பிலே எண்ணையை ஊற்றினார்.. தான் கொண்டு வந்த மதுக்கடைகளுக்கு நியாயம் கற்பித்தார்.. எம்ஜிஆருக்கு ஒன்றும் புரியவில்லை.. நாம் நல்லது தானே செய்ய நினைத்தோம்.. மக்கள் ஏன் புரிந்துக்கொள்ளவில்லை.. அநியாயமாக உயிரை போக்கி கொண்டார்களே என மனவேதனைப் பட்டார்.. அந்த சம்பவத்துக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக கள்ளசாராயத்தினால் உயிர் பலி நடந்தேறி கொண்டு இருந்ததை கூர்ந்து கவனித்தார் எம்ஜிஆர் இனியும் மக்கள் அந்நியாயமாக சாக கூடாது என முடிவு செய்தார்.. குறைந்த விலையில் அரசே தயாரித்த கடாமார்க் எனும் சாராயத்தை விற்பனை செய்ய உத்தரவிட்டார்.. ஒரு லிட்டர் 24.00ரூபாய்.. என மதிப்பிட்பட்டது.
இனிமே கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீதும், குடிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.. இனி மதுவிலக்கு தமிழகத்திற்கு சாத்தியமில்லை என்பதை எம்ஜிஆரே உணர்ந்து கொண்டார்.. ஆகவே அவருக்கு பின்னால் வந்த அம்மாவும் அவரது கொள்கையை தான் பின்பற்றினார்..
தலைவர் பாடிய பாடல் திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது திருடர்களுக்கு மட்டுமில்லை.. குடிகாரர்களுக்கும் பொருந்தும்.............. Thanks.........
https://i.postimg.cc/7LnK36sM/IMG-3809.jpg
நேற்று புரட்சித்தமிழன் திரு சத்யராஜ் அவர்களின் பிறந்த தினம்.
https://i.postimg.cc/8cXKFzkk/IMG-3822.jpg
புரட்சித்தலைவரின்
அன்புத்தம்பி
சைதை துரைசாமி அண்ணன்
https://i.postimg.cc/QdvyjCVj/IMG-3824.jpg
நன்றி - திரு சந்தானம் - கோவை
அருமை கழக மன்ற மறவர்களே !! தாய்குலங்களே !! தொழிலாளர்வர்கமே !! சான்றோர்களே !!இன்றைய இளைஞர்களே !! மானவிகளே !! நாட்டோரே !! நல்ல இதயம் படைத்தோரே !! உங்களுக்கு ஒரு பொற்கால செய்தி !!
நமது கண்கண்ட தெய்வம் !! மக்கள்திலகம் !! பாரதரத்தினா !! டாக்டர் புரட்சித்தலைவர் அவர்களின் !! நிழல் திரு,சைதையார் அவர்கள் வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை களில் மாதம் முழுக்க நமது தந்தி T V யில் இரவு 7.30க்கு "பயணங்கள் முடிவதில்லை " என்கிறதலைப்பில் !! திரு,சைதையார் அவர்கள் கழக ஆரம்பகலம் முதல் நமது மக்கள்திலகம் அவர்களின் மிக அருமையான வரலாற்று பொக்கிஷ பதிவுகளை !! இந்த நாட்டு இளைஞர்களுக்கு !! ஒரு
வரலாற்று பிரசாதம் பதிவிட்டு இருக்கின்றார்கள் !!
அனைவரும் தவறாமல் 05-10-2019 முதல் உலகம் முழுவதும் ஒளிபரப்படுகிறது!! ஆகவே இந்த வரலாற்று பொக்கிஷத்தை !! உலகத்தார் மனதில் பசுமையாக பதிவிடுங்கள் !!!........... Thanks.........
எம்.ஜி.ஆர் ., அவர்களுக்கு "பாரத்" விருது கிடைத்த நேரத்தில் சோ அவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கேவலம் . 1974ல் கோவை மற்றும் புதுவை தேர்தல் நேரத்தில் மேடைகளில் சோ எம்ஜிஆரை தாக்கியவிதம் மிகவும் அநாகரீகமாக இருந்தது .சில திரைப்படங்களில் மறைமுகமாக எம்ஜிஆரை தரமின்றி தாக்கிய காட்சிகள் மறக்க முடியுமா ? சோவை பற்றி எம்ஜிஆர் சொன்ன ஒரே பதில் ''சோ ஒரு அரசியல் வியாபாரி'' .
1980ல் துக்ளக்கில் அட்டை படத்தில் எம்.ஜி.ஆர்., படத்தை போட்டு மரியாதை செய்து கட்டுரை எழுதியது குறிப்பிடத்தக்கது...
.
காமராஜர் ,ஜெயகாந்தன் , நடிகர்கள் சிவாஜிகணேசன் , ஸ்ரீகாந்த் , சசிகுமார் , சோ திமுக தலைவர்கள் எல்லோரும் எம்ஜிஆரை எதிர்த்து பிரச்சாரம் செய்து இறுதியில் எம்ஜிஆரின் வெற்றியை தடுக்க முடியவில்லை . 1972ல் எம்ஜிஆர் மீது கொண்ட வெறுப்பு சிலருக்கு 47 ஆண்டுகள் கடந்தும் உள்ளத்தில் எரிமலையாய் கொதித்து கொண்டிருப்பது .......பரிதாபமாக உள்ளது .இந்த லிஸ்டில் கோபால் , (நன்றி மறந்த) ஒய் .ஜி மகேந்திரன், இலங்கை சிவா
போன்றவர்கள் இருப்பது வேடிக்கை .எம்ஜிஆரின் புகழை கிண்டல் செய்வது இவர்களுக்கு எந்த விதத்திலும் உயர்வை தராது ., பாபம் தான் சேரும்............ Thanks.........
இந்த பதிவை அனுப்பிய நண்பர் அவர்களுக்கு... ஒரு சிறிய விளக்கம்... பாவம் ... இப்படித்தான் அவர்களெல்லாம் புலம்பி பரி தவிக்க வேண்டுமென்பது இறைவன் ஆணை...
நாடோடி !
__________
இட்ட அடி கனிந்திருக்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிர்ந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க !
திரும்பிவா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை
விரும்பி வா !!
கவிஞர் வாலி !
இன்று தற்செயலாக இந்த பாடலை கேட்டேன்
உற்சாகம் தட்டியது !
திரையில் மக்கள் திலகத்தை பார்த்த உடன் உற்சாகம் உடலெங்கும் பரவியது !
நீங்களும் பாருங்களேன் புரியும் !
ஹயாத் !............ Thanks...
சென்னை மைலாப்பூர் கொலு பொம்மைகள் விற்கும் கடையில் எடுத்த படம்...
எங்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்...
நன்றி:
அண்ணன் திருவள்ளுவர் அவர்கள்....... Thanks...
ஒப்பாரி நடிகர் ரசிகருன்னு சொல்றவங்க மட்டும் தான் பிள்ளைகன்னு சொல்வங்களோ...
நமது நெல்லை தோழர் பகிர்ந்த இனிய தகவல்... கடந்த வாரம் திருநெல்வேலி - ரத்னா A/C DTS., தினசரி 4 காட்சிகள் நடைபெற்ற, மழை பெய்த நேரங்களிலும் எந்தவொரு காட்சியும் ரத்து செய்ய படாமல் ஏறத்தாழ ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரங்கள்... அருமை வசூல் அடைந்துருக்கிறது வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "அடிமைப்பெண்" காவியம்......... Thanks...
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அழகு மயில் அஞ்சலிதேவி, வி நாகையா, எம் என் நம்பியார், புளிமூட்டை ராமசாமி, ஏ கருணாநிதி எஸ் எஸ் சிவசூரியன், விகே ராமசாமி, ஜெயலட்சுமி, அங்கமுத்து, முத்துலட்சுமி, கமலா (நடனம்) மற்றும் பலர் நடித்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் காவியம் "சர்வாதிகாரி" (தெலுங்கு). மாபெரும் சரித்திர காவியமான "சர்வாதிகாரி", முதலில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்தது... தமிழில் அடுத்து தெலுங்கில் எம்ஜிஆர் நடித்து வெளிவந்து ...இன்றுடன் 68 வருடத்தை கடந்து (5-10-1951) 69ம் பிறந்தநாள் காணும் மாபெரும் காவியம். பாடல்கள், சண்டைக்காட்சிகள், எல்லாம் சிறப்பு வாய்ந்தது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சர்வாதிகாரியாக (நம்பியார்) வர நினைக்கும் கூட்டத்தை ஒடுக்கி மக்களாட்சியை ஏற்படுத்துகிறார். அழகு மயில் அஞ்சலிதேவி புன்னகை ததும்ப, நளினமாக மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் சார்பாக நடித்துள்ளார்கள். இந்த திரைக்காவியத்தை நினைவுகூர்ந்து போற்றுவோம்! கண்டு மகிழ்வோம்! வாழ்க எம்பெருமான் எம்ஜிஆர் புகழ்!.......... Thanks.........
காணொளி பிரதி அருமை... சகோதரர் அவர்களே... புரட்சி நடிகர் தெலுங்கு மொழியில் என்னம்மா பேசுகிறார்.......சூப்பர்... சூப்பர்... Thanks.........
சைதையாரின் ஆரம்பமே ...அமர்க்களம், காட்சிகளின் கோர்வை கலக்கியது, அட யப்பா என்னமா பாட்டுப் பாடுறாரு... தசாவதினி என்று நிரூபித்துவிட்டார்,தலைவரின் தலைமை தளபதி , தகுபதிதான்........ Thanks...
தமிழனின் தகைமை, நேர்மை, பண்பாடு, விருந்தோம்பல், கலாச்சாரம் இவையனைத்தையும் முழுமையாக இவ்வுலகுக்கு உணர்த்திய ஒரே திரைக்காவியம், இன்று வரை இதற்கீடான படம் எந்த ஒரு மொழியிலும் உருவாகவில்லை என்று நாம் கர்வத்துடன் தோள் தட்டி நெஞ்சு நிமிர்த்தி சொல்லக்கூடிய ஒப்பற்ற படைப்பு. எனவே தான் கடந்த 61 ஆண்டுகளாக சிறிது கூட தொய்வின்றி வலம் வந்து கொண்டே இருக்கிறது.
என் பாட்டன் கண்டு களித்து, என் தாய், தந்தை இப்படத்தின் பெருமையை எனக்குணர்த்தி நான் இதன் பிரம்மாண்டத்திலும், திரைக்கதை அமைப்பிலும், செந்தமிழ் வசனங்களிலும், உடையலங்காரம், இசை, பாடல்கள், சண்டைக்காட்சிகள், படமாக்கம், வெளிப்புறக் காட்சிகள், வசதியற்ற காலத்தில் தொழில்நுட்பத்தின் உச்சம், இப்படி அனைத்து பரிமாணங்களிலும் மிகச்சிறந்த மற்றும் முழுமைப் பெற்றதாக விளங்குகின்ற படைப்பில் என்னை பறிகொடுத்து இன்னும் மீள்வில்லை. அதற்கு முன்பே, என் மகனும் இப்படத்தின் பிரம்மாண்டத்திலும், திரைக்கதை அமைப்பிலும் இலயித்து விட்டான். அவன் விவரமமடைந்த பின் இப்படத்தை போன வருடம் ஆல்பர்ட் திரையரங்கில் அதன் இருபந்தைந்தாவது நாளில் அழைத்துச் சென்றிருந்த போது நான் மேலே சொன்ன அனைத்து அம்சங்களிலும் மயங்கி தன்னை மறந்து கண்டு களித்த போது நான் ஆச்சரியம் குறைவாகவும், குதூகலமும், மகிழ்ச்சியும் அதிகமாகவும் அடைந்தேன். திரைப்படம் முடிந்தவுடன் அவன் முகத்தில் ஒரு பிரமிப்பையும் மிகச்சிறந்த திரைப்படத்தை பார்த்த நிறைவையும் கண்டேன். படம் எப்படியடா இருந்தது என்ற என் கேள்விக்கு, சான்ஸே இல்ல, He is the real legend என்று சொன்னதோடு எனது நெருங்கிய நண்பர்களுடன் இன்னொரு முறை பார்க்க வேண்டிய படம் என்று கூறினான். "எல்லாப்புகழும் தலைவனுக்கே" என்று தைரியமாக என்னால் சொல்லிக்கொள்ள முடியும். ஏனெனில், அவரே படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருப்பதால்.
இன்று அதே காவியத்தை அகன்ற திரையினில் நண்பர்களுடன் காணப் போகின்ற எல்லையற்ற மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ............. Thanks.........
ஏசு கிறிஸ்து, மகாத்மா காந்தி, எம்ஜிஆர், அண்ணாதுரை, இப்படி நீண்ட அந்த பிரபலங்கள் லிஸ்டில் அத்தனை குழந்தைகளும் சொல்லி வைத்தது போல் ஆசையாய் எடுத்துப் பார்த்தது யாருடைய புகைப்படத்தை தெரியுமா? பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் புகைப்படத்தைத் தான். எப்போதும் வசீகரப் புன்னகை மாறாத அந்த முகத்தை குழந்தைகளால் மட்டுமல்ல எம்ஜிஆரை வெறுப்பவர்களாலும் கூட ரசிக்காமல் இருக்க முடிந்ததில்லை என்பதற்கு அவரது வாழ்க்கையும், வாழ்நாள் முழுக்க அவருக்கு கூடிய கூட்டமுமே சாட்சி. அவையெல்லாம் அப்போது அந்த மாமனிதருக்காக ‘தானாய் சேர்ந்த கூட்டம்’!.......... Thanks.........
"பயணங்கள் முடிவதில்லை" - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி - https://www.thanthitv.com/Programs/P...ivathillai.vpf........... Thanks.........
தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் *புலமை பித்தன்* அவர்களது பிறந்ததினம்.
*பிறப்பில்: ராமசாமி தேவர் 06/10/1935*
இவர் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.
இவரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்
1968- "குடியிருந்த கோயில்"
1969- "அடிமைப் பெண்"
1971- "குமரிக்கோட்டம்"
1972- "நல்ல நேரம்"
1972- "இதய வீணை"
1972- "நான் ஏன் பிறந்தேன்"
1973- "உலகம் சுற்றும் வாலிபன்"
1974- "சிரித்து வாழ வேண்டும்"
1974- "சிவகாமியின் செல்வன்"
1974- "நேற்று இன்று நாளை"
1975- "நினைத்ததை முடிப்பவன்"
1975- "பல்லாண்டு வாழ்க"
1975- "நாளை நமதே"
1975- "இதயக்கனி".......... Thanks...
சிவா அய்யா,
நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.
இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.
ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?
103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.
அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.
எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை. அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?
மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.
மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.
ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.
அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.
அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.
நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.
உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.
அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?
காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.
https://i.postimg.cc/SK1zKWb0/a175d3...1c7862c053.jpg
சென்னை அகஸ்தியா
https://i.postimg.cc/PxB8fkvs/cf1045...c59c7f13b5.jpg
Coimbatore shanmugam theatre
Thanks to mr. Samuvel
நடிகர்கள் ஜெமினி கணேசன், சிவாஜிகணேசனை வைத்து வீரபாண்டியகட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்ற பல படங்களை வரிசையாக இயக்கிக்கொண்டிருந்த இயக்குனர் பி.ஆர். பந்துலு 1960களில் ஒருநாள் எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டுக்கு செல்கிறார். “உங்களை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறேன்” என்று எம்ஜிஆரிடம் சொல்கிறார். “நீங்க என்னை வைத்து படம் பண்ணுவீங்களா” என்று எம்ஜிஆர் ஆச்சரியத்துடன் கேட்கிறார். ”ஆம்” என்று உறுதியாக சொல்கிறார் பந்துலு.
பெரும்பாலும் பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவரே சொந்தமாக தயாரித்து படத்தை இயக்குவது வழக்கம். எனவே, “அப்படியானால் எனக்கு இப்பவே அட்வான்ஸ் கொடுங்க” என்று எம்ஜிஆர் வாய்விட்டு கேட்கிறார். “அய்யய்யோ, இப்ப பணம் கொண்டு வரலையே” என்று பதறுகிறார் பந்துலு. “பரவாயில்லை. இருப்பதை கொடுங்க” என்று சிரிக்கிறார் எம்ஜிஆர். ஜிப்பாவில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று துலாவி பார்க்கிறார் பந்துலு. உள்ளே இருந்த 101 ரூபாய்யை எம்ஜிஆருக்கு அட்வான்சாக கொடுக்கிறார். அப்புறம், காலத்தால் அழியாத ஆயிரத்தில்ஒருவன் உருவாகியது. 1965ல் படம் வெளிவந்தது. எம்ஜிஆர்-ஜெயலலிதா நடிப்பு கூட்டணியில் முதலில் உருவான படம் அதுதான்.
அந்த காலத்தில் திருச்சி ஏரியாவுக்கு மட்டும் ஒரே ஆண்டில் 5 மடங்கு லாபத்தை கொடுக்கிறது ஆயிரத்தில் ஒருவன். மற்ற ஏரியாகளுக்கு எவ்வளவு லாபம் நீங்களே கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ்சினிமாவின் பக்கா கமர்ஷியல் படங்களில் ஒன்றாக ஆயிரத்தில் ஒருவன் இன்றும் பேசப்படுகிறது. 1974ல் பந்துலு மறைகிறார். 1987ல் எம்ஜிஆர் விண்ணுலகம் செல்கிறார்.
சமீபத்தில் பந்துலு மகளும், பிரபல ஒளிப்பதிவாளருமான விஜயலட்சுமி எம்ஜிஆரின் ராமாபுரம் வீட்டில் ஒரு படப்பிடிப்பை நடத்துகிறார். அப்போது அந்த வீட்டில் வசிக்கும் எம்ஜிஆரின் உறவினர்கள் ஒரு கவரை கொடுக்கிறார்கள். அதில் ஆயிரத்தில் ஒருவன் என்று எண்ணிலும், எழுத்திலும் எழுதப்பட்டு இருக்கிறது. அதில் 20 ரூபாய் நோட்டுகள் ஐந்தும், ஒரு 1 ரூபாய் நோட்டும் இருக்கிறது. விஜயலட்சுமிக்கு புரியவில்லை. “உங்க அப்பா ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக எம்ஜிஆருக்கு கொடுத்த அட்வான்ஸ் இது. இந்த பணத்தை செலவழிக்காமல் வீட்டு லாக்கரில் வைத்து இருந்தார் எம்ஜிஆர். பிற்காலத்தில் அதை நாங்கள் கண்டுபிடித்தோம். உங்க அப்பா கொடுத்த பணம். உங்களுக்கே இது சொந்தம்” என்று அந்த பணத்தை கொடுக்கிறார்கள் விஜயலட்சுமியிடம் கொடுக்கிறார்கள் எம்ஜிஆரின் உறவினர்கள். கண் கலங்குகிறார் விஜயலட்சுமி. ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக எம்ஜிஆர் வாங்கிய அட்வான்ஸ் பணம் ரூ 101தான் இது….
காலத்தால் அழியாமல், கரையாமல் இன்னமும் இந்த நோட்டுகள் அப்படியேஇன்னமும் விஜயலட்சுமிவசம் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்யம் தியேட்டரில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் ரீ-ரிலீஸ் விழாவில் இந்த தகவலை சொல்லி, இந்த 101ரூபாய்யை காண்பித்தார் பந்துலு மகள் விஜயலட்சுமி........... Thanks.........
தமிழ் வளர பாடுப்பட்டவர் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். தஞ்சையில் தமிழுக்காக பல்கலைகழகம் அமைத்தவர். ராஜராஜசோழனுக்கு 1984 விழா எடுத்தவர். அப்படிப்பட்ட தஞ்சை பெரியக் கோயிலில் தமிழ் கல்வெட்டுக்கள் எடுக்கப்படுகிறதே நம் (எம்.ஜி.ஆர்) தலைவரின் சார்பில் ஏதேனும் செய்ய நாம் ஒன்றுக் கூடி பேசலாம் என்ன சொல்கிறீர்கள். தமிழ் நண்பர்களே......... Thanks...
எழுத்தாளர் மாலனின் வலைப்பூ
தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.
அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.
சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.
ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.
அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது !............ Thanks.........
நம் மக்கள்திலகம் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு கார்வார் என்ற ஊரில் கப்பலில் நடந்து கொண்டு இருந்தது.
படப்பிடிப்பை பார்க்க நம் சிங்கம் வளர்த்த சீமானை பார்க்க கரை ஓரத்தில் கனிம சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட்டம் தங்கள் வேலைகளை விட்டு கூடி விட்டனர்.
வேலைக்கு வாருங்கள் போதும் போதும் என்று அவர்கள் சூப்பர்வைசர் பலமுறை கூப்பிட்டும் அசையவில்லை கூட்டம்.
மறுநாள் அவர்கள் சம்பளம் பிடித்தம் செய்ய படுகிறது. ஆனாலும் கூட்டம் குறையவில்லை.மக்கள்திலகத்தை அருகில் பார்க்கும் வாய்ப்பு அவர்களை அப்படி செய்ய தூண்டியது.
விஷயம் நம் மன்னன் காதுகளுக்கு போக அன்று மதியம் அந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் சேர்த்து படகுழுவினரருடன் உணவு தயார் செய்யப்படுகிறது.
மதிய உணவை உண்டு முடித்து அவர்கள் அனைவரையும் தனித்தனியா வரவழைத்து கை குலுக்கி வேலை நேரத்தில் நீங்க உங்கள் வேலைக்கு போகணும் இங்க நான் வந்த வேலை எனக்கு நடக்கணும் நான் சொல்வது சரிதானே என்று கேட்ட பின் அனைவரும் மகுடிக்கு கட்டு படும் நாகம் போல பணிக்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.
தனித்தனியே கை குலுக்கும் போது ஒவ்வொருவர் கையிலும் சுருட்டி மடிக்க பட்ட ரூபாய்களை பார்த்ததை விட பொன்மனசெம்மல் தங்கள் கைகளை தொட்டு குலுக்கிய மகிழ்ச்சியே அதிகம் அவர்களுக்கு..
அதிசியமனிதர் வரலாறு தொடரும் நன்றி..வாழ்க எம்ஜியார் புகழ்.
பின்குறிப்பு.
இந்த படப்பிடிப்பின் போது தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரம் ஆக நடந்து கொண்டு இருந்த நேரம்...பின்னாள்களில் கருநாகம் இந்தி எதிர்ப்பில் இல்லாமல் காதல் காட்சிகளில் மூழ்கி கிடந்த எம்ஜியார் என்று பேசியது கொடுமையிலும் கொடுமை.............. Thanks............