http://i1170.photobucket.com/albums/...ps1c6d81da.jpg
Printable View
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் பேரறிஞர் என்றழைக்கப்பட்டார்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பறை சாற்றும் "விடுதலை" & குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் இருந்தார் .
1942ல் "திராவிட நாடு" என்ற ஏட்டினை துவக்கி அதன் ஆசிரியராக சிறந்து விளங்கினார்.
பின்னர் அது "காஞ்சி" என்று பெயர் மாற்றி அதில் தம்பிக்கு என்ற தலைப்பில் அற்புதமான மடல்களை தீட்டி ஓர் எழுச்சியினை ஏற்படுத்தினார்.
"home land" என்ற ஆங்கில பத்திரிகையினை துவக்கி அதில் கழக கொள்கைகளையும் செய்திகளையும் பதிவிட்டு மேட்டுக்குடி மக்களிடையே ஓர் விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார்.
1944ல் நடந்த சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை திராவிட கழகம் என மாற்றக் கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
1949ம் வருடம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி, (தந்தை பெரியார் பிறந்த தினத்தில்) திராவிட முன்னேற்ற கழகத்தினை துவக்கினார்.
சிறுகதைகள் புதினங்கள், மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியவைகளை கீழ் கண்ட புனைப் பெயர்களில் எழுதினார் : :
1. சௌமியன்
2. சாவடி
3. நக்கீரன்
4. வீரன்
5. சம தர்மன்
6. சம்மட்டி
7. ஒற்றன்
8. ஆணி
9. பரதன்
எழுதிய நூல்கள் :
1. கம்பரசம்
2. ஆர்ய மாயை
3. ஏ - தாழ்ந்த தமிழகமே
4. தீ பரவட்டும்
5. இலட்சிய வரலாறு
நாடக வடிவில் எழுதிய கதைகள் :
1. சந்திரோதயம்
2. சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
திரைக்கதைகள்
1. சொர்க்க வாசல்
2. நல்ல தம்பி
3. ஓர் இரவு
4. வேலைக்காரி
5. தாய் மகளுக்கு கட்டிய தாலி
6. நல்லவன் வாழ்வான்
7. காதல் ஜோதி
அறிஞர் அண்ணா அவர்கள் திரை உலகிற்கு வந்த பின்புதான், அழகிய தமிழ் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு, திரை உலகில் தமிழ் நடையில் ஓர் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. உதாரணமாக -
ஸ்ரீமான் மற்றும் ஸ்ரீமதி என்பது திரு மற்றும் திருமதி என்று அழைக்கப்பட்டது.
நமஸ்காரம் என்பது வணக்கம் என்று மாறியது.
விவாக சுப முஹூர்த்தம் என்பது திருமணம் என்று சொல்லப்பட்டது.
காரியதரிசி என்ற வார்த்தை செயலாளர் என்று கூறப்பட்டது.
அபேட்சகர் என்பது வேட்பாளர் என்றழைக்கப்பட்டது.
================================================== ==========
தம்பி என்று கழகத் தொண்டர்களை அழைத்து குடும்ப பாசத்தை உருவாக்கிய உன்னத தலைவர் அறிஞர் அண்ணா. இந்த வழியில்தான் நமது புரட்சித் தலைவரும், தொண்டர்களை "ரத்தத்தின் ரத்தமே" என்று அன்புடன் அழைத்து ஒரு நேசத் துடிப்பினையும், இணைப்பினையும் உருவாக்கினார் என்பது கவனிக்கத்தக்கது.
மாற்றுக் கட்சியை மதித்த பண்பாளார் பேரறின்ஞர் அண்ணா அவர்கள். உதாரணமாக, காஞ்சி மாநகரத்தில் உள்ள தண்டலம் என்ற கிராமத்தில் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அழைத்து பெரிய அளவில் மாநாடு நடத்தி, மக்கள் குறைகளை அவர் கவனத்துக்கு கொண்டு வந்து அதை அவர் மூலம் களைய ஆவன செய்தார்.
இந்த பண்பு மக்கள் திலகத்திடமும் காணப்பட்டதால் அவரை மிகவும் நேசித்து, தனது "இதயக்கனி" என்று புகழ்ந்தார்
அறிஞர் அண்ணாவின் மிக குறுகிய கால ஆட்சி (1967 - 69) சாதனைகள் :
================================================== =======
1. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தினார்.,
2. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தி பாரினை வியக்க வைத்தார்.
3. பண்டைய தமிழ் அறிஞர்களை பெருமைபடுத்தும் விதமாக அவர்களுக்கு சிலைகள் நிறுவி சிறப்பு சேர்த்தார்..
4. ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற திட்டத்தை அமுலாக்கி இந்திய தேசத்தின் முழு கவனத்தையும் தன்பால் திருப்பினார்.
5. மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ் நாடு மாநிலம் என்று மாற்றி சுந்தரத் தமிழில் உச்சரிக்க வைத்தார்.
6. குடிசை மாற்று வாரியம் அமைத்து, ஏழைகளுக்கு தீபிடிக்காத வீடுகள் கட்டி தந்தார். இத்திட்டம் வெற்றிகரமாக அமைய
நமது புரட்சித் தலைவர் அவர்கள் ரூபாய் ஒரு இலட்சம் அந்த கால் கட்டத்திலேயே, முதல் தவணையாக வழங்கினார்
குறிப்பிடத் தக்கது.
7. கைத்தறி நெசவாளர்களின் துயர் துடைக்க, தானே கைத்துறி துண்டுகள் ஏந்தி விற்பனை செய்தார்
8. சிறு மற்றும் கைத்தொழில்களை ஊக்குவிக்க பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அமுல் படுத்தினார்.
செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இதையொட்டிய பகிர்வு...
அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!
* சி.என்.ஏ. என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் 'தளபதி'. பெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார். அதன் பிறகு எல்லோருக்கும் அவர் 'அண்ணா'தான்!
* பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை, பாக்கு பயின்றார். வெளியில் எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது!
* ''என் வாழ்க்கையில் நான் கண்டதும்கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்'' என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து, தனிக் கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை!
* இரண்டு மயில்கள், இரண்டு மான்கள், புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்!
* அண்ணா - ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் சௌந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கௌதமன், ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!
* தினமும் துவைத்துச் சுத்தப்படுத்திய வேட்டி - சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் 'வெள்ளையான சட்டை' அணிந்தார்!
* தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ''என்னை காலண்டர் பார்க்கவைத்து, கடிகாரம் பார்க்கவைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று சொல்லிக்கொண்டார்!
* காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு - மூன்றும்தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!
* முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய், மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவரது கணக்கில் இருந்தன!
* நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ''என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம். நூல் அறுந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்'' என்பார்!
* புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டுசெல்லும்போது தடுத்தார். ''நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காததுபோல ஆகிவிடும்'' என்றார்!
* அண்ணா பல மணி நேரங்கள் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ''காலமோ சித்திரை... நேரமோ பத்தரை... உங்களுக்கோ நித்திரை... போடுங்கள் உதயசூரியனுக்கு முத்திரை'' என்பதே அந்தப் பேச்சு!
* நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது, சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது, தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்!
* தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போடியிட்டவர் அண்ணா!
* உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு, ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான். மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார். இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்!
* 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்', 'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு', 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்', 'கடமை-கண்ணியம் -கட்டுப்பாடு', 'எங்கிருந்தாலும் வாழ்க', 'மறப்போம் மன்னிப்போம்', 'வாழ்க வசவாளர்கள்', 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு', 'சட்டம் ஒரு இருட்டறை', 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு' ஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!
* தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்துவிடுவார்!
* மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்ஷாப், சென்னை ஹிக்கின்பாதம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கிவிடுவார். ஹிக்கின்பாதம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின்படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும்தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம் அந்தக் காலத்தில்!
* பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார். யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும். காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது!
* முதலமைச்சர் ஆனதும், அதுவரை தன்னை எதிர்த்து வந்த பெரியார், காமராஜ், பக்தவத்சலம் ஆகியோரைச் சந்தித்து ஆலோசனைகள் பெற்றார்!
* தான் வகித்த தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியைச் சுற்று முறையில் பலருக்கும் போக வேண்டும் என்று நினைத்தார். ''தலைமையிடம் அதிகாரம் குவியக் கூடாது. எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும் இயக்கம் இருக்கக் கூடாது'' என்றார்!
'* ஓர் இரவு' திரைப்படத்தின் மொத்த வசனத்தையும் (அதாவது 360 பக்கங்கள்) ஒரே நாள் இரவிலேயே எழுதி முடித்தார்!
* எப்போதும் தான் பேச இருக்கும் கூட்டத்துக்குத் தாமதமாகத்தான் வருவார். ''முன்னால் வந்தால் அடுத்தவரைப் பேசவிடாமல் செய்துவிடுகிறார்கள். அதனால், ஊருக்கு வெளியில் நின்று, அனைவர் பேச்சையும் கேட்டுவிட்டுக் கடைசியில் வருகிறேன்'' என்பார்!
* அண்ணா மறைவின்போது திரண்ட கூட்டம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற கூட்டம். 1806 பிரிட்டன் துணைத் தளபதி நெல்சன், 1907 எகிப்து குடியரசுத் தலைவர் கமால் அப்துல் நாசர் ஆகியோருக்குக் கூடிய கூட்டத்தை அடுத்து அதிகம் கூடியது அண்ணாவுக்குத்தான் என்கிறது கின்னஸ்!
courtesy - vikatan e magazine
http://i1170.photobucket.com/albums/...psac3b2e30.jpg
courteysy boominathan aandavar
ஒரு வேளை விட்டுப்போச்சோ என்ற டவுட்டில் பார்த்திட்டிருக்கேன் புரட்சித் தலைவரின் கன்னித்தாய்.
மாட்டு வண்டியில் வரும் எம்ஜியாரிடம் ஒரு முதியவர் பிச்சை கேட்கிறார்.
அவரிடம் எம்ஜியார்: 'அய்யா உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும்?'
'ஒரு எட்டணா, பத்தணா தம்பி!' (படம் 1965!)
பையில் துழாவி எம்ஜியார் ஒரு அஞ்சு ரூபாயைக் கொடுத்து,
'இத ஒரு வாரத்துக்கு வெச்சிக்கிட்டு அதுக்குள்ள ஒரு வேலைய தேடிக்குங்க. பிச்சை எடுக்குறது தப்பு!'
ஏந்திய கை உயர எழும்பி, 'நீங்க நல்லா இருக்கணும் சாமி!' என்று கும்பிடுகிறது.
புரட்சித்தலைவர் தன் வழக்கமான பாணியில் வலது கையை ஆட்டிச் சின்முத்திரை காட்டியவாறு சொல்கிறார்: 'மனுஷனை சாமி ஆக்காதீங்க அய்யா. அதுக்கு எந்த மனுஷனும் தகுதியில்லை!'
யார் சொன்னது எம்ஜியார் நாத்திகர் என்று!
courtesy net
தமிழ் நடிகரான ராஜீவ், கன்னடத்தில் 35 படங்களிலும், தெலுங்கில் 15 படங்களிலும் நடித்து சாதனை படைத்தார்.
"ரயில் பயணங்களில்'' (1981) படத்தின் மூலம் நடிகரான ராஜீவ், 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் தமிழ்ப்படங்கள் 100. கன்னடம் 35; தெலுங்கு 15; மலையாளம் 5.
கன்னடப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், "ஜென்மத ஜோடி'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். அதில் வில்லனாக நடித்த ராஜீவ், சிறந்த வில்லன் நடிகருக்கான பரிசு பெற்றார்.
தமிழில் வெளியான "சிறைச்சாலை'', "அரசன்'', "அரண்'' ஆகிய படங்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு `டப்பிங்' குரல் கொடுத்தார்.
"பாரதி'' படத்தில், பாரதியாராக நடித்த சாயாஜி ஷிண்டேக்கு குரல் கொடுத்தவர் ராஜீவ்தான். 40 பேர்களின் குரல்களை `டெஸ்ட்' செய்து, ராஜீவின் குரலை தேர்வு செய்தனர்.
பாரதியாருக்கு உள்ள கம்பீரத்துடன் குரல் கொடுத்தார், ராஜீவ். அந்த ஆண்டு, சிறந்த டப்பிங் கலைஞருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார்.
சத்துணவு திட்டத்துக்கு நிதி திரட்ட கங்கை அமரனுடன் சேர்ந்து பல ஊர்களில் ராஜீவ் இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். அந்த இசை நிகழ்ச்சிகளில் பாடல்களும் பாடினார்.
இதைப் பாராட்டி, எம்.ஜி.ஆர். மோதிரம் பரிசு கொடுத்தார்.
today sunlife channel willbe telecast on @ 1900 hrs nam nadu