தங்களின் கனிவான பாராட்டுக்கு அன்பான நன்றிகள், அடிகளாரே..!
Printable View
தங்களின் கனிவான பாராட்டுக்கு அன்பான நன்றிகள், அடிகளாரே..!
வரும் ஞாயிறு 03.06.2011 அன்று காலை 10.00 மணிக்கு சிரிப்பொலி தொலைக் காட்சியில் நடிகர் திலகம் பிரபு மற்றும் பலர் நடித்த நேர்மை ஒளிபரப்பாகிறது.
டியர் சிவாஜிதாசன் சார்,
தங்களின் அன்பிற்கும், பாராட்டுக்கும், இந்த எளியவன் மேல் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் தலையாய நன்றிகள் !
நமது ஹப்பர், நடிகர் திலகத்தின் பக்தர் திரு.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள், "கர்ணன்" வெற்றி குறித்து வினவிய ஒரு கேள்விப்பதிவுக்கு, பதிலாக 'வெற்றிக்காவியமே கர்ணன்' என்கின்ற தலைப்பில் ஒரு பதிவை அடியேன் அளித்தேன். இது நிகழ்ந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 20.3.2010 அன்று. நமது நடிகர் திலகம் திரியின் ஆறாவது பாகத்தில் 276வது பதிவாக இது பதிவாகியுள்ளது. அடியேன் அளித்த அந்தப்பதிவு மீண்டும் இங்கே மறுபதிப்பாக (சற்று கூடுதல் தகவல்களுடன்) தங்கள் மற்றும் அனைவரின் பார்ர்வைக்கு:
///////Originally Posted by J.Radhakrishnan
பம்மலார் சார் உங்கள் தகவல்கள் அருமை. கர்ணன் படம் 108 நாள் ஓடியதா? யாரோ அது தோல்வி படம் என்று சொன்னார்களே ?
ராதாகிருஷ்ணன் (NT Devotee)
வெற்றிக்காவியமே கர்ணன்
"கலைப்பொன்னி" சினிமா மாத இதழின் ஜூலை 1964 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்:
கேள்வி : 'கர்ணன்' படத்துக்கு செலவழித்த தொகையைத் தயாரிப்பாளர் பந்துலு பெற்றிருப்பாரா?
பதில்: நிச்சயமாகப் பெற்றிருப்பார். பந்துலுவைக் 'கர்ணன்' காப்பாற்றி விட்டதாகத்தான் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
மாபெரும் வெற்றிவீரரான கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இ(ரு)ந்த பக்கமே இருந்ததால், தோற்கடிக்கப்பட்டார். மாபெரும் தயாரிப்பாளரான பந்துலு, அந்தப் பக்கம் போனதால், வெற்றியாளர் கர்ணன், வெற்றி பெற்ற கர்ணன் தோல்வி என அறிவிக்கப்பட்டார். ஆக, பரமாத்மா முதல் பந்துலு வரை, கர்ணனைத் தோற்கடிக்க, எத்தனை குறியாக இருந்திருக்கிறார்கள்.
முதல் வெளியீட்டில், வீரபாண்டிய கட்டபொம்மன் பெற்ற விண்ணை முட்டும் வெற்றியைக் கர்ணன் பெறவில்லை என்பது உண்மை. ஆயினும், திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும், முதல் வெளியீட்டில், கர்ணன், அமோக வரவேற்பினைப் பெற்று சிறந்ததொரு வெற்றிப் படமாகத் திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
கலைக்குரிசிலின் 94வது காவியமான கர்ணன், 14.1.1964 பொங்கல் திருநாளன்று, சென்னை மற்றும் தென்னகமெங்கும், 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
அவற்றில் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)
1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள்
2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்
4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள்
(ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)
[இன்றைய தினங்களில், 400 திரையரங்குகளில் திரையிடப்படும் பிரம்மாண்ட படங்களெல்லாம், 4 திரையரங்குகளில் கூட 100 நாட்களைத் தொட முடியாமல் மண்ணைக் கவ்வுகின்றனவே!?]
மேலும், கர்ணன் காவியம், திருச்சி, சேலம், கோவை போன்ற பெரிய நகரங்களில், 80 நாட்கள், ஒவ்வொரு நகரத்திலும் ஓடி, அபார வெற்றி பெற்றது.
கும்பகோணத்தில் 68 நாட்கள் ஓடி குதூகலமான வெற்றி !
நாகர்கோவிலில் 65 நாட்கள் ஏகோபித்த வரவேற்புடன் ஓடிய கர்ணன், திருநெல்வேலியில் 59 நாட்கள் வெற்றி நடை போட்டது.
திண்டுக்கல்லில் சூப்பர்ஹிட் ரேஞ்சில் 50 நாட்கள்.
ஆக, ஏ சென்டர்களில் எல்லாம் 80 நாட்களும் அதற்கு மேலும்,
பி சென்டர்களில் 50 நாட்களும் அதற்கு மேலும் மற்றும்
சி சென்டர்களில் எல்லாம் 3 வாரங்களிலிருந்து 6 வாரங்கள் வரை
வெற்றிகரமாக ஓடியுள்ள கர்ணன் ஒரு அபார வெற்றிக் காவியம்!!!
அன்புடன்,
பம்மலார்.///////
"கலைப்பொன்னி" ஜூலை 1964 இதழில் வெளிவந்த [வாசகர்] கேள்வி-பதிலின் ஒரிஜினல் வடிவம்:
http://i1110.photobucket.com/albums/...GEDC5834-1.jpg
31.3.2012 அன்று நமது ஹப்பின் இரண்டு திரிகளில் ['நடிகர் திலகம்' திரி, 'கர்ணன்' திரி], அடியேன் பதிவிட்ட "கர்ணன்" 100வது நாள் மதுரை 'தங்கம்' விளம்பரம் [வாராவார வசூல் சாதனைகளுடன்] இங்கே மீண்டும் மறுபதிப்பாக:
"கர்ணன்" 100வது நாள் : தினமணி(மதுரை) : 22.4.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC5575-2.jpg
'இதயக்கனி' மற்றும் 'இதயக்கனி சினிமா ஸ்பெஷல்' பத்திரிகைகளின் ஆசிரியர்-வெளியீட்டாளர் திரு.எஸ்.விஜயன் அவர்கள்,1990களின் இறுதியில் 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் எழுதிய 'சிகரங்களைக் கடந்த சிவாஜி' நெடுந்தொடரில் "கர்ணன்" முதல் வெளியீட்டு வெற்றி பற்றி பதிவு செய்துள்ளார். அந்த ஆவணத்தகவலும் தங்கள் மற்றும் அனைத்து அன்புள்ளங்களின் பார்வைக்கு:
http://i1110.photobucket.com/albums/...GEDC5836-1.jpg
"கர்ணன்", முதல் வெளியீட்டில், பெரிய வெற்றி என்பது இவற்றிலிருந்து தெள்ளத்தெளிவாகத் தெரியவரும்.
"கர்ணன்", முதல் வெளியீட்டில், சென்னையில் 100 நாட்கள் ஓடிய செய்தித்தாள் விளம்பரத்தை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அது கிடைத்ததும், இங்கே இடுகை செய்வதே முதல் வேலை....!
அன்புடன்,
பம்மலார்.
நமது நடிகர் திலகம், பந்துலு அவர்களின் நலன் கருதி, "பலே பாண்டியா"வில் ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் என்பது முற்றிலும் உணமை, ஆனந்த் சார்..!
இதேபோல் "காவல் தெய்வம்" காவியத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்து எஸ்.வி.சுப்பையா அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். மேலும், நடிகர் திலகம் (கௌரவ வேடப் பட்டியலின்படி) கௌரவ வேடத்தில் தோன்றிய 18 திரைக்காவியங்களில், பெரும்பாலானவற்றில், ஊதியம் பெறாமல்தான் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதை அந்தந்த தயாரிப்பாளர்களே பெருமை பொங்கக் கூறியுள்ளனர்.
அன்புள்ளங்கள் அனைவருக்கும்,
இன்று ஜூன் மாதம் துவங்கி விட்டபோதிலும், இன்னும் சில மே மாத காவியங்களின் ஆவணப்பதிவுகள் இடுகை செய்யவேண்டி இருப்பதால், ஜூன் காவியங்கள், மே காவியப்பதிவுகள் முடிந்த பின்னர் தொடங்கப்படும்.
[mr_karthik, 'Republic Day' "Raja"வையும் ஜூன் ஆவணப்பதிவுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் நிச்சயம் அளித்து விடுகிறேன்.]
அன்புடன்,
பம்மலார்.
கலைக்குரிசில் & கலைஞர்
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின்
பிறந்த நாள் சிறப்புப் பதிவுகள்
1980-ன் துவக்கத்தில் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அமோக வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் - திமுக முற்போக்குக் கூட்டணி, அதே வருடத்தின் மத்தியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் பலம் வாய்ந்த கூட்டணியாகவே தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலின் போது, காங்கிரஸ்-திமுக முற்போக்கு கூட்டணி சார்பில், தனது ஆருயிர் நண்பர் கலைஞர் அவர்களுக்கு ஆதரவாக நடிகர் திலகம் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார். அந்தப் பிரசாரம் குறித்த சில முக்கிய ஆவணங்கள் கலைஞர் பிறந்தநாள் சிறப்புப் பதிவான இந்தப் பதிவில் இடுகை செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரை பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் பற்றிய தலைப்புச் செய்தி
வரலாற்று ஆவணம் : முரசொலி : 12.5.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC5837-1.jpg
சென்னை கடற்கரை பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் : சிங்கத்தமிழன் ஆற்றிய பேருரை
வரலாற்று ஆவணம் : முரசொலி : 14.5.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC5838-1.jpg
தேசிய திலகம் அளித்துள்ள தேர்தல் பிரசார விளம்பரம்
வரலாற்று ஆவணம் : முரசொலி : 31.5.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC5839-1.jpg
கலைஞர் பிறந்த நாள் சிறப்புப்பதிவுகள் தொடரும்...
3.6.2012 : முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 89வது பிறந்த தினம்.
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
சபாஷ் பம்மலார் சார்! இதுக்கு மேலேயும் 'கர்ணன்' தோல்விப்படம் என்று யாராச்சும் சொன்னாங்கன்னா கண்டிப்பா அவிங்கள கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பிச்சிட வேண்டியதுதான்.