http://i59.tinypic.com/2hx6ek6.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i59.tinypic.com/2hx6ek6.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகத்தின் இறுதி யாத்திரை என்கிற விடியோ காட்சியை நான் பகிர்ந்திருந்தேன் .... உண்மையில் நான் பார்த்த மாத்திரத்திலேயே அழுது விட்டேன் ...
அவருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய கலைமாமணி ரவீந்தர் அவர்கள் கூறிய ஒரு சம்பவம் .. உங்களுக்காக ....
" எனக்கு 1958 இல் திருமணம் நிச்சயமாகியிருந்தது , " நாடோடி மன்னன் வெளி வரும் வரை பொறுத்திரும் பிரமாதமாகச் செய்யலாம் என்றார் "
படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம் ஜி சக்ரபாணி என்னை அழைத்து , " என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம் ? " என்று கேட்டார்
நான் , " தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் " என்று சொன்னதும்
" சந்தோசம் , எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் "
நான் " பதினாறு ரூபாய் வேண்டும் " என்று சொன்னேன் .
பெரியவரும் சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் ...
பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் " ரவீந்தர் , நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது குறைச்சு தரலாமா ? " என்று கேட்டார்
நான் புரிந்துக் கொண்டு " பதினாறாயிரம் கேக்கலே , வெறும் பதினாறு ரூபாய் தான் " என்றுச் சொன்னேன்
கலகலவென்று சிரித்து " என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம் ? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே ? " என்று கேட்டார்
" எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும் , மத்தப்படி உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் " என்றேன் .
" அப்படியா இரும் கொண்டாறேன் , " என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் கொடுக்கச் சொல்லிச் சொன்னார் செம்மல் .
அதை பெரியவர் என்னிடம் கொடுத்து விட்டுப் போய் விட , நான் அங்கேயே காத்திருந்தேன் , உள்ளே சென்ற செம்மல் திரும்ப வந்தார் , என்னைப் பார்த்து " ஏன், ரவீந்தர் , இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன் , தர்றேன் " என்றார்
நான் உடனே , " அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் " என்றேன் ..
" அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் " என்றார் ...
இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன் .... செம்மலும் கண் கலங்கி விட்டார் ,, என்னை அணைத்து " நல்லா இரும் " என்று வாழ்த்தினார் ... இன்று நான் 6 பிள்ளைகளுக்கு தந்தை
repeated article but interesting
அன்புக்கு நான் அடிமை..” என்று பாடி அன்பாகவே வாழ்ந்து மறைந்த அதே எம்.ஜி.ஆர்...
ஒருமுறை தன் தொண்டர்களிடம் “கத்தி வைத்துக் கொள்ளுங்கள் “ என்று சொன்னபோது ,நடுநிலையாளர்கள் பலர் அதிர்ந்து போனார்கள்...
மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற விழாவில் , தன் கட்சி தொண்டர்களை தற்காப்புக்காக கத்தி வைத்துக் கொள்ள சொன்னதாக ஞாபகம்.....
ஆனால் இந்தக் கத்திக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறதாம்....
எம்.ஜி.ஆரின் இறுதிக் காலத்தில் அவர் வாய் பேச இயலாத நிலையில் இருந்தபோது , அவரை “ஊமையன்” என்று மேடைக்கு மேடை விமர்சிக்கத் துவங்கினார்கள் எதிர்க் கட்சியினர் ...
இது எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்ததாம்..அவர் கட்சிக்காரர்கள் பொங்கி எழுந்து புறப்பட்டபோதும் “அதற்கு பதில் அளிக்க வேண்டாம்” என்று தடுத்து விட்டாராம் ... அந்த வேளையில் நடந்த மாநாட்டில்தான் கஷ்டப்பட்டு பேசி “எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்” என்று மட்டும் சொன்னார் ...
இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்று எவருக்குமே புரியவில்லை ...
ஆனால் அடுத்த நாள் பத்திரிகைகளின் பரபரப்புச் செய்தி இதுதான்...!
உடனே “ஒரு முதல் அமைச்சர் இப்படி பேசலாமா ?” என்று முழங்கினார்கள் எதிர்க் கட்சியினர்...
அதிகாரிகள் ,எம்.ஜி.ஆரிடம் இதை எடுத்துச் சொன்னபோது பதிலுக்கு எம்.ஜி.ஆர். புன்னகையுடன் சொன்னாராம்..
”ஊமையன் என்று சொன்ன அதே நபர்கள் எல்லாம் இன்று ...முதல்வர் இப்படி பேசலாமா என்று கேட்டதன் மூலம் , நான் பேசுவதை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி..”..
# ....இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை
இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை !
175th Day function in Kamaraj Arangam of Ayirathil Oruvan.
http://mgrroop.blogspot.in/2014/09/1...unction-7.html
Gandhi Kannadasan speech.
https://www.youtube.com/watch?featur...;v=MbrVHlkFNkw
நேற்றைய மாலை முரசு தினசரியில் பிரசுரம் ஆன புகைப்படங்கள் -அண்ணா பிறந்த நாள் விழா
------------------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/bf464l.jpg