Joe, is that the dancer Manimaran (the big guy carrying small pot in Rajini's Muthu)?
Printable View
Joe, is that the dancer Manimaran (the big guy carrying small pot in Rajini's Muthu)?
Not sure he is the one ..Sure he is a local singaporean
https://www.facebook.com/manimarancreations
That's him (middle, big guy). Must be a big NT fan. Well known choreographer in Singapore back then.
http://www.facebook.com/photo.php?fb...type=3&theater
கலைக்குரிசில் & கலைஞர்
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின்
பிறந்த நாள் சிறப்புப் பதிவுகள்
நடிகர் திலகத்தின் தலைமையில் தமிழ்த் திரையுலகம்
மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்திய
தமிழக முதல்வர் கலைஞரின் பவளவிழா ரிப்போர்ட்
[27.9.1998 (ஞாயிறு) : நேரு உள்விளையாட்டு அரங்கம் : சென்னை]
வரலாற்று ஆவணம் : மாலை முரசு : 28.9.1998
நடிகர் திலகம் நல்கிய உணர்வுபூர்வமான பாராட்டுரை
http://i1110.photobucket.com/albums/...GEDC5845-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5846-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5848-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5847-1.jpg
[இந்தப் பவளவிழா நடைபெற்றபோது கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.]
3.6.2012 : முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 89வது பிறந்த தினம்.
அன்புடன்,
பம்மல் ஆர். சுவாமிநாதன்.
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
தங்கை
[19.5.1967 - 19.5.2012] : 46வது ஆரம்ப தினம்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : காஞ்சி : 4.6.1967
http://i1110.photobucket.com/albums/...GEDC5820-1.jpg
52வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 9.7.1967
http://i1110.photobucket.com/albums/...GEDC5821-1.jpg
குறிப்பு:
1. சென்னை மற்றும் தென்னகமெங்கும் பல அரங்குகளில் 50 நாட்கள் முதல் 77 நாட்கள் வரை ஓடிய "தங்கை", ஒரு சிறந்த வெற்றிக்காவியம்.
2. "தங்கை"யின் 50வது நாள் சென்னைப் பதிப்பு விளம்பரம் கிடைத்தவுடன் இங்கே இடுகை செய்கிறேன்.
பக்தியுடன்,
பம்மலார்.
பம்மலார்,
கருணாநிதி என்றாலே காழ்ப்புணர்வும் வெறுப்பும் கரைபுரண்டோடும் இந்த காலகட்டத்திலும் கருணாநிதி - நடிகர் திலகம் தொடர்பான ஆவணங்களை பதிந்த உங்களை பாராட்டுகிறேன்.
ஒரு காலத்தில் மற்றவர்களால் நடிகர் திலகத்திற்குக் கிடைத்த அதே காழ்ப்புணர்ச்சியும் வெறுப்புணர்ச்சியும் தான் பின்னர் கலைஞருக்குக் கிடைத்தன. தங்களிடம் ஒரு சக்தி இருக்கிறது என்கிற எண்ணத்தில் நடிகர் திலகத்தை எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து விமர்சிக்க முடியமோ, ஏச முடியுமோ, ஆபாசமாக பேச முடியுமோ, சென்டிமென்டலாக தாக்க முடியுமோ அவை எல்லாவற்றையும் தி.முக..வினர் அந்தக் காலத்தில் செய்ததன் பலன் தான் இன்று அவருக்குத் திரும்புகிறது. அது கூட கலைஞராக செய்திருப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் செய்த போது அவற்றையெல்லாம் கண்டித்திருக்கலாம். பெருந்தன்மையே உருவாகக் கொண்ட நடிகர் திலகம் இறுதி வரை தன்னுடைய உண்மையான நட்பைக் கடைப்பிடித்து வந்ததன் சான்றே 98ம் ஆண்டில் நடைபெற்ற விழா. அவரும் கலைஞரும் உழைக்கவில்லை யென்றால் இன்று தி.மு.க., என்கிற மாபெரும் சக்தி உருவெடுத்திருக்காது. தி.மு.க. என்கிற விருட்சம் இன்று பரந்து விரிந்து பெரிய சக்தியாக இருக்கிறதென்றால் அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டு பாதுகாத்து வளர்த்து விட்டவர்கள் நடிகர் திலகமும் கலைஞரும் தான்.
நடிகர் திலகத்துடன் இணைந்தவர்கள் என்றுமே நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இறக்கம் கண்டால் அதற்கு அவர்களுடைய செய்ல்பாடுகள் அல்லது வேறு ஏதாவது காரணிகள் காரணமாக இருந்திருக்கலாமே தவிர என்றைக்குமே நடிகர் திலகம் காரணமாக இருந்ததில்லை. இதை பல முறை நாம் கண்டிருக்கிறோம். நடிகர் திலகத்தின் ராசியான கரங்களால் வளர்க்கப் பட்டதன் காரணமாகத்தான் இன்றும் தி.மு.க. உறுதியாக இருக்கிறது. இவற்றை எல்லாம் நாம் ஏற்கெனவே இத்திரியில் விவாதித்திருக்கிறோம். ஆனால் இதைக் கலைஞர் நன்றாக உணர்ந்ததன் விளைவாகத் தான் கடற்கரையில் அவருக்கு அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு உறுதியாக நின்றார். சென்னைக் கடற்கரையில் கம்பீரமாக நிற்பது நடிகர் திலகத்தின் சிலைமட்டுமல்ல, அந்த உருவத்தில் கலைஞருடைய நட்புணர்வு, அவருடைய மன உறுதி. அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இந்த விஷயத்தில் அவரை யாரும் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.
அன்புடன்