http://1.bp.blogspot.com/-5Ulmi_IzLZ...F4/s640/35.jpg
கொடுத்துச் சிவந்த கை
கும்பிட்டுக் கேட்கின்றது
Printable View
http://1.bp.blogspot.com/-5Ulmi_IzLZ...F4/s640/35.jpg
கொடுத்துச் சிவந்த கை
கும்பிட்டுக் கேட்கின்றது
http://3.bp.blogspot.com/-iY5haw-xKE...ma4/s640/1.jpg
நாலு வயதில் அறியாப் பருவத்தில் இருந்தே புரட்சித் தலைவனின் ரசிகன் நான்.
தலைவனை நேரில் காணாமல் திரையில் மட்டுமே கண்டு கழித்திட்ட பல் கோடி
இலங்கைத் தமிழ் ரசிகர்களில் நானும் ஒருவன்.
ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்த ஒரேயொரு இந்தியத் தலைவன் , முதலமச்சர்
பதவியில் இருந்த போதிலும் , இல்லாத போதிலும் ஒரே நிலைப்பாட்டை எடுத்தவன்.
ஈழத் தமிழர் துயர் துடைக்க தமிழீழத் தலைவன் தோழ் தழுவி தேவையான பொருள்
உதவியும் ,அரசியல் ஆதரவையும் தந்து எம்மை வாழ வைத்த எங்கள் அன்புத்
தலைவன் மட்டும் தான்.
ஆண்டவன் சித்தம் மாறாகி எம்தலைவன் நோய் வாய்பட்டு வெளிநாடு சென்றமை தான்
எம் விழ்ச்சியின் தொடக்க விழாவானது. அது எமது துரதிஸ்டம் என்பதில் மாற்றுக் கருத்தேது
திரு பாஸ்கரன் சார்
உங்களின் ஆதங்கம் மிகவும் நியாயமானதே . மக்கள் திலகம் அவர்கள் 1983 முதல் 1987 வரை இலங்கை பிரச்சனையில் உடனுக்குடன் தலையிட்டு அரசியல் நிர்வாகத்தின் மூலமும் , தனிப்பட்ட முறையிலும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி நன்மைகள் புரிந்துள்ளார் . அவர் மட்டும் இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் நிச்சயம் ஈழ தமிழர் பிரச்ச்ச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைத்திருக்கும் .
ஏப்ரல் -1973
40 ஆண்டுகள் முன்பு ... நினைவலைகள் ..
மக்கள் திலகம் அவர்கள் புரட்சித்தலைவராக புகழ் பெற்று அண்ணா திமுக இயக்கம் ஆரம்பித்து 6வது மாதத்தில் மிகவும் பரபரப்பான சூழலில் நடைப்பெற்ற சில சம்பவங்கள் .
மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் இறுதி கட்ட வேலைகள் -இசை சேர்ப்பு பணிகள் தீவிரம்
அன்றைய ஆளும் கட்சி கொடுத்த நெருக்கடிகள் - பவர் கட் -- அதிகார துஷ் பிரயோகம் - நெருக்கடி - மிரட்டல்
திரை அரங்கு உரிமையாளர்களுக்கு - விநியோகஸ்தர்களுக்கு மிரட்டல் - சென்னை மாநகராட்சி உயர்த்திய போஸ்டர் வரி உயர்வு - மதுரை முத்து மிரட்டல் - சவால் - தினத்தந்தி பத்திரிகை இருட்டடிப்பு
மறுபக்கம் திண்டுக்கல் நாடாளுமன்றம் இடைத்தேர்தல் - தேர்தல் பணி- பொருளாதார நெருக்கடி
என்று எல்லா பக்கமும் சோதனைகள் மொத்தமாக மக்கள் திலகத்தை நெருக்கடி கொடுத்த நேரம் .
ஒரு சாதரான நடிகராக இருந்தால் கை எடுத்து கும்பிட்டு திரைப்பட தொழிலுக்கு முடிவு கட்டி ஓட்டம் பிடித்திருப்பார் .
மக்கள் திலகம் மிகவும் நிதானத்துடன் , எச்சரிக்கை உணர்வுடன் , திட்டமிட்டு செயல் பட்டு வந்த நேரம் .
வேலூரில் அண்ணா திமுக மாநாடு மே 6 -1973 என்று அறிவிக்கபட்டிருந்த நேரம்
அரசியல் - சினிமா என்று இரு துறைகளிலும் மக்கள் திலகம் நீண்டதொரு போராட்டங்களை தினமும் சந்தித்து வந்த நேரம் .
சென்னை - மதுரை என்று தனது முழு நேரத்தையும் உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் இடைதேர்தல் பணிக்காக பறந்து செயல் பட்டு வந்த நேரம் .
மதுரை முத்துவும் - சென்னை -ஆளும் கட்சியின் தலைமையும் விழி பிதுங்கி நிற்கும் அளவிற்கு மக்கள் திலகமும் அவரது ரசிகர்கள் பட்டாளமும் ஓய்வின்றி வெற்றிக்காக உழைத்து வந்த நேரம்
தொடரும் .......
1973 ...... ஏப்ரல் ..மே மாதம்
நினைவுகள் ......
மதுரை மீனாக்ஷி அம்மனின் அருளும் , மதுரை மீனாக்ஷி அரங்கில்உலகம் சுற்றும் வாலிபனும் , கிடைக்கும் என்று யாருமே எதிர் பாராத நேரம் அது .
மதுரை நகரமும் , மதுரை மாவட்டமும் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்த நேரம் .
மதுரை எங்கள் கோட்டை என்று கர்ஜித்த மதுரை முத்துவின் கோட்டம்
மதுரை மாவட்டம் திண்டுக்கல் தொகுதி எங்களுக்கே என்று ஆர்பாட்டத்துடன் வந்த
ஸ்தாபன காங்கிரஸ்
திமுக
இந்திரா காங்கிரஸ்
மூன்று முப்பெரும் கட்சிகளும்
பெருந்தலைவர் காமராஜர்
அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி
திராவிட இயக்க தலைவர் திரு பெரியார்
திமுக தலைவர்
திரைப்பட நட்சத்திரங்கள்
நடிகர் திலகம் சிவாஜி
ssr
பிரபல துக்ளக் ஆசிரியர் சோ
அனல் பறக்கும் மேடை பேச்சாளர்கள்
பெரும்பாலான தினசரி - வார - மாத பத்திரிகை நிருபர்கள் ஒன்று சேர்ந்த திண்டுக்கல்
என்ற தேர்தல் யுத்த களத்தில்
மக்கள் திலகத்தின் புதிய இயக்கத்தையும்
மக்கள் திலகத்தின் புகழையும்
மக்கள் திலகத்தின் செல்வாக்கையும்
மிகவும் மட்டமாக விமர்சித்தும் , தரம் தாழ்ந்து பேசியும்
பிரச்சாரம் செய்து வந்த நேரத்தில் மிகவும் அமைதியாக
கூர்ந்து கவனித்து வந்த ஒரே ஒருவர் .....
தொடரும் .....
1973 நினைவுகள் ... தொடர்கிறது
கடும் போட்டி நிலவி வந்த திண்டுக்கல் இடைதேர்தல் - மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சி தன்னுடய முழு அதிகாரத்தை பயன்படுத்தி தீவிர பிரச்ச்சாரம் செய்து வந்தனர் .
மக்கள் திலகம் அவர்கள் பொது மக்களையும் , ரசிகர்களையும் நம்பி தீவிர ஒட்டு வேட்டை நடத்தினார் . செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் . பிரமாண்டமான வரவேற்பு .
கடந்த பதிவில் குறிப்பிட்ட அந்த ஒருவர் வேறு யாருமில்லை .
மதுரை மீனாக்ஷி அம்மன்தான் .
முதல் அருள்
மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் - மதுரை மீனாக்ஷி அரங்கில் வெளி வந்து வெற்றிக்கொடி நாடியது
அடுத்து தேர்தல் முடிவு
இரண்டாவது அருள்
திண்டுக்கல் இடை தேர்தல் வெற்றி மகுடம் மக்கள் திலகத்துக்கு சூட்டிய பெருமை .
மதுரை வீரன் நம் மக்கள் திலகம் அவர்களுக்கு மதுரை மீனாக்ஷி அம்மன் அருள் கிடைத்தது
ஒரு வரலாற்று சாதனையே .
மக்கள் திலகத்தின் எதிர்கால வெற்றிகளுக்கு அச்சாரம் தந்த மதுரை - மறக்க முடியமா ?