http://i157.photobucket.com/albums/t...ps5d28972f.jpg
மேலே உள்ள நண்பர்கள்யாராவது
இங்கே உறுப்பினராக இருக்கிறார்களா?
Printable View
http://i157.photobucket.com/albums/t...ps5d28972f.jpg
மேலே உள்ள நண்பர்கள்யாராவது
இங்கே உறுப்பினராக இருக்கிறார்களா?
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t...ps2a58f607.jpg
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t...ps4b41a063.jpg
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t...ps3055328b.jpg
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t...ps070c517a.jpg
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t...ps4b68b5f8.jpg
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t...ps55482928.jpg
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t...pse4ef759c.jpg
முன்னர் பதிவிடப்பட்டதுதான் எனினும்
மீண்டும் உங்கள் பார்வைக்கு பெரிய அளவில்
http://i157.photobucket.com/albums/t...ps9493f561.jpg
பார்த்ததில் பிடித்தது -15
கடந்த சென்ற 2 பதிவிகளில் ராஜா ராணி பாணி கதை சார்ந்ததாக இருந்தது , இந்த பதிவு அதில் இருந்து சற்று விலகி , அதுவும் நடிகர் திலகத்தின் படங்களில் 1980 க்கு பிறகு வந்த படமாக எழுதி உள்ளேன்
அந்த படம் தான் 1987 ல் நடிகர் திலகத்தை வைத்து அதிக படங்களை தயாரித்த பாலாஜி அவர்களின் கம்பெனி தயாரித்து , நடிகர் திலகத்தின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு வசனம் எழுதிய அரூர் தாஸ் அவர்களின் கைவணத்தில் , நடிகர் திலகத்தை வைத்து , பல genre படங்களை இயக்கிய AC திருலோக்சந்தர் இயக்கத்தில் வந்த குடும்ப சித்திரமான குடும்பம் ஒரு கோவில் என்ற திரைப்படம்
கதை :
சங்கர்(சிவாஜி சார் ) மற்றும் அவர் மனைவி பார்வதி (லட்சுமி) இருவரும் கணவன் மனைவியாக சந்தோசமாக வாழ்கிறார்கள் , சங்கர் அவர் தம்பி ராஜா , ரவி மற்றும் தங்கை வாழ்கையை பற்றி மட்டுமே யோசித்து , பார்த்து அவர்களின் சந்தோஷமே முக்கியம் என்று வாழ்கிறார் , தான் கண்ணாடி அணியும் செலவை கூட தள்ளி வைத்து தம்பிகளின் படிப்புக்கு செலவு செய்கிறார் . இவர் இப்படி என்றால் இவர் மனைவி பார்வதி தன் குழந்தையை abortion செய்து , தன் கணவரின் தங்கச்சி , தம்பிகள் மேல் அன்பாக இருக்கிறார் .
ராஜாவும் , ரவியும் படிப்பு முடித்து வரும் பொது , ராஜா ஒரு பெண்ணை காப்பாத்துகிறார் , அதனால் ராஜாவின் மேல் அந்த பெண்ணுக்கு காதல் , சங்கரின் தங்கை , ஒரு பையனை விரும்புகிறார்
ராஜாவை விரும்பும் ரஞ்சனியின் தாய் பணக்காரி , திமிர் பிடித்தவள் .
அவர் ராஜாவை தன் கூடவே இருக்க வற்புறுத்த , ராஜா மறுத்து விடுகிறார் , ரஞ்சனி முதலில் ராஜா உடன் தன் திருமணத்தை செய்து வைக்கும் படியும் , பிறகு தான் அந்த குடும்பத்தை பிரித்து , இங்கே வந்து விடுவதாக கூறுகிறார்
திருமணமும் நடந்து விடுகிறது , வந்த இடத்தில ரஞ்சனி பிரச்சனை செய்து பார்க்கிறார் , ஆனால் பார்வதியின் குணத்தால் பிரச்சனைகள் அமிங்கிவிடுகிறது . இந்த நிலையில் ரஞ்சனியின் பிறந்தநாள் அன்று அவர் தாய் வந்து பணம் குடுக்க ராஜா தடுக்கிறார் பிரச்சனை பெருசாக ரஞ்சனி தன் தாய் வீட்டுக்கு செல்லுகிறார் , பார்வதி சமாதானபடுத்தி அவரை அழைத்து வருகிறார்
ரஞ்சனி வீட்டுக்கு வந்த உடன் பார்வதியை மோகினி பேய் என்று சொல்லி விட , தங்கையும் அடித்து விட , ஆத்திரம் வந்து , அடித்து விடுகிறார் ரவி (ராஜா வின் தம்பி ) , இதை பார்த்த ராஜா ரவி ஒரு ஆனதை என்ற உண்மையை சொல்லி விட , மனம் ஒடிந்து வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார் ரவி .
தன் அளவுக்கு பணம் இல்லாததால் ரஞ்சனியின் தாய் ராஜாவை தன் வீட்டில் வந்து இருக்கும் படி சொல்ல , ராஜா யாருக்கும் சொல்லாமல் துபாய் சென்று விடுகிறார் ,
சங்கரின் தங்கை ஜானவியை காதலிக்கும் பையன் வந்து பெண் கேட்க , அவர் அப்பா வந்து 60,000 ருபாய் பணம் கேட்கிறார் , வேறு வழி இல்லாமல் வேலையை ராஜினாமா செய்து PF பணம் 75000/- Rs வைத்து திருமணம் செய்ய நினைக்கிறார்
பணத்தை , துரதிஷ்டவசமாக தன் சமந்தி VKR வீட்டில் மறந்து வைத்து விட , அவர் அந்த பணத்தை எடுத்து வைத்து விடுகிறார்
இதை அறிந்த மாப்பிள்ளை (வசந்த் ) அவர் அண்ணன் (ஜனகராஜ் ) இருவரும் சேர்ந்து , தங்கள் வீட்டில் உள்ள நகைகளை திருடி , பணத்தை சங்கரிடம் கொடுத்து விடுகிறார்கள்
கல்யாணம் நடுக்கும் பொது , உண்மை தெரிந்து , VKR போலீஸ் complaint கொடுக்க , சங்கர் கைது செய்ய படுகிறார்
அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர பார்வதி , அவர் வீட்டை விற்று விடுகிறார் , சங்கரின் தங்கை ஜானவி , தற்கொலை செய்ய போக , வீட்டை விட்டு வெளியே சென்ற ரவி (இப்போ ஒரு ஆட்டோ டிரைவர் ) அவரை காப்பாத்தி தன் கூடவே வைத்து கொளுகிறார்.
ரஞ்சனி தன் தாயின் குணம் பிடிக்காமல் வெளியே வந்து விடுகிறார் , வந்த இடத்தில ஆபத்தில் சிக்கி கொள்ளும் அவரை ரவி காப்பாற்றி தன் கூடவே வைத்து கொள்ளுகிறார்
துபாய் போன ராஜா சென்னை வந்து தன் வீட்டுக்கு போகும் பொது ஆட்டோ ஓட்டும் ரவியை பார்க்க , இருவரும் சேர்ந்து அண்ணனை தேடுகிறார்கள்
வீடும் இல்லாமல் , வேலையும் இல்லாமல் சங்கர் அவர் மனைவி , பார்வதி இருவரும் கஷ்டபடுகிறார்கள் , ஒரு சத்திரத்தில் தங்கி இருக்கும் அவர்களை , வெளியே அனுபிவிடுகிரர்கள் அந்த சத்திரத்தின் மேனேஜர் .
அன்னதானம் சாப்பாட்டை எடுத்து வந்து சாப்பிடும் பொது , ஒரு வீட்டின் முன்னால் அமர்ந்து சாப்பிடும் அவர்களை அந்த வீட்டின் owner துரத்த , அந்த சாப்பாடும் கொட்டி விடுகிறது
நேரத்துக்கு சாப்பிட முடியாமல் பார்வதிக்கு ulcer வந்து ,அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் வருகிறது , மருந்து செலவுக்கு தான் அணிந்து இருக்கும் கண்ணாடி , செருப்பை கூட விற்று விடுகிறார் .
ஆபரேஷன் செய்ய வேண்டிய நாள் நெருங்க , அதற்கு 1000 ருபாய் தேவை பட , பணத்துக்கு அலைகிறார் சங்கர் , பணம் கிடைத்து விட , வழியில் ஒரு குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் கத்தி குத்தி , காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்
பார்வதி , தன் கணவரின் கண்ணாடி , மற்றும் செருப்பை , தாலியை அடக்க வைத்து வங்கி வந்து விடுகிறார்
ஆஸ்பத்திரி வளாகத்தில் இருவரின் உயிரும் பிரிய , மொத்த குடும்பமும் சேர்ந்து விடுகிறது.
படத்தை பற்றி :
மிகவும் அழுகை வர வைக்கும் படம் , melodrama பிடிக்காத நபர்களுக்கு இந்த படம் பிடிக்காது , இருந்தாலும் நம்மவர் இந்த படத்தில் வழக்கம் போல் கலக்கி உள்ளார் , ஒரு படம் , ஓடும் அல்லது ஓடாது , ஆனால் நம் நடிகர் திலகத்தின் உழைப்பு அதில் 100 % இருக்கும் .இந்த படத்தில் நடிகர் திலகம் மிகவும் ஒல்லியாக , அழகாக இருக்கிறார் , ஒரு middle age person லுக் க்கு மிகவும் apt ஆக இருக்கிறார் , அவர் குரல் கூட இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது .
சில நபர்கள் சொல்லி பார்த்து இருக்கிறேன் , 1980 க்கு நடிகர் திலகம் வயதுக்கு தகுந்த உடை அணிந்து நடிக்கவில்லை , வயதுக்கு தகுந்த பாத்திரங்களில் நடிக்கவில்லை என்று
+
நடிகர் திலகத்தின் படங்களில் அவர் தான் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆக்கிரமித்து கொள்வர் என்று
இந்த படத்தை அந்த நபர்கள் அனைவரும் ஒரு முறை பார்த்தல் தேவலை
நாம் அனைவரும் அணிய கூடிய plain ஷர்ட் மட்டுமே அணிந்து நடித்து இருப்பார் எங்கள் நடிகர் திலகம்
அடுத்தது (குற்றச்சாட்டுக்கு பதில் )
இந்த படத்தில் பார்வதி என்ற பாத்திரத்தில் வாழ்ந்த லட்சமி தான் இந்த படத்தில் அதிக scope உள்ள பாத்திரம் , ( பல பேர் இதை இங்கே சொல்லி உள்ளார்கள் இப்போ நானும் அதை சொல்லி உள்ளேன் , இருந்தாலும் அதை ஒத்து கொள்ள மனம் இல்லை என்று தான் தெரிகிறது )
முதல் காட்சியில் கண்ணாடி வேண்டாம் அந்த செலவை தன் தம்பிகளின் படிப்புக்காக வைத்து கொள்ளும் போதே சங்கர் கேரக்டர் நன்றாக establish செய்து விடுகிறது . அண்ணன் என்ற சட்டை பல தடவை அணிந்து இருக்கிறார் நடிகர் திலகம் , அதிலும் தியாகம் செய்யும் பாத்திரத்தில் பல படங்கள் செய்து இருக்கிறார் , ஆனால் ஒரு தடவை கூட தான் ஏற்கனவே செய்த பாத்திரத்தின் சாயல் , மீண்டும் ஒரு முறை பிரதிபலிப்பது இல்லை (இவர் மட்டுமே தான் இப்படி )
பிறகு கண்ணாடி அணிந்த உடன் தன் மனைவியை அவர் கொஞ்சும் காட்சி இருக்கிறதே ,ஏழ்மையிலும் சந்தோசம் , இவர் இப்படி என்றல் லட்சமி ஏற்கனவே நான் சொன்னதை போல நடிகர் திலகத்தின் பாத்திரத்தை விட அழுத்தமாக sketch செய்ய பட்ட பாத்திரம் , தன் கணவரின் பொருளாதார நிலைமையை அறிந்து , தன் குழந்தையை abort செய்து விட்டு , தன் கணவரின் சொந்தங்கள் தான் தன் குழந்தைகள் என்று வாழும் பாத்திரம்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் , அதுவும் அந்த குடும்பத்தை , தன் சம்பாத்தியத்தை வைத்து நடத்தும் நபரின் மனைவி மட்டும் ஒழுங்காக இருந்தால் போதும் , ஒரு கூட்டு குடும்பம் அழகாக நடக்கும் , (அதற்கு சிறந்த உதாரணம் நம் நடிகர் திலகத்தின் அன்னை இல்லம் ) இதில் , வீட்டுக்கு புதுசாக வரும் பணக்கார பெண் தன்னுடய ஆளுமையின் கிழே அனைவரும் இருப்பதை விரும்பும் குணம் உள்ள நபர் , ஒரு குடும்பத்துக்கு வரும் பொது , சண்டை வர நிறைய வாய்ப்பு உள்ளது .அப்படி நினைப்பது அவர் தப்பும் இல்லை , அவர் வளர்ந்த விதம் அப்படி , அப்படி பட்ட குணம் உள்ளவர்கள் ,அடிப்படையில் மிகவும் நல்லவர்களாக இருப்பார்கள் , அனைத்தையும் purchase செய்து பழக்கம் உள்ளத்தால் வரும் பிரச்சனை , விஸ்வரூபமான பிரச்சனை வரும் பொது அவர்கள் அதை அனுபவிக்கும் பொது மனம் கண்டிப்பாக மாறுவார்கள் .
அந்த மாதிரி குணம் உள்ள நபர்களை handle செய்வது ஒரு தனி கலை , அதை அழகாக செய்து இருப்பார் லட்சுமி , தன்னை மோகினி பேய் என்று பல தடவை சொல்லும் ஒரு நபரை கூட , அரவணைத்து செல்லும் அவர் குணத்துக்கும் , தன் புருஷன் கஷ்ட படும் பொது , ஆஸ்பத்திரியில் கூட சிரித்து மகிழ்வதும் , சாப்பிட கிடைக்காமல் அல்லாடும் பொது , தவிப்பதும் , தன் கணவர் கண்ணாடி இல்லாமல் தவிப்பதை அறிந்து அதற்கு அலைந்து வாங்குவதும் , பின் தன் கணவர் மடியில் உயிரை விடுவதும் என்று பார்வதி பாத்திரம் தான் இந்த படத்தின் உயிர் நாடி , அதை அழக்காக செய்த லட்சுமி மேடம்க்கு ஒரு சபாஷ்
இந்த படத்தில் சிவாஜி சார் படும் கஷ்டத்தை பார்தால் கண்ணில் கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை , தான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிப்பது , குடும்பம் சேதறும் பொது , ஒன்றுமே செய்ய முடியாமல் , வெறும் முகத்தில் மட்டுமே தன் நிலைமையை காட்டுவது (acting எப்படி செய்ய வேண்டும் என்று , reaction எப்படி காட்ட வேண்டும் என்று தெரியும் இவருக்கு ) சாப்பாட்டை பார்த்த உடன் தன் மனைவிக்காக அதை எடுத்து கொண்டு வந்து , அதை சாப்பிட முடியாமல் போன உடன் வெறித்து பார்ப்பது , கண்ணாடி இல்லாமல் , தன் மனைவியை பார்க்கும் பொது கண்ணை சிமிட்டி ,சிமிட்டி பார்ப்பது கடைசியில் உயிர் விடுவது என்று நன்றாக செய்து உள்ளார்
இந்த படத்தில் யாரும் கேட்டவர்கள் என்று இல்லை , பணத்தின் மேல் ஆசை உள்ளவர் VKR , திமிர் பிடித்த ராஜா சுலோச்சனா இது தான் நெகடிவ் characters . பாக்கி அனைவரும் , வளர்ந்த முறையாலும் , சூழ்நிலையின்னால் உள்ள grey characters தான்
முரளியின் கதாபாத்திரம் தன் காலில் நிற்க ஆசைபடும் கேரக்டர் , அதற்காக அவர் சொல்லாமல் சென்று விடுவது ஏன் என்று தெரியவில்லை
பூவிலங்கு மோகன் நன்றாக நடித்து இருக்கிறார் , பெருசாக வர வேண்டியவர் இப்போ தொலைகாட்சியில் கலக்கி கொண்டு இருக்கிறார் , அவர் ஆனதை என்று தெரிந்த உடன் அவர் நடிக்கும் காட்சி ஒன்று போதும் , அவர் நடிப்புக்கு ஒரு சான்று
ரஞ்சனியின் கதாபாத்திரத்தை பற்றி நிறைய எழுதி உள்ளேன்
இந்த படத்தின் பெரிய minus காமெடி track அதுவும் மிகவும் talented VKR , ஜனகராஜ் , நகைச்சுவை பெரிய வேக தடை , ஆனால் ஜனகராஜ் அவர் தம்பி SN வசந்த் இருவரும் ஒரு சின்ன திருப்பத்திற்கு உதவுகிறார்கள் .
இசை : ரங்கா ராவ் பாடல்கள் சுமார் தான் . ஒரு மனிதர் நல்லதே செய்து , நல்லவனாகவே இருக்கும் பொது , அவர் ஒரு உதவியும் இன்றி வாடி , வதங்கி , அழியும் பொது , அதை ஏற்க முடியவில்லை (அவன் தான் மனிதன் , பாசமலர் , தெய்வமகன் (கண்ணன் பாத்திரம்) படங்களும் பார்க்கும் போதும் இது தான் தோன்றியது )
இந்த காமெடி track யை தவிர்த்து , முக்கிய பாத்திரங்களை நன்றாக establish செய்து , குடும்பம் ஒரு கோவில் என்ற தலைப்புக்கு ஏற்ப முடிவை positive ஆக மாற்றி இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் .
Dear Sivaa sir,
Rocking Uploads continue to enthrall us, superb
Dear Ravi kiran suriya sir,
Engal thangaraja pics makes me and excites me to watch this movie in theatre
அன்புள்ள சிவா - மிகவும் அரிய , உன்னதமான ஆவணகள் - மீண்டும் பதிவிட்டதிற்க்கு மிகவும் நன்றி - ஒவ்வுறு 25 பதிவுகளக்கு பின்பும் இப்படிபட்ட ஆவணகளை நாம் பதிவு செய்து கொண்டே இருக்கவேண்டும் - நமக்காக அல்ல - கற்பனையில் மிதந்து , கடுகளவும் உண்மை இல்லாமல் , அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டி கொண்டிருக்கும் நம் மற்றைய நண்பர்களுக்காகவும் ------ இந்த உதவியை நாம் செய்துகொண்டுதான் இருக்கவேண்டும்
அன்புடன் ரவி
பதிவுகளுக்கு சம்பந்தமான படங்களை போடுவதில் நீங்கள் என்றுமே முதலாவதாக இருக்கிண்டீர்கள் கோல்ட் ஸ்டார் அவர்களே - நன்றி
Dear Gold Star Satish sir,
Thanks for timely upload of pics
அன்புள்ள ராகுல்ராம் - உங்கள் பதிவுகளை வரி வரியாக படித்து ,ரசித்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் - பாராட்டி எழுதலாம் என்று நினைக்கும் பொழுது , மீண்டும் ஒரு அரிய படத்தைப் பற்றிய பதிவு - ஜிலேபி க்கு தொட்டுக்கொள்ள சர்க்கரை பொங்கலை வைத்து விடுகிறீர்கள் - இன்று ஒரு வார்த்தையாவது எழுத வேண்டும் என்று நினைத்து உங்கள் குடும்பம் ஒரு கோயிலை படிக்காமல் எழுதுகிறேன் - ---
வயதிற்கு எற்ற வேகம் - அதில் விவேகமும் கூடி வருகின்றது - பலர் பார்க்காத படங்கள் - அதை பற்றி அலசும் போது - கட்டிய சேலை முள்ளில் விழுவது போல = மிகவும் கவணமாக எடுத்து செல்ல வேண்டும் - பதிவை படிப்பவர்கள் - அடடா இப்படி ஒரு படத்தை ஏன் பார்க்காமல் இருந்து விட்டோம் என்று எண்ண வேண்டும் - அப்படி பட்ட எண்ணம் உங்கள் பதிவுகளை படிக்கும் போது கண்டிப்பாக வருகின்றது - இதில் நீங்கள் முழுவதும் வெற்றி பெற்று உள்ளீர்கள் - வாழ்த்துக்கள் .
உங்கள் பதிவுகளை அலசும் முன் என்ன படத்தை பற்றி அலச போகிறீர்கள் என்று முன்பாகவே தெரிவித்தால் படிப்பவர்கள் கவனம் ஒன்றுபடும் என்பது என் கருத்து - சிறிதே கருத்துக்களை பரிமாற எல்லோருக்கும் ஒரு வாய்ப்பும் கிடைக்கும் - மற்றபடி உங்கள் பதிவுகள் இந்த திரிக்கு ஒரு நல்ல tonic ஆக இருக்கின்றது என்றால் அதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது
அன்புடன் ரவி
:smile2::smokesmile:
சிவா சார்,
வசூல் நோட்டீஸ் மற்றும் சாதனை நோட்டீஸ் பதிவேற்றதிற்கு நன்றி என்பது சாதாரண வார்த்தை. நீங்கள் பதிவேற்றிய நோட்டிஸ்கள் பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன. ஒன்று இந்த நோட்டிஸ்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் சாதனைகள் புரிந்த படங்களைப் பார்தோமென்றால் அவை அனைத்துமே 80-களில் வந்த படங்கள். வா கண்ணா வா, சங்கிலி, தீர்ப்பு, தியாகி, நீதிபதி, மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா,திருப்பம் மற்றும் வாழ்க்கை ஆகிய படங்களின் சாதனை துளிகளை அள்ளி தெளித்திருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் lean period என்று ஒரு சாரார் சொல்லக் கூடிய காலகட்டத்திலேயே இப்படி வசூல் என்றால் அவர் என்றுமே Vasool Chakravarthi Ganesan என்பது எத்தனை நிதர்சனமான உண்மை!
குறிப்பிட வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால் சேலம் மாநகரில் நடிகர் திலகத்தின் புதிய படங்களும் சரி பழைய படங்களும் சரி வசூலில் பெரிய சாதனையையே புரிந்திருக்கிறது. நடிகர் திலகத்திற்கு அடுத்த தலைமுறையும் அதற்கடுத்த தலைமுறையும் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக கோலோச்சும் போது கூட, நடிகர் திலகத்தின் படங்கள் இப்படி வசூல் பிரளயம் ஏற்படுத்தியிருக்கும் ஆதார ஆவணங்கள், மதுரை சென்னை கோவை போன்றே சேலமும் நம்முடைய கோட்டை என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன [சொல்லப் போனால் தமிழகமே நம்முடைய கோட்டைத்தானே]. இப்பேர்ப்பட்ட சேலம் மாநகரில் மீண்டும் அந்த பொற்கால் நாட்கள் திரும்பி வரும் காட்சி விரைவில் அரங்கேறட்டும்
இதை தவிர என்றென்றும் நடிகர் திலகம் ஆட்சி புரியும் இலங்கையில் நமது சாதனை கல்வெட்டுகளை திக்கெட்டும் ஒளி வீச வைத்ததற்கு நன்றி.
RKS,
Dr.ராஜா ஒரு பக்கம் பட்டாக்கத்தி பைரவன் ஒரு பக்கம் என்று எல்லா போஸ்டர் டிசைன்களும் பின்னி பெடலெடுக்கிறது என்று சொன்னேன். போஸ்டரில் மட்டுமல்ல திரையிடுவதிலும் அதை 100% நிரூபிக்கும் வண்ணம் கோவை மாநகரில் மட்டுமல்லாமல் (மலைக்) கோட்டை நகரிலும் வெளி வரும் செய்தியை பகிர்ந்துக் கொண்ட உங்களுக்கு நன்றிகள்! வாழ்த்துகள்!.
அன்புடன்
Mr Rahul & Mr Ravi
Both of you are doing a wonderful service in sustaining the tempo of this
thread. Pls continue your good job.
Regards
இன்று தினத்தந்தியில் நடிகர் திலகத்தை வைத்து பல பிரமாண்டங்களின் அடையாளங்களை தயாரித்து, நடிகர் திலகம் அவர்களை வைத்து கட்டபொம்மன் தயாரித்து அதனால் மட்டுமே ஆசியா ஆப்ரிக்க உலக படவிழாவில் விருது பெற்ற திரு B R பந்துலு முதன் முதலாக மாற்று முகாமிற்காக தயாரித்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் திரை அரங்குடன் வெளியீடு விளம்பரம் வந்துள்ளது.
தமிழ் DIGITAL சினிமாவின் முன்னோடியாம், இதே BR பந்துலு தயாரித்து 1964 பொங்கல் வெளியீட்டிலும் வெற்றி குவித்த "கர்ணன்" 2012 மார்ச் 17 அன்று உலகத்தரத்தில் DIGITAL வடிவில் QUBE , PXD , மற்றும் UFO முறையில் தமிழகம் முழுவதும் முதலில் திரையிடப்பட்டது. பிறகு பெங்களுரு, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க விலும் திரையிடப்பட்டு 48 வருடம் திரை வரலாறு காணாத மிக பிரமாண்ட வெற்றி பெற்றது. இதை வெளியிட்ட திரு சாந்தி சொக்கலிங்கம், திவ்ய பில்ம்ஸ் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுவதுடன், இவரின் அடுத்த முயற்சி ஆயிரத்தில் ஒருவன் நல்லதொரு வெற்றியை பெற நடிகர் திலகம் அவர்கள் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்
கர்ணன் - சில நினைவலைகள் !
1964 - Pongal
http://i501.photobucket.com/albums/e...ps6ab365c3.jpg
March 16 2012 - KARNAN in DIGITAL RE-RELEASE
http://i501.photobucket.com/albums/e...ps76239f98.jpg
50th DAY ADVERTISEMENT - RE-RELEASE
http://i501.photobucket.com/albums/e...ps57cc80a1.jpg
http://i501.photobucket.com/albums/e...psb8724957.jpg
அன்புள்ள ராகுல்ராம் - உங்களுக்கு இன்னும் ஒன்று சொல்ல விழைகிறேன் -
1. NT ஒரு தங்க சுரங்கம் - எவ்வளவோ தவறான விஷயங்கள் , பொய் , பித்தலாட்டங்கள் , பொறாமை , வயதெரிச்சல் என்ற தூசிகள் , அழுக்குகள் அவரை பற்றிய பல அரிய உண்மைகளை இன்னும் அந்த தங்கத்தை மறைத்துகொண்டுதான் இருக்கின்றன - நாம் தான் நம் அலசல்கள் மூலம் ஒன்று பட்டு அந்த மறைந்த உண்மைகளை வெளி உலகிற்கு கொண்டு வரவேண்டும் - வெறும் கதையுடனோ , நடிப்புடனோ முடிவதில்லை அவரின் பெருமைகள் - இந்த திரியிலேயே பல உண்மைகளை எல்லோரும் கொண்டு வந்திருகின்றனர் - இருந்தாலும் சூரியனை மறைக்கும் கரு மேகங்கள் போல சில நல்ல உண்மைகள் படிப்பவர் மனதில் தங்குவதில்லை - மீண்டும் மீண்டும் அவைகளை சொல்ல வேண்டியுள்ளது .
2. சிவாவின் பதிவுகள் பலர் மறந்திருக்க கூடும் - சாதனைகள் , வசூல் விபரம் புல்லரிக்கிக்க வைக்கின்றது - இன்னும் சில மாதங்களில் இவைகள் புதிதாக படிப்பவர் மனங்களில் தங்காமல் போகலாம் - அதனால் தான் அவரை சற்றே இடைவெளி கொடுத்து மீண்டும் போடும் படி கேட்டுக்கொள்கிறேன் .
3. கண்டிப்பாக நாம் எவ்வளவு முயன்றாலும் , ராகவேந்தர் சார் போலவோ ,வாசு மாதிரியோ , முரளியின் நடையிலோ , கோபாலின் தமிழின் வளத்திலோ எழுத முடியாது - பல பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கும் . எழுத முயல்வதும் நல்லதல்ல - நாம் நம் எண்ண ஓட்டத்தில் பதிவுகள் இட்டால் அவைகளின் சுவை அருமையாகவும் , மாறுபட்டும் இருக்கும் - சில உண்மைகளை , இது வரை பிறர் அறியாத உண்மைகளை பதிவிடும் போது உங்கள் அலசலுக்கு ஒரு வெற்றி கிடைப்பது நிச்சயம் - ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன் - ப்ராப்தம் வெற்றி அடைந்து இருக்க வேண்டிய ஒரு படம் - NT யின் பல நல்ல யோசனைகளை சாவித்திரி நிராகரித்துவிட்டார் - நட்பு ஒன்றுக்காவே NT பணம் பெறாமல் நடித்து கொடுத்தார் - இந்த உண்மை நம்முள்ளேயே பல பேருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை
4. NT வெறும் பணத்திற்காகவே பல படங்களில் நடித்தார் என்று ஒரு வதந்தி வழி முறையில் உள்ளது - இதை நாம் தான் , நம் திரியில் தான் தவிர்த்து பொடியாக்க வேண்டும் - உண்மையில் பல படங்கள் சம்பந்த பட்ட வர்கள் வாழ வேண்டும் என்று உயர்ந்த மனப்பான்மையில் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தவர் NT ஒருவராகத்தான் இருக்க முடியும் - ஆனால் அவரால் பயன் அடைந்தவர்கள் பலர் எட்டையப்பனாகவும் , நன்றி மறந்தவர்களாகவும் தான் இருந்தார்கள் - NT பாத்திரம் அறிந்து நடித்தார் ஆனால் பாத்திரம் அறிந்து பிச்சை போடவில்லை - சில படங்கள் அவருடைய புகழுக்கு உரம் சேர்ப்பவை அல்ல என்று தெரிந்தும் தன்னை நம்பியவர்களுக்காக நடித்து கொடுத்தார் .
5. படங்களை நாம் அலசும் போது சில (சொல்லாத)உண்மைகளையும் வெளிச்சத்திற்கு
கொண்டுவந்தால் நம் பதிவுகள் இன்னும் சிறப்பாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை . உங்கள் பாணியை பின் பற்றுங்கள் - யாரை போலவும் எழுத வேண்டாம் - சொல்லும் போது - படிப்பவர்கள் இந்த படத்தை உடனே பார்க்கவேண்டும் என்ற ஆவலை உண்டாக்குங்கள் - ஏதேனும் சொல்லாத உண்மைகள் உள்ளனவா என்று ஆராய்ந்து பிறகு பதிவிடுங்கள் -
படிக்க நாங்கள் காத்து கொண்டுருக்கின்றோம்
அன்புடன் ரவி
:):smokesmile:
25th DAY ADVERTISEMENT - RE-RELEASE
http://i501.photobucket.com/albums/e...psb753c6b3.jpg
http://i501.photobucket.com/albums/e...ps77af278a.jpg
100th DAY POSTER ADVERTISEMENT
http://i501.photobucket.com/albums/e...ps38657d51.jpg
125th DAY ADVERTISEMENT - RE-RELEASE along with USA RELEASE
http://i501.photobucket.com/albums/e...ps3bffc20f.jpg
150th DAY SHIELD - RE-RELEASE
http://i501.photobucket.com/albums/e...ps860b7673.jpg
Probably I feel, From 80's we would have had a better awareness on the collections, profit amount, Return on Investment etc (from money point of view) and the data more easily available than in yesteryears, the lean period many would say is more on the overall film quality (that includes story, direction, screen play, supporting cast, some forced additions to suit the generation etc.,)
சற்றே ஒரு மாறுதலுக்காக - ஒரு கற்பனை பேட்டி - சிரிக்க , சிந்திக்க - பெயர்களும் ஒரு கற்பனையே
மாபெரும் கலை நடிகர் ரஞ்சன் பாபுவை பேரழகி வஞ்சனா மாரியா 23ஜூன் 1967 இல் பேட்டி கண்டதை மீண்டும் இங்கே பதிவிடுவதில் மகழ்ச்சி அடைகிறோம் :
வஞ்சனா : வணக்கம் ரஞ்சன் அவர்களே - உங்களை பேட்டி எடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - பாக்கியமாகவும் கருதுகிறேன்
ரஞ்சன் : உங்களுக்கு பேட்டி கொடுப்பதில் நானும் மிகவும் மகழ்ச்சி அடைகிறேன் - அதுவும் உங்களை மாதிரி ஒரு அழகான நடிகையிடம் பேட்டி கொடுக்கவேண்டுமென்றால் நான்தான் பாக்கியம் செய்திருக்கவேண்டும் ---
வஞ்சனா : நன்றி - என் முதல் கேள்வி - நீங்கள் நடிக்கும் படங்கள் எல்லாம் சமூக சம்பந்த பட்ட படங்களாகவே இருக்கின்றன - படத்தை கொஞ்சம் பார்த்தவுடன் கதை இப்படிதான் இருக்கும் என்று புரிந்து விடுகின்றதே - ஏன் நீங்கள் சற்று மாறுப்பட்ட கதா பாத்திரங்களில் நடிக்க கூடாது ??
ரஞ்சன் : சமூகம் என்னால் தான் திருந்த வேண்டும் - நான் ஒருவன் தான் திருத்தவேண்டும் என்று என் ரசிகர்கள் எதிர்பார்க்கும் போது என்னால் என்ன செய்ய முடியும் ? அப்படியும் மீறி சில சமூகம் அல்லாத - கத்தி சண்டைகள் நிறைந்த , கவர்ச்சி நிறைந்த , சுத்தமான குடும்ப படங்களில் நடித்து இருக்கிறேனே ! நீங்கள் பார்த்ததில்லையா ?
வஞ்சனா : ஒரு படம் பார்த்திருக்கிறேன் - நீங்கள் அந்த குடும்ப படத்தில் நான்கு கதா நாயகிகளுடன் பாட்டு பாடி , ஒருவரை மட்டும் திருமணம் செய்துகொண்டு , உங்கள் சித்தப்பாவை கொலை செய்துவிட்டு சித்தியுடன் சிந்தாதரி பேட்டையில் தங்கி விடுவதாக படம் முடியும் - பல திருப்பங்களையும் , நல்ல குடும்ப சண்டைகளும் நிறைந்த படம்
வஞ்சனா - உங்கள் படங்கள் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கள் ??
ரஞ்சன் : கருத்துக்கள் என்று பார்க்காதீர்கள் - எல்லோரும் வாருங்கள் - அதிகமாக சிந்தித்து மூளையை கசக்கி கொள்ளும் காட்சிகள் என் படங்களில் இருக்காது - கற்பனைக்கும் எட்டாத காட்சிகள் இருக்கும் - வில்லனுக்கு நல்ல உள்ளமே இருக்க முடியாது /கூடாது - நிறைய பாடல்கள் - கவர்ச்சிகளுக்கு நான் தடை போட்டதில்லை .
வஞ்சனா : நீங்கள் நடித்த படம் " புலிக்கு பிறந்தது ஒரு பூனையாகுமா ? - இந்த படத்தில் ஒரு விரலால் ஒரு பெரிய புலியை சுழற்றி 800 KM தொலைவில் உள்ள காட்டில் அனுப்பி விடுவீர்கள் " எப்படி சார் உங்களால் அப்படி செய்ய முடிந்தது ?
ரஞ்சன் : உங்களுக்கு தெரியும் எனக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று - அதே தயாரிப்பாளர் எடுத்த " பூனைக்கு பிறந்தது ஒரு புலியே " என்ற படத்தில் வில்லனை 1000km வரை ஒரே விரலில் அடித்துக்கொண்டே செல்வேனே - மறந்து விட்டீர்களா ?
வஞ்சனா : உங்கள் ரசிகர்களை பற்றி ------
ரஞ்சன் : பாவம் என்ன சொல்வது ?? என்னை அதிகமாகவே நம்புகிறார்கள் ----
வஞ்சனா : உங்கள் தயாரிப்பளர்களை பற்றி -----
ரஞ்சன் : அவர்களும் பாவம் - அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அவர்களை கடவுள் பணக்காரர்களாகட்டும் ...
கடைசியாக ஒரு கேள்வி - உங்கள் படங்களில் பல அபலை பெண்களுக்கு நீங்கள் வாழ்வு கொடுப்பதாக வருகின்றதே - நீங்கள் உங்கள் நிஜ வாழ்க்கையில் எவ்வளவு அபலை பெண்களுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளீர்கள் ? நாங்கள் அறியலாமா ??
ரஞ்சன் - குறைந்தது 6 பெண்களுக்கு - ஒவ்வருவருக்கும் ஒரு வீடு கட்டி கொடுத்துள்ளேன் - என் பெயரை அவர்களின் பெயர்களுடன் இணைத்து கொள்ள என் முழு சம்மதத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளேன் - இதற்கும் மேல் என்னை புகழ்ந்து கொள்ள எனக்கு பிடிக்கவில்லை ----
வஞ்சனா : உங்கள் அருமையான , படிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ள பேட்டியை கொடுத்ததிற்கு மிகவும் நன்றி
ரஞ்சன் : அருமையான , அறிவுபூர்ணமான கேள்விகளை கேட்டதற்கு உங்களுக்கும் நன்றி ---------
-----------------
அன்புடன் ரவி
:):smokesmile: