Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 12

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சிவா சார்,

    வசூல் நோட்டீஸ் மற்றும் சாதனை நோட்டீஸ் பதிவேற்றதிற்கு நன்றி என்பது சாதாரண வார்த்தை. நீங்கள் பதிவேற்றிய நோட்டிஸ்கள் பார்க்கும் போது இரண்டு விஷயங்கள் புலப்படுகின்றன. ஒன்று இந்த நோட்டிஸ்களிலெல்லாம் நடிகர் திலகத்தின் சாதனைகள் புரிந்த படங்களைப் பார்தோமென்றால் அவை அனைத்துமே 80-களில் வந்த படங்கள். வா கண்ணா வா, சங்கிலி, தீர்ப்பு, தியாகி, நீதிபதி, மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா,திருப்பம் மற்றும் வாழ்க்கை ஆகிய படங்களின் சாதனை துளிகளை அள்ளி தெளித்திருக்கிறீர்கள். நடிகர் திலகத்தின் lean period என்று ஒரு சாரார் சொல்லக் கூடிய காலகட்டத்திலேயே இப்படி வசூல் என்றால் அவர் என்றுமே Vasool Chakravarthi Ganesan என்பது எத்தனை நிதர்சனமான உண்மை!

    குறிப்பிட வேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால் சேலம் மாநகரில் நடிகர் திலகத்தின் புதிய படங்களும் சரி பழைய படங்களும் சரி வசூலில் பெரிய சாதனையையே புரிந்திருக்கிறது. நடிகர் திலகத்திற்கு அடுத்த தலைமுறையும் அதற்கடுத்த தலைமுறையும் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக கோலோச்சும் போது கூட, நடிகர் திலகத்தின் படங்கள் இப்படி வசூல் பிரளயம் ஏற்படுத்தியிருக்கும் ஆதார ஆவணங்கள், மதுரை சென்னை கோவை போன்றே சேலமும் நம்முடைய கோட்டை என்பதை தெளிவாக நிரூபிக்கின்றன [சொல்லப் போனால் தமிழகமே நம்முடைய கோட்டைத்தானே]. இப்பேர்ப்பட்ட சேலம் மாநகரில் மீண்டும் அந்த பொற்கால் நாட்கள் திரும்பி வரும் காட்சி விரைவில் அரங்கேறட்டும்

    இதை தவிர என்றென்றும் நடிகர் திலகம் ஆட்சி புரியும் இலங்கையில் நமது சாதனை கல்வெட்டுகளை திக்கெட்டும் ஒளி வீச வைத்ததற்கு நன்றி.

    RKS,

    Dr.ராஜா ஒரு பக்கம் பட்டாக்கத்தி பைரவன் ஒரு பக்கம் என்று எல்லா போஸ்டர் டிசைன்களும் பின்னி பெடலெடுக்கிறது என்று சொன்னேன். போஸ்டரில் மட்டுமல்ல திரையிடுவதிலும் அதை 100% நிரூபிக்கும் வண்ணம் கோவை மாநகரில் மட்டுமல்லாமல் (மலைக்) கோட்டை நகரிலும் வெளி வரும் செய்தியை பகிர்ந்துக் கொண்ட உங்களுக்கு நன்றிகள்! வாழ்த்துகள்!.

    அன்புடன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •