வணக்கம் ஜி!
நலம்தானே!
Printable View
வணக்கம் ஜி!
நலம்தானே!
நைட் ஷிப்ட் முடித்துவிட்டு வந்து பார்த்தால் ஜி ஆன்லைனில். வாவ்..
//வாசு சார் - avmr யை சற்றே நினைத்துப்பார்த்தேன் சரத் பாபு இடத்தில் -- சரத் பாபு நன்றாகவே பண்ணியுள்ளார் என்றே தோன்றுகிறது .//
:):)
ரவி சார்,
'முள்ளும் மலரும் பதிவில் 'செந்தாழம்பூ' பாடல் பற்றி எழுதியது ஞாபகம் வருகிறது.
ஜி!
சுசீலா அம்மா பாடிய ஒரு பாடல். திடுமென நினைவுக்கு வந்தது. 'முத்துச்சிப்பி' படத்தில் இருந்து. மேடம் ஜெய்யை நினைத்து படத்தில் பாடுவார்கள்.
'மாலையிட்ட கணவன் நாளை வருவான்
இந்த முத்துவண்ணச் சித்திரத்தின் முகம் பார்க்க
பக்கம் வந்து மெல்ல
பாடல் ஒன்று சொல்ல
வெட்கம் வந்து கிள்ள
சொர்க்கம் கண்டு கொள்ள'
ரொம்ப பிடிச்ச பாட்டுஜி! இருந்தா போடுங்களேன். காலையில் ஃபிரஷ்ஷா கேக்கலாம். எஸ்.எம்.எஸ் மியூசிக் டாப் ஜி.
'தூங்காத கண்ணே துடித்தது போதும்
துடியிடையே நீ துவண்டது போதும்
நீங்காத நினைவே அலைந்தது போதும்
நீ எதிர்பார்த்தது நடக்கும் எப்போதும்'
சும்மா இசையரசி புகுந்து விளையாடுவார். சுறுசுறு மியூசிக். நாகேஷ் அதிர்ச்சி செய்தியை சொல்லாமல் மென்று விழுங்குவார். நடுவில் 'என்னண்ணா?' என்று மேடம் நாகேஷிடம் கேள்வி கேட்பார்.
ஜி நலமே
முத்துச்சிப்பி படமே சூப்பர்.. பாடல் அதைவிட சூப்பர்
Thanks Rajesh. It is fun to be with grandchildren. My grand daughter always asks for a particular song she likes. You will be surprised to know what she calls the song! :) I will post it later. She also sings a few lines from a carnatic compositiion. I hope my son and daughter in law start her on music lessons soon !
Definition of Style 27 & திலக சங்கமம்
அன்னை இல்லம்
http://madrasmusings.com/Vol%2018%20...es/Houses0.jpg
ஆம், அன்னை இல்லம் என்றால் நம் நினைவுக்கு நடிகர் திலகம் வாழுகின்ற இந்த இடம் தான் நம் நினைவில் உடனே தோன்றுகிறது. அந்த அளவிற்கு நம்முள் கலந்து விட்ட அந்த இல்லத்தின் மேன்மை அவருடைய அந்தப் படத்திற்கும் கிட்டியது சிறப்பன்றோ..
http://i1146.photobucket.com/albums/...psa4c925c8.jpg
நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் அன்னை இல்லம் திரைப்படத்திற்குத் தனியிடம் உண்டு. அதே போல் ரசிகர்கள் நெஞ்சிலும் இதற்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக நடிகர் திலகத்திற்கு ஜோடியாக படங்களில் தேவிகா தான் சிறந்தவர் என்றும் அதுவரை பத்மினியை சிறந்த ஜோடியாக எண்ணியவர்களும் பந்த பாசம் பாவ மன்னிப்பு படங்களுக்குப் பிறகு தேவிகா வசம் சரணடைந்தவர்களும் ஏராளம் (அடியேன் உட்பட).
இயக்குநர் பி.மாதவன் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம் அன்னை இல்லம்.
அப்போதையை கால கட்டத்தில் சென்னையிலேயே உயரமான கட்டிடமான 14 மாடி ஆயுள் காப்பீட்டுத்திட்ட அலுவலக்க் கட்டிடத்தின் உச்சியில் உள்ள தளத்தில் சிவப்பு விளக்கு எரியுதம்மா பாடல் காட்சியின் ஒரு பகுதி படமாக்கப் பட்டது. இது அபூர்வமானதாகும்.
சென்னை காஸினோ திரையரங்கில் 100- நாட்களைக் கடந்து வெற்றி நடை போட்டது அன்னை இல்லம்.
இது போன்ற பல சிறப்புகளைக் கொண்ட இத்திரைக்காவியத்தின் கதைச் சுருக்கம்,
(பாட்டுப்புத்தகத்தில் உள்ளவாறு)
ராஜாமணி பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி பாசமலர், குங்கும்ம் படங்களை இணைந்து தயாரித்த, மோகன் ஆர்ட்ஸ் மோகன் மற்றும் எம்.ஆர்.சந்தானம் இருவரும் தனித்தனியே பட நிறுவனங்களைத் தொடங்கினர். அதில் எம்.ஆர்.சந்தானம் தொடங்கிய நிறுவனமே கமலா பிக்சர்ஸ். இந்த கமலா பிக்சர்ஸ் முதல் தயாரிப்பே அன்னை இல்லம். முலக்கதையை தாதா மிராஸி எழுதியிருக்க, திரைக்கதையை ஜி.பாலசுப்ரமணியம் அமைக்க, வசனம் ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். தனி ஒளிப்பதிவாளராக நடிகர் திலகத்தின் படங்களில் பி.என்.சுந்தரம் பணிபுரிநத முதல் படம். அன்னை இல்லம் படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பற்றிய முழுவிவரங்களைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.Quote:
வாழ்ந்தவன் தாழ்ந்து விட்டால் மீண்டும் அவனால் வாழ முடியாதா?
இந்த உலகில் கெட்டவர்கள்தான் வாழ்வுச் சக்கரத்தை சுலபமாக உருட்ட முடியுமா?
கெட்டுப்போன பிறகு, தனக்குத் தானே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களுக்காகவும் பகிரங்கமாக வாழ முடியுமா
இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைதான் 'அன்னை இல்லத்'தின் வரலாறு!
பரமேசன், கௌரி, குமரேசன், ஷண்முகம் - இது கயிலைநாதனின் தெய்வீகக் குடும்பம் அல்ல; கருணையே உருவான ஒரு மனித ஜீவனின் திருக்குடும்பம்!
'இல்லை' என்போருக்கு இல்லாது என்னாமல், அள்ளி அள்ளிக் கொடுத்தான். இறுதியில் அவனுக்கே இல்லை எனும் பொல்லாத நிலை வந்தது. மனைவியின் பிரசவத்துக்குப் பணம் தேவைப்பட்டது. கொடுத்தவர்களிடம் எல்லாம் கையேந்தினான் - யாரும் கொடுக்கவில்லை. மனம் மாறியது - குணம் மாறியது - கொலைகாரன் என்ற பழியோடு சட்டத்துக்கு பயந்து ஓடினான்.
வேடனின் வலையிலிருந்து தப்பிய மான் வேங்கையின் விழியில் பட்டது போல் நமது கொடைவள்ளல் ஒரு கொடியவனின் வலையில் சிக்கினான்.
வருடச் சக்கரம் இருபத்தைந்து முறைகள் சுழன்றது!
இந்த இடைக்காலத்தில் உலகில் எத்தனையோ மாற்றங்கள்!எத்தனையோ தோற்றங்கள்!பிரிந்து போன எத்தனையோ மனிதர்கள் கூடினர் - கூடியிருந்த எத்தனையோ உயிர்கள் பிரிந்தன! - ஆனால் நம் கொடைவள்ளலின் குடும்பமோ பிரிந்தது பிரிந்தபடியே தான் இருந்தது! அதற்காக உலகம் விடியாமலா போயிற்று? கருவிகள் இயங்காமலா இருநதது? இல்லை - இல்லை!
அந்தோ ?
ஒரு கணவன் - மனைவியைப் பிரிகிறான்.
ஒரு மனைவி - கணவனையும் மகனையும் பிரிந்தாள்.
ஒரு மகன் - தந்தையையும் தமையனையும் பிரிந்தான்.
இன்னொரு மகன் - தாயைப் பிரிந்தான்.
இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்க வேண்டியவர்கள். ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலே இந்த உலகில் அவர்கள் பழகுகின்றனர்.
தந்தையும் மூத்த மகனும் ஒரு இல்லத்தில்!
தாயும் இளைய மகனும் இன்னொரு இல்லத்தில்!
இந்த இரண்டு இல்லங்கள் ஒன்று சேர்ந்தனவா!
- அன்னை இல்லம் திரைப்படத்தைப் பாருங்கள்
http://www.mayyam.com/talk/showthrea...=1#post1135586
கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து வாழ்கின்றன என்றால் கூடவே திரை இசைத் திலகத்தின் சிறப்பான இசையும் அதற்கு முக்கிய பங்காற்றியது. நடையா இது நடையா பாடல் எந்த அளவிற்கு மிகப் பிரபலமானதோ, அந்த அளவிற்கு விமர்சனத்தையும் சந்தித்தது. குறிப்பாக அந்தக் கால இளைஞர்கள் பெண்களை கேலி செய்ய இப்பாடலைப் பாடி, பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்தது பலருக்கு நினைவிருக்கும்.
ஆனாலும் இரண்டு பாடல்கள் மிகப் பெரும் அளவில் இன்றளவும் புகழ் பெற்று அன்றாடம் வானொலியிலோ தொலைக்காட்சியிலோ ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்பப் பட்டுத் தான் வருகிறது. அதில் ஒன்று மடிமீது தலைவைத்து என்ற பாடல்.
இன்னொரு பாடலே இன்றைய விரிவுரைக்கு காரணி. இந்த அளவிற்கு இப்பதிவிற்கு முன்னுரை தரவேண்டியதன் காரணம் பலருக்கு தேவைப்படலாம். இருக்கிறது. எடுத்துக் கொண்ட பாடலின் சிறப்பு அப்படி.
எண்ணிரண்டு பதினாறு வயது
சினிமா ... திரையரங்குகளில் புரொஜக்ட்ரில் 27 ஃப்ரேம்ஸ் ஒரு விநாடிக்கு என அசையும் அளவிலானது. அதே சினிமா, இன்றைய நவீன யுகத்தில், இணைய தளங்களில் மற்றும் நெடுந்தகடு சாதனங்களில் 29.97 அல்லது 30 ஃப்ரேம்ஸ் என்ற வேகத்தில் அசைகிறது. இந்த இரு வேறுபாடுகளுக்கும் காரணம் அவை வீசும் ஒளியின் வேகம், அதனுடன் பயணிக்கும் ஒலியின் வேகம் இவற்றின் அடிப்படையில் இவை வகுக்கப்படுவதேயாகும்.
இந்த அளவினை இங்கு குறிப்பிடக் காரணம், இக்காணொளியின் இப்பாடலின் நீளம் 4.05 நிமிடங்கள். அதில் நடிகர் திலகத்தின் காட்சி இடம் பெறுவது 0.30 முதல் 4.00 வரை. அதாவது 3.30 நிமிடங்கள், அதாவது 210 விநாடிகள். இந்த 210 விநாடிகளில் சராசரி 30 ஃப்ரேம்ஸ் என வைத்துக் கொண்டால், 6300 ஃப்ரேம்ஸ் வருகிறது.
இந்த 6300 ஃப்ரேம்களில் நடிகர் திலகம் தோன்றும ஒவ்வொரு ஃப்ரேமும் ஒவ்வொரு காவியம் படைக்கலாம் என்கின்ற அளவிற்கு அவருடைய உடல் மொழி, நடை, உடை அனைத்தும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைலைக் குறிப்பிட்டு எழுத விரும்புகிறேன்.
அதற்கு முன் ஒரு சிறிய Flashback. கடந்த பிப்ரவரி மாதம் நம் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் அன்புக்கரங்கள் திரையிட்ட போது ஒரு இளம் ரசிகை, இப்பாடலைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறினார். குறிப்பாக நடிகர் திலகத்தின் வாயசைப்பிலேயே மொழியின் உச்சரிப்பு வேறுபாட்டைக் கண்டதாக மிகவும் ரசித்துக் கூறினார். இதைப்பற்றிய பதிவுகள் இங்கே மீண்டும் நம் பார்வைக்குத் தர விரும்புகிறேன்.
முரளி சாரின் பதிவு
மேற்காணும் பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...=1#post1207943Quote:
இன்று மாலை நமது NT FAnS சார்பில் திரையிடப்பட்ட அன்புக் கரங்கள் திரைப்படம் நல்ல ஒரு மாலையை பரிசாக தந்தது. ஆழமான உணர்ச்சிபூர்வமான ஒரு திரைப்படத்தை நடிகர் திலகத்தின் நடிப்பை ஒரே அலைவரிசை ரசிகர்களோடு சேர்ந்து பார்ப்பது ஒரு சுவையான அனுபவம் என்றால் அந்த சுவைக்கு சுவையூட்டுவது போல் அமைந்தது ஒரு இளம் பெண்ணின் பேச்சு.
நமது அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இருபதுகளின் முதல் பகுதியில் இருக்கும் அந்த இளம் பெண் சபையில் ஒரு சில வார்த்தைகள் பேசலாமா என்று அனுமதி கேட்க பேசுங்கள் என்று சொன்னோம்.
சபையோருக்கு தன் வணக்கத்தை சொல்லிவிட்டு ஆரம்பித்த அந்த இளம் பெண் தன் தமிழில் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கும்படி கூறிவிட்டு பேச்சை தொடங்கினார். காரணம் அந்தப் பெண் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் பம்பாய் மாநகரத்தில். ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழை ஒரு பாடமாக சொல்லித்தரும் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கின்றனர். அது மட்டுமல்ல வீட்டில் பேசுவது முழுக்க தமிழில் மட்டும்தான் என்பதோடு நின்று விடாமல் தமிழ படங்களையும் தமிழ் பாடல்களையும் பார்க்க வைத்திருக்கின்றனர். பழைய தமிழ் படங்கள் குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களை காண்பித்திருக்கின்றனர். தமிழை அதன் உச்சரிப்பு சுத்தியோடு கற்றுக் கொண்டது நடிகர் திலகதிடமிருந்துதான் என்று பெருமையாக குறிப்பிட்டார் அந்த இளம் பெண்.
வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் குடும்பம் என்பதால் திவ்யப்பிரபந்தங்கள், பாசுரங்கள் திருவாய்மொழி முதலியவற்றை கற்க ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பெண். அந்த நேரத்தில்தான் திருமால் பெருமை பார்க்கும் வாய்ப்பு அந்தப் பெண்ணிற்கு கிடைத்திருக்கிறது. ஆண்டாளைப் பற்றியும் பெரியாழ்வார் பற்றியும் படித்துக் கொண்டிருந்த தனக்கு பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தொண்டரடிப்பொடியாழ்வாரும் உருவகப்பட்டது நடிகர் திலகத்தின் மூலமாகத்தான் என்று அந்தப் பெண் சொன்னபோது அரங்கம் கைதட்டி வரவேற்றது. அதே போன்று திருவிளையாடல் ஈசனையும் அந்தப் பெண் நினைவு கூர்ந்தார்.
இறுதியாக அந்தப் பெண் குறிப்பிட்ட விஷயம் அவர் எந்தளவிற்கு கிரகிப்பு தன்மை வாய்ந்தவர் என்பதையும் எத்துனை நுணுக்கமாக காட்சிகளை உற்று நோக்குபவர் என்பதை புலப்படுத்தியது. பொதுவாக தமிழில் ர மற்றும் ற ஆகிய இரண்டு எழுத்துக்கள் எப்படி வித்தியாசப்படுகின்றன அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் ஒரு குழப்பமே இருந்ததாகவும் அது அன்னை இல்லம் படத்தில் வரும் எண்ணிரெண்டு பதினாறு வயது பாடல் காட்சியை பார்த்ததும்தான் தெளிவு கிடைத்ததாகவும் குறிப்பிட்ட அந்தப் பெண் அந்த வரிகளை சொல்லிக் காட்டினார்.
சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்
என்ற வரியில் சுற்றி என்ற வார்த்தையில் வரும் ற வையும் சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் ர வையும் எப்படி உச்சரிக்க வேண்டும் எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எதை இலகுவாக உச்சரிக்க வேண்டும் என்பதை தன் வாயசைப்பினாலேயே சொல்லிக் கொடுத்தவர் நடிகர் திலகம் என்றபோது அனைவரும் சிலிர்த்து விட்டனர். வாய்பிற்கு நன்றி கூறி விடைபெற்றார் அந்தப் பெண்.
அவரின் மனதிலிருந்து நேரடியாக வந்த அந்த கருத்துகளுக்கு நன்றி தெரிவித்த நான் அவரின் பார்வையை சிலாகிக்கும் விதமாக ஒன்றை சுட்டிக் காட்டினேன். அவர் குறிப்பிட்ட அந்த அன்னை இல்லம் பாடல்காட்சியில் அந்த குறிப்பிட்ட வரிகளில் கடற்கரையில் பாறை மீது ஏறி நிற்கும் நடிகர் திலகம் தனக்கே உரித்தான அந்த கையை சற்றே மேலே தூக்கி நீட்டியவாறே பாடுவார். அந்த வசீகரத்தில் அனைவரும் தன்னை மறந்து அவரின் உடல்மொழியைதான் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி அவரின் வாயசைப்பை கவனித்த அந்தப் பெண்ணிற்கு பாராட்டுகளை தெரிவித்தேன்.
எந்த தலைமுறையையும் ஏன் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர்கள் அனைவரையும் கவரக்கூடிய ஒரே நடிகன் என்றென்றும் நமது நடிகர் திலகம் மட்டும்தானே!
அன்புடன்
அடியேனின் பதிவிலிருந்து..
இப்பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...=1#post1207958Quote:
8.2.2015 மாலை மறக்க முடியாத மாலை. தலைமுறைகளைத் தாண்டி நூற்றாண்டுகளைத் தாண்டி, பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல இலக்கண நூல்கள் செய்வதை தன் ஒரே ஒரு வாயசைப்பில் செய்து சரித்திரம் படைத்துள்ளார் நடிகர் திலகம்.
மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். இன்று மாலை அன்புக்கரங்கள் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் திரையிடப்பட்டபோது வந்திருந்த உறுப்பினர்களில் ஒருவர் இளைய தலைமுறையைச் சார்ந்தவர். அந்தப் பெண்மணி நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றால் அவர் அதை எப்படி உணர்ந்திருக்கிறார் என்பதை அறிந்த போது அது மெய் சிலிர்க்க வைக்கும் செய்தியாகி விட்டது.
தமிழின் சிறப்பான வல்லினம், மெல்லினம் இடையினம் இவை மூன்றையும் பாடங்களில் உச்சரித்து வகுப்பறையில் கேட்டிருக்கிறோம். நடிகர் திலகத்தின் உச்சரிப்பில் அதை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் அவருடைய உதட்டசைவில் அந்த வேறுபாட்டை அவர் உணர்த்தியிருக்கிறார் என்பதையும் அதை இன்றைய தலைமுறை இளம்பெண் ஒருவர் கவனித்து ரசித்து அதைக் கூறிய போது ஆஹா.. நாம் எவ்வளவு பெரிய மேதையுடன் வாழ்ந்திருக்கிறோம் என மிகப் பெரிய கர்வம் ஏற்பட்டது. வாழ்ந்த வாழ்க்கையின் பயன் பூர்த்தியாகி விட்டது எனத் தோன்றியது.
எண்ணிரண்டு பதினாறு வயது .. இந்தப் பாடலில் ஒரு சரணத்தில் சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம் என்ற வரிகளின் போது அவருடைய ஸ்டைலையே பார்த்து ரசித்து மெய் மறந்து கை தட்டியிருக்கிறோம்.
மடையா அதற்கும் மேலே அந்தப் பாட்டில் விஷயம் இருக்கிறது எனப் பொட்டில் அடித்தாற்போல அந்த இளம் பெண் கூறியது இவ்வளவு வயதானால் என்ன எத்தனை முறை பார்த்திருந்தால் தான் என்ன நடிகர் திலகம் என்ற கடலில் நாம் ஓரிரு முத்துக்களைத் தான் நாம் எடுத்து அணிந்திருக்கிறோம் என மறைமுகமாக நம்மை சாடியது போல் இருந்தது.
சுற்றி என்ற வார்த்தையில் வரும் வல்லின ற விற்கு அதற்கேற்பவும், சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் இடையின ர விற்கு அதற்கேற்பவும் நடிகர் திலகம் தன் உதட்டசைவை வெளிப்படுத்தியிருக்கிறார் என அந்தப் பெண் எடுத்துரைத்த போது..
ஓ... எனக் கத்த வேண்டும் போலிருந்தது.. தலைவா என்று உரக்கக் கூறி இறைவனுக்கு நன்றியை மிகவும் பலத்த குரலில் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது..
நடிகர் திலகம் பாட்டிற்கு வெளிப்படுத்தும் உதட்டசைவை ஏளனம் புரிவோர்க்கு இது சரியான சவுக்கடி
அந்த இளம்பெண்ணிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
அந்த வேறுபாட்டை நீங்கள் இப்போது கவனியுங்கள்.
மேற்காணும் நிகழ்வின் போதே இப்பாடலைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டும் என எண்ணம் ஏற்பட்டது. இந்த அடிப்படையிலேயே இப்பதிவின் நீளம் அமைந்து விட்டது.
https://www.youtube.com/watch?v=i5LaULZ-vFo
இக்காட்சியின் துவக்கத்தில் கவனித்தால் தெரியும். முத்துராமன் கையில் ஒரு பூ இருக்கும். காதலியுடன் உரையாடும் அவரை கலாய்த்தவாறே வருகிறார் நடிகர் திலகம். நாணத்துடன் அவள் ஓடி விட, பதிலுக்கு முத்துராமன் நடிகர் திலகத்தை சீண்டுகிறார். உங்கள் காதல் விவகாரம் எப்படி. என்று. அதுவரை முத்துராமன் கையிலிருந்த பூவை நடிகர் திலகம் வாங்குகிறார். அங்கேயே ஆரம்பிக்கிறது அவரின் ஆளுமையும் ஸ்டைலும். வைப்ரஃபோன் போன்று ஒரு வாத்தியம் இரண்டு மூன்று முறை ஒலிக்க, ஒவ்வொரு முறைக்கும் பூவை உதிர்க்கிறார் நம்மவர். எண்ணிரண்டு பதினாறு வயது என்றவாறே எழுந்து நிற்கிறார். அந்த எழுந்திருக்கும் ஸ்டைலே அசத்த ஆரம்பித்து விடுகிறது. இப்போது, அக்கார்டின் ஆரம்பிக்கிறது. இந்த அக்கார்டின் ஒலிக்கும் போது என்ன ஸ்டைலாக கம்பீரமாக பூவை முகர்ந்தவாறே நடக்கிறார். இப்போது முத்துராமன் எழுந்து பின் தொடர்கிறார். மிகச் சிறப்பான ஒத்துழைப்பை இப்பாடலில் அவர் அளித்திருப்பார்.
முத்துராமன் உரிமையோடு தோளில் கை போடும் போது திரும்பி அவளைப் பற்றி பாட ஆரம்பிக்கிறார். இப்போது தாளம் துவங்குகிறது. இரு கண்களினாலும் பக்கவாட்டில் முத்துராமனைப் பார்த்தவாறே திரும்புகிறார். ஆஹா அந்த திரும்பும் ஸ்டைலை என்ன சொல்ல...உடனே இரு விரல்களைக் காட்டி அவள் கண்ணிரண்டை குறிப்பிடுகிறார். அடுத்த்து ஆஹா... மொத்த திரையரங்கிலும் ரசிகர்கள் இருக்கையிலிருந்து எழுந்து அரங்கத்தின் உத்தரத்தை தலையால் முட்டி விட்டு கீழிறங்கும் அளவிற்கு துள்ளிக் குதிக்க வைக்கும் ஒரு கண்ணடிப்பு... அதில் ஒரு புன்சிரிப்பு...
இப்போது இரு கைவிரல்களும் பாடலின் தாளத்திற்கேற்ப சொடுக்குப் போட்டவாறே அட்டகாசமான ஒரு நடை... இதை முத்துராமனும் ரசிக்கிறார்.
இப்போது ஈஸ்வரியின் ஹம்மிங்.. ஃப்ரேமின் இடப்புறம் நாயகன் வலப்புறம் நாயகி எனப்பிரிக்கிறார்கள் இயக்குநரும் படத்தொகுப்பாளரும். நல்ல கான்செப்ட். நாயகி நேர்நிலையில் காமிராவைப் பார்த்தவாறு வர அவளை நடிகர் திலகம் பக்கவாட்டில் பார்க்கும் வகையில் காட்சியை உருவாக்கிய விதம் லாஜிக்க்காவும் சிறப்பாக உள்ளது. பார்ப்பதற்கும் ரம்மியமாக உள்ளது. இந்த இடத்தில் ஃப்ரேமில் தனக்கு எதிரே நாயகி உள்ளதாக கற்பனை செய்து நாயகன் பாடுவதாக எடுத்துள்ளார்கள்.
நாயகி இறங்கி வர வர நாயகனான நடிகர் திலகம் ரசித்துக் கொண்டே இருக்கிறார். அவள் அழகாக புடவைத் தலைப்பை இங்குமங்குமாக அசைக்க, உடனே ஒரு ப்ளையிங் கிஸ்... இதையெல்லாம் எங்கள் தலைவர் அப்பவே பண்ணிட்டாராக்கும் .
காதலின் ஆழம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை எவ்வளவு அழகாக த்த்ரூபமாக வடித்துள்ளனர் இயக்குநரும் நடிகர் திலகமும். தன்னிலை மறந்த நிலையில் முன்னிரண்டு மலரெடுத்தாள் என் மீது தொடுத்தாள் என்கிற சரணத்தைத் தொடங்கும் போது அவள் நினைவாகவே தரையை வெறித்துப் பார்ப்பதும், பிறகு திடீரென நினைவுக்கு வந்தவராக அவளை உருவகப் படுத்திப் பார்ப்பதுமாக ... எழுத்தை எந்த அளவிற்கு ஜீவனுடன் வடித்திருக்கிறார் நடிகர் திலகம்... இப்போது இரண்டாம் முறை அந்த டையினை இங்கும் அங்கும் ஆட்டும் நேர்த்தி ... என்ன நான் சொல்வது சரிதானே என்பது போல் முத்துராமனைப் பார்த்து தலையாட்டிய வாறே முக்கனியும் சர்க்க்ரையும் என்ற வரியை முதன் முறை பாடுகிறார்.
இப்போது மீண்டும் அந்த வரி. முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்.. ஆஹா.. கண்கொள்ளாக் காட்சி.. அவள் நினைப்பில் லயித்தவாறே தன் டையை முறுக்கிக் கொள்வதும், ஆனந்த்ப் புன்னகை புரிவதும் அப்போது அதற்குள் பல்லைக் கடித்தவாறே சிரிப்பதும்...
இப்போது பாருங்கள்.. கடற்கரை நீர்ப்பரப்பில் ரசித்துப் பாடியவாறே தலையை ஆட்டிக் கொண்டு நடப்பதை.. ஆஹா.. பிறவிப்பயன் அடைந்து விட்டோம் என ரசிகர்கள் பரவசத்தின் உச்சிக்கே அல்லவா செல்கிறார்கள். அதுவும் சும்மாவா, இடது கை சுட்டு விரலால் லேசாக மேலே சுட்டிக்காட்டி விட்டு மடக்கிக் கொள்ளும் ஒய்யாரம்.. உதட்டிலோ சொக்கவைக்கும் புன்னகை..
அந்த நிலையிலேயே அவர் மீண்டும் அவள் நினைவில் ஆழ்ந்து விட, படத்தொகுப்பாளரின் கைங்கரியத்தில் அந்த ஃப்ரேமிலேயே மேலெழும்புகிறாள் நாயகி.
இப்போது இரண்டு ஸ்டெப் எடுத்து வைத்து விட்டு நிற்கிறாள். அவள் காலந்தாளாம். இதை அவர் சொல்லிக் காட்டுகிறார். காலளந்த நிலையினில் என் காதலையும் அளந்தாள்.. இந்த வரிகளின் போது அவர் முகத்தைப் பக்கவாட்டில் காட்டுகிறார்கள். அப்போதும் நாயகனின் நினைவு காதலியிடம் தான் என்பதை சித்தரிக்கும் வகையில் பார்வையில் எங்கோ இருப்பது போல பார்வை.
இப்போது அடுத்த வரி, காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் ... இந்த வரிகளின் போது தலையை இப்படியும் அப்படியுமாக அசைக்கும் அழகு..
இப்போது வருகிறது பாருங்கள்.. உலகத்திலேயே சிறந்த நடையழகனின் உன்னத நடையழகு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் மன்மத நடையழகு.. காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் என்ற வரிகளுக்கு அவர் காட்டும் அந்த ஸ்டைல்.. இன்னும் எத்தனை காலம் தவம் புரிந்தாலும் இப்படி ஓர் அழகு சுந்தரனை நம்மால் காண முடியாது என்று நம்மை அறுதியாகக் கூற வைக்கும்.
அதற்குப் பிறகு.. ஆஹா.. அற்புதம்... அந்த படகின் கொம்பைப் பிடித்துக் கொண்டே தன் உடம்பை இப்படியும் அப்படியுமாக மிக இயற்கையாக அசைத்து காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் என்ற வரியைப்பாடும் அருமையை...
இது தானய்யா இயற்கை நடிப்பு...
ஆஹா ... ஆஹா.. இப்போது அந்த மணல் முகட்டிலிருந்து பார்வையாளரை நோக்கி நடக்கும் வகையில் காட்சியமைப்பு. இப்போது அவருடைய நடையைப் பாருங்கள்..
இந்த மூன்றாவது சரணம் தான் உச்சம்.. இப்போது ஃப்ரேமின் இடது புறத்தில் நடிகர் திலகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் வலது புறத்தில் நாயகியான தேவிகாவின் நளினமான அசைவுகளும் அவருடைய மனக்கண் முன் நிழலாட, அவள் அதில் விடைபெறுவது போன்ற பாவனை காட்ட அவளுடைய அந்த அழகிய தோற்றம் தந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் புன்னகை மலர தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்து அதனை சித்தரிக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு.. அப்போது அங்கு புன்சிரிப்பு...
இப்போது தான் அந்த சரணம்.. மேலே குறிப்பிட்ட அந்த இளம் ரசிகையின் மனம் கவர்ந்த சரணம். முதன் முறை அந்த வரிகளைப் பாடும் போது சற்று லாங் ஷாட்டில் தலைவரின் அட்டகாசமான போஸ். இரு கைகளையும் பாக்கெட்டில் வைத்தவாறே பாடுகிறார். சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்.. இதை இரண்டாம் முறை சொல்லும் போது காமிரா அவருடைய முகத்தை க்ளோஸப்பில் கொண்டு வர, இங்கே தான் நடிப்பிலக்கணம் இன்னோர் எடுத்துக்காட்டை இயம்புகிறது. சுற்றி எனும் போது வல்லின ற விற்கான உதட்டசைவையும், சுவர் என்கின்ற போது இடையின ர விற்கான உதட்டசைவையும் வெளிப்படுத்தி தமிழிலக்கண வகுப்பே எடுத்திருப்பார் தலைவர்.
இப்போது சரணத்தின் முடிவில் வரும் வரியான துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம் என்கிற வரி இரண்டாம் முறை வரும் போது..
ஆஹா.. மீண்டும் தியேட்டர் அதிருதே.. கொட்டாய் பிச்சிக்கிட்டில்லே விழுது.. யாரங்கே இனிமே சிவாஜி படம் போடறதாயிருந்தா மொதல்லே ஸீலிங்ஸை ஸ்ட்ராங்கா போடுங்கப்பா.. இவங்க குதிக்கிறதில்லாம நாமளும் குதிக்கிறோம்.. சீலிங்கே ஆடுதே... என தியேட்டர் உரிமையாளர் கூறுவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாகி விடுகிறதே.. இருவருமே நடந்தோம் என்கிற போது இரு கைகளையும் விரித்து தோளை சிலுப்புகிறாரே..
சும்மாவா முடிக்கிறார் பாட்டை.. நம்மையெல்லாம் கட்டிப்போட்டு விடுகிறாரே.. எங்கோ பார்த்தவாறே தன் இடது கை சுட்டு விரலால் சுட்டிக்காட்டியவாறே உதட்டில் புன்னகையுடன் ஒரு மாதிரி தலையைக் குனிந்து அவர் பார்க்கும் போது..
ஆஹா.. கடவுளே.. நீ உலகத்தில் எத்தனையோ சோதனைகளை மக்களுக்குத் தருகிறாய். எத்தனையோ தொல்லைகள் தருகிறாய்.. சொல்லொணா துயரங்களக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதறகாக எல்லாருமே உன்னை சபிக்கிறார்கள். அதில் நாங்களும் விதி விலக்கல்ல..
ஆனால் அத்தனையையும் மறக்க வைக்க எங்களுக்கு நடிகர் திலகத்தை அளித்தாயே.. இது போதும இறைவா.. உன்னுடைய இறைவன் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.. பிழைத்துப் போ...
ராகவேந்திரா சார் - அருமை , அற்புதம் இவைகள் எல்லாவற்றையும் தாண்டி எங்கோ போய் விட்டீர்கள்
கருவின் கரு - 127
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
உண்மை சம்பவம் 18
ஆகாயம் வெண்மையாக இருந்தது - நடு நடுவே அந்த வெண்மை நிற முகத்தில் சில கருப்பு புள்ளிகள் - மழை வரக்கூடம் என்பதை சொல்லிக்காட்டின ... ஈசி chair இல் வினு கொடுத்த காபி யை சுவைத்துக்கொண்டிருந்தேன் -- வினு அந்த இனிய நேரத்தை சற்றே கலைத்தாள் " அப்பா வெறும் டம்ப்ளரை எவ்வளவு நேரம் சுவைத்துக்கொண்டு இருக்கப்போகிறீர்கள் -- இன்னும் கொஞ்சம் காபி வேண்டுமா ?? " அருகில் அமர்ந்த வினுவிடம் பேச்சுக்கொடுத்தேன் MPhil கிளினிகல் சைகாலாஜி - மணிப்பால் - லீவ் க்கு வந்திருக்கிறாள்
அதிகமாக கேள்விகேட்ப்பவள் வினு தான் - பிறகு என் மனைவி .. அன்று இப்படித்தான் ஒரு பிச்சைக்காரன் - தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான் - பொழுது போகவில்லை - வினு கூட இருப்பது தெரியாமல் அவனிடம் பேச்சுக்கொடுத்தேன் ..
பிச்சைக்காரன் :அய்யா,சாமி தர்மம் பண்ணுங்க,
நான் :உனக்கு பிச்சை போட்டா,அந்த காசுல குடிப்ப,
பிச்சைக்காரன் :எனக்கு குடிப்பழக்கமே ல்ல சாமி.
நான் :அப்ப சீட்டாட போவியா?
பிச்சைக்காரன் :எனக்கு சூதாட தெரியாது சாமி,
நான் :அப்ப உனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லியா?
பிச்சைக்காரன் :டீ கூட குடிக்க மாட்டன்சாமி
நான் :அப்ப என் கூட வீட்டுக்கு வா.எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் என்ன ஆவான்னு என் பொண்டாட்டிக்கிட்ட காட்டனும்.
வினு என்னை ஒரு பிடி பிடித்துவிட்டாள் - என் பையில் இருந்த 10 ரூபாய் அவனிடம் சுலபமாக சென்றது .
என்னமா என்னுடன் ரொம்ப நேரமாய் உட்காந்துக்கொண்டு இருக்க இதுவரை உன்னிடம் இருந்து ஒரு கேள்வியும் இன்னும் வரவில்லையே !!!
அப்பா இன்று ஒரு கஷ்ட்டமான கேள்வி - இதற்க்கு நீங்கள் பதில் சொல்லிவிடுங்கள் - சொல்லிவிட்டால் நீங்கள் தான் என் கிரேட் அப்பா ----( கிரேட் அப்பா என்ற டைட்டில்யை விட்டு விடக்கூடாதே என்ற பயம் ஒருபுறம் - கேள்வியை வேள்வியாக நினைத்து பதில் சொல்ல தயாரானேன் ---)
உண்மையான பக்தி என்றால் என்ன ? தகுந்த உதாரணத்துடன் சொல்ல வேண்டும் . முடியுமா உங்களால் ?? வினுவின் நெருப்பான கணைகள் ....
சரியம்மா உதாரணத்தை ஒரு கதையாக சொல்லட்டுமா ? வினு சம்மதம் கொடுத்தாள் ---
" ஜப்பானில் உள்ளது அந்த புத்த விகார் - அங்கே ஒரு வயதான பௌத்தகுரு தங்கியிருந்தார் . ஒரு நாள் இரவு . கடுமையான குளிர் . அவரால் தாங்கவே முடியலே . மரத்திலே செஞ்ச புத்த சிற்பங்கள் அங்கே நிறைய இருந்தது . அதுலே ஒண்ணை எடுத்து அதுக்குத் தீ மூட்டி அந்த நெருப்பிலே குளிர் காய்ந்துகிட்டிருந்தார் . மர சிற்பம் தீ வைச்சதும் படபடன்னு வெடிக்க ஆரம்பித்தது . அந்த சத்தத்தைக்கேட்டதும் அந்த விகாரையின் குருவெளியே ஓடி வந்தார் . தெருவிலே திரிச்சிக்கிட்டிருந்த அந்தப்பெரியவரை இங்கே தங்க அனுமதித்ததே இவர் தான் .
மிகுந்த கோபத்துடன் " எங்கள் கடவுளை எரிச்சுட்டிங்களே ! - ன்னு சத்தம் போட்டார் ..
"அப்படியா ?" -ன்னு கேட்டுக்கிட்டே அந்த சாம்பலைகிளறினார் அந்த பெரியவர் . " என்ன செய்கிறீங்க ?" - ன்னார் இவர் .
" நான் எலும்புகளைத் தேடுகிறேன் !" -னார்
" நீங்க ஒரு பைத்தியம் -- இது ஒரு மரசிற்ப்பம் - இதுலே எலும்புகள் கிடையாது ! " - ன்னார்
அடுத்தநாள் இவர் ஒரு பைத்தியமே என்று ஊர்ஜிதம் செய்யும் அளவிற்கு இன்னொமொரு காரியம் செய்தார் --- ஒரு மைல்கல்லைத் புத்தராக நினைத்து பூஜை செய்துகொண்டிருந்தார் ..
இப்ப அந்த பெரியவர் சொன்னார் -" நீங்க ஒரு மரத்தை புத்தராக்கும் போது நான் ஏன் ஒரு மையில் கல்லைப்புத்தராக ஆக்கக் கூடாது ? - நான் இந்த கல்லுக்குள் புத்தரைப்பார்க்கிறேன் .. அன்றைக்கு ரொம்பவும் குளிராக இருந்தது - நான் எனக்குள் இருக்கும் புத்தரை பாதுகாக்கணும் - அதனால் வெளியே உள்ள புத்தரை எரித்தேன் - அது தவறில்லை . "உன்னுள் ஜோதியாக இரு " என்பது புத்தருடைய போதனை . என் புத்தர் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார் - அந்த மரச்சிற்ப்பங்கள் வெயில்-மழையில் உணர்ச்சி இல்லாமே இருந்தது - அதனாலே அப்படி பண்ணினேன் !" ஆனா நீங்க என்ன பண்ணினீங்க ? நான் ஒரு மர புத்தரை எரிச்சதுக்காக உயிருள்ள புத்தரை வெளியே தள்ளி கதவைச் சாத்தினீங்க !"
உண்மையான பக்திங்கிறது இதுதான் வினு ! உனக்குள் ஜோதியாக இரு - வாழ்வது வெகு சுலபம் ----
அப்பா - என்னை கட்டிப்பிடித்துக்கொண்ட வினு என்னை விட்டு அகல வெகு நேரம் ஆனது . அவள் கண்களில் என்றும் தெரியாத ஒரு தோதியைப்பார்தேன் ......
https://youtu.be/XLWbdfXk-HU
கலக்கலோ கலக்கல் ராகவேந்திரன் சார். கொன்று விட்டீர்கள் கொன்று.
அதுவும் தலைவர் பக்கவாட்டு போஸில் ஆமோதிக்கும் அந்த ஸ்டைலை குறிப்பிட்டதற்கு ரொம்ப தேங்க்ஸ். அந்த ஒரு நொடிக்கு எப்படி காத்திருப்பேன் தெரியுமா? இந்தக் காட்சி பற்றி நடிகர் திலகம் திரியில் எழுதியது கூட ஞாபகம் இருக்கிறது.
http://i59.tinypic.com/swtjcg.jpg
கருவின் கரு - 128
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
ஸ்ரீரங்க நாதரின் புகழ் மாலையில் ஆண்டாளகத்தெரியும் ஒரு மகள் -----
https://youtu.be/0pyiBeui4RI
கருவின் கரு - 129
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மகளின் மேல் வைத்திருக்கும் அன்பை மிக அழகாக எடுத்துச்சொன்ன படங்களில் "மகாநதி "யும் ஒன்று - கமலின் நடிப்பு மனதை உருக வைக்கும்
https://youtu.be/8dfApJpEnjQ
கருவின் கரு - 130:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
என்ன ஒரு பாடல் !! " கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும் கண்ணே உன் மேனியில் நிழலாடும், இல்லாத உள்ளங்கள் உறவாகும் "
https://youtu.be/gOXox6BwOvw?list=PL...FZ2yRZIo5XRZl-
கருவின் கரு - 131
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மடி மீது வளர்த்த பிள்ளை அடித்தாலும் வலிப்பது இல்லை அது போல நானும் உந்தன் சொல்லை தாங்கினேன் ..... எவன் மீதும் வருத்தம் இல்லை அவன் மீதும் வருத்தம் இல்லை ... விதி என்று தேர்த்தினேன்
https://youtu.be/FTRugpHHMRE?list=PL...FZ2yRZIo5XRZl-
-deleted with warning-
Meghe Dhaka Tara (1960),Komal Gandhar (1961),Subarna Rekha (1962)-Rithwik Ghatak -Bengali,India .
என்ன ஒரேயடியாக ஈரான்,கொரியா,இத்தாலி என்று உதார் விடுகிறானே ,இந்தியாவில் யாருமே கண்ணில் படவில்லையா என்று சிலர் புலம்பல் கேட்கிறது. இதோ நான் மதிக்கும் யுகபுருஷன்,இயக்குனர் ரித்விக் கட்டாக்.
இவர் இணை கலை படங்களில் சத்யஜித்ரே ,மிருணாள் சென் இவர்களோடு பயணித்தாலும் என் பார்வையில் அவர்களை விட மிக சிறந்தவர். நேர்மையான,பாவனை தவிர்த்த படங்கள் தந்தவர். சிறிய சிறிய விஷயங்களிலும் கூர்மையான,குறிப்பான கவனம் செலுத்தி சமூக நடைமுறையை ,ரியலிச படங்களை, இடது சிந்தனைகளோடு தந்தவர்.
ஐம்பதே வயதில் மரித்தவர்,குடிக்கு அடிமையாகி,மனைவியை பிரிந்து,மனநிலை பாதிக்க பட்டு,மருத்துவமனையில் இரு ஆண்டுகள் கழித்தவர்.
நாடகத்தில் தொடங்கினார். மதுமதி(மறுபிறவி-ஆவி இன்னொரு உடலுக்குள் அடக்கம்)என்ற சிறந்த வெகுஜன படத்திற்கு திரைக் கதை எழுதியவர்.(பிமல்ராய் இயக்கம்)
மேலே சொன்ன முப்படங்களும் ,ரித்விக்கை மிக பாதித்த 1947 இன் பிரிவினை ,அது சார்ந்த சமூக,பொருளாதார,குடும்ப,அரசியல்,தனிமனித பிரச்சினைகள்தான் மூன்று படங்களின் மூலம்.
மேகே தாக்க தாரா , ஒரு பெண்ணின்(நீத்தா) நல்ல இயல்பு ,தியாகம் குடும்பத்தாரால் உபயோக படுத்த பட்டு, காதல்,வேலை,ஆரோக்கியம் இழந்து நிற்கும் போது கசக்கி எரிய பட்டு, சிறிதே ஆதரவு காட்டும் அண்ணனிடம் ,நான் வாழவே விரும்புகிறேன் என கதறி தோள் சாயும் பரிதாபம்.
கோமல் காந்தார் -இது இந்திய படங்களை முன்னெடுத்து செல்லும் முயற்சி. ஐரோப்பிய முறையில் தன் ரசனை,கருத்துக்கள் சார்ந்த தனிப்பட்ட படமாக்க முயற்சி.ஒரு இடது சாரி நாடக குழு (IPTA )அதில் விருகு,அனுசுயா என்ற பாத்திரங்கள். இலட்சியங்கள்,ஊழல்,கலைக்கும் வாழ்க்கைக்கும் ஆன தொடர்பு, கலையின் ஆளுமை,வர்க்க போராட்டம் என்று விவாதம் செய்து நகரும்.
சுபர்ண ரேகா, ஒரு தாழ்த்த பட்ட பையனை(அபி ) எடுத்து வளர்க்கும் பிராமணர்(ஈஸ்வர்) தன்னுடைய தங்கை சீதாவிற்கும் அபிக்கும் ஏற்படும் காதலை ஏற்க முடியாமல், அவர்கள் சேரியில் வறுமையில் உழன்று டிரைவர் ஆகும் அபி, ஒரு விபத்தில் மாட்ட,
வறுமை சீதாவை,ஒரு இரவு விடுதியில் தள்ள,ஹர பிரசாத் என்ற நண்பரின் உந்துதலால்,ஈஸ்வர் விரக்தியால்,தனிமையால் ,கல்கத்தா வந்து குடியில் தோய்ந்து,இரவு விடுதிக்கு வர, அங்கு அவர் தங்கையே அவருக்கு தேவை பூர்த்தி செய்ய வர, அவமானத்தால் உயிர்துறக்கும் தங்கையின் மகனை எடுத்து வளர்க்கிறார் ஈஸ்வர்.
குமார் சஹானி,மணி கவுல்,மீரா நாயர்,கேத்தன் மேத்தா,அடூர் என்று பல இயக்குனர்களின் உந்து சக்தி இந்த மேதை. இவர் படங்களை சுட்டு பல படைப்புகள். (reincarnation of peter proud ,karz ,எனக்குள் ஒருவன்,ஓம் சாந்தி ஓம் ,குல விளக்கு,மறக்க முடியுமா,அவள் ஒரு தொடர்கதை,மகாநதி ) .
நான் மிக மிக மிக மதிக்கும் இந்திய இயக்குனர்களில் முதல்வர்.
கோபால் ஜி,
நீங்கள் ஏன் எல்லோரையும் எதாவது சொல்லிக்கொண்டே இருக்கிறீர். ஏதாவது தமிழ் சீரியல் பாதிப்பா.
உங்கள் தொடர் பிடித்தவர்கள் படிக்கிறார்கள், அவர்கள் கருத்துக்களை எழுதுகிறார்கள்
அவ்வளவு தான் அதற்காக இரண்டு கால் மிருகம் என்றெல்லாம் சொல்லுவது அ நாகரீகம். அப்படி சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது
மற்றவர்களைப்போல் நீங்களும் இந்த ஹப்பில் ஒரு அங்கம் அவ்வளவே.
நீங்கள் கொஞ்சம் ஜாஸ்தியாகவே எல்லோரையும் வசை பாடுவது அழகல்ல.
எல்லோரும் எல்லா நேரத்திலும் பொறுமை காக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை
பதிவிடுது நம் வேலை. யாரும் பார்க்கவில்லை லைக் செய்யவில்லை என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
உளறல் என்ற வார்த்தையெல்லாம் பேசுவது. எல்லோரையும் ஏக வசனத்தில் அழைப்பது இதெல்லாம் உங்கள் வயசிற்கு அழகு
எனக்கு எது இல்லை எது இருக்கிறது என்பது எனக்கு தெரியும். என்றுமே யார் மனதையும் நோகும்படி ஒரு பதிவிட்டது இல்லை
நீங்கள் என்னமோ கடவுள் போலவும் உமக்குத்தான் ரசனை உள்ளது போல் பிதற்றுவது அழகல்ல.
என் ஒன்றையணா கன்னட பாடல்களுடன் நிறுத்திக்கொள் என்று சொல்ல நீர் யாரய்யா...
உமக்குத்தெரிந்ததை நீர் இங்கே கொட்டுகிறீர் அதேபோல் நாங்கள் செய்கிறோம்.
ஹப் நாகரீகம் கூட இல்லாமல் சும்மா எப்போ பார்த்தாலும் மிருகம் அது இது என்று. நீங்கள் மிகச்சிறந்த ரசனையாளனாகவே இருங்கள்
எப்படி பேசவேண்டும் என்ற நாகரீகம் இல்லை என்றால் எந்த வகை ரசனை இருந்தும் ஒரு மன்னுக்கும் லாயக்கில்லை.
அதுமட்டுமல்ல இது பொதுவான ஹப். இதில் நீர் என்னமோ எல்லாம் தெரிந்தவர் போலவும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுமே தெரியாத முட்டள்கள் போலவும் பேசுவது எவ்வளவு மட்டமான செயல்.
உங்களை எல்லோரும் இப்படி பேச வேண்டாம் என்று சொல்லிக்கொண்டுதானே வந்திருக்கிறார்கள். யார் சொல்லியும் நீங்கள் மாறவே மாட்டேன் என்று சொன்னால் ..............
ஜி என்று உங்களை அழைக்க மனமில்லை கோபால்.
திருத்திக்கொள்கிறேன்
நீங்கள் என்னை சொன்னீர்கள் என்று நான் சொல்லவில்லை
சபை நாகரீகத்தோடு எழுதுங்கள் என்றுதான் சொல்கிறேன்
படிக்கிறவர்கள் எல்லோரையும் அது புண்படுத்தத்தானே செய்யும்..
எல்லோரும் எல்லாவற்றையும் ரசிப்பதில்லை. ஆனால் படிக்காமல் இருக்க மாட்டார்கள்
நீங்கள் என்னையோ யாரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை என்பது தெரியும் இருந்தாலும் ஏக வசனம், இரண்டு கால் மிருகங்கள் என்றெல்லாம் சொல்வது நலல்தல்ல. அப்படிப்பார்த்தால் எல்லோருமே இரண்டு கால் மிருகங்கள் தான் உம்மையும் என்னையும் உட்பட
அதே போல் உலகப்படங்களை “World Music and Movies” திரியில் நீங்கள் பதிவிட்டுருந்தீர்கள் என்றால் அமோக வரவேற்பு கூட கிடைத்திருக்கும்
எல்லோரையும் குறை கூறுவது சுலபம் .. மற்றவர்கள் சொல்லும் குறையை ஏற்கவும் வேண்டும் ...
சின்ன கண்ணன்,
என்ன ரொம்ப நாளாக காணவில்லை? விடுமுறை திளைப்பா? வாருங்கள். திரிக்கு சுறுசுறுப்பு தேவை.
Kyatapira -2010- Koji Wakamatsu -Japan .
1)முக்கால் வாசி இந்திய பெண்கள் கேட்கும் கேள்வி, எங்களுக்கு எங்கே ஞாயிறு?போராவது,அமைதியாவது? பெண்களுக்கு எங்கே விடிவு?ஆணை சார்ந்து வாழ்வு என்பது ,அவலத்தை சமூக திணிப்பாக சுமந்து வாழும் , இழிவு,பரிதாபம். இதில் மொழியென்ன,நாடென்ன,இனமென்ன ,மதமென்ன?
2)ஆண்கள் எப்படியிருந்தாலும் ஏற்றே ஆக வேண்டிய நிலையில் பெண்கள். (படித்து,பொருளாதார பலம் பெற்ற பின்பும் தொடரும் அவலம்).ஒரு தமிழ் நாடகம் நினைவுக்கு வருகிறது. உலகிலேயே அதிகம் தாழ்த்த பட்டது தலித் ஆண்களல்ல, அவர்களால் மேலும் தாழ்த்த படும் தலித்தின் மனைவியே என்று.
4)புனித போர், போர் நாயகர்கள் என்று உண்டா? போரில் குற்றவாளிகள் மட்டுமேதானே மிஞ்ச முடியும்?
மேற்கண்ட கருத்துக்களை வலுவூட்டும் விதமாக முகத்தில் காரி உமிழ்ந்து ,அறையும் குரூர அருவருப்புடன் சொன்ன படமே கம்பளி பூச்சி என பொருள் தரும் மேற்சொன்ன படம். படங்களில் அருவருப்பு தன்மையை சுமக்க இயலாத மனம் கொண்டவர்கள் தயவு செய்து பார்க்க கூடாத படம் ,எடோகொவா என்ற எழுத்தாளரின் தடை செய்ய பட்ட சிறுகதையை தழுவிய இப்படம்.
1930இன் ஜப்பான்-சீன போரின் பின்னணி. குரோகவா என்ற ஜப்பான் லெப்டினன்ட் போரில் பலர் குடலையுருவி,சித்ரவதை தண்டனைகளுக்கு பலரை ஆட்படுத்தி,பல பெண்களை கதற கதற கற்பழித்த பெருமையாளன் .போரில் முகம் சிதைந்து,தொண்டை அறுந்து, கைகால்கள் துண்டு பட்டு, சிறிதே உடல் ,பாதி முகம் என்று ஊரால் போர் கடவுளாக தொழ பட்டு ,பதக்கங்கள் மட்டுமே மிஞ்சின பிண்டம்.அவன் மனைவி தஷாஷியால் அவனை ஏற்க முடியாவிட்டாலும் ,ஊரின் கட்டளைக்கு கட்டு பட்டு அவனை ஏற்று சேவை செய்யும் கட்டாயத்துக்கு தள்ள படுகிறாள்.குரோகவாவுக்கு ,மனிதன் என்று சொல்ல மிஞ்சியிருப்பது குரூர வக்கிர உணர்வு,கோபம்,காமம்,பசி. தனக்காக எதுவுமே செய்ய இயலாதவன் சாப்பிடுவது,மல-ஜலம் கழிப்பது உட்பட. மனைவியை வற்புறுத்தி வினோத முறையில் உடலுறவுக்கு நிர்பந்திக்கிறான். (அவளை அடித்து துன்புறுத்தி கேவலமாக பில்லையில்லாதவள் என்று தூற்றியிருப்பான் நல்லாயிருந்த காலத்தில்)அவளை கோபமூட்ட, அவள் உடையணிந்து கிளம்பும் போது சிறுநீர் கழிப்பது,சாப்பாட்டை துப்புவது என்று மகா படுத்தல்.பதக்கங்களை ரசிப்பது ஒரே பொழுதுபோக்கு.
துன்புறும் ,வேதனையுறும் மனைவி, அவன் மறுத்தும் கேளாமல்,ராணுவ உடையை அணிவித்து ,அவனை தள்ளு வண்டியில் ஊர்வலம் போவாள். (என்ன அற்புத பழிவாங்கல்).
இறுதியில்,தேய்த்தே ,தவழ்ந்து சென்று குட்டையில் உயிர்விடும் பிண்டம். நம் பழங்கால கூத்தில் கட்டியக்காரன் போல,நம் மனசாட்சியாய் ஒரு கோமாளி.
இந்த மாதிரி படங்களே,போரை வெறுக்க,பெண்ணை சகாவாய் அங்கீகரிக்க நமக்கு கற்று கொடுக்கும்.
ஒரு சித்ரவதை போன்று நம்மை துடிக்க,துவள வைத்து,மனதை குதறி போடும் படம். ஆனால் முடிவில் ,இன்னும் மேன்மையாக்கும் நம்மை.
இனி பேசி ஒரு புண்ணியமும் இல்லை.
நீங்கள் தொடருங்கள்
நான் எனக்குத்தெரிந்ததை தொடருவேன். இந்த கும்பலில் தான் நீங்களும் வந்து எழுதுகிறீர். இதே கும்பலில் நீரும் அடக்கம்..
இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.. நாம் தூர விலகுவதே நல்லது.
ரவி
உங்கள் கருவின் கரு தொடர் அருமை.
தாய்மையை போற்றி இப்பொழுது தந்தைக்கு சிறப்பு சேர்க்கும் பதிவுகள் எல்லாம் அருமை.
எதையும் எதிரிபாக்காமல் பாசத்தை பொழியும் தாய் ஒரு புறம், வாழ்க்கையின் நேர்த்தியை உணர்த்தும் தந்தை ஒரு புறம்
இருவரும் தியாக சொரூபிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வாழ்த்துக்கள்.
-deleted with warning-
ஹ ஹா
யார் எலி.. உம்மை மாதிரி ஆளுக்கெல்லாம் பயந்து நாங்கள் ஒளிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை
மிச்ச மீதியா .. நீர் என்ன சினிமா என்சைக்ளோபீடியா .. பிலிம் நியூஸ் ஆனந்தன் கூட இன்றும் பணிவோடுதான் பேசுகிறார்.
நீர் ஒன்றுமே இல்லை ஆனாலும் இவ்வளவு ஆணவம், தலைக்கனம் ..
சிரிப்புத்தான் வருகிறது. உமது எழுத்தில் எப்பொழுதுமே சிறுபிள்ளை சண்டைபிடிப்பது போன்ற பேச்சு ..
அப்பா நம்மால முடியாது. .. நீர் உண்டு உமது பிதற்றல்கள் உண்டு. இந்த திரி உம்முடையது அல்ல.
யார் வேண்டுமானாலும் வருவோம் பதிவுகள் போடுவோம்.. படிக்கவில்லை லைக் போடவில்லை என்று நாங்கள் யாரும் இதுவரை புலம்பவில்லை.
கோபால்
நைட் டியூட்டி முடித்து வந்து பார்த்தால் இங்கு ஒரு போரே நடந்திருக்கிறது.
என்ன இது? நான்தான் உங்களிடம் சொல்லி இருந்தேனே! ஒழுங்காகத்தானே பதிவுகள் இட்டுக் கொண்டிருந்தீர்கள்? திடீரென்று ஏன் தடித்த வார்த்தைப் பிரயோகங்கள்? மிருகம், அது இதுவென்று. இது உங்களுக்கே நன்றாய் இருக்கிறதா?
இங்கு எல்லோரும் சகோதர உணர்வுடன் பதிவுகளை இடுகிறோம். உங்களிடமும் உங்களை அறியாமலேயே அது உண்டு. சில நாட்களுக்கு முன் கூட எல்லோர் பெயர்களையும் குறிப்பிட்டு ஒருவர் விடாமல் பாராட்டியிருந்தீர்கள். இப்போது என்ன வந்தது? ஏன் தேவையே இல்லாமல் இவ்வளவு கடுமையான வார்த்தைப் பிரயோகம்?
இப்போது ராஜேஷ்ஜியிடம் மீண்டும் முருங்கை மரம். அதுவும் அத்து மீறிய வசை பாடல். ஏன் இந்த மாதிரி வார்த்தைகள்? அதில் நீங்கள் காணும் லாபம்தான் என்ன? அனைவரும் மிகவும் மனம் புண்பட்டுப் போய் இருக்கின்றனர். நீங்கள் எல்லைகள் மீறி வார்த்தை பிரயோகம் செய்துள்ளீர்கள். அவரவர்களுக்கு தெரிந்ததை ஆத்மசுத்தியுடன், மன திருப்தியுடன் இங்கே பதிவிடுகின்றனர். எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டிய அவசியமில்லை.
என்னுடைய இந்தப் பதிவுக்கும் என்னை நீங்கள் வசை பாடுவீர்கள் என்று தெரியும். அதைப் பற்றி எனக்கு கவலையோ வருத்தமோ ஏற்படாது. ஆனால் மற்ற பதிவர்கள் என்னைப் போல எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?
தனிப்பட்ட முறையில் உங்களை நன்றாகப் புரிந்தவன் நான். பொதுத் திரியில் அதே உரிமையை நீங்கள் என்னிடம் கூட எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் மற்ற நண்பர்கள் உங்கள் வசவுகளைப் பொறுத்துக் கொள்ளத் தயாராய் இல்லை. இன்னொன்று. உங்கள் அறிவேதான் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதும் தவறு.
உங்கள் கோபமும் வார்த்தைகளும் குழந்தைத்தனமானது. நீங்கள் உடனே மறந்து சகஜமாகி விடுவீர்கள். ஆனால் மற்றவர்கள் அது போல இருக்க இயலாது. மாறாத காயமாய் நெஞ்சில் நிலைத்து நின்றுவிடும். அப்புறம் நீங்கள் நல்லமுறையில் பேசினால் கூட உங்களிடம் நெருங்க விரும்பாமல் தள்ளி விலகியே நிற்பார்கள்.
உங்களுடைய அருமையான பதிவுகளுக்கு நண்பர்களிடமிருந்து பின்னூட்டம் வராததற்கு இதுவே முக்கியக் கரணம். ஏன் வீண் வம்பு என்று அனைவரும் ஒதுங்கி விடுகிறார்கள்.
இதையெல்லாம் நான் சொல்லித்தான் நீங்கள் உணர வேண்டுமா?
தயவுசெய்து தடித்த வார்த்தைகள் கொண்ட உங்கள் பதிவுகளை நீக்குங்கள். (நீக்கு நீக்கு என்று சொல்லியே நாக்கு மரத்துப் போய் விட்டது) குறிப்பாக மிருகம். உங்கள் பதிவுகளின் மேல், உங்கள் திறமையின் மேல் எல்லோரும் மதிப்பு வைத்துள்ளார்கள்.
ஆனால் ஒரு நொடியில் அதை நீங்கள் பாழாக்கிக் கொள்கிறீர்கள்.
யாருமே உங்களை சட்டை செய்யாமல் போனால் அதைவிட கொடுமையான தண்டனை உங்களுக்கு எதுவும் இல்லை. அந்தக் கட்டத்தின் உச்சத்தை நீங்கள் தொட்டிருக்கிறீர்கள்.
நான் சொல்வதை சொல்லி விட்டேன். இனி உங்கள் இஷ்டம். பதிவாளர்களை இப்படி வசை பாடினால் உங்களுக்கு எப்படி பின்னூட்டம் அளிப்பார்கள்?
நீங்கள் தயவு செய்து இது போன்ற திட்டுதல்களை நிறுத்துங்கள். மேலும் தொடராதீர்கள். என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். தயவு செய்து ஹப்பர்களை புண்படுத்தாதீர்கள். எதற்குமே ஒரு எல்லை உண்டு.
மதுர கானங்கள் சண்டை சச்சரவின்றி ஒரே குடும்பமாக, சகோதரத்துவமாக, நட்பின் சின்னமாக வெற்றி நடை போடும் திரி. அதில் இது போன்ற கரும்புள்ளிப் பதிவுகள் தேவையா? ஜாலியாகக் கலாய்க்கலாம். அளவுடன் கேலிகள் இருக்கலாம் மற்றவர் மனம் புண்படாதவகையில்.
சரி! நீங்கள் என்னைத் திட்டி பதிவுகள் தொடங்கலாம். ஆனால் பதில் பதிவுகள் வராது. உங்களுடைய எந்த விதமான பதிவிற்கும். நன்றி!
இப்படிக்கு
ரெண்டுகால் மிருகங்களில் ஒரு மிருகம்.
ஊர் நியாயத்தில் தலையிட யார் வேண்டுமானாலும் வரலாம். சிறந்த பதிவர் என்று உம்மிடம் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. நீர் பல்கலைக்கழகம் நடத்தவும் இல்லை. பொதுவாக இப்படி வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னால் அதை கேட்கும் பக்குவமில்லை.. .. வாசு ஜி சொன்னால் தான் கேட்பேன் என்று சொல்ல இது உங்கள் சொந்த பக்கமோ ப்ளாகோ அல்ல. இது பொதுவான ஹப்.
இனி நான் உம்மை பற்றி பேசப்போவதில்லை. நீரும் என் பெயரையோ என்னைப்பற்றியே பேசவேண்டியதும் இல்லை அந்த உரிமை உமக்கில்லை.
period. end of discussion
Note from moderator: One of the basic rules of The Hub is to refrain from personal abuse.
Offenders id will be disabled for a period of time and if constantly repeated, will be banned permanently.
Discuss civilly please.
'ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு'
https://i.ytimg.com/vi/hQZUQPZwYuk/hqdefault.jpg
சரி! நண்பர்களே! இயல்பு நிலைக்குத் திரும்புவோம்.
ஒரு ஜாலியான பாடலைப் பற்றிப் பார்ப்போம். கவலைகள் மறந்து போகும்.
என் அபிமானப் பின்னணிப் பாடகர் சாய்பாபா. கொஞ்சமல்ல...நெஞ்சம் நிறைய இவரைப் பிடிக்கும். என்னால் மறக்கவே முடியாத அற்புத குரல் வளம் கொண்டவர். ஜேசுதாஸ், பாலா, கண்டசாலா இவர்களின் குரல்களின் கலவை போன்று.
துரதிர்ஷ்டம் என்னவென்றால் குறைந்த பாடல்களே இவர் பாடியிருப்பது. இது வாழ்நாள் முழுக்க என் வருத்தம்.
ஆங்கிலம் கலந்த தமிழ் காமெடிப் பாடலை இவரை விட்டால் பாட ஆளில்லை. நாகேஷுக்கு மிகப் பொருத்தமாவார் ஏ.எல். ராகவன் போல.
அதில் செம ஜாலியான ஒரு பாடல்.
http://padamhosting.me/out.php/i39275_vlcsnap389631.png
நடிகர் திலகத்தின் 'எங்கிருந்தோ வந்தாள்' திரைப்படத்தில் நாகேஷும், சச்சுவும் பாடும் டூயட் பாடல்.
சட்டைக்காரி சச்சுவுடன் சம்சாரி நாகேஷ் கும்மாள ஜோடி சேருவார் ஏற்கனவே ரமாபிரபாவுடன் குடும்பம் நடத்தியும்.
அணைக்கட்டு, (எந்த ஊர்?) பார்க், ஏரி என்று இயற்கைக் காட்சிகள். ரம்யமாக இருக்கும். (இப்போது அதையெல்லாம் பார்க்க மனதுக்கு எவ்வளவு ஆனந்தம்! இதற்காகவே ஒரு முறை சாத்தனூர் அணைக்கட்டு போய்ப் பார்த்து விட்டு ரசித்து வந்தேன் அது பாழடைந்த நிலையிலும்.)
கைகளில் குடை சகிதம் நாகேஷ், சச்சு. சச்சுவுக்கு சட்டைக்காரி வேஷம் பொருந்தாது. அவரது உடல் வேறு அந்தபந்தம் இல்லாமல் இருக்கும். நாகேஷ் கண்ணாடி அணிந்து நடுத்தர வயது மனிதராக காட்சி தருவார்.
பாலாஜி ஆபீஸில் வேலை செய்யும் இருவருக்கும் காதல்.
'மெல்லிசை மன்னர்' துள்ளல் போட வைப்பார் இசையால். இந்த மாதிரிப் பாட்டெல்லாம் அவருக்கு சர்வ சாதாரணம்.
எனக்குப் பிடித்த இரு பாடகர்கள். ஈஸ்வரி சாய்பாபாவுடன் சேரும் போது இன்னும் இனிப்பார்.
பாடலின் வரிகள் சில காமெடிக் கலக்கலாக இருக்கும்.
'நர்கீஸ் போலே நீ இருக்க விட்டுப் போவேனா?
என்று நாகேஷ் ராமாவைப் பார்த்து கேட்க,
'நாகேஷ் போலே நீ இருக்க நான் விடுவேனா?'
என்று நாகேஷிடமே சச்சு பாடுவது நகைச்சுவை. இருவரும் ஆட்டத்தில் தூள் கிளப்புவார்கள்.
ரமாபிரபாவின் கண்காணிப்பு, நாகேஷின் களவாணித்தனம், முன் ஜாக்கிரதை, அப்பாவி டைப்பிஸ்ட் மாட்டி அம்மாஞ்சியாய் முழிப்பது, ரமாபிரபாவை ஏமாற்றி அவருடனேயே நாகேஷ் எஸ்கேப் என்று கலகல.
ஈஸ்வரியின் ஹா, ஹஹ்ஹா, ஹோ அலட்சிய தொனிகள் வழக்கம் போல அசர வைப்பவை.
சாய்பாபாவுக்கு காந்தக் குரல். 'ஹலோ'வை 'ஹல்லோ' என்று அழுத்தமாக உச்சரிப்பது சுவை.
'எங்கிருந்தோ வந்தாளி'ன் நடிகர் திலகம், ஜெயா மேடம் நடிப்பு மற்றும் பாடல்களின் வெள்ள ஆக்கிரமிப்பில் சிக்கி அருமையான இப்பாடல் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. சிம்பிளான காமெடிப் பாடல்தான். ஆனால் 'சிக்'கென்று மனதில் ஒட்டிக் கொள்ளும்.
சாய்பாபாவால் சாகாவரம் பெற்று விட்டது என் வரையில். எனக்கு இந்த மாதிரி ஜாலிப் பாடல்கள் என்றால் உயிர்.
முத்தமிடும் நேரமெப்போ...
எல்லோருக்கும் காலம் வரும்...
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்...
ஏ புள்ளே சச்சாயி...
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்...
குளிரடிக்குதே கிட்ட வா...
மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்...
அல்லிப் பந்தல் கால்கள் எடுத்து...
உத்தரவின்றி உள்ளே வா...
அந்தப் பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ...
சப்பாத்தி சப்பாத்திதான் ரொட்டி ரொட்டிதான்...
ஆட்டத்தை ஆடு புலியுடன் ஆடு...
ஜம்புலிங்கமே ஜடாதரா...
இப்படிப் பல பாடல்கள்.
இப்போ நம்ம பாடல். பாடல் இரண்டு நாட்களுக்காகவாவது மனதில் ரீங்காரம் இட்டபடி இருக்கும்.
https://i.ytimg.com/vi/kvSs63rw4Zg/hqdefault.jpg
ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி பிராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு ரிசர்வு பண்ணு
போட்டுக்க மாலை ஒன்னு
ஹோ மை ஸ்வீட்டி விச்சு
சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ
லில்லிச் செண்டல்லவோ (ஈஸ்வரி பின்னுவார்)
வெட்கம் இல்லாத பெண் அல்லவோ
மேனி பொன் அல்லவோ
சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ
லில்லிச் செண்டல்லவோ
வெட்கம் இல்லாத பெண் அல்லவோ
மேனி பொன் அல்லவோ
பட்டுப் போலக் கூந்தல் உண்டு
தொட்டுப் பாரய்யா
பக்க மேளம் போல என்னைத் தட்டிப் பாரய்யா
உன்னாலே என் ஆசை தீர்ந்தாலென்ன
ஒன்னோடு ஒன்னாகச் சேர்ந்தாலென்ன ஹோ
ஹல்லோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி பிராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு தயவு பண்ணு
போட்டுக்க மாலை ஒன்னு ஹோ மை ஸ்வீட் டிஷில்லா
Hei! Come on baby! shake with me! Not this a way! dance away. wov..wov..(right or wrong):)
சிட்டு சிட்டான பெண்டாட்டி நீ
சின்னக் கண்ணாட்டி நீ
கட்டிப் போடாமல் தீராதடி
கண்ணைக் கண்ணால் அடி
(நாகேஷ் என்னமாய்க் கண் அடிப்பார் தெரியுமா! யானை சிலையின் தும்பிக்கையில் அமர்ந்து குடை பிடித்தவாறு)
விட்டு விட்டாலும் போகாதய்யா
வேகம் மாறாதய்யா
பக்கம் நீயின்றி வாழாதய்யா
பாதி நீதானய்யா
நர்கீஸ் போலே நீ இருக்க விட்டுப் போவேனா:)
நாகேஷ் போலே நீ இருக்க நான் விடுவேனா:)
காஷ்மீரில் தேன் நிலவு போனால் என்ன
ஹோ! போகாமல் இங்கேயே வாழ்ந்தால் என்ன அஹ்ஹோ!
ஹல்லோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி பிராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு தயவு பண்ணு
போட்டுக்க மாலை ஒன்னு ஹோ மை ஸ்வீட் டிஷில்லா
ஹோ மை ஸ்வீட்டி விச்சு
https://youtu.be/5JJ9mbYMegg
குட் மார்னிங் ரவி சார்!
ஷிப்ட் கிளம்பும் நேரம் வந்தாச்சு. உங்கள் தந்தை தொடர் தொடரட்டும். 'ஹலோ மை டார்லிங்' பார்த்து ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க.:) வரேன்.
கருவின் கரு - 132
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
உண்மை சம்பவம் 19
அன்று வெள்ளிக்கிழமை - மிகவும் சந்தோஷமாக இருந்தேன் - என் மகள் USA விலிருந்து ஒரு மாதம் விடுமுறையில் வருகிறாள் - இரண்டு மூன்று நாட்களாக அவள் வருவதை எண்ணியே பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன் .. என் மனைவி சாதரணமாகத்தான் இருந்தாள் - அவளிடம் ஒரு படபடப்பும் இல்லை ... திருமணம் செய்துகொண்டு சென்றவுடன் முதல் தடவையாக வீடு வருகிறாள் - இரண்டு வருடங்கள் ஒட்டிவிட்டன . இரண்டு நிமிடம் கூட என்னை விட்டு பிரியாதவள் ... இரண்டு வருடங்கள் எப்படி ???? skype வந்துவிட்ட காலத்தில் , வசதிகள் பெருகிவிட்ட காலத்தில் யார் யாரை மிஸ் பண்ணுகிறார்கள் ?? மிஸ் பண்ணுகிறேன் என்று சொல்வதெல்லாம் பைத்திய காரத்தனம் - என் மனைவியின் வாதம் ---
இன்றைய வாழ்க்கை மாறி விட்டது --- வேகமாக செல்லும் வாழ்க்கை - எதிலுமே செயற்கை கலந்துவிட்ட காலம் - மனிதாபிமானம் , பாசம் ,
மனச்சாட்சி இவைகளை பொன்னாக மதித்தோம் ஒரு காலத்தில் - இன்று விஞ்சானம் எல்லாவற்றிலும் முன்னேறிவிட்டது - whatsappஇல் வாழ்க்கை நடக்கின்றது - skype இல் பாசம் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது - facebook இல் உறவுகள் பின்ணப் படுகின்றன - ஈமெயில் லில் வாழ்க்கை முடிவடைந்து விடுகிறது ....
ஷ்ரேயா வந்துவிட்டாள் - ஹாய் dad -- எப்படி இருக்கீங்க ? உள்ளே சென்றுவிட்டாள் --- ஒரே வார்த்தை - இரண்டு வருடங்களின் பிரிவை இணைத்து வைத்தது ---- கண்களை மூடிக்கொண்டேன் - கண்ணீர் கவிதையாக வெளிவந்து அன்று இருந்த ஒரு இனிய காலத்திற்கு அழைத்துச்சென்றது ....
ஒரு காலம் இருந்தது.
ஒரு காலம் இருந்தது.
மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.
கடவுளுக்கு பணிந்த காலம்.
சத்தியத்தை மதித்த காலம்.
நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
பெண்களை போற்றிய காலம்.
நீதியை நிலைநாட்டிய காலம்.
நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.
நாடகக்கலை வளர்ந்த காலம்.
நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.
ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.
பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
கோயில்கள் சேவை செய்த காலம்.
மழை தவறாமல் பொழிந்த காலம்.
மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
தண்ணீர் விற்கப்படாத காலம்.
வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.
மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.
எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.
சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
வாகன நெரிசல் இல்லாத காலம்.
இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
ஊர்கூடி தேர் இழுத்த காலம்.
என் மகள் என் மடியில் தூங்கிய காலம் அது
கதைகள் பல சொன்ன காலம் அது
sky யைப்பார்த்து சொன்ன கதைகள் -
skype யை ப்பார்த்து மகளை த்தேடுகிறேன் ..
face யை books இல் புதைத்து படிப்பாள் என் மகள்
இன்று face book இல் தான் குடியிருக்கிறாள் ..
தந்தை சாப்பிடுவது tablets - மகள் வாழ்வதும் ஒரு
tablet இல் தான் ------
இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது
ஒரு காலமிருந்தது.
அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.
https://youtu.be/SdcAN3dobz4
கருவின் கரு - 133
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
மகள் என்றுமே ஒரு தெய்வத்திருமகள்
https://youtu.be/XS904XgEPz4
கருவின் கரு - 134
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
https://youtu.be/skzF7BQUgbU
கருவின் கரு - 135
பாகம் 2 - தந்தை
தந்தை - மகள் பந்தம்
https://youtu.be/BbH1z9AoT3E
டியர் கோபால் சார்,
உலகத்திரைப்படங்கள் பற்றிய உங்கள் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன். மிகவும் நன்றாக இருக்கின்றன. ஆனால் அத்தகைய திரைப்படங்கள் மீது எனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாததால் அவைகளைப்பற்றிய பின்னூட்டங்கள் இட முடியவில்லை.
அவைதான் காரணமே தவிர, கண்டுகொள்ளக் கூடாது என்ற எண்ணம் எனக்கு அறவே இல்லை.
திரியில் இடம்பெறுவோரின் திரை ரசனையை உலகத்தரத்துக்கு உயர்த்த முயலும் உங்கள் எண்ணமும் முயற்சியும் நிச்சயம் பாராட்டுக்குரியவையே.
உங்கள் விமர்சனங்களைப் படிக்கும்போது அத்தகைய படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு விரிவான விளக்கங்கள்.
குறிப்பாக 'ரோஷ்மான்'. அப்படம் பற்றி உங்களது அறிமுகமும் விமர்சனமும், தொடர்ந்து வந்த வாசு அவர்களின் மேலதிக விவரங்களும் அப்படத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியுள்ளன. (பார்க்க வேண்டும்) இதை முன்பே சொல்லியிருக்க வேண்டும். சொல்லாதது என் தவறுதான்.
உங்கள் அயராத முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். என் மனதில் உங்கள் மீது எப்போதும் பெருமதிப்பு உண்டு.
டியர் வாசு சார்,
எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத பாடல்களை பதிவிட்டு அசத்துகிறீர்கள். 'ஹெல்லோ மை டார்லிங் இப்ப காதல் வந்தாச்சு' பாடல் பதிவு சூப்பர். என் காதில் எப்போதும் ஓ மை ஸ்வீட்டி விச்சு" என்றுதான் விழுகிறது.
எனக்கென்னவோ ரமாப்ரபாவின் சாமியார் பைத்தியத்தை தெளிய வைக்கவும், சச்சுவை பாலாஜியிடமிருந்து பிரிக்கவும் நாகேஷ் இந்த போலி காதல் நாடகத்தை நடத்துவார் என்று தோன்றுகிறது.
சாய்பாபாவின் குரல் மீது இவ்வளவு கிரேஸா? ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு அவர் குரல் சற்று வித்தியாசமாக தோன்றுகிறதே தவிர மயக்கம் கொள்ள வைக்கும் அளவுக்கு அல்ல.
சாத்தனூர் அணை பூங்கா பாழடைந்த நிலையில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டது மனம் வருந்தச் செய்தது. நல்ல செழிப்பான நிலையில் இருந்தபோது நான் பார்த்தது. சமீபத்தில் போகவில்லை. எத்தனை திரைப்படங்களில் இடம்பெற்றது இந்த அணையும் பூங்காவும்.
நடிகர்திலகம் - கலைச்செல்வி நடிப்புப்போட்டி சுனாமியில் இப்பாடல் காணாமல் போனது உண்மை.
அடுத்தது என்ன அதிரடியோ.