இன்றைய ஸ்பெஷல் (87)
இன்றைய ஸ்பெஷலில் அன்றைய சூப்பர் ஹிட் பாடல் ஒன்று.
படம்: ஓர் இரவு (1951)
http://upload.wikimedia.org/wikipedi...avu_Poster.jpg
நடிகர்கள்: கே.ஆர்.ராமசாமி, நாகேஸ்வரராவ், பாலையா, டி.கே.சண்முகம், லலிதா.
பாடல் : கு.ம.பாலசுப்ரமணியம்
பாடியவர்: எம்.எல்.வசந்த குமாரி
இசை: ஆர்.சுதர்சனம்
தயாரிப்பு: ஏ.வி.எம்.
இயக்கம்: ப.நீலகண்டன்
பேரறிஞர் அண்ணா ஒரே இரவில் எழுதத் தந்த திரைக்கதை.
http://www.thehindu.com/multimedia/d...pg_273763f.jpg
நயவஞ்சகக் கூட்டத்திற்கு நயமாக புத்தி சொல்லும் பாடல். நாடகம் ஒன்றில் 'குறத்தி' வேடம் கொண்ட பெண் பாடும் அற்புத நாட்டுப்புற கானம். எளிமையான வரிகளில் பணத்திமிர் பிடித்த நரிகளின் குணத்தை காட்டிலுள்ள நரிகளுடன் ஒப்பிட்டு 'அதைக் காட்டிலும் இது எவ்வளவோ தேவலை' என்று உரைக்கும், தோலுரிக்கும் பாடல். எம்.எல்.வியின் இனிமையான குரலில்.
1950-ல் வெளிவந்த 'சமாதி' இந்தித் திரைப்படத்தில் வெளிவந்த மிகப் புகழ் பெற்ற பாடலான 'Gore gore o baanke chhore' என்ற பாடலின் (இசை சி.ராமச்சந்திரா) அப்பட்டமான தழுவலாக இப்பாடல் இருந்தாலும் எம்.எல்.வசந்தகுமாரியின் ஈடு இணையற்ற குரல் வளத்தால் இப்பாடல் ஒரிஜினல் இந்தி பாடலைத் தூக்கி ஏப்பம் விட்டு விட்டது.
அதுவும் 'ராய்யா' என்ற தெலுங்கு வார்த்தையும், 'வாய்யா' என்ற தமிழ் வார்த்தையும் அதற்கு ஈடான 'யூ கம்மய்யா' என்ற வார்த்தையும் கலந்த ஒரு அற்புதக் கலைவையாக இப்பாடல் அமைந்தது ஒரு தனிச் சிறப்பு.
அதுவரை துண்டு துக்கடா வேடங்களில் நடித்து வந்த லட்சுமி காந்தம் என்ற நடன நடிகை இந்த குறத்தி நடனப் பாடலின் மூலம் உன்னதப் புகழை அடைந்தார்.
இனி பாடலின் வரிகள்.
http://i.ytimg.com/vi/tg-T9_RhHSs/hqdefault.jpg
ஓ... சாமி
ஐயா சாமி
ஆவோஜி சாமி
அய்யா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
ஐயா சாமி
ஆவோஜி சாமி
அய்யா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
ஐயா சாமி
ஓ..ஐயா சாமி
கோழி ஆட்டைப் பிடிக்கும் எங்க குள்ள நரி
ஏழை ரத்தம் குடிக்கும் இங்க உள்ள நரி
பல் இளித்துக் காட்டி
பட்டம் பதவி தேடி
கட்சி பேரைச் சொல்லி ஊரை ஏமாற்றிடும்
ஐயா சாமி
ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
வேட்டையாடிப் பிழைக்கும் எங்க காட்டு நரி
மூட்டை கட்டிப் பதுக்கும் உங்க நோட்டு நரி
வேலை ரொம்ப வாங்கும்
கூலி தர ஏங்கும்
பட்டினியைப் பார்த்தும் புளி ஏப்பம் விடும்
ஐயா சாமி
ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
ஐயா சாமி
ஓ... ஐயா சாமி
காட்டில் உள்ள நரி ரொம்ப நல்லதுங்க
உங்க நாட்டிலுள்ள நரி ரொம்பப் பொல்லாதுங்க
குள்ள நரிக் கொம்பை
கோர்த்துப் போடு சாமி
குள்ள நரிக் கொம்பை
கோர்த்துப் போடு சாமி
புள்ளை குட்டிக்காச்சும்
நல்ல புத்தி வரும்
ஐயா சாமி
ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மய்யா
ஐயா சாமி
ஆவோஜி சாமி
நரிக் கொம்பிருக்கு வாங்கலியோ
http://www.youtube.com/watch?v=DRCEp...yer_detailpage
'சமாதி' இந்தித் திரைப்படத்தில் வெளிவந்த மிகப் புகழ் பெற்ற பாடலான 'Gore gore o baanke chhore' பாடல். (original)
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Co42dt6HY8Q

