https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...a1ab76abaf7259
அருமை நண்பர் குடந்தை சீனிவாச கோபாலன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...
Printable View
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...a1ab76abaf7259
அருமை நண்பர் குடந்தை சீனிவாச கோபாலன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து...
தினமலர் இணைய தளம் சார்பாக இன்று காலை சிவாஜி ரசிகர்களின் எண்ண அலைகளைப் பேட்டியெடுத்து அவற்றைத் தொகுத்து இணைய தளத்தில் காணொளியாக வெளியிட்டிருக்கிறார்கள்.
My views included in this video
http://cinema.dinamalar.com/tamil_ci...?id=41206&ta=V
A fitting tribute to NT!
http://mlife.mtsindia.in/nd/?pid=428436&rgn=tn
கலைஞர் டீவீயில் ,19/7/2015 ,மானாட மயிலாட ,நடன நிகழ்ச்சி எம்.எஸ்.வீ ஸ்பெஷல் என்று சொல்லபட்டாலும் ,அவரோடு பிரிக்க இயலாத பந்தம் கொண்ட நடிகர்திலகம் ஸ்பெஷல் ஆகவும் அமைந்து விட்டது.
சரோஜாதேவியின் இதயத்தில் இன்றும் ஆக்கிரமிப்பது, பாலும் பழமும்,புதிய பறவைதான். (டெலிபோன் பேச்சில் 1979 என்று நினைவு.தன் பிரிய நடிகராக நடிகர்திலகத்தையே குறித்தார்)
சி.ஐ.டீ சகுந்தலா, மாலையிட்ட மங்கை பட பாடலில் குரூப் டான்சர் ஆக
இருந்ததை குறிப்பிட்டு விட்டு ,தவ புதல்வன் love is fine darling பற்றி சிலாகித்தார்.
முத்தாய்ப்பாக ஏ.எல்.எஸ் புதல்வி (மருமகள்???) ஜெயந்தி ,ஒன்றை குறிப்பிட்டார். எம்.எஸ் .வீ -டி.கே .ஆர் இணைந்தது ,நடிகர்திலகத்தின் பணம்(1952) என்கிற ஏ.எல்.எஸ் தயாரிப்பு. கடைசியில் பிரியும் முன் போட்ட கடைசி பாடல் யார் அந்த நிலவு.சாந்தி(1965) என்ற நடிகர்திலகம் நடித்த ஏ.எல்.எஸ் தயாரிப்பில் வந்த படமே.
நடிகர்திலகத்தின் 14 பாடல்களுக்கு நடனமாடினார்கள்.
http://i1146.photobucket.com/albums/...psypcempep.jpg
http://i1146.photobucket.com/albums/...psuu0u7lcx.jpg
http://i1146.photobucket.com/albums/...psicnrjjb5.jpg
http://i1146.photobucket.com/albums/...pslo77tfaz.jpg
http://i1146.photobucket.com/albums/...psj6m3hjuw.jpg
http://i1146.photobucket.com/albums/...psvohrnwhu.jpg
http://i1146.photobucket.com/albums/...pskdhgtysq.jpg
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடிகர் திலகம் நினைவு நாள், திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம் அவர்களால் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிழற்படங்கள் நம் பார்வைக்கு. நன்றி திரு அண்ணாதுரை.
Vikatan EMagazine
Yesterday at 23:30 ·
நடிகர் சிவாஜி நினைவுகள்....பொக்கிஷ பகிர்வு
* சத்ரபதி சிவாஜி வேடத்தில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!
* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!
... * 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!
* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!
* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!
* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'
* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!
* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!
* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!
* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!
* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!
* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!
* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!
மானா பாஸ்கரன்
ஆனந்தவிகடன்/சிவாஜி 25ல் இருந்து..
இன்று நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு தினம்
https://scontent-ord1-1.xx.fbcdn.net...a3&oe=56141DBD
கனடாவில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில்
நடிகர் திலகத்தின் 14ம் ஆண்டு நினைவு நாளையொட்டி
பிரசுரிக்கப்பட்ட கட்டுரை
http://i58.tinypic.com/xfukhj.jpg
http://i62.tinypic.com/2rf9deo.jpg
http://i61.tinypic.com/2zoys06.jpg
சில விஷயங்கள்.
சோவும் ,கலைஞரும் இரு துருவங்கள் என்றாலும், மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருக்கும் மகளை காண சென்ற கலைஞர், அங்கே தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வரும் சோ வை காண சென்று அரசியல் மனிதம் வளர்த்து,தான் ராஜாஜி,காமராஜ்,அண்ணா கால நாகரிக அரசியல்வாதி என்று நிறுபித்துள்ளார். தலை வணங்குகிறோம்.
கலைஞர் தான் உண்டாக்கிய மது கேட்டை.,தானே களைய முற்பட்டது பாராட்டுக்குரியது.இதில் அரசியலை புகுத்தாமல்,எல்லோரும் பாராட்டலாம். தவறில்லை.
நடிகர்திலகத்தின் மணிமண்டபம் குறித்து சமூக ஆர்வலர் என்ற போர்வையில் சங்கர் என்ற பத்திரிகையாளர் அநாகரிகத்தின் எல்லை மீறியிருக்கிறார். தமிழர்கள் என்றாலே இளப்பம் என்று ஆகிவிட்டது போலும். மணி மண்டபத்தை குடும்பத்தினர் கட்ட வேண்டுமாம். பல பிரபல அரசியல்வாதிகளுக்கு சமாதியும்,சிலைகளும் வைத்தது குடும்பமா.அவர்களால் பலன் பெற்றவர்களா அல்லது அரசாங்கமா?பத்து கோடி தமிழர்களின் பெருமை,சொத்து நமது நடிகர்திலகம். அவர் தனது மக்களை மகிழ்வித்து,உயர்விக்கும் கலையில், தன்னை வருத்தி,உழைத்து,தன்னுடைய பிறவி மேதைமையை மக்களுக்கு அர்பணித்த மகான். அவர் மகனுக்கும்,பேரனுக்குமா அவர் நடித்தார்?இன்று பல மொக்கைகளுக்கு கோடி கணக்கில் அள்ளி கொடுக்கும் திரையுலகம்,அன்றைய சோசியலிஸ்ட் இந்தியாவில் நியாயமான ஊதியமே கடினம். எவ்வளவு கடின உழைப்பு,அதுவும் சிவாஜி மாதிரி உண்மையான ஈடுபாடுள்ள உலக நடிகர்களுக்கு? எதற்கு குடும்பத்தை இழுக்கிறீர்கள்?நாங்கள் இருக்கிறோம். பத்து கோடி தமிழர்களும் தங்களால் இயன்றதை தந்து கட்டி விடுவோம். நாம்தானே அவரால் பலன் பெற்றோம்? நாமே செய்வோம்.
பம்மலார் ,புத்தக விஷயத்தை இழு இழு என்று இழுப்பது மிக சோர்வையும் ,வேதனையையும் தருகிறது,oct 2013,jan 2014,july 2014,jan 2015 என்று போக்கு காட்டி இன்னும் நேரம் குறிக்க காணோம். ரசிகராக இதை நாம் கேட்கவில்லை. நமக்கு பிடிக்காததில் முன்னுரிமை கொடுத்து,நம் விஷயத்தை நேரம் தராமல் ஒத்தி வைப்பது மிக கண்டிக்க தக்கது. அவர் நண்பர்,சக ரசிகன் என்பது வேறு. இது வேறு. தயவு செய்து அவரும் இந்த வேறுபாட்டை உணர்வார் என நம்பி, அவர் புத்தகத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் ஒரு பம்மலார் ரசிகன். சிங்கப்பூர் ,இந்தோனேசியா,ஹாங்காங்,இவற்றில் மட்டும் நூறு பிரதி விற்று கொடுக்க நானாயிற்று. இனிமேலும் எங்களை சோதிக்காதீர்கள் பம்மலாரே .ஒரு ரசிகராக ,இங்கு வந்து நினைவு நாள் பதிவு கூடவா போட கூடாது?