-
21st July 2015, 05:42 PM
#3861
வாசு சார் ... கடைசி வரிகள் படிக்கும் போது கண்கள் பனிக்கிறது...மனதாலும் நினைவாலும் ஆறுதல் அடைய முடியவில்லை...
-
21st July 2015 05:42 PM
# ADS
Circuit advertisement
-
21st July 2015, 05:49 PM
#3862
அன்புள்ள திரு செந்தில்வேல் சார்,
நடிகர் திலகத்தின் புகழ் பாடல் பல ஆயிரம் விஷயம் இருக்கிறது ... ஓராயிரம் கடந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்...
சுந்தர பாண்டியன்
Last edited by sss; 21st July 2015 at 10:20 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
21st July 2015, 06:19 PM
#3863
Junior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்படி ஒரு ரசிகர்கள் இனி வேறு எந்த நடிகருக்கும் அமைவதும் இல்லை இனி அமையபோவதும் இல்லை. வாசு அவர்களே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் அந்த மகானுக்கே நாம் ரசிகர்களாக வேண்டும். மனதை நெருடும் மகத்தான பதிவு உங்களுடியது. மிக்க நன்றி சார்.
-
21st July 2015, 06:34 PM
#3864
Junior Member
Newbie Hubber
அதன் ஆசிரியர் திரு ஸ்ரீராம் அவர்களுடன் பேசிய பிறகு thats tamil .com அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. திரு ஸ்ரீராம் அவர்கள் உடனே கவனிப்பதாக வாக்குறுதி கொடுத்து காப்பாற்றினார். அவருக்கு நம் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றி.
http://tamil.filmibeat.com/news/siva...ay-035815.html
http://tamil.oneindia.com/news/tamil...al-231566.html
http://tamil.oneindia.com/news/tamil...al-231566.html
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sss thanked for this post
-
21st July 2015, 06:54 PM
#3865
Junior Member
Seasoned Hubber
Courtesy: Tamil Hindu
திருச்சியில் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாத சிவாஜி கணேசன் சிலை: விரைவில் திறக்க ரசிகர்கள் வலியுறுத்தல்
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி கணேசனின் சிலை. படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள சிவாஜி கணேசனின் சிலை. படம்: ஜி.ஞானவேல்முருகன்
திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் நிறுவப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள திரைப்பட நடிகர் மறைந்த சிவாஜி கணேசனின் சிலையை விரைந்து திறக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1928-ம் ஆண்டில் பிறந்த சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது இள வயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரையுலகில் நுழைந்து ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக இவர் நடித்த பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் இவரது உணர்ச்சித் ததும்பும் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல.
தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்தவர். உயரிய விருதான செவாலியே விருது, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்ற சிவாஜி கணேசன் 2001-ஜூலை 21-ல் மறைந்தார்.
இவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் கடந்த திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு 2011-ல் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானாவில் 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், சிலை துணியால் மூடப்பட்டது. சிலை திறப்பு கிடப்பில் போடப்பட்டது.
தமிழ்த் திரையுலகில் மாபெரும் நடிகராக விளங்கி மக்கள் மனதில் இன்றும் இடம்பிடித்துள்ள சிவாஜி கணேசன் திருச்சியில் தங்கி, நாடகங்களில் நடித்து வந்த சங்கிலியாண்டபுரம் பகுதி அருகிலேயே சிலை அமைக்க முழு முயற்சி எடுத்த அவரது ரசிகர்கள், சிலை திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு பெரும் மன வருத்தத்துடன் உள்ளனர். இந்த சிலையை திறக்க வேண்டுமென வேண்டுமென திருச்சி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த விஷயத்தில் அரசு எவ்வித நடவடிக்கைகையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்ற சிறப்பு அழைப்பாளர் அண்ணாதுரை ‘தி இந்து’விடம் கூறியபோது, “செவாலியே விருது பெற்ற சிவாஜி கணேசன் பெயர் சென்னையில் ஒரு சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டில் அவர் மறைந்தபோது 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையும் வழங்கப்பட்டது. சென்னை கடற்கரைச் சாலையில் முழு உருவச்சிலை அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் அவரது சிலை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டும் சிலை திறக்கப்படவில்லை. இந்த சிலையை விரைந்து திறக்க வேண்டும் என்பதுதான் சிவாஜி ரசிகர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை” என்றார்.
-
21st July 2015, 07:26 PM
#3866
Senior Member
Senior Hubber
என் வாழ்வின் நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னை முழுவதுமாக ஆக்கிரமித்த நடிகர் திலகமே, இந்த கணம் வரை உன்னை நினைக்காமல் ஒரு நாளும் கழிந்ததில்லை. இனி மேலும் கடக்கப்போவதில்லை.
உன்னை மறந்தால் தானே நினைக்க!
இரா. பார்த்தசாரதி
-
21st July 2015, 07:26 PM
#3867
Junior Member
Seasoned Hubber
-
21st July 2015, 07:45 PM
#3868
Senior Member
Devoted Hubber

Originally Posted by
vasudevan31355
'நெஞ்சிருக்கும் வரை'
தெய்வமே!
என் 'நெஞ்சிருக்கும் வரை' உங்கள் நினைவிருக்கும்.
இதோ உங்கள் நினைவு நாளில் உங்களுக்கு நான் செலுத்தும் நினைவாஞ்சலி.

அப்படியே 'சர்'ரென்று, 'சரக்'கென்று திரும்பி, இடது காலை தள்ளி வைத்து, வலது முழங்காலை சற்று மடக்கி, கைகளை லூஸாக ஆடவிட்டு, காமெராவின் கீழ் ஆங்கிளிலிருந்து என்னையும், முரளி சாரையும், இந்த உலகத்தையும் வாய்பிளக்க வைத்த அந்த அற்புத போஸ் கொடுப்பாரே!
இதற்கு மேல் எழுத திராணியோ, சக்தியோ, தெம்போ எனக்கு மனதிலும் இல்லை... உடலிலும் இல்லை.
மன்னிக்கவும்.
Dear Vasu,
An expressive pose from Acting God - the body language says all. ஒரு மனிதனின் அனைத்து உணர்ச்சிகளையும் அவரின் இந்த ஒரு pose சொல்கிறது. இது போதும், நாம் அடித்து சொல்ல மற்ற அனைத்து நடிகர்களும் இவரின் கால் தூசிக்கு சமம்.
NT might have left us... but he still lives with us thru his extraordinary movies. Long live NT fame.
I thank you for your wonderful writing...please keep writing.
Regards.
-
21st July 2015, 08:05 PM
#3869
Senior Member
Seasoned Hubber
வாசு சார்
தங்களுடன் தொலைபேசியில் உரையாடிய போது, நடிகர் திலகத்தைப் பற்றி ஓர் பதிவு தயார் பண்ணுவதாகவும் அப்போது நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டீர்கள் எனவும் கூறினீர்கள். தங்களுடைய தழுதழுத்த குரலில் அதைக் கேட்கும் போது நான் சொன்னேன், எழுதும் போது தாங்கள் உணர்ச்சி வசப்படுவீர்கள், படித்த பின்பு நாங்கள் அப்படியாகி விடுவோம் எனக் கூறினேன். அது அப்படியே நடந்து விட்டது.
நெஞ்சை நெக்குருகும் எழுத்தைத் தரவல்லது நடிகர் திலகத்தின் ரசிகர்களால் மட்டுமே முடியும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இல்லை.
தங்களுக்கு என் உளமார்ந்த நெஞ்சம் நெகிழ்ந்த பாராட்டுக்கள்.
பி.கு.
தங்களையும் முரளியையும் சேர்த்து என்னை விட்டு விட்டீர்களே.. ஓ.. நாம் இருவரும் ஒன்றல்லவோ.. தனியே குறிப்பிடத் தேவையில்லை என எண்ணியுிருப்பீர்கள். அதுதனே உண்மை
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st July 2015, 08:06 PM
#3870
Senior Member
Seasoned Hubber
கோபால்
தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
அதன் ஆசிரியர் திரு ஸ்ரீராம் அவர்களுடன் பேசிய பிறகு thats tamil .com அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. திரு ஸ்ரீராம் அவர்கள் உடனே கவனிப்பதாக வாக்குறுதி கொடுத்து காப்பாற்றினார். அவருக்கு நம் ரசிகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks