என் மகன்' படத்தில் சற்றே வயதான நம் லட்சியவாதி
http://i1087.photobucket.com/albums/...ps5411ff11.jpg
என் மகன்' படத்தில் சற்றே வயதான நம் லட்சியவாதி
http://i1087.photobucket.com/albums/...ps5411ff11.jpg
'டியர் முரளி சார்,
தங்களின் 'சிவகாமியின் செல்வன்' போஸ்ட்டர் மேட்டர் வெகு சுவாரஸ்யம். அதற்காக என் நன்றி! நான் கடலூரில் 11ஆவது வார போஸ்ட்டரை 'திரிசூலம்' காவியத்திற்கு கண்டு மகிழ்ந்திருக்கிறேன். 'கவரிமான்' இடையில் நுழைந்ததால் 'திரிசூலம்' நூறாவது நாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியாமல் போனதில் இன்றளவும் வருத்தம்தான்.
அன்பு இராகவேந்திரர், பம்மலார், முரளி ஶ்ரீனிவாஸ், வாசுதேவன் உள்ளிட்ட
அனைத்து இதயவேந்தனின் இதயங்களுக்கும்...
என்ன சொல்லி என் மகிழ்ச்சியை, நன்றியைப் பகிர..
இத்திரிக்கு கோடி நன்றிகள் இராகவேந்திரருக்கு..
ஞாயிறும் திங்களும் பாடலைக் கேட்கவைத்த இந்நாள் எனக்குப் பொன்னாள்..
http://www.youtube.com/watch?v=ZjiRKDmIDj ((இப்பாடலுக்கு இமயம் எப்படி உயிர் அளித்திருப்பார் என மனக்கண்ணில் காண்கிறேன்..)
இன்னோர் பாடல் ( ஜானகி குரலில்)
http://music.cooltoad.com/music/song...672&PHPSESSID=
இலட்சியவாதி கண்ணில் மின்னும் வைரங்களுக்கு விலையுண்டோ?
விலைமதிப்பில்லாப் பொக்கிஷங்களை வழங்கும் அன்பளிப்பு நாயகனின் இதயங்களைப் போற்றுகிறேன்..
டியர் கண்ணன்,
தங்களுடைய பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. ஞாயிறும் திங்களும், ஜீவ பூமி, லட்சியவாதி, இது போன்று பல படங்கள் ... இவற்றையெல்லாம் வெண்திரையில் நாம் கண்டோமானால் ....
RARE IMAGES அபூர்வமான நிழற்படங்கள்
அபூர்வமான நிழற்படங்கள் வரிசையில் ...
http://i872.photobucket.com/albums/a...ps5e5c7692.jpg
இது போன்று இந்தக் காலத்தில் கணினி தொழில்நுட்பத்தில் எளிதாகவும் விரைவாகவும் செய்ய முடியும். ஆனால் அந்தக் காலத்தில்... இதில் நூறு படங்களின் நிழற்படங்களை இருத்தி அதன் நடுவே மையமாக நடிகர் திலகத்தின் ஒப்பனையற்ற இயற்கை நிழற்படத்தை வைத்து அதனை ஒரு ரசிகர் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருந்தார். அது பெரிய அளவிலான படம். அதனை புகைப்படமெடுத்து அந்தக் காலத்தில் நண்பர்களுக்கு கொடுத்திருந்தார். அவற்றிலிருந்து ஒரு பிரதி அடியேனுக்குக் கிடைத்தது பெரிய பாக்கியம். இது நடந்தது 1969-70 வாக்கில் என எண்ணுகிறேன். பின்னர் எப்படியோ அது கடைகளுக்கும் வந்து விட்டது.
கிடைத்தற்கரிய பொக்கிஷம் என்றால் அது மிகையில்லை.
'நீதி' யில் நீதிமான்.
http://i1087.photobucket.com/albums/...ps334898bc.jpg
'அமரகாவியம்' படத்தில் காவிய அமரர்.
http://i1087.photobucket.com/albums/...ps16a7d79a.jpg
Mr Vasu Sir,
Unbeliveable write up of KKK and excellent photo's of our God.
Mr Raghavendra Sir,
You are taking this thread into greater heights. Thanks.
Thans and very kind of u vasu devan sir.
காவேரிக்கண்ணன் சார்,
'ஞாயிறும் திங்களும்' பாடல்களை அளித்தமைக்கு மிக்க நன்றி!
டியர் வாசுதேவன் சார்,
நீதிமான் படைத்தவை எல்லாமும் என்றும் அமர காவியங்கள் தான் என்று பறை சாற்றி, அதற்கு சான்றாக நிழற்படங்களையும் தந்த உங்களை உளமாரப் பாராட்டுகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் சித்தூர் வாசுதேவன் சார்
தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி
அன்புடன்
ராகவேந்திரன்
அன்பு இதயங்களே,
நடிகர் திலகத்தின் தரிசனத்திற்கே நாள் கணக்கில் மக்கள் காத்திருப்பார்கள் ... இது என்றைக்குமே பொதுவானது. அந்தக் கால கட்டத்தில் ஆட்டோகிராப் வாங்குவது என்பது மிகப் பெரிய விஷயம். அவர் மறைந்து 11 ஆண்டுகள் கடந்த பின்னர் இன்றைய தலைமுறையினருக்கு அவரது ஆட்டோகிராப் வாங்குவது என்பது நடக்காத ஒன்று என்றாலும் அப்படி விரும்பக் கூடியவர்களுக்கு அன்புப் பரிசாகவும், நம் தலைமுறையிலும் அவருடைய ஆட்டோகிராப் கிடைக்கப் பெறாதவர்கள் பலரிருக்கக் கூடும், அவர்களுக்காகவும் முன்னர் அளித்த 100 பட நிழற்படத்திலிருந்து நடிகர் திலகம் ஆட்டோகிராப் இடும் பகுதி தனியாக இப்போது இங்கே ...
http://i872.photobucket.com/albums/a...psa741e0dc.jpg
RARE IMAGES அபூர்வமான நிழற்படங்கள்
http://i872.photobucket.com/albums/a...ps0496fd68.jpg
'விஸ்வரூப' ஜுரம்
எப்போதோ 'விஸ்வரூபம்' எடுத்துவிட்ட வித்தகர்.
நடிப்பு விற்பன்னர் இரு மாறுபட்ட வேடங்களில் தூள் பரத்தும் "விஸ்வரூபம்".
http://i1087.photobucket.com/albums/..._000831203.jpg
http://i1087.photobucket.com/albums/..._002114889.jpg
http://i1087.photobucket.com/albums/..._000179140.jpg
http://i1087.photobucket.com/albums/..._002473802.jpg
http://i1087.photobucket.com/albums/..._002319624.jpg
http://i1087.photobucket.com/albums/..._001219592.jpg
விஸ்வரூபம் எடுத்த தெய்வப் பிறவியின் மேன்மையை உரைக்க விஸ்வரூபம் எடுத்த வாசுதேவரே ....
தங்களின் உழைப்பை எங்களால் ஈடு கட்ட முடியாது காரணம்
பாடலைக் கேளுங்களேன்
http://youtu.be/SxeODtxmL9M
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
6. அன்பு - 24.07.1953
விளம்பர நிழற்படங்கள் உபயம் - ஆவணத் திலகம் பம்மலார்
[ஜுலை 24 வெள்ளியன்று சென்னை தவிர தென்னகமெங்கும் வெளியான இக்காவியம் சென்னையில் மட்டும் ஆகஸ்ட் 7 வெள்ளியன்று வெளியானது]
பட விளம்பரம் : சுதேசமித்ரன் : 18.7.1953
http://i1094.photobucket.com/albums/.../GEDC4118a.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 24.7.1953
http://i1094.photobucket.com/albums/...GEDC4112aa.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் [சென்னை மட்டும்] : சுதேசமித்ரன் : 7.8.1953
http://i1094.photobucket.com/albums/.../GEDC4114a.jpg
ஆறாவது வாரம் : சுதேசமித்ரன் : 28.8.1953
http://i1094.photobucket.com/albums/.../GEDC4115a.jpg
இப்படத்தின் இப்பாடலை எண்ண எண்ண இன்பமே
http://www.dailymotion.com/video/xcyp36_enna-enna-inbame_creation
அன்பு திரைப்பட கலைஞர்கள் மற்றும் பாடல்களைப் பற்றிய விவரங்கள்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன் - செல்வம்
டி.எஸ்.பாலையா - திருமலை
கே. துரைசாமி - ராஜமாணிக்கம்
தங்கவேலு - மிஸ்டர் குமார்
பிரண்ட் ராமசாமி - மிஸ்டர் பாஸ்கர்
ஸி.வி. நாயகம் - ஆடிய பாதம்
எஸ். சுந்தரேசய்யர் - நம்மாழ்வார்
டி.வி. ஷண்முகம் பிள்ளை - பொன்னம்பலம்
சேதுபதி - ஹெட் கிளார்க் மற்றும் சாயபு
டி.ஆர். ராஜகுமாரி - தங்கம்
லலிதா - ரீடா
பத்மினி - மாலதி
எம். ருஷ்யேந்திர மணி - விஜயா
டி.எஸ். ஜெயா - பாலாமணி
எஸ். பத்மா - லக்ஷ்மி
ஆதிலக்ஷ்மி - அமிர்தம்
குமாரி ராஜம் - கலா
ரீடா, சரஸ்வதி, மோகனா, தங்கம் - மாணவிகள்
அன்பு - மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள்
கதை - எம். நடேசன்
வசனம் - விந்தன்
சங்கீதம் - டி.ஆர். பாப்பா
படப்பிடிப்பு - ஜி.விட்டல்ராவ்
ஒலிப்பதிவு - மீனாக்ஷி சுந்தரம், எஸ். விமலன்
நடனம் - தண்டாயுதபாணி பிள்ளை, ஹீராலால், கோபால கிருஷ்ணன்
மேக்கப் - ஹரிபாபு, தனக்கோடி, துரைசாமி, கே.ஜி. நாயர்
எடிட்டிங் - எஸ்.ஏ. முருகேஷ் (இவர் தான் உலகம் பல விதம் படத்தின் இயக்குநர்)
உதவி டைரக்ஷன் - எஸ். கிருஷ்ணமூர்த்தி
ஸ்டூடியோ - நியூடோன், சிட்டாடல்
பாடல்கள் ஒலிப்பதிவு - ரேவதி, by ரங்கசாமி
தயாரிப்பாளர் இயக்குநர் - எம்.நடேசன்
தயாரிப்பு - நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ்
பாடல்கள்
பாட்டுப் புத்தகத்தின் சில பக்கங்கள் இல்லை. எனவே பின்னணி பாடகர்களின் முழு விவரம் தெரியவில்லை.
1. காப்பதுன் பாரமம்மா - பாபநாசம் சிவன்
2. ஆடவரே நாட்டினிலே - சுரதா
3. கனவில் கண் காட்டி - கம்பதாசன்
4. எண்ண எண்ண இன்பமே - கா. மு. ஷெரீப்
5. வெந்தழலாய் எரிக்கும் வெண்மதியே - தண்டாயுதபாணி
6. ஒண்ணும் புரியவில்லை தம்பி - விந்தன்
7. மனம் நாடும் தெய்வம் நீ
8. அன்பாலே உலகில் - டி.என். ராஜப்பா
9. மனது மகிழவே - கா.மு.ஷெரீப்
10. ஐயா முதலாளி வாங்க - கா.மு.ஷெரீப்
11. வானம் சென்றாயோ - கம்பதாசன்
இராகவேந்திரரும் வாசுதேவரும் மாறிமாறி ஜுகல்பந்தி விருந்து பரிமாறப்.. பரிமாற..
விழிகளால் மீண்டும் மீண்டும் புசித்தும் பசியாறாமல் பசியேறிய காயசண்டிகையாய் நான்..
ஆபுத்திரன் நம் நடிகர்திலகம்.. அட்சயப்பாத்திரம் அவர் திருமுகம்..
கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..
நீதி படத்தில் நெற்றியில் காயமும்.. நெஞ்சில் உள்ள பச்சாதாபம் உணரப்படாத ஆற்றாமையுமாய்..
இருவரியில் பெருங்கருத்து குறள் என்றால்..
ஒரு பாவனையில் நெடுங்கவிதை நடிகர்திலகம் முகம்..
தொடரட்டும் இத்தலைவாழை விருந்து ..
பரிமாறும் இராகவேந்திரர் + வாசுதேவர் கரங்களுக்கு என் நெகிழ்நன்றிகள்..
கவிதை நடையில் கலைக்குரிசில் புகழ் பாடும் காவிரியின் கண்ணன் அவர்களே!
தமிழோடு விளையாடவே தாங்கள் இருக்கிறீர்கள்.
அதை அள்ளிப் பருகவே நாங்கள் இருக்கிறோம்.
அற்புதம். அருமை. பாராட்டுக்கள்.
தங்களுக்காக இதோ நம் ஜூலியஸ் சீஸர்.
கிரேக்கச்சிற்பங்களை விஞ்சும் உருவ இலக்கணம் பொருந்திய ஒளிமுகம்.. களைமுகம்..
http://i1087.photobucket.com/albums/..._008868875.jpg
http://img52.imageshack.us/img52/905...vidsubstmg.jpg
http://i1087.photobucket.com/albums/..._008879152.jpg
இந்த ஒரு உடல் மொழிக்கே உலகத்தை இவருக்கு விலையாகத் தரலாம்.
http://i1087.photobucket.com/albums/..._008914787.jpg
"நான் காணாத களமில்லை ...
பெற்றுத் தராத வெற்றி இல்லை...
என் உடலில் வெற்றிவடு படாத இடமில்லை...
என்னை எதிர்த்தவர்கள் தங்களையே அழித்தவர்கள் ஆவார்கள்...
புத்தி உள்ளவன் திருந்துவதுதான் புகழுக்குரியது...
புத்தி உ(ள்)ளதா... இ(ல்)லையா"...
http://upload.wikimedia.org/wikipedi.../36/Sorgam.jpg
சீறும் சிங்கமென நம் சீஸர் முழங்குவதை 'சொர்க்க'த்தில் காணலாம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-zyxs-tVB_Q
லூயிஸ் கல்ஹெர்ன் ஜூலியஸ் சீஸர் ராகவும், 'ஹாலிவுட் சிவாஜி' மார்லன் பிராண்டோ மார்க் ஆண்டனி யாகவும், ஜேம்ஸ் மேஸன் புருட்டஸாகவும் நடித்த ஜூலியஸ் சீஸர் (1953) ஆங்கிலப் படத்திலிருந்து அதே காட்சி.
திறமையான நடிகர்கள்தான். அதில் சந்தேகமில்லைதான். ஆனால் எம் தலைவன் முன் இவர்கள் எம்மாத்திரம்? வீடியோவில் பாருங்கள் எவ்வளவு வித்தியாசம் என்று!
http://4.bp.blogspot.com/-r-NP6ITrKx...f_march+02.jpg
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Je0gTnheVe4
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசு சார்,
சொர்க்கம் - ஜூலீயஸ் சீஸர் ஸ்டில்கள் வர்ணனைகள் ... ஆஹாஹா ... உங்கள் பதிவே சொர்க்கம் ... வேறென்ன சொல்ல...
வாசு சார்
தங்களுக்காக மிக அபூர்வமான சிவகாமியின் செல்வன் ஸ்டில்
http://i872.photobucket.com/albums/a...ps7037685c.jpg
விழியாலே காதல் மொழி பேசும் ... சிவகாமி ... அசோக் .... இனியவளே என்று பாடியவர் இனியவள் தான் என்று ஏன் ஆக மாட்டார் இந்தப் பார்வையினால் ...
http://i1146.photobucket.com/albums/...s/SIVSEL01.jpg
http://i1146.photobucket.com/albums/...s/SIVSEL02.jpg
http://i1146.photobucket.com/albums/...s/SIVSEL03.jpg
சிவகாமியின் செல்வன் பற்றிய முரளி சாரின் அற்புதமான பதிவிற்காக அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது ...
Nice photo's of Mr Anand and Julius Ceaser.
I wrongly mentioned as Mr Anand instead of Mr Ashok.
My Choice - என் விருப்பம்
ஒவ்வொரு ரசிகரும் நடிகர் திலகத்தின் எந்தப் பாடலானாலும் விரும்பிப் பார்ப்பார் இதில் ஐயமில்லை. இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி நமக்கென்று பல பாடல்கள் நம் நெஞ்சில் ஆழமாக பதிந்து இருக்கும். அதில் மறக்க முடியாத நினைவுகள் அனுபவங்கள் இருக்கலாம் அல்லது பாடலின் சிறப்பு காரணமாகவும் இருக்கலாம். அப்படி நமக்குள் என்றும் ஒரு ஓரத்தில் நிழலாடிக்கொண்டே இருக்கும் பாடலையும் அது தொடர்பான நினைவுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூட மனதில் அவ்வப்போது தோன்றியிருக்க வாய்ப்புண்டு.
அப்படி நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிழலாடிக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் படப் பாடலைப் பகிர்ந்து கொள்ளவே இப் பகுதி. இதில் பாடலைப் பற்றிய தங்கள் மனதில் உள்ள எண்ணங்களோடு அப்பாடலை குறிப்பிட்டு இங்கே பகிர்ந்து கொள்ளலாம். விவாதங்கள் என்ற அடிப்படையில் இல்லாமல், நினைவுகளின் பகிர்வு என்ற அடிப்படையில் இதனை கொண்டு செல்வோம்.
துவக்கமாக நம் அனைவர் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்ற பாடலான அவன் ஒரு சரித்திரம் திரைப்படத்தில் இடம் பெற்ற வணக்கம் பல முறை சொன்னேன் பாடலை வழங்க விரும்புகிறேன். தமிழகமெங்கும் மட்டும் அல்லாது இலங்கை மலேசியா என அனைத்து இடங்களிலும் பிரபலமான பாடல். கவியரசரின் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம்.எஸ்., பி.சுசீலா குரலில் காலத்தால் அழியாத பாடல். முதல் நாள் முதல் காட்சியில் விண்ணதிரும் கரவொலியோடு பார்த்தது பசுமையாக நினைவில் உள்ளது. அன்று முதல் பல ஆண்டுகளாக மெல்லிசை மேடைகளில் தவறாமல் இடம் பெறும் பாடல்.
ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைக்கப் பட்ட கதா பாத்திரம். அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் நடிகர் திலகம் வாழ்ந்து காட்டியிருப்பார். இப் பாடல் காட்சியில் நடிகர் திலகம், காஞ்சனா, மஞ்சுளா மூவருடன் தங்கவேலு, வி.கே .ராமசாமி, சோ உட்பட பலர் பங்கேற்றிருப்பர். கேட்ட முதல் முறையிலிருந்து இன்று வரை என் நெஞ்சில் தொடர்ந்து கொண்டே வரும் பாடல்.
http://youtu.be/hW3ttn2hqfU
நண்பர்கள் தங்கள் விருப்பப் பாடலைப் பகிர்ந்து கொள்ளும் போது இத்தலைப்பினையும் குறிப்பிட்டால் ஒரு தொடராக அமையும்.
மிக்க நன்றி சகோதரி. இப்பகுதிக்கு நம் அனைவருக்குமே பிடிக்கும் என்று நான் நினைத்திருந்தேன். அதே போன்று தாங்கள் மிகச் சிறந்த பாடலின் மூலம் அதனை வரவேற்றுள்ளீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் பாடலை நான் மிகவும் சிறிய வயதில் கேட்ட போதே நெஞ்சில் தங்கி விட்டது. இப்படத்தின் முதல் வெளியீட்டின் போது நான் பள்ளிச் சிறுவன். சுவர்களில் போஸ்டர்களில் இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் அட்டகாசமான போஸ் இடம் பெற்றிருக்கும். நன்கு நினைவில் உள்ளது. வானொலி, மின்சாரம் இவை போன்ற எந்த வசதியும் இல்லாத கால கட்டத்தில் கடற்கரையில் மாலை வேளையில் ஒலிபரப்பப் படும் பாடல்களுக்காக அமர்ந்திருப்போம். பசுமையான நினைவுகள். பின்னர் 60களின் பிற்பகுதியில் திரையரங்கில் ஆரவாரங்களுடன் பார்க்கும் போது புதிய பரிமாணம் தென் பட்டது. அன்று தொடங்கி இன்று வரை ஒவ்வொரு முறையும் புதுப்புது கோணங்களில் நடிகர் திலகத்தின் ஸ்டைலும் நடிப்பும் நம்மை பரவசப் படுத்தி வருகின்றன.
வாய்ப்புக்கு நன்றி சகோதரி.
டியர் ராகவேந்திரன் சார்,
தாங்கள் தொடங்கி வைத்துள்ள 'என் விருப்பம்' பாடல் தொடரை முழு மனதுடன் வரவேற்கிறேன். விரைவில் நானும் இதில் பங்கு கொள்ளும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். தங்களின் 'அசோக்' ஸ்டில் பதிவுகள் அமர்க்களம். அதுவும் எனக்கு ஸ்பெஷலாக தாங்கள் மனமுவந்து அளித்த கருப்பு-வெள்ளை புகைப்பட ஸ்டைலான, அசத்தலான 'அசோக்' கிற்கு ஆர்ப்பாட்டமான நன்றிகள். பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டேன்.
வாசுதேவரின் சொர்க்கம் பதிவு சுகமோ சுகம்..இராகவேந்திரர் அளித்த அசோகச் சித்திரங்களோ அபாரம்... அபூர்வம்..
கூடுதல் கலக்கலாக ''என் விருப்பம்'' முதல் இரு தெரிவுகள் முத்து முத்தாய்..
என் வரவேற்பும் ஊக்கமும் என்றும் உங்களுடன்..
-----------------------------------------------------------------------------
என் விருப்பம்:
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.. நடிகர்பெருமான் நடிப்பில் விளைந்த
எண்ணற்றப் பாடலோவியங்களில் எதை முதலாய் எடுத்துச் சொல்ல?
ஊழ்வினை வந்து உறுத்த , நடந்ததற்கு வருந்திய நல்ல உள்ளம்..
புண்பட்டதால் பண்பட்டு உருவமும் கனிந்த துறவுக் கோலம்..
அக உணர்வு உலர்ந்து அந்த வறட்சியில் மலரும் ஞானக்கோட்டம்
முகமும் நடையும் தலையசைவும் அணிந்த துணியும் காட்டும் நடிப்பின் உச்சக்கட்டம்..
ஆண்டவன் கட்டளையாய் என் முதல் விருப்பம்..
http://www.youtube.com/watch?v=O5As4LT9ct8
SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
7. கண்கள் - 05.11.1953
மேற்காணும் நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்Quote:
http://i1110.photobucket.com/albums/...angal1-1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 4.11.1953
http://i1110.photobucket.com/albums/...GEDC4966-1.jpg
கண்கள் திரைப்படத்தைப் பற்றி நமது அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களின் குறிப்புகள்
திரு வாசுதேவன் இப்படத்தைப் பற்றித் தந்துள்ள பதிவிற்கான இணைப்புQuote:
S.V.வெங்கட்ராமன்('கண்கள்' திரைப் படத்தின் இசை அமைப்பாளர்).
http://s3images1.filmorbit.com/media...91277-opt.jpeg
S.V.வெங்கட்ராமன் அவர்களின் தேனிசையில் ஒலிக்கும் 'கண்கள்' படத்தின் சில அற்புத பாடல்கள்.
"ஆளு கனம் ஆனால் மூளை காலி"....J.P.சந்திரபாபு அவர்களின் உற்சாகக் குரலில்...
"பாடிப் பாடி தினம் தேடினாலும்"...
"வருங்காலத் தலைவன் நீயே பாப்பா".. கேட்டு மகிழ...
லிங்க் கீழே.
http://www.inbaminge.com/t/k/Kangal/
எம்.எல்.வசந்தகுமாரி
"இன்ப வீணையை மீட்டுது அவர் மொழியே" எம்.எல்.வசந்தகுமாரியின் அற்புதக் குரலில். (கம்பதாசன் அவர்களின் காவிய வரிகளில்).
லிங்க் கீழே.
http://www.muzigle.com/album/kangal-...inba-veenaiyai
http://i1087.photobucket.com/albums/...devan137-3.jpg
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post763700
கண்கள் திரைப்படத்தின் பாட்டுப் புத்தக முகப்பின் நிழற்படம்
http://i872.photobucket.com/albums/a...nngalSBCfw.jpg
டியர் காவிரிக் கண்ணன்
விழி விரிக் கவிதையைத் தந்த
விழுப்புரத்தானின்
மொழி விரி மேன்மையை
மொழிந்துள்ள தங்கள்
பொழிப்புரையாய் ஏற்று
பொங்குகிறோம் மகிழ்வால்
பாராட்டுக்கள் காவிரிக் கண்ணன், தங்கள் விருப்பப் பாடல்களைத் தொடர்ந்து தாருங்கள்.
Rare photo's and records of Kangal. Thanks Mr Raghavendra Sir
தங்கள் பாராட்டிற்கு நன்றி சித்தூர் வாசுதேவன் அவர்களே
கண்கள் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விவரம்
நடிக நடிகையர்
சிவாஜி கணேசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, சந்திரபாபு, பண்டரிபாய், மைனாவதி, எம்.என்.ராஜம், சி.டி. ராஜகாந்தம், மற்றும் பலர்.
கதை வசனம் – என்.வி.ராஜாமணி
பாடல்கள் – கம்பதாசன், கே.பி. காமாக்ஷி, சுரபி
சங்கீதம் – எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன்
நடனம் – நடராஜ், சகுந்தலா பார்ட்டி
நடன அமைப்பு – நடராஜ், ஹீராலால், தண்டாயுத பாணி பிள்ளை
நடனக் காட்சி ஜோடனை – பி. அங்கமுத்து
பின்னணி குரல்கள் – எம்.எல்.வசந்த குமாரி, பி.ஜி. கிருஷ்ணவேணி – ஜிக்கி, எஸ்.வி.வெங்கட்ராமன்
கோரஸ் குரல்கள் – ரத்னமாலா, ராணி, கஸ்தூரி, காந்தா, பத்மா
ஆர்ட் – எஸ். அம்மையப்பன்
மேக்கப் – கோபால் ராவ்
உடைகள் – ப்ரான்ஸிஸ், டி.எஸ்.ராவ் [பெங்களூர் எம்போரியம்]
ஒளிப்பதிவு – ஆர்.ஆர். சந்திரன்
ஒலிப்பதிவு – வி. ரங்காச்சாரி
பாட்டு ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி
ஸ்டூடியோ – ரேவதி
ப்ரொடக்ஷன் நிர்வாகம் – கே. வேலாயுதம் பிள்ளை
செட்டிங்ஸ் – எஸ். கோவிந்தசாமி, டி.நீலகண்டன்
டைரக்ஷன் – கிருஷ்ணன் – பஞ்சு
பாடல்கள்
1. பொங்கி மலருதே மங்கையின் வாழ்வு – சுரபி – கோரஸ்
2. கூடு செல்லும் பறவைகளே – கே.பி.காமாக்ஷி – ஜிக்கி
3. கண்ணை இழந்தேன் கனலில் விழுந்தேன் – சுரபி – எம்.எல்.வசந்தகுமாரி
4. இன்ப வீணையை மீட்டுது – கம்பதாசன்- எம். எல். வசந்தகுமாரி
5. அன்னை கரமென – கம்பதாசன் – எம். எல். வசந்தகுமாரி
6. சின்னப் பெண்ணே வாடி – கம்பதாசன் – கோரஸ்
7. காதலாகிக் கசிந்து – கே.பி.காமாக்ஷி – ஜிக்கி
8. முத்துச் சிரிப்புடனே – கம்பதாசன் – ஜிக்கி
9. ஆளுகனம் – கம்பதாசன் – சந்திரபாபு
10. பிஸ்மில்லா – கம்பதாசன் – எஸ்.வி.வெங்கட்ராமன்
அகில இந்திய சிவாஜி மன்ற சென்னை மாநாட்டு சிறப்பு மலர்
கலையுலகப் பிரதமர் சிவாஜி மன்றம்
ஜெய்ஹிந்துபுரம், மதுரை-11.
1983-இல் நடிக வேந்தனின் நீதிபதி, சந்திப்பு, மிருதங்கச் சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா காவியங்கள் வசூலில் படைத்த சாதனை விவரங்கள்.(மலரில் உள்ளபடி)
http://1.bp.blogspot.com/-WO0P1L-pit...ovieposter.jpg
http://i1087.photobucket.com/albums/...ps7f22366b.jpg
http://padamhosting.com/out.php/i717...snap476057.png
http://i1087.photobucket.com/albums/...ps12c037c3.jpg
http://i.ytimg.com/vi/1DUiHHNsTo8/0.jpg
http://i1087.photobucket.com/albums/...ps63f0a2c2.jpg
http://i1094.photobucket.com/albums/...alar/VR100.jpg
http://i1087.photobucket.com/albums/...psf0f08591.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் ராகவேந்திரன் சார்,
இத்திரியின் கண்களான தங்களின் 'கண்கள்' பற்றிய பதிவு மிக அபூர்வமானது ஆகும். தங்கள் உழைப்பின் பெருமையை சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மிக அபூர்வ விஷயங்களை மனம், உடல் தளராமல் தாங்கள் எங்களுக்களிப்பது நிஜமாகவே பாராட்டுக்குரியது. நன்றி!
Mr Vasudevan Sir,
Sadhanaigalukku Sonthakkarar Nam NT Only.